Friday, November 04, 2011

ஓடாதீங்க!ஓடாதீங்கtupperwareபாத்து ஓடாதீங்க

நம்ம உறவுலயோ இல்ல நட்பு வட்டத்துலயோ, இல்ல தெறிஞ்சவங்களோ
அவங்க இன்சுயூரன்ஸ் ஏஜெண்டா இருந்துட்டா அவங்களைக் கண்டாலே
ஓடுவோம். அவங்க டார்கெட் அச்சீவ் செய்ய நம்மை வற்புறுத்தறாங்களேன்னு
ஒரு பயம் தான். ஆனா சேமிப்பு எவ்வளவு அவசியம்னு தெரிஞ்சா
அவங்களை கூப்பிட்டு உக்கார வெச்சு விவரம் தெரிஞ்சிப்போம். இந்த
சேமிப்புகளில் இருந்து நமக்கு வருமானவரி விலக்கு கொஞ்சம் கிடைக்கும்
என்பது பலருக்குத் தெரியாது, அத்தோடு நமக்குத் தெரியாம ”சிறுதுளி
பெருவெள்ளமா” சேமிப்பது பிற்காலத்துல உதவும்னு புரியாம பலர்
கையில இருப்பதையெல்லாம் செலவழிச்சிடுவாங்க. இப்ப டாபிக்
அதைப்பத்தி இல்ல. இந்த இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்களைப்பார்த்து
ஓடுவது போல இன்னொருத்தங்க கிட்டேயிருந்து தப்பிக்க பாப்பது
யாரா இருக்கும்னா அது TUPPERWARE சாமான்கள் விக்கறவங்களாத்தான்
இருக்கும்.

TUPPERWARE ப்ளாஸ்டிக் பொருள் என்பதாலும், அதுக்கு போய்
அம்புட்டு விலை கொடுக்கணுமா? என்பதாலும் தான் நாம ஓடுவது.
மாவுக்கேத்த பணியாரம்னு சொல்வாங்க பாருங்க. அதுமாதிரி
நாம கொடுக்கும் காசுக்கு ஏத்தமாதிரிதான் பொருளும் இருக்கும்.

நாம பொதுவா என்ன செய்வோம். இந்த pearlpet, sunpet,
போன்ற டப்பாக்களைத்தான் அதிகம் சமையற்கட்டில் சாமான்கள்
போட வெச்சிருப்போம். pepsi, கோக் பாட்டில்களில்தான்
தண்ணி நிறைச்சு வெச்சிருப்போம். உண்மையில் நாம
அந்தமாதிரி பொருட்களை உபயோகிக்க கூடாது. அந்த மாதிரி
பாட்டில்களின் அடியில் பார்த்தா 1,3,5 அப்படின்னு நம்பர்கள்
இருக்கும். இது அந்த பாட்டில்களை நாம எத்தனை மறுபடி
உபயோகிக்கலாம்(கழுவி) என்பதை குறிக்குமாம். உங்க வீட்டுல
இருக்கும் எந்த ப்ளாஸ்டிக் பாட்டில் அல்லது டப்பாவின் அடியில்
பாருங்க நம்பர் கண்டிப்பா இருக்கும். அப்படி நம்பரே இல்லையென்றால்
அது உபயோகிக்கவே லாயக்கற்றது என அர்த்தம்.

கீழே கொடுத்திருக்கும் பட்டியலைப் பாருங்க. அந்தந்த
சாமான்களை பேக்கிங் செய்யன்னு ஒரு நம்பர் கொடுத்திருக்காங்க.
அதை ஒரு முறை உபயோகித்தற்கப்புறம் திரும்ப உபயோகப்படுத்த
கூடாது. ஜிப் லாக் கவர்களும் இப்படித்தான். ஒரு முறை
உபயோகிக்க மட்டும்தான்.


