அறிவாற்றலை விரும்பாதார் யாரேனும் உண்டா. நல்ல கல்வி அறிவு
இருந்தால் இழந்த செல்வத்தைக்கூட திரும்ப பெறலாம் என்பார்கள்.
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்புத்தான். சிறந்த கல்வியை
குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின்
முதல் கனவாக இருக்கும். வித்யா என்றதும் நினைவுக்கு வருவது
சரஸ்வதி தேவி. கலைமகளுக்காக பூஜைகள் செய்வோம். கலைமகள்
அருள் பெற புஸ்தகமண்டலம் அமைத்து “சாரதா நவராத்திரியில்”
அன்னைக்கு 3 நாள் பூஜை. மது,கைடப எனும் அசுரர்களிடமிருந்து
வேதங்களை காப்பதற்காக மஹாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான்
ஹயக்ரீவ. நரசிம்மாவதாரம் போல ஹயக்ரீவர் மஹாலட்சுமியை
தனது மடியில் அமர்த்தி ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவராக காட்சி தருகிறார்.
சரஸ்வதி தேவிக்கே போதித்த தெய்வம் ஹயக்ரீவர். வைணவ தெய்வங்களில்
ஹயக்ரீவர் முக்கியமானவர். எந்த ஒரு கலையையும் கற்கும் முன்
ஹயக்ரீவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று.
ஹயக்ரீவ ஜெயந்தி ஆவணிமாத ஸ்ரவண (திருவோண) நட்சத்தித்தன்று
கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் மஹாநவமி (சரஸ்வதி ஆவாஹனம்)
அன்றும் ஹயக்ரீவருக்கு ஆராதனைகள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் ச்ரவண(திருவோண)நட்சத்திரத்தன்றும் ஸ்ரீஹயக்கீரவருக்கு
பூஜை செய்யலாம். மஞ்சள் நிறம்தான் இவருக்கு உகந்தது. கையில் புஸ்தகத்தோடு
காட்சி தரும் இந்த ஹய்க்ரீவர் முகம் குதிரை போன்றும் உடல் மனித உடலாகவும்
இருக்கும். ச்ரவண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவ ப்ராசதம் செய்து, மஞ்சள் நிற
பூக்களால் அர்ச்சித்து, பூஜை செய்யலாம்.
ஸ்ரீவாதிராஜ என்கிற மாத்வ தீர்த்தருக்கு ஹயக்ரீவர் இஷ்ட தெய்வம்.
சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டார்.
அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும்,
நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம்,ஒரு கையில் ஜபமாலை,
ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது.
அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயக்ருக்கு பதில் ஹய்க்ரீவ
விக்ரகம் தான் வந்தது. அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று
யோசித்து கொண்டிருக்கையில் அன்றிரவு இந்த விக்ரகத்தை
ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி கனவு வந்தது. வாதிராஜர்
ஹ்யக்கீரவருக்கு ஹய்க்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம்
செய்வார். (கடலைப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும்)
பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில்
வைத்துக்கொள்வார். ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உரு கொண்டு வந்து தனது
முன்னாங்கல்களை வாதிராஜர் தோளில் வைத்து கொஞ்சமே கொஞ்சம்
பிரசாதமாக வைத்துவிட்டு மிச்சத்தை சாப்பிட்டு போகும் அதிசயம் நடந்தது.
இப்படி எல்லாம் நடக்க சாத்தியமா என சந்தேகப்பட்டனர் சிலர்.
ஒரு நாள் பிரசாதத்தில் விஷம் கலந்து வைத்துவிட்டனர். அன்றைய தினம்
குதிரை உருவில் வந்த ஹயக்ரீவர் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் பிரசாதம்
முழுவதையும் தின்றுவிட்டார். அவரது உடல் முழுதும் பச்சை வண்ணமாயிற்று.
அதன்பிறகு கத்திரிக்காயை ஒரு விதமாக சமைத்து படைக்க அதை உண்டதும்
பச்சை வண்ணம் நீங்கியது. அந்த நிகழ்வுக்கு சான்றாக கழுத்தில் மட்டும்
பச்சை வண்ணத்தை தாங்கி அருள் பாலிக்கிறார் ஹயக்ரீவர்.
ஹய்க்ரீவ ப்ராசதம் தயாரிப்பது எப்படி?
கடலைப்பருப்பு பூரணம் செய்வோமே அது போல் தான்.
கடலைப்பருப்பை குக்கரில் அதிகம் குழையாமல் வேகவைத்து
ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.
1 கப் பருப்பிற்கு 1 கப் வெல்லத்தூள் சேர்த்து வாணலியில்
நன்கு கலக்கவும். வெல்லம் கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல்
வரும் பொழுது நெய் சேர்த்து சுருள வதக்கவும்.
ஏலம், வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கினால் ஹயக்ரீவ
பிரசாதம் தயார்.
