Monday, January 02, 2012

சுவாமிமலை தரிசனம்

இந்த வருடத்தோடு சரி லீவுன்னு தெரிஞ்சதும் டிக்கெட் புக் செஞ்சு ஊருக்கு
ஓடுறது. ஆஷிஷ் அண்ணாவுக்கும் அம்ருதம்மாவுக்கும் லீவு இனி ஒரு சேர
கிடைப்பது கஷ்டம். அதான் வுடு ஜூட்டுன்னு ஊருக்கு கிளம்பிட்டோம்.

24 காலை அயித்தானின் நண்பர் வீட்டுக்கு போய் ஃப்ரெஷ்ஷாகி கிளம்பிட்டோம்.
கொழும்பில் இருந்த பொழுது எனக்கு நிறைய்ய்ய நட்புக்கள். அதில் சிலர்
இப்போ வேற வேற இடத்துல. நளினிஜி என்றொரு தோழி. தற்போது
சென்னையில் இருக்கிறார். அவருடைய மகள் லண்டனில் மருத்துவம் படித்து
இண்டர்னாக இருக்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருக்கும்
பெண்ணை பார்த்து பேசிவிட அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம்.

நளினிஜியும் நானும் அதிகம் பார்த்துக்கொள்ளவில்லையென்றாலும் பேசுவது
நிறைய்ய. எனக்கு நிறைய்ய டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்துக்கொண்டே
இருப்பார். அவர் எனக்கு முன்பே இந்தியா கிளம்பி வந்துவிட்டார். அன்று
அயித்தான் அடித்த கமெண்ட்.” பாவம்பா! srilanka telecom!!! இனி
நீயும் நளினிஜியும் அடிக்கடி பேசிக்க முடியாது.!! :)) ரெசிப்பிக்கள்
போன் செய்து கேட்பேன். எனக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி கொடுத்தது,
பால்காரர் அமர்த்தி கொடுத்தது, பீங்கான் கோப்பைகள் வாங்க அலைந்தது
என நிறைய்ய. நான் அவருக்கு முன்பே மாண்டிச்சோரி கோர்ஸ்
செய்ததால் அது சம்பந்தமாகவு டவுட்ஸ் கேட்க போன் செய்வார்.
அவர் ஊருக்கு கிளம்பியது கை ஒடிந்தது போலத்தான்
ஆகிவிட்டது. நளினிஜியையும் அவர் மகளையும் பார்த்து பேசிவிட்டு
புதுகை கிளம்பியாகிவிட்டது.

புதுகையைச் சேர்ந்த பொழுது மாலை 6 மணி. அடுத்த நாள் காலை
ஆஷிஷ் அம்ருதாவுக்கு மிகவும் பிடித்த மஹாராஜா பேக்கரிக்கு
போனோம். இந்த முறை ஆஷிஷ் அண்ணா என்னவோ கேக் அதிகம்
சாப்பிடவில்லை. பனீர் சோடாதான் விரும்பி குடித்தார். புரோட்டா
விரும்பிச்சாப்பிட்டார். அம்ருதம்மாவும் கேக், பனீர் சோடா எஞ்சாய்
செய்தார்.

பகல் 11 மணி வாக்கில் சுவாமிமலை புறப்பட்டோம். புதுகையிலிருந்து
தஞ்சாவூர் 1 மணி நேரம்தான். அங்கேயிருந்து கும்பகோணத்திற்கு
பைபாஸில் போய்விடலாம் என அப்பாச் சொல்ல எனக்கென்னவோ
தஞ்சாவூர் பொம்மை வாங்க வேண்டும் என்று எண்ணம் வர
பெரிய கோவில் அருகேதான் கிடைக்கும் என்பதால் அங்கே போனோம்.
செம கூட்டமாக இருந்ததால். கோவிலுக்குள் செல்லவில்லை.

