ஹோட்டலில் காபி கேட்டால் 6.30மணிக்கு மேலதான் கிடைக்கும்னு
சொல்லிட்டாக. சரின்னு ரூமை காலை செஞ்சு வண்டிக்காக
காத்திருந்த நேரத்துல சூடா கொளரிசங்கர் காபி குடிச்சிட்டு
ஷ்டேஷனுக்கு போனோம். ட்ரையின் இன்னும் வந்திருக்கலை.
சரின்னு அயித்தான் மட்டும் இறங்கி பாக்கப்போனாங்க.
ஊருக்கு போறோம்னு நினைச்சீகளா!!! அயித்தானின் அண்ணன் மகன்,
அவங்க மனைவி, குழந்தை 3 பேரும் பெங்களூரிலிருந்து
ட்ரையினில் வந்தாங்க. அவங்களை பிக் அப் செஞ்சுகிட்டு நேரா
மேட்டுப்பாளையம்!!!
ஹோட்டல் அசோகா இன்னில் ரூம் புக் செஞ்சு வெச்சிருந்தாங்க.
அங்கேயிருந்து 5 நிமிஷ நடையில் ப்ளாக் தண்டர்!!!:))
2ஆவது மாடியில் ரூம் கொடுத்தாங்க. ஆனா லிஃப்ட் இல்லை.
ரூமுக்கு போய் ஃப்ரெஷ்ஷாகி, கீழே இறங்கி வந்து டிபன்
சாப்பிட்டு ப்ளாக் தண்டர் போனோம்.
எண்ட்ரன்ஸ் டிக்கட் 450 ரூவா. குழந்தைகளுக்கு 360.
உள்ளே போனா லாக்கருக்கு 100 ரூவா முன்பணம்.
ப்ளாக் தண்டர் மொத்தமும் நீர் விளையாட்டு அதிகம்
என்பதால ஆண்களுக்கு பெர்முடாஸ்கள் வாடகைக்கு
கிடைக்குது. பெண்களுக்கு பரவாயில்லை அவங்க
போட்டிருக்கும் உடுப்புலேயே இருக்கலாம். எம்ஜீ எம்
போனப்ப அவுக கொடுக்கற உடுப்புத்தான் போடணும்னு
ஒரே அடாவடி. (அதுவும் வாடைகைக்குத்தான்)
எங்க பேத்தி குட்டி (அயித்தானின் அண்ணன் பேத்தி :)) )
தண்ணீரைப்பாத்ததும் ஒரே குஷி. ஆனா முதல்ல ட்ரை கேம்ஸ்னு
சொல்லப்படற ரோலர் கோஸ்டர், ஜியண்ட் வீல் எல்லாம் முடிச்சதற்கு
அப்புறம்தான் நீரில் இறங்க விடுறாங்க.
நானும் ஆஷிஷும், அம்ருதாவும் அவங்கப்பாவுமா சேர்ந்து
உக்காந்து ஜியண்ட் வீலில் சுத்தப்போனோம். மெல்ல சுத்த
ஆரம்பிச்சிச்சு. ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஏதோ
மாதிரி ஆனிச்சு உடம்பு. ஆனா நானும் ஆஷிஷும் உச்சியில
இருக்கும் பொழுது வீல் ஆஃப் ஆகிடிச்சு. :((( என்ன
கொடுமைடா சாமி!!! பக்கத்துல இருக்கற பனைமரத்தை
தொட்டுடலாம் போல இருக்கும் உயரத்துல இப்படி நிக்க
வெச்சிட்டாங்களே!! கரண்ட் ஏதும் கட்டாகிடிச்சான்னு
பயந்துக்கினே இருந்தோம். 5 நிமிஷம் போல அப்படியே
இருந்தோம். என்னன்னு கேட்டா சொல்ல யார் காதுலயும்
விழலை. அம்ருதம்மா பயந்து போய் இறங்கணும்னு சொல்ல
அவங்கப்பாவும் சேர்ந்து கீழே இறங்கிட்டாரு. பேலன்ஸ் செய்ய
இன்னும் இரண்டு பேர் வந்ததற்கப்புறம் சுத்த ஆரம்பிச்சிச்சு.
ஒரு கட்டத்துல தலை சுத்தலே வந்திருச்சு. அப்படியே
தலைய கவுத்திகிட்டேன். செம ஸ்பீடா சுத்தினிச்சு.
