Wednesday, November 09, 2011

சனிபிடிச்சா கூட பரவாயில்லைப் போல இருக்கு :((

இந்த சனீஸ்வரர் கூட ஒரு பிரச்சனை என்னன்னா குறைஞ்ச பட்சமாவது
பிடிச்சு தன்னோட ஆட்டத்தை ஆடிட்டுத்தான் விடுவாரு. அவரோட
இருக்கும் அந்த “7 வருடங்கள்” வார்த்தைகளால் விவரிக்க முடியாத
ஒரு அவஸ்தை. நல்லாத்தானே போய்கிட்டு இருக்குன்னு நினைப்போம்.
திடும்னு ஒரு செக் வெப்பாரு. ஜென்மச்சனி மகாக்கொடுமை.

இந்த பயங்கர அவஸ்தைக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத
ஒரு அவஸ்தை சளி. நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.
திடும்னு தொண்டையை அடைக்க ஆரம்பிச்சது. நாம
யாரை இன்னிக்கு ரொம்ப திட்டினோம்! அவங்க சாபத்தால
தான் தொண்டை வலி வந்திருக்குன்னு ரொம்ப யோசனை
செஞ்சதனாலத்தான் தலைவலி வந்திருக்குன்னு பேசாம
இருந்தேன்.

அயித்தானுக்கா, ஆஷிஷுக்கா, அம்ருதாவுக்கு யாருக்கு இன்றைக்கு
அர்ச்சனை செய்தோம்னு குழப்பம். கந்த ஷஷ்டி அன்னைக்கு
முருகனுக்கு அர்ச்சனை செய்ததைத் தவிர வேற யாரோடும்
பெருசா பேசலை. நல்ல நாளிலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடமாட்டேன்.
சைனஸ்தான். இப்ப வெளியில கூட தண்ணி குடிக்கலை. ஆனா
த்ரோட் இன்ஃபெக்‌ஷன்!!! நாளெல்லாம் நல்லாத்தான் இருக்கும்.
ஆனா இந்த ராத்திரியில் படுத்தா மட்டும் இதுக்கு தாங்காது.
ஆஞ்சு ஓஞ்சு படுத்திருக்காளேன்னு விடுமா? ஒரு மாதிரி
அவஸ்தை, கிச் கிச் எல்லாம் மூட்டி இருமலை வரவெச்சிடுது.

இதோட ஒரு இரவு போராடித்தாங்க முடியாம இருந்தா தலைவலி
உடம்பு வலின்னு வர ஆரம்பிக்க ஆகான்னு ஜெர்க்கானேன்.
இது ஒரு மாதிரி வைரல். ஜுரம் உள்ளுக்கு மட்டும் அடிக்கும்.
ஆனா வெளியே டெம்ப்ரேச்சரே இருக்காது. ஜுரத்திற்குண்டான
எல்லா அவஸ்தைகளும் இருக்கும்.

சளிபிடிச்சா குறைஞ்ச பட்சம் 3நாள் இருக்கும் (சனி பிடிச்சா
7 நிமிஷமாவது ஆட்டுவது போல) அப்படின்னு வீட்டு மருந்து
சாப்பிட்டு பாத்தேன். தொண்டையை ரொம்ப கஷ்டப்படுத்தாமல்
ப்ரெட் பால், இட்லின்னு ஓட்டினேன். ம்ஹூம் சரி வரலை.
சனிஸ்வரர் ஆட்டுறார்னு தெரிஞ்சாலும் அவருக்குன்னு சில
எதிர்கட்சி தெய்வங்கள் இருப்பாங்க. அவங்களை கும்பிட்டா
இவர் ஆட்டம் கொஞ்சம் குறையும் என்பது போல மருந்து
எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்.

நேற்று இரவு தலை சாய்க்க விடாம இருமல் ஆரம்பம்.
டாக்டர் கிட்ட வேணாம்னு அடம் பிடிச்சு கிட்டு இருக்கேன்.
ஆயில் இஞ்சஷன் போட்டா அந்த வலியில் வேலை செய்யவே
முடியாது. ஏற்கனவே நமக்கு உடம்பு வீக்குன்னு டாக்டர் சொல்லிக்கிட்டு
இருக்க இதுல இப்படின்னா கண்டிப்பா ஊசிதான்!! ஊசியைப்பாத்தால்லாம்
பயமில்லை. அதன் சைட் எஃபக்டா வேலை செய்ய முடியாம
கஷ்டமா இருக்குமே என்பதால் ஒரு கஷ்டம்!!

அயித்தான் விடுவாரா!!( இந்த நேரம் பார்த்து இவருக்கு டூர் ஏதும்
இல்லாம போச்சு. இருந்திருந்தா தப்பிச்சிருப்பேன்):)) அதனால
ட்ரீட்மெண்ட் கன்ஃபார்ம். லீவுதான். தேறி வர்ற அளவுக்கு பெரும் பிரச்சனை ஏதுமில்லைன்னாலும் ரெஸ்ட் எடுத்துக்கறது பெஸ்ட் என்பதால லீவு.