அந்தக் கடைக்காரரிடம் பேரம்பேசி அரக்கு வைத்த பொம்மை ஒரு
ஜோடியும், ரப்பர் பொம்மை ஒன்றும் வாங்கினேன். அங்கியிருந்து
கும்பகோணம் சென்றோம். சுவாமிமலையில் சந்நிதி திறக்க 4 மணி
ஆகும் என்பதால் அதற்குள் கும்பகோணம் சென்று பர்ச்சேஸ் செய்ய
திட்டம். அப்படி என்ன கும்பகோணத்தில் பர்ச்சேஸ் செய்தேன்.
விளக்குதான். கார்த்திகை தீபத்தின் போது ஏற்றும் அகல்விளக்கு
வெங்கலத்தில் வைத்தும் ஏற்றுவார்கள். அதைத்தவிர மண்
அகல்விளக்கும் வாங்குவது(ஒவ்வொரு வருடமும் புதுசாக)
பழக்கம். என் திருமணம் முடிந்து முதல் கார்த்திகைக்கு அம்மா
சீதனமாக விளக்கு கொடுத்திருந்தார்கள். நாடோடி கூட்டதில்
ஒரு கூட்டமாக குடும்பம் நடத்தி இப்பொழுதுதான் ஒரு இடத்தில்
இருக்கும் வேளையில் அகல்விளக்கு ஞாபகம் பாடாய் படுத்தியது.
அம்மாவிடம் போன் செய்து புதுகையில் வாங்கி வைக்கச் சொன்னேன்.
அப்படி விளக்குகள் இப்பொழுது புதுகையிலும் கிடைப்பதில்லையாம்.
கும்பகோணத்தில்தான் வாங்க வேண்டும் என்று சொல்ல சரி
சுவாமிமலை போகும் பொழுது கும்பகோணம் போய் வாங்கிக்
கொள்ளலாம் என திட்டம் போட்டிருந்தோம்.

கும்பகோணம் மகாமக குளக்கரையில் நிறைய்ய பாத்திரக்கடைகள்.
அங்கே மீனாட்சி மெட்டல்ஸ் எனும் கடைக்கு போனோம். அகல்
விளக்கு சைஸ் வாரியாக வைத்திருந்தார்கள். மாடவிளக்கு
வேண்டுமென்று சொன்னதற்கு அங்கே வேலைப்பார்க்கும் பெண்களுக்கு
புரியவில்லை. ஆமாம் இப்பொழுது மாடம் எங்கே இருக்கிறது??
மாடம் இருந்தால்தானே மாட விளக்கு பற்றித் தெரியும்.

பெரிய்ய பெரிய்ய விளக்குகள் விற்கும் விலையில் இந்த
அகல்விளக்குகளும், மாடவிளக்குகளும் இருப்பதால் இதை
வாங்கி விற்க யாரும் முன் வருவதில்லையாம். அதனால்
கும்பகோணத்தில் மட்டும் கிடைக்கிறது. அந்த விலையில்
நல்ல காமாட்சி விளக்கோ, குத்துவிளக்கோ வாங்கிவிடலாம்.

மாடம் பற்றி நெட்டில் தேடிய பொழுது மாதவிப்பந்தல் வலைப்பூவின்
இந்தப்படம் கிடைத்தது.


எடுத்து விளக்கிச் சொன்னதற்கப்புறம் மாடவிளக்கு கிடைத்தது.
புதுகையில் கிடைக்கவில்லை என்பதால் இங்கே வாங்க
வந்தோம் என்று கடைக்காரரிடம் சொல்ல,” அட நம்ம ஊராங்க!!”!!!
என்றார். எனக்கும் ஊரு புதுகைதாங்க. பொழப்புக்காக இங்க
வந்து செட்டிலாகிட்டோம். நாளு கிழமைன்னா ஊருக்கு போவோம்”
என்றார். சொந்த ஊர் பாசம் விலையிலும் குறைத்து கொடுத்தார்.


அங்கேயிருந்து முருகனை தரிசிக்க சென்றோம். சுவாமிமலையில்
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் தரிசனம். 4 மணிக்கு நடை
திறந்ததும் சரி கூட்டம். ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர்
பக்தர்கள் கூட்டம் என கோவில்களில் கூட்டம் அதிகமாக
இருந்தது.