ஓஒன்னு கத்திக்கிட்டே செம எஞ்சாய்தான். அப்புறம்
ஆஷிஷ், அவங்க அண்ணன், அண்ணி குட்டி பாப்பா
எல்லாரும் ரோலர் கோஸ்டர் போனாங்க. அங்க இங்க
சுத்திட்டு இந்தப்பக்கம் வந்தா ரெயின் டான்ஸ் :))
மழையில் நனைந்த பனித்துளிகளா நல்லா ஆட்டம்.
அது முடிஞ்சு ராஃப்டிங் போகணும்னு ஆஷிஷ் ஆசைப்பட,
அம்ருதம்மாவோ லேசி ரிவரில் போகணும்னு.... குட்டிப்பாப்பாவைக்
கூட்டிகிட்டு மருமக சின்ன பூலுக்கு போயிட்டாங்க. லேசி ரிவரில்
அந்த ரப்பர் ட்யூப் போட்டுகிட்டு உக்காந்து நாம கையால துடுப்பு
போட்டுகிட்டே போகணுமாம்!!! நம்மால ஆகாது சாமின்னு மேல
வந்திட்டேன். அப்பாவும் மகளும் போனாங்க. பாதி வழியில்
இறங்கி நடந்தே வந்திட்டாங்க. :))
ஆஷிஷ் ராஃப்டிங் போயிட்டு வந்து நல்லா இருக்குன்னு சொல்ல
அயித்தான், அவங்க அண்ணன் மகன், பேத்தி 3 பேரும் போனாங்க.
அம்ருதாவும் தைரியமா போய் வர, நானும் போகணும்னு தோணிச்சு.
மருமகளும் வர்றதா சொல்ல நான், ஆஷிஷ், மருமக 3 பேரும்
போனோம். மேல வரைக்கும் நடந்து போகணும். அங்கேயிருந்து
தண்ணியில வரணும். மேல போனதுக்கப்புறம் மருமக வரலைன்னு
சொல்ல நானும் ஆஷிஷும் சும்மா ஜாலியா வந்து இறங்கினோம்.
(எங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுக்க மிஸ் செஞ்சிட்டாரு
அயித்தான் :()
ஆஷிஷ் எஞ்சாயிங் :)
அப்புறம் வேவ் பூல் ஆரம்பிக்குதுன்னு அறிவிப்பு வந்துச்சு.
பெரிய்ய ஸ்விம்மிங் பூலில் கடலலை மாதிரி செயற்கையா
வரவழைப்பாங்க. அதுக்கு ஓடினோம். போட்டோ எடுக்கணும்னு
நான் போகாம உக்காந்திட்டேன். மத்த எல்லோரும் போனாங்க.
பெரிய பெரிய அலைகள் மாதிரி செயற்கையா வரவழைச்சு
எல்லோரும் ஆட்டம் போட்டுகிட்டு இருந்தாங்க.
அலை ஆரம்பிக்கற இடத்துக்கு அப்பாவும் பசங்களும் போயிருந்தாங்க.
குட்டி பாப்பாவுடன் குழந்தைகளும் அயித்தானும்:
பெண்களுக்கு தனி, ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும்
தனின்னு நடுவிலே கயிறு கட்டி வெச்சிருந்தாங்க.
எங்க பேத்தி குட்டி நல்லா எஞ்சாய் செஞ்சுகிட்டு
இருந்தாப்ல. அம்ருதா ஆஷிஷும்
கேக்க வேணாம். அப்புறம் ஆஷிஷை வரச்சொல்லிட்டு
நானும் போய் இறங்கி எஞ்சாய் செஞ்சேன். அலை அலை
வந்து அடிக்கும் பொழுது சூப்பரா இருந்துச்சு. அதுக்கப்புறம்
எல்லோருக்கும் பசி வயித்தைக்கிள்ள ஆரம்பிச்சிருச்சு.
எனக்கு சாப்பிடும் மூட் இல்லை. (ஊருக்கு போகும் முன்
உடம்பு டேமேஜா இருந்ததால) தயிர் சாதம் மட்டும்
வாங்கிகிட்டேன். மத்தவங்க புரோட்டா எஞ்சாய் செஞ்சாங்க.
