Friday, November 11, 2011

வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேர வேண்டும்

அம்ருதம்மாவுக்கு டென்ஷன் கொஞ்சம் ஜாஸ்தி. நல்லா படிச்சாலும்
ஏனோ ஒரு பயம் உள்ளே இருக்கும். சைக்கலாஜிக்கலாத்தான் டீல்
செய்வேன். புதன் கிழமை செம டென்ஷன் மேடத்திற்கு. இன்று 11.11.11
அன்று நடைபெறவேண்டிய INTERSCHOOL COMPETION முன் கூட்டியே
நேற்று நடக்கும் என அறிவித்திருந்ததுதான்.

அம்ருதம்மா பாட்டு போட்டியில கலந்துகிட்டாங்க. அதாவது
ம்யூசிக் ட்ரூப் மாதிரி 5,6,7ஆம் வகுப்பு மாணவ,
மாணவிகளை வெச்சு செட் செஞ்சிருந்தாங்க. பாட்டு,
தபலா, கீ போர்டுன்னு கலக்கல். அதுல அம்ருதம்மா
கீ போர்டு வாசிச்சாங்க. 7 பள்ளிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி.

ஆஷிஷ் அண்ணாகூட இன்னும் 7 பேர் சேர்ந்து ஃப்யூஷன்
டான்ஸ். வெஸ்டர்ன் & இந்திய நடனம். ஆண் குழந்தைகள்
வெஸ்டர்ன், பெண்குழந்தைகள் இந்திய நடனம். அப்புறம்
இருவரும் சேர்ந்து சல்சா என்பது போல இருந்ததாம்.


மேட்டருக்கு வருவோம். என் தங்கங்கள் இருவரும் இந்தப்
போட்டிகளில் ஜெயிச்சிருக்காங்க. அம்ருதம்மா அண்ட் குழுவிற்கு
முதல் பரிசு(ஜூனியர்ஸ் கேட்டகிரியில்)
ஆஷிஷ் அண்ணா & குழுவிற்கு இரண்டாம் பரிசு.(சீனியர்ஸ் கேட்டகிரியில்)



அம்ருதம்மா இந்தப் பாட்டுக்குத்தான் வாசிச்சாங்க.
ஆஷிஷ் அண்ணா பாட்டு ஃப்யூஷன். இவங்க டீச்சர்
தயாரிச்சது என்பதால (மிக்ஸிங்) கொடுக்க முடியலை.

மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ஆஷிஷ் & அம்ருதா.


7 comments:

Appaji said...

தங்களது பிள்ளைகளுக்கு .. வாழ்த்துக்கள்...."இசையை ...இசையால் மட்டுமே வெல்ல முடியம் "

பால கணேஷ் said...

அவங்க ரெண்டு பேருக்கும் நானும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன். உங்க உடல் நலம் ஓ.கே.வா..?

வெங்கட் நாகராஜ் said...

ஆஷிஷ், அம்ருதா இருவருக்கும் எங்களது வாழ்த்துகளைச் சொல்லிடுங்க....

பகிர்ததற்கு நன்றி.

கோமதி அரசு said...

ஆசிஸ், அம்ருதாவிற்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரவேண்டும்.

வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

Pandian R said...

Send my congrats!

pudugaithendral said...

நன்றி அப்பாஜி,

நன்றி கணேஷ, (கொஞ்சம் பரவாயில்லை. :))

நன்றி சகோ

நன்றி கோமதி அரசு

நன்றி ஃபண்டூ

ராமலக்ஷ்மி said...

ஆஷிஷ், அம்ருதா இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து விடுங்கள்:)! மேலும் பல வெற்றிகள் வந்தடைய உங்களோடு நானும் வாழ்த்துக்கிறேன்!!!!!