13 comments:

fundoo said...

மலேசிய முருகனிலிருந்து சுவாமிமலை முருகன். அசத்துங்க. நன்றி

அமைதிச்சாரல் said...

அபார்ட்மெண்டிலும் ஒரு சின்ன விளக்கு மாடம் வைக்கலாம்ன்னு ஆசையா இருக்கு :-)

கணேஷ் said...

நல்ல தரிசனம் கிடைத்ததா? மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (தானே புயல் புதுச்சேரியை புரட்டிப் போட்டதில் சேதம் அதிகம். கரண்ட் சப்ளைகூட இல்லை என்று கேள்விப்பட்டேனே... நலம்தானே நீங்கள்?) சுவாமிமலை பற்றிய என் பதிவொன்றை நேரம் இருக்கும் போது பார்வையிடும்படி வேண்டுகிறேன்.
http://www.minnalvarigal.blogspot.com/2011/11/blog-post_21.html

ஹுஸைனம்மா said...

மாட விளக்கு வைப்பதற்கு, வீட்டில் மாடம் வச்சு கட்டிருக்கீங்களாப்பா? மாடத்துல விளக்கு வச்சா, புகை பிடிக்குமே.. மாடத்துல டைல்ஸ் வச்சு கட்டிருந்தா, துடைக்க ஈஸியா இருக்கும், இல்லியா?

(இந்தக்காலத்துப் பசங்க “மாடம்”கிற வார்த்தையக் கேட்டா, “மோடம்”னு நெனச்சுப்பாய்ங்களோ..? ஹி.. ஹி.. ஜோக்கு... சிரிச்சுக்கோங்க)

வல்லிசிம்ஹன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் தென்றல்.
வெண்கல விளக்குகளின் அழகே தனிதான்.இப்பொழுது என் பெண் விட்டுப் போன விளக்குகளே
இப்பொது பயன்படுகின்றன.
அங்கே அவள் ஊரில் விளக்குகளை வைக்க முடியாது. குளிர்.!
உள்ளே வைக்க முடியாது எல்லாம் மரத்தால் ஆன வீடுகள்.
சென்னை வந்தீர்களா.
தஞ்சாவூர் பொம்மைகள் பார்த்தே நாட்களாகிவிட்டன.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ....

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபண்டூ,

முருகனை எங்கேயும் விடறதில்லை. :))

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

எங்க பாட்டி தினமும் விளக்கேத்தி மாடத்துல வைப்பாங்க. வடக்கு4 வீடு போல வருமான்னு இருக்கு. கரண்ட் கட் ஆனா நின்னு எரியும் அந்த விளக்குதான் கை கொடுக்கும். எல்லாம் யோசிச்சுத்தான் அந்த காலத்துல வெச்சிருக்காங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கணேஷ்,

வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் பாண்டிச்சேரி பக்கம் போகவில்லை. உங்க பதிவை படிக்கறேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

அப்பார்ட்மெண்டில் மாடமேது? அந்த விளக்கின் அமைப்பு ரொம்ப பிடிக்கும். கோபுரம் போல வந்து பார்க்க அழகா இருக்கும். (பிற்காலத்துல தனிவீடு கட்டினா அப்ப தேவைப்படுமே! ) :)) இப்பவே இந்த மாதிரி விளக்குகளுக்கு அலைய வேண்டி இருக்கே.

மாடத்துல டைல்ஸ் வச்சு கட்டிருந்தா, துடைக்க ஈஸியா இருக்கும், இல்லியா?//

ஐடியாவை மைண்ட்ல வெச்சுக்கறேன்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். அதென்னவோ மண் அகல்விளக்கில் எனக்கு அதிகம் இஷ்டமில்லை. சென்னை வந்தேன். அதைப்பத்தியும் பதிவு வருது.

வருகைக்கு நன்றிம்மா

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

தென்றல் உங்கள் மங்களகிரி, பானக நரசிம்மர் இன்றைய வலைச்சரத்தில்.