Wednesday, March 28, 2012

ராம சிலகா!!!!!!!!

பிள்ளைகள் எப்போதும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி வளர்க்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நானும்
மறுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளேன். பார்த்துக்கொள்வது
கஷ்டம் என்றாலும் என் மனதில் இருக்கும் ஒரு வருத்தம்தான்
இதற்கு காரணம்.

எங்கள் ஊரில் புதுக்கோட்டை கூட்டறவு வங்கி (அதான் எங்க
அப்பா வேலை பார்த்த பேங்க்) பக்கத்தில் ராமுடு ஜோசியர் என்று
ஒருவர் இருந்தார். தெலுங்கர் தான். அம்மா அவரை பார்க்க
சென்ற ஒரு நாளில் என்னையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார்.
வாசலிலேயே கிளிக்கூண்டு. ஒற்றைக்காலில் நின்றுக்கொண்டு
ரொம்ப ஸ்டைலாக அப்பளத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்ததை
பார்க்க பிடித்திருந்தது.

அம்மா அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் வேறு
யாரோ வர,” ஐயர் வீட்டுல இல்ல போடா!!!!” என்று
கிளி திட்டியது. எனக்கு செம ஷாக். கிளி பேசப்பழக்கலாம்
என்று தெரியும் ஆனால் அன்றுதான் காதார கேட்டது.

அம்மாவிடம் எங்களுக்கும் ஒரு கிளி வேண்டும் என்று
தொணத்த ஆரம்பித்தோம். தம்பிக்கும் என் அனுபவத்தை
சொல்ல அவனும் சேர்ந்து கொண்டான். அப்பாவுக்கு
அவ்வளவாக இஷ்டம் இல்லை. ஆனால் எங்கள் அவ்வாவுக்கு
சுத்தமாக இஷ்டமே இல்லை. ராமதாஸ் முன் ஜென்மத்தில்
கிளியை கூண்டில் வைத்து அடைத்த பாவத்திற்குத்தான்
சிறையில் இருக்க நேர்ந்தது என சொல்லி ஒரே எதிர்ப்பு.

அவ்வாவை மீறி அம்மாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதனால் மெல்ல அப்பாவிடம் கெஞ்ச ஆரம்பித்தோம்.
எல்லா நேரமும் கூண்டில் வைக்க வேண்டாம். நாம்
வீட்டில் இருக்கும் நேரத்தில் சுதந்திரமாக உலாவ விடலாம்.
என்று சொன்னோம். அப்பா யோசித்து சொல்வதாக
சொன்னார். அப்படி இப்படி என ஒருவழியாக சிக்னல்
கொடுத்தார்.

அம்மா தன் பள்ளி நண்பர்கள் மூலமாக கிராமத்தில்
சொல்லிவைத்து ஒரு சுபயோக சுபதினத்தில் வீட்டிற்கு
கிளியார் வந்தார். ஆண் கிளி. அழகனாக இருந்தான்.
என்ன பெயர் வைக்கலாம் என்று அதிகம் மண்டையை
குடையாமல் “ ராம சிலகா” என பெயர் வைத்தோம்.
தெலுங்கில் சிலகா என்றால் கிளி. ராமுடு என நானும்
தம்பியும் அழைத்தோம்.

அவருக்காக ஒரு கூண்டு தயாரானது. சாப்பாட்டிற்கும்,
தண்ணீருக்கும் தனித்தனி சின்ன அலுமினியம் கிண்ணம்
வாங்கினோம். எங்கே மாட்டுவது?? வராந்தாவில்
மாட்டினால் கண்ணில் படுமாறு இருக்கும், காற்றோட்டமும்
கிடைக்கும் என முடிவு செய்து மாட்டினோம்.

அப்புறம் என்ன நடந்தது?? அதுதான் சுவாரசியம்
அந்தக்கதை அடுத்த பதிவில்.

இப்போதைக்கு தொடரும்.

8 comments:

raji said...

ஓ! செல்லப்பிராணி அனுபவம்?

ஆனா எடுக்கும் போதே ‘மனதில் இருக்கும் ஒரு வருத்தம்’ என்று கூறி விட்டதால் என்ன்வோ ஏதோவென்று மனம் அலைபாய்கிறது.

’ராம சிலகா’ பெயர் நல்ல இருக்கே.கிளி வந்ததோட நிறுத்தி இப்பிடி தொடரும் போட்டது உங்களுக்கே நல்லாருக்கா தென்றல்? ஓக்கே!வெயிட் பண்றேன்.வேறென்ன செய்ய?

இராஜராஜேஸ்வரி said...

ராம சிலகா” நல்லபேரு..
கிளி கொஞ்சும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்லா கொசுவத்தி சுத்தி இருக்கீங்க!.... ராம சிலகா-வுக்கு என்ன ஆச்சு சீக்கிரமே சொல்லிடுங்க சகோ....

சாந்தி மாரியப்பன் said...

கிளிப்பேச்சுக் கேக்க வரோம் தென்றல் :-)

pudugaithendral said...

வாங்க ராஜி,

பதிவு போட்டே ரொம்ப நாளாச்சு. அதிலும் தொடரும்னு போட்டு பதிவு போட்டு ரொம்பவே...... நாளாச்சு. அதான்.

அடுத்த பதிவு போட்டாச்சு

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வர்,

கொஞ்சும் கிளி அழகே அழகுதான்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

அடுத்த பதிவு போட்டுட்டேன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமைதிச்சாரல்