Sunday, March 11, 2012

புதுமையாய்.... அணிந்து கொள்ள பெருமையாய்!!!!!

பட்டுப்பூச்சிக்களை கொன்று தயாரிக்கப்படுவதாலேயே பலர் பட்டைத்
தவிர்த்து வருகிறார்கள். கத்வால், வெங்கடகிரி,மங்களிகிரி மற்றும்
பாலியஸ்டர் சில்க் புடவைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.பட்டுப்பூச்சிக்களை கொல்லாமல் அதாவது அந்தப் புழுக்களை ஹிம்சை
செய்து பட்டுநூல் எடுக்காமல், கூட்டைவிட்டு செல்லும் வரை காத்திருந்து
அந்த கூட்டிலிருந்து பட்டுநூல் எடுத்து தயாரிப்பது அஹிம்சா பட்டு.

இந்தியாவில் பெனாரஸ்,ஜார்க்கண்ட், முஷிராபாத், ஆந்திரா,
கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த வகையில் பட்டு
தயாரிக்கிறார்கள்.


காந்தியக்கொள்கையை கொண்ட குசும ராஜய்யா எனும் ஹைதரபாத் வாசி
அஹிம்சா பட்டுத்துணி தயாரிப்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களின் துணைவியார்
திருமதி.ஜானகி வெங்கட்ராமன் அவர்கள் குசும ராஜய்யா அவர்களிடம்
பட்டுப்புழுக்களை கொல்லாமல் தயாரித்த புடவை ஏதும் இருக்கிறதா?
என கேட்டப்பொழுது அவர் யோசித்து இந்த வழியில் தயாரிக்க
ஆரம்பித்திருக்கிறாராம்.


இவரது மேற்பார்வையில் நல்கொண்டா மற்றும் அனந்தபூரின்
நெசவாளர்கள் அஹிம்சா வேட்டிகள் மற்றும் சில துணிகளைத்
தயாரிக்க கரீம்நகர் நெசவாளர்களின் அருமையான வேலைப்பாடுகளுடன்
புடவைகள் தயாராகின்றன. முழுதும் கைத்தறி நெசவுதான் என
பெருமையுடன் சொல்கிறார் குசும ராஜய்யா.

அஹிம்சா சில்க்கில் அந்த பளபளப்பு இருக்காது என்றாலும் பூச்சிக்களைக்
கொன்று தயாரித்த புடவை என்ற உறுத்தல் இல்லாமல் மனம் மகிழ்ந்து
அதனால் முகம் பளபளப்பாகலாம்.


பல பெரிய பெரிய கடைகளில் இது அஹிம்சா பட்டுத்தான் என
சொல்லி ஏமாற்றிவிடுகிறார்கள் அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

பலர் பட்டை ஏன் தவிர்க்கிறார்கள்?

காஞ்சி காமகோடி மஹாபெரியவர் சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகள் தன்னிடம் தனது பெண்ணின் திருமணத்திற்கு
வாங்கியிருக்கும் பட்டுப்புடவையை ஆசிர்வதித்து தருமாறு
கேட்பவர்களிடம் மறுத்துவிடுவாராம். ஏன் என்று கேட்டதற்கு.
இந்த புடவை தயாராக எத்தனை புழுக்களைக் கொன்று
தயாரிக்கிறார்கள்?

உன்னதமான திருமணத்தில், வாழ்க்கையின் ஆரம்பத்தன்று
இந்த உயிர்வதை செய்யப்பட்ட புடவை அணிவதில் என்ன சுகம்
என்பது? அவரது கேள்வி.

இதை நியாயம் என நினைப்பவர்கள் இதை ஒரு கொள்கையாக
ஏற்று பட்டை தவிர்க்கிறார்கள். பெண்ணிற்கு திருமணம் என்றால்
பெற்றோர் பயப்படுவது வரதட்சணை, சீர் ஆகியவைதான். அதனால்தான்
பெண்சிசுக்கொலை ஏற்பட்டது. திருமணத்தின் போது மணமகள்
வீட்டாரைக் கசக்கி பிழியாமல் ஆண்கள் வரதட்சணை வாங்கமாட்டோம்!
எனும் கொள்கையை ஏற்றுக்கொள்வது சமூகத்திற்கு நல்லது என்பதும்
அவரது ஆசிர்வாதம்.


வேண்டுகோள்:

சென்னையில் உஷா ரகுநாதன் என்பவர் பெரியவரின் பேச்சினில்
ஏற்பட்ட மாற்றமாய் அஹிம்சா பட்டு தயார் செய்து விற்கிறார் என
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கட்டுரை இருக்கிறது.
மற்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவரது கடையின்
பெயர் ஊர்வஷி என்று மட்டும் சொல்லியிருக்கிறார். விவரங்கள்
யாரும் தேடி கொடுத்தால் உதவியாய் இருக்கும்.

28 comments:

Vetrimagal said...

அருமையான தகவல் . நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அஹிம்சா பட்டு... இது நல்ல விஷயம்....

இராஜராஜேஸ்வரி said...

பூச்சிக்களைக்
கொன்று தயாரித்த புடவை என்ற உறுத்தல் இல்லாமல் மனம் மகிழ்ந்து
அதனால் முகம் பளபளப்பாகலாம்.

அருமையான பகிர்வுகள்..
பளபளக்கும் பாராட்டுக்கள்..

புதுகைத் தென்றல் said...