ஃபிரிட்ஜ்ல வைக்க கூட அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பொருளாத்தான்
இருக்கணும். கீழே கொடுத்திருக்கும் சிம்பல்களை பாருங்க.கப் & ஃபோர்க் இது பல டப்பர்வேர் பொருட்களில் இருக்கும். இதுதான்
ஃபுட் க்ரேட் ப்ளாஸ்டிக் என்பதன் அடையாளம். ஃபிர்ட்ஜ்ல வைக்க,
மைக்ரோ அவனில் உபயோகிக்கன்னு அதற்கென குறியிடப்பட்டுள்ள
பொருளை வாங்குவதுதான் புத்திசாலித்தனம். சாதாராண ப்ளாஸ்டிக்
டப்பாவில் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தனுப்பவதற்கும், டப்பர்வேர்
டிபன் டப்பாவில் கொடுப்பதற்கும் நிறைய்ய வித்தியாசம் இருக்கு.


டப்பர்வேர் டப்பாக்களில் ஆப்பிள் போன்ற பழங்களை நறுக்கி
கொடுத்தனுப்பினா 11 மணி வாக்கில் பிள்ளைகள் சாப்பிடும்பொழுது
கறுத்து போகாது. பிள்ளைகள் தயிர் சாதம் எடுத்துச் செல்ல வெறுக்கும்
காரணம் அது புளித்து போகும். பாலும்,கொஞ்சமா தயிரும் ஊற்றி பிசைந்து
வைத்துவிட்டால் பிள்ளைகள் மதியம் சாப்பிடும் பொழுது தயிர் சோறு
சுவையா இருக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை இட்லி தோசைக்கு மாவாட்டி டப்பர்வேர்
டப்பாவில் போட்டு வைத்துவிட்டால் புளிக்காத மாவில் சூப்பரா
இட்லி, தோசை செஞ்சு கொடுக்கலாம்.

இப்போ பல ஐடி கம்பெனிகளில் அலுவலகத்திலேயே மைக்ரோ அவன்
இருக்கு. இந்த டப்பேர் டப்பாக்களில் உணவைக்கொடுத்து அனுப்பும்
பொழுது 20 செகண்ட் அவனில் வைத்து சூடாக்கி சாப்பிடலாம்.

காலை நேர அவசரத்தில் காய்கறி நறுக்கிக்கிட்டு இருக்க முடியாது.
கத்திரிக்காய், உருளை கறி செய்வதாக இருந்தால் தவிர முதல் நாள்
இரவே காய்கறிகளை வெட்டி டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து
விடுவேன் இதனால என்னோட காலை நேரம் வேலை ஈசியா
முடிஞ்சிடுது.

DRY STORAGE அப்படின்னு ஒரு வகை ப்ராடக்ட் இருக்கு டப்பர்வேரில்.
இதில் பருப்பு வகைகள், அரிசிமாவு, கடலைமாவு போன்றவை வைக்கலாம்.
பூச்சி வராது என்பது ப்ளஸ்.

இந்த மாதிரி டப்பாவில் அரிசி போட்டு வைக்கும் பொழுது வண்டு,
பூச்சி வராமல் இருக்கும். (வேப்பிலையைக் துணியில் கட்டிப்
போட்டு வைக்கும் வேலை இல்லை.)

இன்னொரு முக்கியமான விஷயம். வெள்ளிப்பாத்திரங்கள்.
இந்த வெள்ளிப்பாத்திரங்கள் காற்று படுவதால் கறுத்து போய் விடும்.
மர அலமாரி தவிர காட்ரேஜ் பீரோ போன்றவற்றில் வைத்தாலும்
கறுத்து விடும். என்னதான் செய்ய? இருக்கவே இருக்கு டப்பர்வேர்.

டப்பர்வேர் டப்பாக்கள் காற்றுபுகாத வகையில் இருக்கும். அதனால
பெரிய சைஸ் டப்பாக்கள் (நம்ம அலமாரியில் வைக்கும் வகையில்)
வாங்கி அதில் வெள்ளிப்பாத்திரங்களைப் போட்டு மூடிவைத்து
விட்டால் தேவையான பொழுது எடுத்துக்கொள்ளலாம். அதே
பளபளப்புடன்.