ஹைதையில் குளிர் துளிர் விட ஆரம்பிச்சதுக்கே இந்த
நிலமையா இருக்கு. இந்த வாட்டி மழை அவ்வளவா இல்லை.
அதனால குளிர் போனதடவை மாதிரி இருக்காதுன்னு நினைச்சேன்.
காலையில் பனி பொழியுது, பகலில் வெயில் பிரிச்சு மேயுது.
சாயந்திரம் 5 மணிக்கே இருட்டு, குளிர்னு ஒரு மார்க்மா
ஆரம்பிச்சிருக்கு.

நான் சீக்கிரம் 1000 பதிவு அடிச்சு விழா கொண்டாடலாம்னு
நினைச்சிருந்தேன். அது நடக்க கூடாதுன்னு யாரும் ஏதும்
செஞ்சிட்டாங்களா?!!! :))

சரி இந்தப் பாட்டைக்கேட்டுகிட்டு இருங்க.


13 comments:

KSGOA said...

இந்த சளியால எல்லாம் நீங்க 1000 பதிவு
அடிப்பதை தடுக்கமுடியாது.கூடிய சீக்கிரம் 1000 பதிவு அடிக்க வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

கவலைப்படாதீங்க. இதெல்லாம் ஜூஜூபி. மீண்டு வந்து அடிச்சு ஆடுவீங்க. 1000மாவது பதிவு போடுவீங்க. விழாவுல நானும் உண்டுதானே...

Appaji said...

மறக்க முடியாத பாடல்...அருமை.....இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் ....குழந்தைக்கு உண்டாகும் சந்தோசம்....கிடைக்கும்...சரி தானே ..நான் சொல்வது !!!...அப்புறம்.....பதிவு...எதை பற்றி? விழா எங்கே!!! :((((

AKM said...

ஹலோ மேடம்..
சளி வந்து மருந்து சாப்பிட்டால் மூனு நாளுல போகும்.. மருந்து சாப்பிடலைன்னா.. திரீ டேஸ்ல போகும் நம்ம ஏரியாவில சொல்வாங்களே .. கேள்விப்பட்டதில்லையோ..
அது சரி.. என்ன மாதிரி நல்ல பசங்களுக்கு(?) இருக்கிற நல்ல பழக்கத்தில!!!??? அடிக்கடி சளி பிடிக்கும்.. ராணி மாதிரி வீட்டில் உள்ள உங்களைப்போன்றோர்க்குமா?? ஆச்சிரியம்தான்.. எனிவே உங்களது 1000வது பதிவிற்கும்.. கலா அவர்களின் விழா விற்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. அன்புடன் ஏகேஎம்

settaikkaran said...

சளிதோஷம் விலக விக்ஸனாமூர்த்தி அருள் புரிவாராக! :-)

வெங்கட் நாகராஜ் said...

ஜலதோஷம் போக மாத்திரை எடுத்தா ஐந்து நாள் ஆகும். மாத்திரை எடுக்கவில்லையெனில் ஃபைவ் டேஸ் ஆகும்.... :)))

நான் எப்பவும் சொல்றது...

எல்லாம் சரியாகும்... விரைவில் ஆயிரமாவது பகிர்வு எழுதி பதிவிட வாழ்த்துகள்....

saravanan said...

Bhuvaneshwari amman kappatruvar

அமுதா கிருஷ்ணா said...

ha ha ha..

சாந்தி மாரியப்பன் said...

//அயித்தானுக்கா, ஆஷிஷுக்கா, அம்ருதாவுக்கு யாருக்கு இன்றைக்கு அர்ச்சனை செய்தோம்னு குழப்பம். //

ஒரு நாளைக்கு ஒருத்தருக்குத்தான் அர்ச்சனைன்னு கணக்கு வெச்சுக்கோங்க.. மறக்காது ;-)

அன்புடன் அருணா said...

ம்ம்ம் என்னதிது சளீஸ்வரர் இப்படி ஆடுகிறார்? இங்கேயும் ஆட்டமாய் ஆடுகிறார்!

pudugaithendral said...

ksgoa, கணேஷ், அப்பாஜி,ஏகேஎம்,சேட்டைத்தம்பி, சகோ வெங்கட்,சரவணன், அமுதா கிருஷ்ணா, அமைதிச்சாரல், அருணா அனைவருக்கும் மிக்க நன்றி

புதுகை.அப்துல்லா said...

அக்கா, சாதாரணமா சளிப்பிடிச்சா ஒரு வாரம் இருக்கும். மாத்திரை மருந்து சாப்பிட்டீங்கன்னா வெறும் ஏழு நாள்லயே சரியாப் போயிரும் :)

pudugaithendral said...

எனக்கு ஏழு நாளில் சரியா போச்சு அப்துல்லா :)

வருகைக்கு நன்றி