பதிவு போட ஆரம்பித்து 4 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்
இந்த மாதம் தான் மிகக்குறைவான பதிவுகள். :) அதான் பிரியாணி
போட வந்திட்டேன்.
பிரிந்தவர் மீண்டும் சேர்வதுபோலன்னு கேள்விபட்டிருக்கோம். சேர்ந்தவர்
மீண்டும் மீண்டும் பிரிதல் என்பதுதான் இப்ப லேட்டஸ்ட். உடன்பிறாவா
தோழிக்கு கல்தா கொடுத்திருக்கும் அம்மாவைப் பத்திதான் சொல்றேன்.
இதற்கு பின்னாடி இருக்கும் மர்மமென்ன? இதற்கு காரணம் சோ ராமசாமி
அவர்கள்னு வேற பகிரங்கமா போடறாங்க. ஏதோ நடக்கிறது என்பதற்கு
இது கட்டியமா? இல்ல??? புரியலை.
************************************************************************
போனவாரத்தில் ஒரு நாள் ஆஷிஷ் பள்ளியிலிருந்து கண்களில் நீர் தளும்ப
வந்தான். பள்ளியில் ஏதும் பிரச்சனையா? டீச்சர் திட்டிவிட்டாரா? என குழப்பம்.
(எப்பவும் ஒரே மாதிரி இருப்பது கஷ்டமாச்சே). என்னப்பா என்று கேட்டால்,
உள்ளே வந்து கட்டிக்கொண்டு ஒரே அழுகை. அவனது நண்பன் இறந்துவிட்டானாம்.
பாவம் ஒரே வகுப்பு மாணவன். குமுறி குமுறி அழும் ஆஷிஷை அன்று
தேற்றுவதற்குள் கஷ்டமாகிவிட்டது. அந்தப் பையன் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் மொட்டை
மாடியிலிருந்து கால்தவறி விழுந்தானா? தற்கொலையா தெரியவில்லை.
இன்னும் 15 நாளில் தனது பதினாறாவது பிறந்தநாளை கொண்டாட விருந்த
பிள்ளை இறந்துவிட்டான்.
சமீபத்தில் ஒரு நாளிதழில் கூட குழந்தை வளர்ப்பு ஷ்பெஷல் இதழ் வந்தது.
பதின்ம வயதில் பெண் குழந்தையை பேணுவதைப்பற்றித்தான் எல்லாம்
பேசுகிறார்களே தவிர இந்த அண்குழந்தைகளைப் பற்றி அவர்களது பிரச்சனைகள்
பற்றி அவ்வளவாக ஏதுமில்லை. பெண்குழந்தை பற்றி எவ்வளவோ பேசியாகிவிட்டது.
ஆண்குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. அதற்கு
போதிய கைடன்ஸ் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த மனத்தாங்கல்
எப்போது தீருமோ. பெற்றோர்களுக்கு தேவையான போதனை எப்போது கிடைக்குமோ?
**********************************************************************************
10த் போர்ட் எக்ஸாமா இந்த வருஷம்? பாத்து நல்லா படி? ஜாக்கிரதை!!!
என மிரட்டியதெல்லாம் வரும் மார்ச் மாத பொதுத் தேர்வோடு சரி.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இப்பொழுதே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
ஆப்ஷனல். விருப்பமென்றால் எழுதலாம். அடுத்த வருடம் அதாவது
2012-2013 கல்வியாண்டிலிருந்து 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குட்பை
சொல்லப்போகிறது சிபிஎஸ்சி. அதிகமான மனச்சோர்வுக்கு பொதுத்தேர்வு
வழிவகுக்கிறது என்பதால் இந்த முடிவாம்.
இப்பொழுது 9 ஆம் வகுப்பு மார்க்கையும் பத்தாம் வகுப்புக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.
எல்லாமே டெஸ்டாக எழுதாமல் ஆக்டிவிட்டி, ப்ராஜ்க்ட் என கொடுத்து
மதிப்பீடு செய்கிறார்கள். செமஸ்டர் சிஸ்டம் போல மதிப்பீடு நடக்கிறது.
10 ஆம் வகுப்பு முழுப்பரிட்சையும் போர்ட் எக்ஸாமாக இருந்தாலும்
80 மதிப்பெண்களுக்கு பரிட்சை எழுதுகிறார்கள் என்று கொஞ்சம் கன்ஃப்யூசிங்காகத்தான்
இருக்கு.
