Wednesday, December 21, 2011

JOYFULL SINGAPORE. COLORFUL MALAYSIA

எனக்கு சின்ன வயசுலேர்ந்து கோரிக்கை இருந்ததுன்னா
அதை கதிர்காம கந்தனை தரிசிக்கணும். அப்புறம் சிங்கப்பூர்
முருகன், மலேசியா பத்துமலை முருகன். மத்தது ரெண்டும்
நடக்குமான்னு ஒரு டவுட் இருந்தது.அதனால கதிர்காமனை
தரிசிக்கணும்னே பிரார்த்தனை செஞ்சுகிட்டு இருந்தேன்.
(அப்பா ஒரு முறை போய் வந்ததால பின்னாளில் நாமும்
போகலாம், தவிர இலங்கை “பக்கத்துல”தானே(!!!)
இருக்குன்னு ஒரு நினைப்பு.) இந்த பைத்தியமெல்லாம்
பிடிக்க காரணம் வருவான் வடிவேலன் சினிமாவும் தான்.

அந்த கந்தன் மனசு வெச்சா நடக்காதது ஏதும் உண்டா.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் என்னப்பன் கந்தப்பனை தரிசிக்க போய்விடுவோம் கதிர்காமத்திற்கு. (இப்போதும் நல்லூர்
கந்தனை பார்க்க ஒரு பயணம் கண்டிப்பாய் இலங்கை
செல்வேன் எனும் நம்பிக்கை இருக்கிறது) இலங்கையில்
இருக்கையில் சிங்கை செல்லும் விமானப் பயண மதிப்பு
குறைவாக (இலங்கை பணமதிப்பில்) இருக்கவே
”இந்தியா போயிட்டா முடியாதுப்பா. இங்கேயிருந்தே
போயிட்டு வந்திடலாம். எனது சின்ன வயசு ஆசை
பூர்த்தியான மாதிரி இருக்கும். பிள்ளைகளுடன்
ஒரு வெளிநாட்டு பயணம் போனாமாதிரியும் இருக்கும்!”ன்னு
சொல்ல அயித்தான் ப்ளான் போட்டார். அந்த வருடம்
எங்கள் பத்தாவது திருமண வருடமா இருக்க
கதிர்காமம் தரிசனம் முதல் வாரத்தில் ஒரு வாரம்
கழித்து சிங்கப்பூர், மலேசியா பயணம்.


சிங்கையில் ஹோட்டலில் தங்கவில்லை. என் தோழி ஒருவரின்
ஐடியா படி paying guest accommodation தங்கினோம்.
அந்த வீட்டின் உரிமையாளர் மும்பை
பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு
பிறகு சிங்கை வந்திருக்கிறார். மவுண்ட்பேட்டன் பகுதியில்
அந்த பங்களாவில் அவர் மட்டும் வசிக்கிறார்.
மற்ற அறைகளை இந்த மாதிரி வாடகைக்கு விடுகிறார்.
ஒரு நாளுக்கு எங்கள் நால்வருக்கும் சிங்கை டாலர் 70 வாடகை.
அதில் காலை ப்ரெட்& டீ கொடுத்துவிடுவார்.


நமக்கு ஊர் சுற்றிவிட்டு படுக்க இடம் கிடைத்தால் போதும். ஹோட்டலைவிட
மிக சுதந்திரமாக இருந்தது இந்த இடம். பட்ஜட்டுக்கும் பங்கமில்லா ஒரு பயணம்.
அந்தம்மாவிடம் மிகுந்த கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி சின்ன ரைஸ்குக்கரில்
சோறு சமைத்து டப்பாவில் போட்டுக்கொள்வேன். வழியில் தயிர் வாங்கி பகல்
போஜனத்தை செல்லும் இடத்தில் வைத்துக்கொள்வோம். இரவு சரவணபவன்,
வுட்லெண்ட்ஸ் ரெஸ்ராண்டுகளில் சாப்பிடுவோம். அமிர்தாவுக்கு காரம் ஆகாது,
என்பதாலும் கையில் இருந்தால் பசி எடுத்ததும் சாப்பிட கொடுத்துவிடலாம் என்பதாலும்
பெரும்பாலும் என் சின்ன ரைஸ் குக்கர் இல்லாமல் பயணம் செய்ததே இல்லை.