தயிர்சாதம் ஒரு ப்ளேட் 40 ரூவா. அதுவும் புளிக்காம
இதமா இருந்தது இன்னொரு அதிசயம். சாப்பிட்டு முடிச்சதும்
அயித்தானும் அவங்க அண்ணன் மகனும் போய் பாப்பாவுக்கு
வேற ட்ரெஸ் எடுத்து வர போனாங்க. அயித்தான் உடுப்பு
மாத்தி வந்திட்டாரு. நாங்க மட்டும் திரும்ப ஆட போயிட்டோம்.
ஆஷிஷ் சிங்கிள் ராஃப்டிங் போகணும்னு ஆசைப்பட கேமிராவை
தூக்கிகிட்டு நானும் போயிட்டேன். கூட அம்ருதாவும். ஆஷிஷ்
நல்லா இருக்குன்னு சொல்ல அம்ருதாவும் சேர்ந்து போனாப்ல.
சூப்பரா இருக்கும்மான்னு சொல்ல, இன்னொரு வாட்டியும்
போங்கன்னு சொன்னேன். ஹை ஜாலின்னு திரும்ப அண்ணனும்
தங்கையும் ஜோடி போட்டு மேலெ ஏறினாங்க. எனக்கும்
போகணும்னு ஆசையா இருந்துச்சு. சரின்னு நானும் வளையத்தை
எடுத்துகிட்டு போனேன். ஆனா ஏறும் போது பார்த்தா தண்ணி
ரொம்பவே வேகமா வருது. மேலே ஏற ஏற ஒரு மாதிரி ஆகி
வேணாம்னு ஆஷிஷை மட்டும் அனுப்பிட்டு கீழே நடந்து
வந்திட்டேன்.
திரும்ப ஆஷிஷ் அந்த உச்சியிலேருந்து வர்ற விளையாட்டுக்கு
போகணும்னு சொல்ல சரின்னு அங்க போய் நின்னோம்.
அது முடிஞ்சு வரும்போது அடுத்த வேவ் பூல் விளையாட்டு
ஆரம்பம்னு ஒரே கத்தல். இந்த வாட்டி அயித்தான்
சாமான்களை பாத்துக்க உக்காந்துக்க நானும் அம்ருதாவும்
செம எஞ்சாய். ஆஷிஷ் சொல்லவே வேணாம். 2 வயசு
உழக்கு செம ஜாலியா இருந்துச்சு.
நல்லா எஞ்சாய் செஞ்சு வேவ் பூல் முடிஞ்சதும் வெளியில வந்தா
திடும்னு 2 நிமிஷத்துக்கு மழை :) சூடா காபி குடிச்சோம்.
பசங்க நூடுல்ஸ் சாப்பிட்டாங்க. சரி இனி ரூமுக்கு போவோம்னா
உழக்கு விட்டால்தானே. “ஸ்விம்மிங் பூல், ஸ்விம்மிங் பூல்னு”
ஒரே அனத்தல். சரின்னு இன்னும்கொஞ்ச நேரம் விளையாட
இறங்கினாங்க அம்மாவும் பொண்ணும், ஆஷிஷும் அவங்க
அண்ணனும் இன்னொரு ரவுண்ட் விளையாட போயிட்டாங்க.
அம்ருதாவும் ஸ்விம்மிங் பூலில் ஆட,நானும் அயித்தானும்
இவங்களை பாத்துகிட்டே உக்காந்திருந்தோம்.
அப்புறம் மெல்ல ரூமுக்கு வந்து குளிச்சு ஃப்ரெஷ்ஷானோம்.
உடம்பு வலி அப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிச்சு. :))
ராத்திரி சாப்பாடு ரூமிலேயே ஆர்டர் செய்யலாம்னு மெனு
கார்டை பார்த்து சிம்பிளா சப்பாத்தியும் தால் தட்காவும்
ஆர்டர் செஞ்சோம். பில்லை பாத்தப்ப செம ஷாக்.
ரூமில் இருப்பது பழைய மெனு கார்டாம்!! மாத்தி
3 மாசமாச்சாம். அதைப்பத்தி எங்கயும் மேட்டரே இல்லையே
அதனால நீங்க பழைய விலைக்குத்தான் பில் போடணும்னு
சொன்னா ம்ஹூம்.... இல்லன்னு சாதிப்பு.
