பெரியவங்க வாழ்த்தும் போது கூட என்றும் பதினாறுன்னு வாழ்த்துவாங்க.
மார்க்கண்டேயர் போல என்றும் இளமையுடன் நல்ல வாழ்வு வாழ்க என
அர்த்தம்.
பருவ வயதுகளில்”16” க்கு ஒரு ஷ்பெஷல் இடம் தான். ஸ்வீட் 16 என
கொண்டாப்படும் அந்த தளிர் இளம் பருவம் ஒரு சுகானுபவம். படிப்பு,
எக்ஸாம் என கொஞ்சம் டென்ஷன் இருந்தாலும் நாம் ஸ்வீட் 16 எனும்
நினைப்பே அதிக இளமையாக காட்டும்.
இப்ப 16க்கு என்னன்னு கேக்கறீங்களா. 20 நாளைக்கு முன்னால எங்க
திருமண வாழ்க்கை 16ஆம் வயதில் அடி எடுத்து வைத்த நந்நாள்.
(அப்ப போட நினைச்ச பதிவு இம்புட்டு லேட்டா போடுறேன்)
வாழ்த்து சொல்லும் பொழுதே அயித்தானிடம் இன்னைக்கு நம்ம
கல்யாண நாளுக்கு ”ட்ரைவிங் லைசன்ஸ் அப்ளை செய்யலாம்பா”.
தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறும் வயது வந்திருச்சுன்னு ஜோக்
அடிச்சேன். சூப்பரா ஒரு சுடிதார், அயித்தானுக்கு பேண்ட் ஷர்ட்
எடுத்து முன்னாடியே ரெடி செஞ்சு வெச்சாச்சு.
இது மட்டும் போதுமா?? 16 வயசாச்சே!!! என்ன செய்யலாம்னு
மண்டை குடைச்சலுடன் நெட்டை குடைஞ்சேன். கூகுள் ஆண்டவர்
புண்ணியத்தில் ஐடியாக்கள் கிடைச்சது. Traditional anniversary
gift லிஸ்டில் 16 வருடத்திலிருந்து ஏதும் பெருசா கிடையாது.
ஆனா மாடர்ன் கிஃப்ட் லிஸ்டில் hallow silverware/silver.
வெள்ளியில் ஆண்களுக்கு என்ன பரிசு கொடுப்பது? மோதிரம்
வாங்கலாம்னு ப்ளான் செஞ்சா “நான் என்ன தவில் காரரான்னு”
கேப்பாரு. வாட்ச் ஃபாதர்ஸ் டேக்கு பசங்க வாங்கிக்கொடுத்திருக்காங்க.
சம்திங் ட்ஃபரண்டா இருக்கணும்னு யோசனை. சர்ப்ரைஸா இருக்கணும்.
ஜெர்மன் சில்வரில் அழகான பொளல் ஒன்று வாங்கி வைத்தேன்.
டெக்கரேட்டிவா நல்லா இருக்கும்.
இரண்டு நாள் முன்னாடியே அயித்தானுக்கு பிடித்த பட்டர்ஸ்காட்ச் கேக்
ஆர்டர் செய்து வைத்திருந்தேன். சில்வர் தீம் என்பதால் சில டெக்கரேட்டிவ்
ஐட்டங்கள் வாங்கி வைத்திருந்தேன். டிசம்பர் 1 மில்க் மெய்ட் சேமியா
பாயசம், பிசிபேளாபாத் செய்தேன். அயித்தானுக்கு மிகவும்பிடித்தது.
மதியம் லன்சுக்கு வீட்டுக்கு வந்த சென்ற உடன் பிள்ளைகள் வந்ததும்
கடகடவென டெக்கரேட் செய்து ரெடி செய்தோம். ஓடிப்போய் கேக்
வாங்கி வந்தேன். சில்வர் கலர் பெல், சில்வர் கலர் டெக்கரேடிவ்
ஐட்டங்கள் என வீடே ஜொலித்தது.
5மணிக்கு வீட்டுக்கு வந்தார். டெக்கரேஷன் பார்த்து அசந்து போனார்.
:)) கேக்கை கொடுத்து கட் செய்தோம்.பிள்ளைகள் எனக்கு
புடவை வாங்கி கொடுத்தார்கள். அயித்தானுக்கு டீ ஷர்ட். கேக்
கட்டிங் முடிந்ததும் ஜெர்மன் சில்வர் கிஃப்ட் கொடுத்து 16 ஆம் வருடத்தின்
தீம் படி செய்திருக்கிறேன் என்றேன். ஒரே சந்தோஷம் அயித்தானுக்கு.
குடும்பத்திற்காக அல்லும் பகலும் பாடு படும் அந்த ஜீவனுக்கு என்னால்
முடிந்த ஒரு சந்தோஷத்தை தந்த திருப்தி.
இரவு டின்னர் GREEN PARK HOTELல் இருக்கும் ONCE UPON A TIME
RESTAURANTல். இங்கே உணவும் சுவையாக இருக்கும். நம் பர்ஸும்
இளைக்காது. :))
திருமணநாள் பரிசு ஐடியாக்களுக்கு இந்த வலைத்தளங்கள் பார்க்கலாம்.
வலைத்தளம் 1
வலைத்தளம் 2
வலைத்தளம் 3
FOR TRADITIONAL AND MODERN GIFTS TABLE
Get Your Own Hindi Songs Player at Music Plugin
9 comments:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்!!
உங்க வீட்டு டெகரேஷன், சில்வர் பவுல், புடவை, டி-ஷர்ட் படங்களைப் போட்டிருக்கலாமே! ;-)))))
வாங்க ஹுசைனம்மா,
வாழ்த்துக்கு நன்றி.
போட்டோக்கள் கேமிராவுலயே இருக்கு. இன்னும் கம்ப்யூட்டரில் ஏத்தலை. (பாருங்க அவசரத்துல அயித்தான் எனக்கு கேமிரா ப்ரசண்ட் செஞ்சதை சொல்ல மறந்திட்டேன்.) புதுசு என்பதால இன்னும் அதை சரியா இயக்க கத்துக்கலை.
Belated wishes (அது சரி belated பதிவு தானே).
வாங்க வேங்கட ஸ்ரீனிவாசன்,
ரொம்பவே தாமதமாத்தான் பதிவு போட்டிருக்கேன். :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
இனிய வாழ்த்துகள். கொண்டாட்டங்கள் சூப்பரா இருக்கு. ”ரகசியமாய்” பாடல் எனக்கும் பிடித்த பாடல்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ....
வாங்க கோவை2தில்லி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி
மனமார்ந்த நன்றிகள் சகோ
குடும்பத்திற்காக அல்லும் பகலும் பாடு படும் அந்த ஜீவனுக்கு என்னால்
முடிந்த ஒரு சந்தோஷத்தை தந்த திருப்தி.//
நன்றாக சொன்னீர்கள் தென்றல்.
தனக்காக எதுவும் செய்துக் கொள்ள தெரியாதவர்கள். வாழ்க்கை துணைகள்.
நாம் செய்தால் மகிழ்ந்து போவார்கள்.
திருமண நாள் வாழ்த்துக்கள்.
Post a Comment