அப்பொழுது என் அனில் அண்ணாவும் சிங்கையில்தான் இருந்தார். செண்டோசா
பார்க்க அண்ணா தன் குடும்பத்தினருடன் வந்து காரில் அழைத்து சென்றார்.
லூஜில் பயணித்து கார் ஓட்டி வந்தது இப்பொழுதும் நினைவில் இனிக்கிறது.

சயன்ஸ் சிட்டி, ஜுராங் பார்க், மெர்லைன் எல்லாம் ரசித்தோம்.
சிங்கப்பூர் நதியில் படகு சவாரியும் மிக அருமையாக இருந்தது.
சிங்கப்பூர் முருகன் கோவில் சென்று தரிசனம் செய்தோம்.
பிள்ளைகள் மிகவும் ரசித்தனர் அந்தப் பயணத்தை. முஸ்தபாவில் பர்ச்சேசிங்.
எல்லாம் முடிந்தது. சிங்கப்பூர் பயணம் இனிதாக முடிந்து மலேசியா செல்ல
வேண்டும். சிங்கையிலிருந்து மலேசியா ரயிலில் பயணம் செய்தோம்.
சிங்கப்பூர் எவ்வளவு தூய்மை, அழகு!!! ஆனால் சிங்கப்பூரில் இருக்கும்
அந்த ரயில்வே ஷ்டேஷன் பார்த்து ஷாக். மலேசிய அரசால் பராமரிக்கப்படுகிறது
என்பதற்காக இப்படியா??? அழுக்கும் அறுவறுப்புமாக இருந்தது. நம்ம ஊர்
ஷ்டேஷன்களுக்கு திருஷ்டி சுத்தி போடவேண்டும் என நினைத்தேன்.

நம் இந்திய ரயில்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தாமதமாக ரயில் வந்தது.
இங்கே பரிசோதகரிடம் நம் பாஸ்போர்ட், விசா, ட்ரையின் டிக்கெட் எல்லாம்
காட்ட வேண்டும். பரிசோதகர் எங்களைப் பார்க்கிறார்!!
பாஸ்போர்ட்டை பாக்கிறார்!!! கொஞ்சம் நேரம் அவர் ஏதும்
பேசவில்லை. ஏதோ பிரச்சனை என்று புரிகிறது.
என்னவென்று தெரியவில்லை. அயித்தான் விசாரிக்க,
” நீங்களும் உங்கள் மனைவியும் பயணிக்கலாம்.
பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாது!!!! ”என்று சொல்ல
தலை கிர்ரென்று சுற்றியது. பிள்ளைகளை யாரிடம்
விட்டுச் செல்ல? தவிர நாங்கள் மலேசியாவில் வேறெங்கும் சுற்றிப்பார்க்க போவதில்லை. தலைநகரம் கொலாலம்பூர் மட்டுமே
பார்த்து உடன் அங்கிருந்து டைரக்ட் ஃப்ளைட்டில்
கொழும்பு போகத்திட்டம்.

ஸ்டேஷனில் இருந்தவர்கள் அனைவரும் ஏறிவிட்டார்கள்!!! எங்களைத்
தவிர யாருமில்லை. என்னப்பா? என்னப்பா இந்த சோதனை? என குழம்ப
அவர் என்ன சொல்லியும் கேட்காமல் பிள்ளைகளை அனுப்ப மறுக்கிறார்.
ஷ்டேஷன் மாஸ்டர் மணி அடித்து, கொடி அசைக்க ஹாரணும் அடித்து
விட்டார்கள்!!!!!!!!!!!!!

ஏன் அனுப்ப மறுத்தார்?
பயணம் போனோமா???

தொடரும்..............


13 comments:

kaialavuman said...

அருமையான விவரிப்பு.

SPB-சுசீலா சேர்ந்து பாடிய, 80-களின் இந்த ஹிட் பாடல் படிக்கும் பொழுதே காதில் ரீங்காரம் செய்கிறது.

நட்புடன் ஜமால் said...

சிங்கப்பூர் எவ்வளவு தூய்மை, அழகு!!! ஆனால் சிங்கப்பூரில் இருக்கும்
அந்த ரயில்வே ஷ்டேஷன் பார்த்து ஷாக். மலேசிய அரசால் பராமரிக்கப்படுகிறது
என்பதற்காக இப்படியா]]

:(
எல்லாம் அரசியல் தான் ...

pudugaithendral said...

