Sunday, February 26, 2012

நன்றி... நன்றி

எல்லோரும் நல்லா இருக்கீகளா??? ரொம்ப நாளாச்சு பேசி.
சென்னைக்கு போய் வந்தாலே இப்படித்தான் ஆகுது எனக்கு.
ஒரு திருமணத்திற்காக சென்னை ட்ரிப் அடிக்க வேண்டி இருந்தது.
ஊருக்கு திரும்பும் பொழுது ட்ரையினில் இருந்தே ஜுரம் ஆரம்பம்.
வைரல் ஃபீவர். என்னோடு ஹைதைக்கு வந்த அம்மா, அப்பாவுக்கும்
ஜுரம். அம்மா, அப்பா ட்ரீட்மெண்ட்ற்காக ஹைதை வந்திருக்கிறார்கள்.
ஜுரம் சரியாகி அதன் பிறகு அவர்களை மருத்துவத்திற்கு அழைத்து
சென்றேன். இதோ நாளை அவர்கள் கிளம்புகிறார்கள்.

ஆஷிஷ் அண்ணாவுக்கு மார்ச் 2 முதல் தேர்வு ஆரம்பம். அம்ருதம்மாவுக்கும்
அதே நாளில் துவங்குகிறது. இதனால்தான் பதிவு பக்கம் வரமுடியாமல்
போய்விட்டது.

நண்பர் வேங்கடஸ்ரீநிவாசன் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்.
மிக்க நன்றி சகோ.

எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்ல வேண்டுமா??!!! சரி
சொல்றேன் கேட்டுக்கோங்க.

1. பாட்டு: எப்போதும் பாடல் கேட்க ஆசை. கானக்கந்தர்வனின்
குரலில் பாடல்கள் என்றால் கூடுதல் சந்தோஷம்.

2. குழந்தைகளுக்கு இனி விடுமுறை. ஆனந்தமாய் அவர்களுடன்
அளவளாவும் அந்த இனிமையான தருணங்கள் ரொம்ப இஷ்டம்.
மீ த வெயிட்டிங் ஃபார் த ஹாலிடேஸ் :))

3. டீவி விளம்பரங்களாகட்டும், மருத்துவமனை, தியேட்டர்
போன்ற இடங்களில் ஆகட்டும் பச்சிளம் குழந்தைகளை
பார்க்க ரொம்ப பிடிக்கும். அந்தக்குழந்தைகளின் ஒவ்வொரு
செய்கையும் ஒரு ஆனந்தம்.

4. நட்புக்களுடன் அளவளாவ ஆசை.

5. பயணம் தரும் சுகமே சுகம்.

6. படிப்பது. புத்தகம், இணையம் என எங்கே படிக்க வாய்ப்பிருக்கிறதோ
அங்கே நான் தொலைந்து போவேன் :)

7.

இந்த விருதினை 5 பேருடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.துளசி டீச்சர்: இந்த விருது கனகச்சிதமாக பொருந்துவது இவருக்கு
என்பதில் சந்தேகமே இல்லை.

அமைதிச்சாரல்: கேமிரா, கைவண்ணம், கதை, கவிதைன்னு கலக்கறாங்க.

ராமலக்‌ஷ்மி: இவங்க கேமிரா பார்வைக்கு, கவிதைக்கு நான் அடிமை.

தீராத விளையாட்டுப்பிள்ளை ஆர்வீஎஸ். இவரது நகைச்சுவை பதிவுகள்
மிக அருமை.

என் இனிய இல்லம் சிநேகிதி. கைவேலைப்பாடுகள் பதிவுகள் ரொம்ப அருமை.

விருது பெற்று பகிர்வதில் மகிழ்ச்சி அடையும் இந்த வேளையில்
இன்னொரு சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
விகடன் வலையோசையில் எனது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர் அப்பாஜி பீடிஎஃப் அனுப்பியிருந்தார். ஹுசைனம்மா மடல்
அனுப்பியிருந்தார். இலங்கையிலிருந்து சுபாஷினியும் மடல் அனுப்பி
வாழ்த்து சொல்லியிருந்தார். நான் இன்னும் புத்தகம் பார்க்கவில்லை.
அப்பாஜி அனுப்பியிருந்த பீடிஎஃப்தான் பார்த்தேன்.

விகடனுக்கும் நண்பர்களுக்கும் தம்பி அப்துல்லாவுக்கும் மிக்க நன்றி
24 comments:

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Mahi said...

Vazhthukkal! :)

ராமலக்ஷ்மி said...

வலையோசைக்கு வாழ்த்துகள்:)!! கிடைத்திருக்கும் விருதுக்கும் வாழ்த்துகள்!! மிக்க மகிழ்ச்சி தென்றல்.

எனக்கான விருதுக்கும் அன்பான நன்றி. இணைந்து வாங்கும் மற்ற நால்வருக்கும் வாழ்த்துகள்!

