Thursday, December 22, 2011

கலர்ஃபுல் மலேசியா.... ரயில் பயணம்

நானும் அயித்தானும் மட்டும் மலேசியா போகும் அந்த ரயிலில் ஏறலாம்
என சிங்கப்பூரா ஸ்டேஷன் டிக்கெட் பரிசோதகர் சொன்னார்னு போன
பதிவுல சொல்லியிருந்தேன்ல. பசங்களை எங்க கூட அழைத்து போக
மறுத்துவிட்டார்!!! காரணம் பாஸ்போர்ட்.

எங்க ட்ராவல் ஏஜண்ட் (கொழும்புவில்) மலேசியா விசா முதலில் வாங்கி
விட்டார். அதற்கப்புறம் சிங்கப்பூர் விசா வாங்கும் பொழுது அவங்க பாஸ்போர்ட்
6மாதம் வரைக்கும் எக்ஸ்பயரி ஆகாம இருக்கணும்னு சொல்லிட்டாங்க.
எனக்கும் அயித்தானுக்கு பிரச்சனை இல்லை. பசங்க ரெண்டு பேருக்கும்
மைனர் பாஸ்போர்ட் என்பதால 5 வருஷத்துக்குத்தான் தருவாங்க.
உடனடியா இந்திய எம்பசில கொடுத்து புது பாஸ்போர்ட் வாங்கி
ட்ராவல் ஏஜண்ட்கிட்ட கொடுத்தோம். அவங்களும் அதுல சிங்கப்பூர்
விசா வாங்கி எங்க கிட்ட கொடுத்திட்டாங்க. பழசுல இருக்கற விசா
பழைய பாஸ்போர்ட் கேன்சல் ஆனதால விசாவும் கேன்சல் ஆன மாதிரியாம்.
அது எங்களுக்கும் தெரியாது. எங்க ட்ராவல் ஏஜண்டும் எதுவும் சொல்லலை.

புது பாஸ்போர்ட்ல சிங்கப்பூர் விசா இருந்ததால அங்க நுழைஞ்சாச்சு.
இப்ப பசங்களுடையது பழைய பாஸ்போர்ட்லதான் மலேசியா விசா
இருப்பதால பசங்களை அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆஹான்னு
ஆயிடிச்சு. அங்கேயிருந்துதான் எங்களுக்கு ஃப்ளைட்டுன்னு எங்க ஃப்ளைட்
டிக்கெட்டை காட்டினோம். 2 நாள்தான் மலேசியாவுல தங்குவோம்.
அப்படின்னு சொல்லி கெஞ்சினோம். கடைசி மணிய அடிச்சு, ரயில் ஹாரனும்
அடிச்சாச்சு. ப்ளாட்பாரத்துல எங்களைத் தவிர ஒரு ஈ,காக்கா இல்ல!!

அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியலை. நான் இங்க அனுப்பிடறேன்
மலேசியாவுல உங்களை கேள்வி கேட்டா உங்க பொறுப்புன்னு சொல்லிட்டார்.
அடிச்சு பிடிச்சு ஓடி ட்ரையினில் பொட்டிகளைப்போட்டு ஏறினோம்,
வண்டி ஸ்டார்ட் ஆகிடிச்சு.


சிங்கப்பூர் மலேசியா இடையே இந்த ரயில் பயணம் நல்லா இருக்கு.
முழுதும் ஏசிதான். ஆனா தமாஷான விஷயம் லோயர் பர்த்னா
டிக்கெட் விலை அதிகம். அப்பர் பர்த்னா கம்மி. (இருப்பது
இரண்டே பர்த்தான்) எங்களுக்கு புக் செய்யும் பொழுதே கரெக்டா
4 அப்பர் பர்த்தான் கிடைச்சது. ஏறி படுத்தோம். ஆனாலும் மனசு
திக் திக் தான் காரணம். இமிகிரிஷேன் ஸ்டாம்ப் வாங்க வுட்லண்ட்ஸ்
செக் பாயிண்டில் இறங்கும் பொழுதுதான் இருக்கு மேட்டர்.

வந்தாச்சு வுட்லண்ட்ஸ் செக் பாயிண்ட். ட்ரையினிலேயே அறிவிப்பு
சொன்னாங்க. உங்க மூட்டை முடிச்சுகளை எல்லாம் வண்டியிலேயே
விட்டுட்டு, டிக்கெட், பாஸ்போர்ட் மட்டும் எடுத்துக்கங்கன்னு சொன்னாங்க!!
மூட்டையை அப்படியே விட்டுட்டா!!!ன்னு ஷாக். எல்லாரும் இறங்கவே
வேறு வழியில்லாம பொட்டிகளை ட்ரையினில் விட்டுட்டு இறங்கி
இமிக்ரேஷன், எண்ட்ரி பாயிண்டில் வரிசையில் நின்றோம். எல்லோரும்
இறங்கிட்டாங்களானு செக் செஞ்சு, ப்ளாட் பாரத்தை பூட்டிட்டு
அப்புறம் கவுண்டரை ஓபன் செஞ்சாங்க. பக் பக்ன்னு வரிசையில்
நின்னுகிட்டு இருந்தோம். பாதி தூக்கத்துல எழுந்த பிள்ளைகளும்
ஆச்சரியத்துலயும், பயத்துலயும் இருந்தாங்க.