இது நல்லதா கெட்டதா? ஒரு அம்மாவாக “ஐ. ஜாலி! பசங்க தப்பிச்சாங்க.நமக்கு கிடைக்காத ஒரு ஆனந்தம் வருங்கால பிள்ளைகளுக்கு” ஒரு
ஆசிரியையாக “இது சரியான முடிவு தானா??!!”
உங்க கருத்தையும் சொல்லுங்க.
*****************************************************************************
எங்கேயும் எப்போதும், தெய்வத்திருமகள் இரண்டு படமும் சமீபத்தில்தான்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படங்கள். எங்கேயும் எப்போதும்
சான்சே இல்லை. அஞ்சலியின் நடிப்பு அருமை. எப்போதும் கொறித்து
கொண்டே வரும் பெண்ணாக நாடோடிகளில் நடித்த அனன்யாவா இது என
இருக்கு. இந்தப் படம் இப்பொழுது ஜர்னி (Journey) என தெலுங்கு
பேச வந்திருக்கிறது.
டர்ட்டி பிக்சர் படம் சக்கை போடு போடுகிறது போல இந்தப் படத்தின் மூலம்
வித்யாவுக்கு நல்ல மார்க்கெட்டாம். 7 கோடி சம்பளமாம். ஆனால் இந்தப்
படத்துக்கு ப்ரமோஷன் என்ற பெயரில் பொது இடங்களில் அவர்கள் அடித்த
கூத்துதான் சகிக்கவில்லை.
********************************************************************************
நான் எழுதறேன்னு சொன்னது தப்புத்தான். என்னால முடியலை.
எதுக்கு இந்த டயலாக்குன்னு கேக்கறீங்களா? பர்வரிஷ் அப்படின்னு ஒரு ஹிந்தி
சீரியல் சோனியில் ஆரம்பமாகுது. அந்தத் தொடரை பற்றி பதிவெழுதறேன்னு
சொன்னேன்ல அதுதான் என்னால முடியலை. திரைப்படத்துக்கு விமர்சனம்
எழுதுவது போல இதுக்கு சான்சே இல்ல. சீரியல் ரொம்ப நல்லா இருக்கு.
கண்டிப்பான பெற்றோரா இருப்பது நல்லதா? நட்போட இருப்பது நலமான்னு
ஒரே குழப்பம்தான் நமக்கு. அதுக்கு இந்த சீரியல் தீர்வுன்னு சொல்ல முடியாட்டியும்
நாம என்ன தப்பு செய்யறோம்னு புரிய வைக்குது.
அத்தோட பெரியவங்களா நாம செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்லுது.
தொடர்ந்து பார்க்க முடியாததால சனிக்கிழமை முன்பகல் 10 மணியிலிருந்து
12.30 வரை மொத்த வார எபிசோட்டையும் பாக்கலாம்.
அந்த சீரியலில் நடிப்பவர்களுக்கும், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்
****************************************************************************
கலி முத்தி போச்சுன்னு தான் சொல்லணும். பொம்பளைப்புள்ளைங்களை
வெளிய அனுப்பி வெச்சிட்டு வயிற்றுல நெருப்பைக்கட்டிகிட்டா மாதிரி
இருக்கோம்னு சென்ற தலைமுறை பெற்றோர்கள் சொன்ன டயலாக்கை இனி
ஆண் குழந்தைகளை பெற்றவங்க சொல்லும் நிலை வரும் போல இருக்கு.
ஆந்திராவின் குண்டூருக்கு அருகில் இரண்டு ஆசிரியைகள் தங்களது 8ஆம்
வகுப்பு படிக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல்
திருமணம் செய்துகொண்டார்களாம்!!!!!!!!!!! இதை பேப்பரில் படித்த
பொழுது என்னவோ மாதிரி ஆகிவிட்டது.
பெண்களிடம் எந்த வேலை கொடுத்தாலும் பொறுப்பாக செய்வார்கள்.
ஆசிரியர் பணியில் பெண்களை அமர்த்தினால் தாயைப்போல பாதுகாப்பார்கள்
என பெண் இனம் மேலே எத்தனையோ நல்ல பெயர்கள். அவற்றுக்கு களங்கம்
விளைவிக்கும் கருவேலம் முற்கள் இப்பொழுது முளைக்கத் துவங்கி இருக்கின்றன.
இதை முளையிலேயே கிள்ளி எறிய ஏதாவது செய்யவேண்டிய தருணம்.