வாங்க வெற்றிமகள்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

ஆமாம் ரொம்பவே நல்ல விஷயம்.
பட்டையே தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பாச மலர் / Paasa Malar said...

அஹிம்சா சில்க்....நன்றாக இருக்கிறதே..பகிர்வுக்கு நன்றி கலா..

கணேஷ் said...

நகைகளின் மேலும் பட்டுப் புடவைகளின் மேலும் பெண்களுக்கிருக்கும் மோகம் இல்லாமல் போய்விட்டால் ஆண்களுக்கு செலவே இல்லை. ஆனால் பட்டில் அஹிம்சா பட்டு என்பது எனக்கு புதிதாகவும் நல்ல விஷயமாகவும் தெரிகிறது தென்றல். பகிர்ந்ததற்கு நன்றி.

கோவை2தில்லி said...

”அஹிம்சா பட்டு” பரவாயில்லையே.....

இரசிகை said...

ahimsaa pattu...
ithu nallaayirukke.
:)

T.N.MURALIDHARAN said...

புதுமையான தகவலை பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

காற்றில் எந்தன் கீதம் said...

அகிம்சைபட்டு புது விஷயம்... நல்ல பகிர்வு அக்கா வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அஹிம்சா பட்டு காதி கடையில் கிடைக்கும். விலைதான் நிறைய.
நுங்கம்பாக்கத்தில் திருமதி உஷாவின் கடை இருக்கிறது.
நல்ல பகிர்வு தென்றல்.

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கணேஷ்,

1981ல் வெளிவந்த மணல்கயிறு படத்தில் ஒரு டயலாக். நாரதர் நாயுடு சொல்வார். “இப்ப தங்கம் விக்கற விலைக்கு குந்துமணி தங்கத்துக்கு கூட பொண்ணு ஆசைப்படக்கூடாதுன்னு சொல்லியிருந்த குட் கண்டீஷன்”. அப்பவே அந்த லட்சணம்னா இன்னைய தேதியில இருக்கும் விலைக்கு கனவுல கூட நினைச்சு பார்க்க கூடாது.

தங்கம் வாங்குவதையாவது முதலீடு எனும் லிஸ்டில் சேர்க்கலாம். லட்சம் லட்சம் கொட்டி பட்டு வாங்கி கட்டுபவர்களை பார்க்கும் பொழுது கோவம் தான் வரும்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

விலைதான் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி இரசிகை

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி முரளிதரன்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி சுதர்ஷிணி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

அந்த கடையோட டீடெயில்ஸ், போன் நம்பர் இருந்தா மெயிலுங்க ப்ளீஸ்.

வருகைக்கு மிக்க நன்றி

அமைதிச்சாரல் said...

மொதல்ல இந்த கொளுத்தற வெய்யில்லயும் கனமான பட்டுப்புடவைகளைக் கட்டிக்கிட்டுப் போறவங்களைப் பார்த்தாலே எனக்கு ஐயோ பாவமேன்னு இருக்கு..

அஹிம்சா நல்ல விஷயம்தான்.

ramachandranusha(உஷா) said...

பட்டு வேண்டாம் என்ற பிறகு அகிம்சை பட்டும் வேண்டாம் என்று விட்டாச்சு. விலை மிக
அதிகம் என்று கேள்வி. நேற்று நல்லியில் ரெண்டு புடவை ஆயிரத்து ஐநூறு ரூபாயில்
வெங்கடகிரி, போச்சம்பள்ளி நைஸ் காட்டன் வாங்கினேன். என்னமோ ஆர்கானிக் காட்டனாம்
விலை கேட்டால் பட்டு விலை, பத்தாயிரம் ரேஞ்சு என்று நினைவு, டிசைன்களும் சுமார்தான்,\பழைய
படி என்ன புடவை வாங்கலாம் என்று லிஸ்ட் போட ஆரம்பிங்க பு. தென்றல்.

துளசி கோபால் said...

நல்ல விளக்கமான பதிவுக்கு பாராட்டுகள்.

சென்னையில் காதி க்ராஃப்டில் அஹிம்சா பட்டு கிடைக்குதே. சித்தி அந்தக் காலத்தில் இருந்தே அதைத்தான் வாங்குவாங்க. என்ன... அப்போ அது ப்ரிண்டட்ஸில்க் மாதிரிதான் இருந்துச்சு.

இப்போ ஜரிகை பார்டரோடு வருதான்னு பார்க்கணும்.

தேவன் மாயம் said...

பட்டுப்பூச்சிக்களை கொல்லாமல் அதாவது அந்தப் புழுக்களை ஹிம்சை
செய்து பட்டுநூல் எடுக்காமல், கூட்டைவிட்டு செல்லும் வரை காத்திருந்து
அந்த கூட்டிலிருந்து பட்டுநூல் எடுத்து தயாரிப்பது அஹிம்சா பட்டு.//

புதிய செய்தி !

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

எனக்கும் அந்த நினைப்புத்தான் வரும். அதுவும் வெயில்காலத்தில் நடைபெறும் திருமணத்தில் மணப்பெண் பாவமோ பாவம்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க உஷா,

நலமா? அதேதான் பட்டே வேண்டாம் என்று இருந்துவிடுவதுதான் பெஸ்ட். லிஸ்ட் தானே போட ஆரம்பித்துவிடலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

காதியில்தான் பெஸ்டா கிடைக்குதுன்னு கேள்விபட்டிருக்கேன். விலை ஜாஸ்திதானாம். நான் பார்த்ததில்லை. :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி தேவா