எங்க முறை வந்தது. எதுவும் பேசாமல் ஸ்டாம்ப் போட்டு
கொடுத்திட்டாங்க. ஒரு கேள்வி கேட்கலை. என்னப்பன்
கந்தப்பன் தான் காப்பாத்திவிட்டான். அவன் தரிசனத்துக்குத்
தானே போனது. கடைசி பேசஞ்சருக்கு ஸ்டாம்ப் போடும் வரை
ப்ளாட்பாரத்திற்கு செல்லும் கதவு திறக்கப்படவில்லை. எல்லாருக்கும்
எண்ட்ரி ஆனப்பிறகு கதவு திறக்கப்பட்டு, எங்க கம்பார்ட்மெண்டுக்கு
ஓடினோம். ஆச்சரியமா பொட்டி பத்திரமா இருந்துச்சு. அப்புறமா
தான் தெரிந்தது அந்த ஸ்டேஷனில் பல ஆயிரம் கேமிராக்கள்
வைச்சு கண்காணிச்சுகிட்டே இருப்பாங்களாம். டைட் செக்யூரிட்டி.

காலையில் ரயில் கோலாலம்பூரை சேர்ந்ததும் இறங்கி வெளியே
வந்ததும் தான் மூச்சு சீரா வந்தது. இங்கே ஹோட்டல் புக்
செய்திருந்தோம். கே எல் டவர்ஸுக்கு அருகிலேயே இந்த
ஹோட்டல். ஃப்ரெஷ்ஷப் ஆகி, ஹோட்டலில் இருந்த ட்ராவல்
டெஸ்க்கில் கார் அரேஞ்ச் செய்து கொண்டு ரப்பர் ட்ரீ,
லோக்கல் சைட் சீயிங் எல்லாம் பார்த்து கந்தப்பனை பார்க்க
ஓடினோம்.

lime stoneகளால் ஆன 400 மில்லியன் வருட புராதனமானது என சொல்லப்படுகிறது
இந்த பத்துமலை(batu caves) பத்துமலைப்பற்றிய விக்கீப்பீடியாவிற்கு


372 படிகள். 15 நிமிடத்தில் ஏறினோம். இதுவே தைப்பூச சமயமாக
இருந்தால் 3 மணிநேரத்திற்கு மேல் பிடிக்கும் என்றார் கோவில் பூசாரி.
படி ஏறிவந்ததும் வரவேற்கிறான் முருகன்

372 படி ஏறி வந்த பின்னும் இன்னும் கொஞ்சம் படி

ஆனந்தமான தரிசனம். என் ஆசை நிறைவேறிய சந்தோஷம்.
பிரச்சனையிலிருந்து காப்பாற்றி தன்னை தரிசிக்க வரவைத்தற்கு
அருள்புரிந்தவனை கண்ணார தரிசித்து வந்தோம்

நாங்கள் அங்கே சென்ற பொழுதுதான் பத்துமலையில் இந்த பெரிய
முருகன் சிலை தயாராகி தைப்பூசத்தன்று திறப்புவிழாவுக்கு
நாள் குறிந்த்திருந்தார்கள்.



9 comments:

Appaji said...

பட பட்பெல்லாம்....போய்...பட்டாம்பூச்சியாய் ....மலேசியாவில்...பத்துமலை முருகனை தரிசித்து உள்ளீர்கள்...! இப்பொழுது நினைத்தாலும்...அதே பட படப்பு உள்ளதா.? ...போயிந்தி! தானே..

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

படபடப்பு மறக்க கூடியதா? அந்த திக் திக் நிமிஷங்களை இப்பவும் அனுபவிச்சுக்கிட்டேதான் இந்தப் பதிவு எழுதினேன். என்னை மாதிரி யாரும் கஷ்டப்பட்டுடக்கூடாது என்பதற்காகவும் தான் இந்தப் பதிவு. :))

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

அந்த சமயத்துல த்ரில்லிங்கா இருந்திருக்கும்.

முருகனை தரிசித்ததில் மனதில் இருந்த பயம் போயிருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

முருகன் அருளால் பிரச்சனை ஏதுமின்றி மலேசியா செல்ல முடிந்ததே.... எல்லாம் அவனருள்!

”யாமிருக்க பயமேன்” சொல்லாமல் புரிய வைத்துவிட்டானோ!

நல்ல பகிர்வு....

pudugaithendral said...

ஆமாம் கோவை2தில்லி,

அந்த மன உளைச்சல் எல்லாம் அவன் படி ஏறி தரிசத்திததில் ஓடியே போய் ரிலாக்ஸ்டா கோலாலம்பூர் பயணத்தை ரசிச்சோம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

எப்பவுமே எனக்கு “நீயல்லால் வேறு தெய்வமில்லை. எனது நெஞ்சே நீ வாழும் எல்லை- முருகா” எந்த நேரத்துலயும் என்னைக் காப்பது அவன் தான்.

வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வெளிநாட்டுல போய் பசங்க நம்ம கூட வர முடியாதுன்னா.. ஐயோ.. நினைச்சுப் பார்க்கவே முடியலை. அந்த இக்கட்டான சூழ்நிலைலேருந்து 'அவந்தான்' காப்பாத்தியிருக்கான்.

Pandian R said...

Interesting. Hope you had a time at m'asia

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,ஃபண்டு

ரொம்பவே தாமதமா உங்க கமெண்ட் இன்னைக்குத்தான் கண்ணில் பட்டது.

வருகைக்கு மிக்க நன்றி