Wednesday, April 11, 2012

T.ராஜேந்தரின் கானங்கள்

நடிகராக, இயக்குனராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டதோடு
நல்ல இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் ராஜேந்தர்
அவர்கள் பல ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

அவரின் பாடல்கள் எனக்கு எப்போதும் ரொம்ப பிடிக்கும்.
எனக்கு மட்டுமல்ல பாடல் விரும்பிகள் அனைவருக்கும்
பிடிக்கும். எனக்கு பிடித்த சில பாடல்களின் தொகுப்பு இங்கே.

1976 ஆம் ஆண்டு வெளியான படம் ஒருதலை ராகம்.
டி.ராஜேந்தரின் இசையமைப்பு, இயக்கத்தில் இன்றளவும்
பேசப்படும் படம்.
இது குழந்தை பாடும் தாலாட்டு:
அற்புதமான வரிகள். பாலுவின் குரலில் மனதை உருக்கும்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ரயில் பயணங்கள் படத்தில் வசந்தம் பாடிவர இந்தப்பாடலை மறக்க முடியுமா?!!

Get Your Own Hindi Songs Player at Music Plugin

உறவைக்காத்த கிளி படத்தில் கானக்கந்தர்வனின் குரலில்
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பர்....

Get Your Own Hindi Songs Player at Music Plugin

தங்கைக்கோர் கீதம் அந்தக்காலக்கட்டத்தில் அனைவரின்
விருப்பமான படம்.
தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சி தங்க நக செய்திடவோ!!!
இந்தப் பாடலின் வரிகள் தான் எவ்வளவு அருமை.

“ஜவுளிக்கடை பொம்மை கூட கட்டுதம்மா பட்டுசேலை
உனக்கொன்னு வாங்கிடவே ஏழை அண்ணன் ஏங்கிடவே?”



வீடியோ பார்க்க இங்கே

இதே படத்தில் தஞ்சாவூரு மேளம் தாலிகட்டும் நேரம் பாட்டும்
அருமையா இருக்கும். இங்கே போனால் அந்தப்பாட்டையும்
பார்க்கலாம்.


பிரம்மாண்டமாக செட் போட்டு படம் எடுத்த இயக்குனர்களில்
ராஜேந்தரும் ஒருவர். இப்ப இந்த மாதிரி செட் பார்க்க முடியுமா?



என் தங்கை கல்யாணி படத்தில் “தோள் மீது தாலாட்ட என் தங்கமே
நீ தூங்கு”


நானும் உந்தன் நாடி வந்த பறவை பாட்ட மறக்க முடியுமா?

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?
பி.எஸ். சசிரேகா குரலில் அருமையான பாடல்.

ஆல்டைம் ஃபேவரிட்டான ஒரு பொன்மானை நான் காண தகிதிமிதோம்.





20 comments:

கே. பி. ஜனா... said...

எல்லாமே அற்புதமான பாடல்கள்!

ADHI VENKAT said...

அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

pudugaithendral said...

வாங்க ஜனா,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கு மிக்க நன்றி

Appaji said...

இளமை கால நினைவுகளை .....ஒரு முறை திரும்பி பார்க்க வைத்து விட்டீர்கள்...மிக அற்புதம்....(வேலை சுமை காரணமாக ..பின்னுட்டம் போட முடிவதில்லை..) (சுஹாசினி மேடத்திடம், தங்களின் எழுத்துக்களுக்கு ஆடியோ டப்பிங் கொடுக்க அப்பாயின்மென்ட் வாங்கி விடலாமா!!)

பால கணேஷ் said...

T.Rajendar இந்தப் பாடல்களையெல்லாம் தந்து ரசிக்கச் செய்த காலம் நான் கல்லூரியில் படித்த காலம். அழகப்பா கல்லூரியில் படித்த அந்த நாள் நினைவுகள் மீண்டும் எழுந்து இனிமை தநதது உங்களால். மிக்க நன்றி தென்றல்!

Unknown said...

உங்களுக்கு ட்விட்டரில் ஒரு விளம்பரிக்கிறேன். [இப்போ சப்ஜாடா ட்விட்டிச்சுவரில் கெட்டுப்போன கழுதை நான்].

வெங்கட் நாகராஜ் said...

எல்லாமே நல்ல பாடல்கள் சகோ....

கேட்க இனிமையானவை.

பகிர்வுக்கு நன்றி.

nagoreismail said...

சார், டி.ராஜேந்தர் தானே..? டி.ஆர். ராஜேந்தர் அல்லவே...

pudugaithendral said...

வாங்க அப்பாஜி நலமா,

படிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னாலே சந்தோஷம். பின்னூட்டம் வந்த பரம சந்தோஷமா இருக்கும்.

அப்புறம் சுஹாசினி மேடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க முடிஞ்சா பாருங்க. :)

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

டி ஆர் படங்கள் வெளிவந்தப்ப எனக்கு ரொம்பவே சின்ன வயசு. வளர்ந்த பிறகு அவரின்பாடல்கள் கேட்க ஆரம்பித்து இப்போது வரை ரொம்ப பிடித்ததா இருக்கு. இளையராஜாவுக்கு அடுத்து நல்ல பாடல்களை இடைக்காலத்தில் கொடுத்தவர் டீ ஆர்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அனுஜா,

நன்றி :)

pudugaithendral said...

வாங்க சகோ

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இஸ்மாயில்,

சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி

Mahi said...

இனிமையான பாடல்களை ஒரே இடத்தில் தொகுத்து கொடுத்துட்டீங்க,நன்றி! :)

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get vote button


தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

krishy said...

i already posted this article to Tamil Posts

check - http://tamil.dailylib.com

Thanks

pudugaithendral said...

வாங்க மஹி,

இனி இந்த மாதிரி மனதுக்கு பிடித்த பாடல்களின் தொகுப்புக்கள் வாரம் ஒருமுறை இடம்பெறும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் சுட்டியை சேர்த்தற்கும் மிகுந்த நன்றி கிரிஷி

shanthi ramani said...

u forgot koodayila karuvaadu songa? it is such a nice song.. in between voice kooda innaikku yosichu partha extra attentionukkaga pottadhunnu thonudu..