இந்த வாக்கியத்தை சொடுக்கினால் பல வைணவ ஸ்லோகங்களுக்கான
லிங்க் கிடைக்கும். அதில் கீழே ஸ்க்ரோல் செய்து பார்த்தால் ஹயக்ரீவ
ஸ்லோகங்கள் இருக்கும். கணிணியில் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.
வேதாந்த தேசிகரின் இந்த ஸ்லோகம் மிகவும் அருமையானது.
சில ஹயக்ரீவ ஸ்லோகங்கள்:
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே.
கல்வி,வாக்ஸித்தி,புலமை பெற:
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸ்ர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹக்ரீவேதி யோ வதேத்
தஸ்ய் நிஸ்ஸரதே வாணீ ஜஹ்நுகன்யாப்ரவாஹவத்
ருக் யஜுஸ் ஸாமரூபாய வேதாஹரண கர்மணே
ப்ரணவோத்கீத வபுஷே மஹாச் வ சிரஸே நம
அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற
சந்த்ரமண்டல மத்யஸ்தம் ஹயக்ரீவம் ஸுநிர்மலம்
ஜ்ஞாந முத்ராதரம் தேவம் சங்க சக்ர தரம் விபும்
புஸ்தகம் வாமஹஸ்தே து தாரிணம் வனமாலினம்
கிரீடஹாரகேயூர கடகாத்யைரலங்க்ருதம்
எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள
ஹயக்ரீவம் கராலஸ்யம் சங்கசக்ரதரம் விபும்
ரக்தவர்ணம் த்ரிநேத்ரம் ச் த்யாயேத் வை க்ரூரகர்மஸு.
ஹயக்ரீவ காயத்ரி
ஓம் தம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸஹ பரசோதயாத்.
இன்று ச்ரவண நட்சத்திரம். ஹயக்ரீவரை பூஜித்து அவர் அருள் பெறுவோமாக.
11 comments:
இங்கு சென்னையில் செங்கல்பட்டு போகும் வழியில் செட்டி புண்ணியம் ஹயக்ரீவருக்கு புகழ்பெற்ற கோயில்.
டிசம்பர் 4,5,6 ஹைதை வருகிறேன்.உங்கள் மெயில் ஐடி தரவும்.lakdikapul-room போட்டு உள்ளோம்.ஒரு நாள் ஸ்ரீசைலம் போக ஐடியா உள்ளது.
வாங்க அமுதா கிருஷ்ணா,
pdkt2007@gmail.com இதுதான் என் மெயில் ஐடி. ஒரு மெயில் தட்டுங்க.
ஓ ஸ்ரீ சைலமா!! வெரி குட். நான் இன்னும் போகவில்லை.
வருகைக்கு நன்றி
திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக திருமலை சென்று விட்டு, பஞ்சமி தீர்த்தத்திற்கு சென்று விட்டு..இன்று காலை வந்தேன்! ...எங்களது ஊர் ஹயக்ரீவர் குறித்து எழுதி உள்ளீர்கள்...பிள்ளைகள் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற ஹயக்ரீவரை வழிபடுவது...சால சிறந்தது..நிச்சயம் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும்..நம்பிக்கையுடன் வழி பட்டால் !!!
http://www.tamilhindu.net/t1099-டொபிக்
http://www.ammandharsanam.com/magazine/April2009unicode/Page044.ஹ்த்ம்ல்
http://mykitchenpitch.wordpress.com/2007/10/21/hayagreeva-navaraaththiri-vijayadasami-thiruvahindirapuram/
நல்ல பகிர்வு.
சென்ற வாரத்தில் தான் நண்பர் வீட்டிலிருந்து ஹயக்ரீவா பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வாங்க அப்பாஜி,
ஏடுகொண்டலவாடு நல்லா இருக்காரா? நல்ல தரிசனம் கிடைத்ததா. உங்க லிங்குகளுக்கு மிக்க நன்றி.
வருகைக்கு நன்றி
வாங்க கோவை2தில்லி
நீங்க பக்கத்துல இருந்தா நானும் இன்னைக்கு பிரசாதம் அனுப்பி வெச்சிருப்பேன்.
வருகைக்கு நன்றி
ஆம்...நல்ல தரிசனம்..!
நல்லவிஷயம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
வீடு பற்றி உங்க பதிவெல்லாம் படிச்சேன்.. பேசாமே நீங்களே இன்னம் முழுசும் எழுதலாம் போல...
நன்றாக் எழுதுறீங்க..
வினொத்.
உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்.கமெண்ட் போட்டதில்லை. ஹயக்ரீவர் பிரசாதம் அருமை.செய்து பார்க்கிறேன்(நைவேத்தியதுக்கு தான்). கலைமகளில் என்று போட்டிருகிறேர்களே? அது தெளிவாக இல்லை, எந்த இதழில் வந்துள்ளது.
நல்ல தரிசனம்..! .. www.rishvan.com
Post a Comment