வாங்க வேங்கட ஸ்ரீனிவாசன்,

ஆமாம் அந்தப் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஜமால்,

அரசியல் எங்கும் கேவலம்தான்.

வருகைக்கு நன்றி

Appaji said...

paying guest stay - பரவா இல்லையே!! (முடிந்தால் விலாசம் கூறுங்களேன்..அல்லது அவர்களது ஈமெயில்...
குடும்பத்தோடு செல்லும்பொது உதவியாய் இருக்கும்.) சிங்கப்பூர் சுவர்க்கம் தான்!! டாலரில் சம்பாதித்து ...டாலரில் செலவு செய்தால்!!
ஒருமுறை சிங்கப்பூர் சென்றுவிட்டு, மலேசியாவில் உள்ள நண்பரின் இல்லத்திற்கு சென்ற போது...அவர்கள் கேட்ட கேள்வி? இந்தியாவை விட ...மலேசியாவில்...என்ன இருக்கிறது...பார்க்க வந்தீர்கள்!!

கோமதி அரசு said...

ஸ்டேஷனில் இருந்தவர்கள் அனைவரும் ஏறிவிட்டார்கள்!!! எங்களைத்
தவிர யாருமில்லை. என்னப்பா? என்னப்பா இந்த சோதனை? என குழம்ப
அவர் என்ன சொல்லியும் கேட்காமல் பிள்ளைகளை அனுப்ப மறுக்கிறார்.
ஷ்டேஷன் மாஸ்டர் மணி அடித்து, கொடி அசைக்க ஹாரணும் அடித்து
விட்டார்கள்!!!!!!!!!!!!!

ஏன் அனுப்ப மறுத்தார்?
பயணம் போனோமா???//

நல்ல சஸ்பென்ஸ்.
அப்புறம் என்னாயிற்று என்று அறிய ஆவல்.

ADHI VENKAT said...

ஜாலி ட்ரிப்பாக இருந்திருக்கும். புகைப்படங்கள் அழகா இருக்கு. ஆஷிஷும், அம்ருதாவும் சிறியவர்களாக....

இறுதியில் என்ன செய்தீர்கள்....

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... பயணக் கட்டுரை... மிக நன்று சகோ... ஜாய்ஃபுல் -ஆக தொடர்ந்து இருக்கிறது.... கடைசியில் ஒரு கொக்கி.... தொடரட்டும்... அடுத்த பகுதியில் தெரிந்து விடும் ....

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

நான் சென்றது 6 வருடம் முன்னால். இப்பொழுது அந்த வீடு எப்படி இருக்கிறது என்று தெரியாது. விலாசம் இல்லை. அங்கே பேயிங் கெஸ்ட் அக்காமடேஷன் தருகிறார்கள் என்று கூட பலருக்கு வெளியே தெரியாது. (டேக்ஸ் ப்ராப்ளம் வரும் போல) எனக்குத் தனியா மெயிலடிங்க அவங்க மெயில் தேடி கண்டுபிடிச்சு தரபாக்கிறேன்.

pudugaithendral said...

இந்தியாவை விட ...மலேசியாவில்...என்ன இருக்கிறது...பார்க்க வந்தீர்கள்!!//

அவங்க சொல்வதும் உண்மைதான். நம்ம நாட்டில் இல்லாதது இல்லைதான். ஒன்றா அதிகம் தூரம் போகணும், இல்லாட்டி சுத்தமா இருக்காது. இன்னொரு விஷயம் இந்தியாவில் உள்நாட்டில் சுத்தும் பணத்திற்கும், ஹோட்டல் செலவிடும் பணத்திற்கும் அழகாக ஒரு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். :((

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு,

நாளைக்கு பதிவு வந்துவிடும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ஆஷிஷுக்கு 9 வயசு, அம்ருதாவிற்கு 6. :)) ஸோ க்யூட்டாக இருக்கும் இரண்டும். ரொம்பவே அனுபவித்தோம் அந்த பயணத்தை. மீதி அடுத்த பதிவில்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் சகோ,

அடுத்த பதிவில் சொல்லிடறேன்