குழந்தைகள் இருவரும் சிறப்பாகத் தேர்வெழுதவும் வாழ்த்துகள்!

துளசி கோபால் said...

வலையோசையில் இடம் பெற்றதற்கு இனிய வாழ்த்து(க்)கள்.

அடுத்து விரு(ந்)து..... இப்படிக் கூப்பிட்டு விருது கொடுக்கும் பாங்கு...சூப்பர்மா!!!!

விருது பெற்ற ஐவருக்கும் என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும். என்னமோ...இருக்கப்போய்த்தானே கிடைச்சிருக்கு:-)))))

அமைதிச்சாரல் said...

ரொம்பவே சந்தோஷமாருக்கு தென்றல்,.. நட்புகள் அச்சுப்பத்திரிகைகள்ல இடம் பெறும்போது மை ஃப்ரெண்டாக்கும்ன்னு பூரிப்பாருக்கு.

விருதுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் கலா

வித்யா said...

வாழ்த்துகள் அக்கா..

ஆஷிஷ் & அம்ருதாவிற்கு ஆல் தி பெஸ்ட்.

புதுகைத் தென்றல் said...

நன்றி ஜலீலா

நன்றி மஹி

நன்றி ராமலக்‌ஷ்மி

என்னமோ...இருக்கப்போய்த்தானே கிடைச்சிருக்கு// ஆஹா துளசி டீச்சர் உங்களிடமிருந்து கற்பது நிறைய்ய. வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆமாம்பா அமைதிச்சாரல். அது ஒரு தனி பெருமிதம். நன்றி

நன்றி பாசமலர்

நன்றி வித்யா

கோவை2தில்லி said...

விருதுக்கும், வலையோசையில் இடம்பெற்றதற்கும் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் உங்கள் பக்கத்திலோர் பகிர்வு... அதற்கு முதலில் என் நண்பன் சீனுவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்... :)

வலையோசையில் உங்கள் வலைப்பூ இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்....

RVS said...

விருது வழங்கியதற்கு ரொம்ப நன்றிங்க... :-)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;-)

காற்றில் எந்தன் கீதம் said...

வாழ்த்துக்கள் கலக்குங்க...
நான் சுதர்ஷினி :(.

சிநேகிதி said...

முதலில் உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.நிங்கள் தந்த அன்பான விருதுக்கு மிக்க நன்றி.. விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

Vetrimagal said...

வாழ்த்துக்கள். ஹைதராபாத் பதிவர் என்று இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.;-)

புதுகைத் தென்றல் said...

நன்றி கோவை2தில்லி,

நன்றி சகோ

வாழ்த்துக்கள் ஆர்வீஎஸ்

நன்றி கோபி

ஆஹா சுதர்ஷிணின்னு நல்லா ஞாபகம் இருக்கு. அவசரத்தில் அப்படி டைப் செஞ்சிட்டேன்னு நினைக்கிறேன். சாரி. :)

நன்றி சிநேகிதி

நன்றி வெற்றிமகள்

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

விருதினை ஏற்றுக் கொண்டதற்கு நன்றிகள்.

உங்களிடம் விருது பெற்ற ஐவருகும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

விகடனில் வந்ததற்கு மனம் நிறைந்த பாராட்டுகள் மா. உங்களுக்கேற்ற விருதுதான் கிடைத்திருக்கிறது.
போனவருஷம் கைவலி. இந்த வருஷத்திற்கு ஜுரமா. கடந்துவந்ததில் சந்தோஷம்.
இனி பிசி மாதம் தான். ஆஷிஷ் அண்ணாவுக்கும் அமிர்தாம்மாவுக்கும் தேர்வுகளில் உற்சாகமாகப் பங்கெடுக்க என் ஆசிகள். அவர்களைப் பார்த்துக் கொள்ளும்போது உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

Appaji said...

சில தினங்கள் ஊரில் இல்லை...இன்று தான் தங்களது வலை பத்திவை பார்த்தேன்...மிக்க நன்றி..

ஹுஸைனம்மா said...

//விகடனுக்கும் .. தம்பி அப்துல்லாவுக்கும் மிக்க நன்றி//

அமாவாசையும் அப்துல்காதரும் போல,
ஆனந்த விகடனுக்கும் அப்துல்லாவுக்கும் என்ன சம்பந்தம்?? :-))))))

மீண்டும் வாழ்த்துகள்.

கணேஷ் said...

விகடனில் வந்தது, விருது என்று நல்ல செய்திகளாகப் படித்ததில் மிகமிக சந்தோஷத்துடன் உங்களுக்கு என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

புதுகை.அப்துல்லா said...

// ஆனந்த விகடனுக்கும் அப்துல்லாவுக்கும் என்ன சம்பந்தம்?? :-))))))

//

விகடன்காரங்க அக்கா நம்பர் எங்கிட்டதான் கேட்டு வாங்கினாங்க :)