சரி. டப்பர்வேரில் இவ்வளவு நன்மைகள் இருக்கு. ஆனா
அதோட விலை. கண்ணைக்கட்டுதே!!! வாங்கனும்னு நினைச்சாலே
பயப்படுத்துவது அதன் விலைதான். மாவுக்கேத்த பணியாரம்
சொலவடை இங்கே நமக்கு நல்லா புரியுது. ஆனாலும் டப்பர்வேர்
வாங்கும் முன் சில டெக்னிக்குகள் இருக்கு.

அடுத்த பதிவுல சொல்றேன்.. வாங்க.


26 comments:

கணேஷ் said...

மிகப் பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துள்ளீர்கன். சரிதாவை அவசியம் படிக்கச் சொல்றேன். தங்களின் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

புதுகைத் தென்றல் said...

மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க கணேஷ்,

மிக்க நன்றி. கண்டிப்பா படிக்கச் சொல்லுங்க

அமுதா கிருஷ்ணா said...

பயனுள்ள பதிவு.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

வருகைக்கு மிக்க நன்றி

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

Tupperware நண்பர்(?!!!)களைப் பார்த்து ஓடுவதற்கு முக்கிய காரணம், அவர்கள் direct marketing என்று சொல்லி நம் தலையில் agency எடுக்க்ச் செய்யும் ”மூளைச் சலவை” தான். மற்றபடி காசுக் கேற்ற தோசை.

புதுகைத் தென்றல் said...

வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்,

ஹாஹா. நீங்க சொல்வது சரிதான்
அதைப்பத்தி நாளைப்பதிவுல பாப்போம்.

வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

நான் முக்கிய ஸ்டோரேஜ் யாவற்றுக்கும் பல ஆண்டுகளாக டப்பர்வேர்தான். குறிப்பா தோசை மாவு, ஃப்ரீசரில் துருவிய தேங்காய் இவை கெடாது, புளிக்காது. நான் சொல்லி அம்மா, தங்கைகளும் பின்பற்றுகின்றனர். சாதாரண ப்ளாஸ்டிக்குடன் ஒப்பிடுவதால் விலை அதிகமாகவே எல்லோருக்கும் தோன்ற வாய்ப்பிருக்கிறது. பயன்படுத்திப் பார்த்தால் புரிந்திடுவர்.

விற்பவரைப் பார்த்து ஓடாவிட்டாலும் ‘எனக்குத் தேவையானதை நானே கேட்டு வாங்கிக்கறேன்’ என கேட்லாகை பெற்றுக் கொண்டு அழுத்தமா சொல்லவும் கத்துக்கணும்:))! இல்லேன்னா அந்த ஆஃபர் இந்த ஆஃபர் என ஒரு வழி செய்திடுவாங்க.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. தொடருங்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

விற்பவரைப் பார்த்து ஓடாவிட்டாலும் ‘எனக்குத் தேவையானதை நானே கேட்டு வாங்கிக்கறேன்’ என கேட்லாகை பெற்றுக் கொண்டு அழுத்தமா சொல்லவும் கத்துக்கணும்:))! இல்லேன்னா அந்த ஆஃபர் இந்த ஆஃபர் என ஒரு வழி செய்திடுவாங்க.//

நல்ல பாயிண்டா கொடுத்திருக்கீங்க. வருகைக்கும் உங்க கருத்துக்கும் நன்றி

புதுகை.அப்துல்லா said...

அக்கா, சென்னையில் எங்க கிடைக்கும்?

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

எல்லா ஊர்களிலும் டப்பர்வேர் கன்சல்டண்ட் அல்லது டீலர் இருப்பாங்க. அவங்க கிட்டதான் வாங்க முடியும். டப்பர்வேர் பொருட்களை கடையில் விற்க மாட்டாங்க.

http://tupperwareindia.com/locate-distributor இந்த லிங்குல பார்த்தா உங்க பக்கத்துல இருக்கறவங்க பேரு கிடைக்கும்.

