Tuesday, November 15, 2011

பதின்ம வயது சங்கடங்களும், நிபுணர் பதில்களும்

தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்
பொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.

பதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்
உரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த
அந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.

1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை!
பள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய?

நிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்
என நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்
அளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்
என்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.
அதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.

ஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்
நடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்
கூடாது.

2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.
நானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு
சென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.
நீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி?

நிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி
பிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை
நடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு
ஆதரவாக இருப்பது அவசியம்.

3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து
கொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)

நிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி
வேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை
புரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த
பொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்
சில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்
அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த
தகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று
ஓடுவதால் மகன் பாவம்)

( எனக்கு இந்த இடத்தில் தோணிய
பாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்
அடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.
தானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம்.)


4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.
ஏன் இப்படி செய்கிறார்கள்?

நிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு
உங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்
இந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது
பிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை
கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.

5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது
மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
பேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது
நம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் பெரிய மாற்றத்தை உண்டு
படுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்
கொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.

6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?
நிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்
குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்
பிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.

இப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக
பல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்
என்னென்ன பிரச்சனைகளோ? அவற்றை எப்படிக்கையாள்வது என்பது
ஒரு கலை தான்.

3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று
சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு
பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்
நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.
இந்த வயதுதான் கடினம்.



சோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.
அதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்
ஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு
விதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.


நவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்
எபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.
ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.
எங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்
9 மணிக்கே தூங்கப்போய்விடுவோம்.:))

காலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.
அப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்
என்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்
பார்க்க ஆவலாக இருக்கிறேன்.



17 comments:

raji said...

ஆஹா!காத்திருக்கிறேன் உங்களிடமிருந்து வீசப் போகும் தென்றலுக்காக.எங்கள் வீட்டிலும் பதின்ம வயது குழந்தை உண்டே!

பால கணேஷ் said...

அருமையான பகிர்வு தென்றல். குழந்தை வளர்ப்பில் ஆர்வமுள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான தகவல்கள். நன்றி. (த.ம.1)

கோமதி அரசு said...

3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று
சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு
பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்
நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.
இந்த வயதுதான் கடினம்.

ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.
கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல் கையாள வேண்டும் குழந்தைகளை. அவர்கள் மனம் உடைந்து விடாமல் இருக்க வேண்டும் நம் அறிவுரைகளால்.

நல்ல தொடர் பதிவை படிக்க காத்து இருக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

பதில்கள் யாவும் சரியா தவறா என்று யோசிக்கும் முன், எல்லாம் ஒரு தலை பட்ச்சமாக தெரிகின்றது ...


அதுக்காக அப்பாக்கள் செய்த தவறு என்று மட்டும் சொல்ல இயலாது, பதின்ம வயது பெண்பிள்ளைகளை தாயார் தான் அதிகம் கண்டிப்பார்கள் ...

Appaji said...

.அருமையான நிகழ்ச்சி...(டிவி பார்க்க நேரம் இருப்பதில்லை. . ...) தாங்கள் .பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.தூர்தர்ஷன்ல நல்ல நிகழ்ச்சிகளும் அவ்வப்போது வருவதுண்டு.

சீரியல் பார்த்து எழுதுங்க. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

pudugaithendral said...

வாங்க ராஜி,

எனக்கும் உதவியாய் இருக்கும் என்பதால்தான் இப்படி டீவி சீரியல் பார்க்க ஆரம்பிக்கும் சூழல். :)
விளம்பரம் நல்லாவே இருக்கு. தொடர் எப்படி இருக்கோ பாக்கணும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

எத்ததின்னா பித்தம் தெளியும் எனும் ஒரு நிலை இப்போதைய பெற்றோர்கள் நிலை. அது என்ன (த,ம1)

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு,

சரியா சொன்னீங்க.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஜமால்,

ஒரு தலைப்பட்சம்னு சொல்லிட முடியாது. அந்த வயது பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கணும். நாமளும் அந்த வயதைக் கடந்துதான் வந்திருக்கோம் என்றாலும் அன்று இருந்த சூழலே வேறு.

அம்மாக்கள் பெண்குழந்தைகள், ஆண்குழந்தைகள் இருவரையும் கண்டிப்புடன் தான் வளர்ப்பார்கள்.
அதீத அன்பும் வீணாகும், அதீத கண்டிப்பும் மிஞ்சிப்போக செய்துவிடும். மிதமாக இருக்க வேண்டும்
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

நானும் அதிகம் பார்க்க மாட்டேன். போன வாரம் உடம்பு சரியில்லாம இருக்க வேற எதுவும் செய்ய முடியாம டீவி முன்னால உட்கார்ந்தேன். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

மறுஒளிபரப்பு காலை வேளையில் வந்தாத்தான் பதிவு போட முடியும். பாப்போம்.

வருகைக்கு நன்றி

Pandian R said...

பார்க்கவேண்யவர்களில் 99 சதம்பேர் பார்த்திருக்க மாட்டார்கள்! :)

அன்புடன் அருணா said...

இந்த நிகழ்ச்சியை கடைசிலெ கொஞ்ச நேரம் நானும் பார்த்தேன் தென்றல்!

pudugaithendral said...

வாங்க அருணா,

ஓ நீங்களும் பாத்தீங்களா! சந்தோஷம்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

ஆமாம் :(

வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

நல்ல பதிவு

என்ன செய்வது
இப்ப் இருகிற செல்போன், பேஸ்புக இதனால் என்ன நடக்கிற்து என்றே ச ம்டுஇயாது.பதிமவ்யத கடக்ும் வ்ரை எல்லா பெற்றோருக்க்ும் வயிற்றில் புளி தான்.