கோவம் வந்து கீழே இறங்கிப்போய் ரிஷப்ஷனில் பிடிச்சு
நல்லா எகிறேன். எத்தனை வருஷமாய்யா ஹோட்டல்
நடத்தறீங்க? ரூமில் குடிக்கத் தண்ணிக்கூட இல்ல,
சோப், டவல் எல்லாம் கேட்டு கேட்டு வாங்க வேண்டியதா
இருக்கு, இப்படி பில் சார்ஜ் செஞ்சிருக்கீங்களேன்னு கேட்டா,
மழுப்பலா பதில் வந்துச்சு. அயித்தானும் வந்து எகிறினதும்
அடுத்த 15 ஆவது நிமிடம் ரூமுக்கு மினரல் வாட்டர் பாட்டில்,
சோப், டவல் எல்லாம் வந்துச்சு.
ஆனா பில் மட்டும் மாத்தவே இல்லை. காலையில் காபி கூட
இங்க குடிக்க கூடாது (5 ரூவா காபியை 10ரூவாக்கு விற்பதே
தப்பு இதுல இந்த ஹோட்டல் காரங்க 20 ரூவாக்கு விக்கறாங்க.
1 ப்ளேட் இட்லில 3 இட்லி ஆனா இவங்க 2 இட்லி வெச்சிட்டு
25 ரூவா கொள்ளை) அப்படின்னு சொல்லிக்கிட்டு தூங்கினோம்.
(ஹோட்டல் ஓனர் மல்லு தேசத்துக்காரர்)
காலையில் எந்திரிச்சு வெளியில வந்தா எதிரில் சில டீக்கடைகள்
இருந்துச்சு அங்க போய் குடிச்சோம். அங்கயும் 10 ரூவா!!!
தொலையுதுன்னு 10 ரூவா மிச்சம் ஆகுதேன்னு அங்க காபி
குடிச்சிட்டு குளிச்சி ரெடியானோம். அதுக்குள்ள ரெண்டு கார்
வந்திட்டதா ரிஷப்ஷனிலிருந்து போன் வந்துச்சு.
செக் அவுட் செஞ்சிட்டு மேட்டுப்பாளையம் ஊருக்கு போய்
ஹோட்டல் ஆரிய பவனில் காலைச்சாப்பாடு சாப்பிட்டு
புறப்பட்டோம்....
தொடரும்...
14 comments:
:) hope u had a nice time in Black thunder!
This park is just half an hour away from our house. So, no idea about the Inn's!
இந்த வாட்டர் விளையாட்டுகளில் தண்ணீர் மறுசுழற்சி செய்து ,குளோரின் கலந்து என்று பிடிக்காத நாற்றம் வீசி கஷ்டப்படுத்துகிறது...
பிளாக் தண்டருக்கே அழைத்துச்சென்று விட்டீர்கள்.
நல்ல சுற்றுலா அனுபவம்..
வாங்க மஹி,
நல்லாவே எஞ்சாய் செஞ்சோம்.
ரொம்ப கிட்டத்துலதான் இருந்திருக்கீங்க. முன்னமே தெரிஞ்சிருந்தா பாத்திருக்கலாம். அடுத்த வாட்டி கண்டிப்பா பாக்கலாம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க இராஜராஜேஸ்வரி,
இங்க அதிகமா குளோரின் வாசனை இல்லாம இருந்தது. எம்ஜீஎம்மில் ரொம்பவே கஷ்டப்பட்டோம். நாங்க போனது திங்கள்கிழமை என்பதால கூட்டம் கூட குறைவுத்தான்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஸாதிகா,
வருகைக்கு ரொம்ப நன்றி
வாங்க கோவைநேரம்,
வருகைக்கு மிக்க நன்றி
ரசமான.நானே ப்ளாக் தண்டர் வந்த அனுபவம். நன்றி தென்றல். வெகு சுவாரஸ்யம். நீங்க ஹோட்டலில் எகிறும்போது நான் இல்லாமல் போயிட்டேனே:)
5 வருடம் முன்பு போனது.கோடையில் குளு குளு பயணமா? என்ஜாய்.
Felt like we too were there with you...super pics and narration
வாங்க வல்லிம்மா,
எனக்கு கோவம் வராத வரைக்கும் ரொம்பவே நல்லவ. வந்தால் எதிராளி பாவம் :))
உங்க வருகைக்குமிக்க நன்றிம்மா
வாங்க அமுதா,
ஆமாம் பரிட்சை, பிரப்பரேஷன்னு மண்டை காஞ்சு கிடந்தது. அதனால ஒரு ரிலாக்ஸிங் அவுட்டிங் :)
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க புவனா,
கூடவே வந்ததற்கு மிக்க நன்றி
Post a Comment