நீங்க இருக்கற இடம் மெயில் அனுப்பினீங்கன்னா விசாரிச்சு சொல்றேன்.

DrPKandaswamyPhD said...

நீங்களும் ஏஜென்சி எடுத்திருக்கற மாதிரி இருக்குது?!

புதுகைத் தென்றல் said...

வாங்க டாக்டர் ஐயா,

நலமா. இதுவரைக்கும் இல்ல. :))

வருகைக்கு மிக்க நன்றி

Appaji said...

காலத்துக்கு தகுந்த பதிவு.....மிக பொறுமையாக அலசி ஆராய்ந்து உள்ளீர்கள்...தொடருங்கள்..

fundoo said...

a teacher is always a teacher. Informative post.

வித்யா said...

என் கிச்சனும் 90% டப்பர்வேர் கிச்சன் தான். வேற டப்பாக்களில் வைத்தால் சீக்கிரமே வண்டு பிடிக்கும் கடலை மாவு, சோளமாவு போன்ற ஐட்டங்கள் டப்பவேரில் மாதக்கணக்கில் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

நல்ல பதிவு.

ஜெட்லி... said...

நான் கடைக்கு விக்க வாங்கலாம்னு ஒருத்தர் கிட்ட விலையை கேட்டேன் ...
டிபன் பாக்ஸ் விலை 500 க்கு மேல் என்றார்... அப்புறம் ஆறு பெர்சென்ட்
கிடைக்கும் என்றார்....ரைட் விடுங்கனு போன்ஏ பண்ணலை...
நீங்க சொல்றத பார்த்தா டப்பர்வேர்ல நிறைய நல்லது இருக்கிற மாதிரி
தெரியுது...

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

காசுக்கேத்த பணியாரம்... :)

பிரச்சனையே நம்மையும் ஏஜென்சி எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தும் சிலர் தான்.... அடுத்தப் பகுதிக்கு வெயிட்டிங்...

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்பாஜி,

எதிலயும் நல்லது கெட்டது இருக்கும். ஆனா அதைப்பத்தி எல்லாம் தெரியாம காசு குறைவா இருக்குன்னு நாம சாதாரண ப்ளாஸ்டிக் உபயோகிக்கறோம்.
ஒரு விழிப்புணர்வு வரும் என்பதால்தான் இந்தப் பதிவு

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபண்டூ

//a teacher is always a teacher.

:))) மாறிட முடியுமா!! ரத்ததுல ஊறிய விஷயம் ஆச்சே.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வித்யா,

நானும் அப்படித்தான். வருகைக்கும் உங்க கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜெட்லி,

விலைப்பத்தி தான் எல்லோருக்கும் பயம். இந்த டப்பர்வேர் பொருட்கள் லைஃப்டைம் கேரண்டி. மூடி கிழிஞ்சு போனா ரீப்ளேஸ்மெண்ட் கிடைக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

அது ஒரு பிரச்சனையே இல்ல. :))

அதைப்பத்தி அடுத்த பதிவுல சொல்றேன். வார இறுதியில் மற்ற வேலைகளில் பிசியாகிட்டதால நாளை அந்தப் பதிவு கண்டிப்பா வரும்.

வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

மாவுக்கேத்த பணியாரம்
சொலவடை இங்கே நமக்கு நல்லா புரியுது. ஆனாலும் டப்பர்வேர்
வாங்கும் முன் சில டெக்னிக்குகள் இருக்கு. /

மிகப்பயனுள்ள ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

சுரேகா.. said...

லேட்டா படிக்குறேன்..ஆனா மிகப்பயனுள்ள தகவல்..!!

கண்டிப்பா வீட்டுக்கு வாங்கணும்!!