பிள்ளைதான் பள்ளி செல்கிறதே என்று விட்டுவிடாமல் நேரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் பிள்ளைகளுடன் அளவளாவி நீதி போதனைக்கதைகளை
சொல்லவேண்டும். பள்ளியில் தற்போது இத்தகைய வகுப்புக்கள் நடப்பது
இல்லை. பிள்ளையின் வளர்ப்பில் பெரும் பங்கு பெற்றோருக்குத்தான்.
************************************************************************************
15 comments:
பிள்ளை வளர்ப்பில் இன்றைய சூழலில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பது நிஜம்தான். எங்கேயும் எப்போதும் தெய்வத் திருமகளைவிட நல்ல படம். பாடல்களாலும் கூட. ஆசிரியைகள் மாணவனை திருமணம் செய்து கொண்டார்களா... என்னத்தச் சொல்ல... காலம் மாறிப் போச்சு! அடிக்கடி பிரியாணி போடுங்க தென்றல் மேடம்.
வாங்க கணேஷ்,
இனி அடிக்கடி பிரியாணி போடப்படும்.
வருகைக்கு மிக்க நன்றி
நல்ல் அலசல்கள்.
ஆமாம் பதின்ம வயது பெண்குழந்தைகளை பற்றி தான் அதிகமாக எல்லோரும் பேசு கிறார்கள்
ஆண் குழதைகள் பறறியும் நிறைய் பதிவுகள் போடலாம்
ஆஷிஷ் ரொம்ப பத்ட்டமாக இருந்திருக்கும் இல்லையா
<<<<<<<<<>>>>>>>>>>>>>மர்மமாய் உள்ளது!
<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>நிஜமாய் தான்..!! இந்த சம்பவம் மிக வருத்தமாய் உள்ளது...<<<<<<<<<<<<<<>>>>>>>>சரிதான்!
<<<<<<<<<>>>>>>அருமையான படம்...அந்த இயக்குனருக்கு போன் செய்து பாராட்டினேன்.!<<<<<<<< களங்கம்
விளைவிக்கும் கருவேலம் முற்கள் >>>>>>>வருங்கால சந்ததியினரை நினத்தால் தான் ..மிரட்சியாய் உள்ளது...எப்படி வாழ போகிறார்கள் என்று..?
ஆசிரியை அக்கா, பத்தாம் வகுப்பு போர்ட் எக்ஸாமில் உள்ள மாறுதல் பத்தி நீங்க பயப்பட வேன்டியதேயில்லை. செமஸ்டர் முறையில் ஒரு சின்ன மாறுதலாகத்தான் இது வருது.
வருகைக்கு மிக்க நன்றி வேங்கட ஸ்ரீநிவாசன்
வாங்க ஜலீலா,
//ஆண் குழதைகள் பறறியும் நிறைய் பதிவுகள் போடலாம்//
பதிவுகள் படிக்கறவங்க சரி. புத்தகம் மட்டுமே தெரிஞ்சவங்களுக்கும் இது போய் சேரணும்.
ஆஷிஷ் ரொம்ப பத்ட்டமாக இருந்திருக்கும் இல்லையா//
ஐயோ குழந்தை மனசொடிஞ்சு இருந்துச்சு. தேத்தி பேசி, அணைச்சுன்னு அவனை நார்மலாக்க கஷ்டப்பட்டேன். நண்பனின் மரணம் ஒரு கொடுமை.
வாங்க அப்பாஜி,
வருகைக்கும் தங்களின் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அப்துல்லா,
பயமில்லை. தமிழகத்துக்கு இப்பத்தான் இந்த ட்ரைஸெம்ஸ்டர் சிஸ்டம் வந்திருக்கு. ஆந்திராவில் எப்பயோ இதெல்லாம் அமுலுக்கு வந்திருக்கும். NCERT பாடங்கள்தான் நடத்தப்படுது.
வருகைக்கு நன்றி
இனி ஆணியவாதிகளின் கால்லம் போலும் ;)
நல்ல பிரியாணி
வாங்க சாய்பிரசாத்,
எந்த ஈயமும் நல்லது இல்லன்னு நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி
கலந்து கட்டி ஒரு பிரியாணி.... நல்ல பகிர்வு... :)
வாங்க சகோ,
வருகைக்கு மிக்க நன்றி
சிபிஎஸ்சியின் முடிவை நான் வரவேற்கிறேன்.
ஆஷிஷிற்கு என் ஆறுதலை சொல்லிடுங்க:(
Post a Comment