Tuesday, May 15, 2012

என்னமோ போங்க!!! நம்ம நேரம் சரியில்லை.....

காலையில் எழுந்தது முதல் ஹோட்டல் காரங்களோட ஒரே
போராட்டமா போச்சு. காபி கொண்டாங்கன்னா அது டீ மாதிரி
இருக்கு!!! அயித்தானின் அண்ணன் மகன் பால் வரவழைச்சு
அதுல கொண்டு வந்திருந்த காபி போட்டு குடிச்ச ரகசியத்தைச்
சொல்ல திரும்ப பால் ஆர்டர் செஞ்சா மாடு வாங்க போயிட்டாங்களோ!!ன்னு
நினைக்கறாப்ல 1 மணி நேரம் கழிச்சு பால் வந்துச்சு.

டீவி வேலை செய்யலை!!
ரூமில் குளியல் சோப் இல்ல. அதுவேணும்னு போன் செஞ்சா
க்ரீமும் ஷாம்புவும் கொண்டாந்தாங்க. திரும்ப கொண்டு
வர்றதா சொல்லி போனவுக 45 நிமிஷம் கழிச்சு வந்தாப்ல.
என்னய்யா சர்வீஸ் இதுன்னு? கேட்க அந்த ரூம் சர்வீஸ்
ஆளு சொன்னதுதான் சூப்பர். நிறைய்ய கெஸ்ட் இருக்காங்க.
அதான் நேரம் ஆவுது!!!

ஒரு ரூம்ல வெந்நீரே வர்ல!!! ஒரு ரூம்ல ஏதோ வருது. ஆனா
சோப்புக்கு போராடி குளிச்சு முடிக்கயில மணி 9.30. அப்புறம்
காலைச்சாப்பாடு சாப்பிட போயிட்டு இதை இப்படியே விடக்கூடாதுன்னு
ரிஷப்ஷனில் பேசினார் அயித்தான். அத்தோடு விடக்கூடாதுன்னு
ரெசார்ட் மேனேஜர்கிட்ட பேசணும்னு அயித்தான் சொல்ல
காலை நேர மீட்டிங் போய்க்கிட்டு இருக்கு சார். இப்ப
முடிஞ்சிடும்னு சொல்ல சரின்னு இருந்து நம்ம “குறைகளை”
சொல்ல முடிவு செஞ்சோம். சும்மாவா. பணம் கட்டித்தானே
தங்குறோம்.

ரிசார்ட் மேனேஜர் வந்ததும் அயித்தான் பேசினாக. ரூமை
மாத்த ஏற்பாடு செய்யறேன் சார்னு சொல்லி மன்னிப்புக்
கேட்டாப்ல. மன்னிப்பு மட்டும் போதுமா?? ஒரு நாள் நாம
தங்கி பட்ட அவதி, அதுக்கு சேர்த்துத்தானே பணம்
கட்டியிருக்கு. கெஸ்ட் அதிகமா இருக்காங்கன்னு சொல்றாங்களே!
அப்ப நாங்க யாரு? எங்களையும் கவனிக்க வேண்டியது
பொறுப்புத்தானே! ரூம் ரெடின்னா அதுல எல்லாம் இருக்கான்னு
பாக்காம ரூமை கொடுத்து கஷ்டப்பட வெச்சுட்டீங்களேன்னு
நானும், மருமவளும் கேட்டோம். நீங்க வெளியில போறதா
இருந்தா போயிட்டு வாங்க மேடம். நல்லா ரூமாத் தர்றேன்.
உங்க கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டேன். 20% டிஸ்கவுண்ட் தந்திடறேன்னு
சொன்னார். :)

திரும்ப ரூமுக்கு போய் எல்லாத்தையும் ரெடி செஞ்சு வெச்சிட்டு
மணியைப் பார்த்தா 11.30 தாண்டிடிச்சு. இதுக்கு மேல வெளியில
சுத்த கிளம்பலாமா வேணாமான்னு யோசிச்சு, யோசிச்சு
சரி இங்க உக்காந்து செய்யப்போறது ஏதுமில்லைன்னு
ரவுண்டடிக்க கிளம்பினோம். எங்க போனாம் அப்படிங்கறது
அடுத்த பதிவுல சொல்றேன். அதுக்கு முன்ன சில விஷயங்களை
போனப் பதிவுகளில் சொல்ல விட்டுப்போச்சு. அதைப்பத்தி இப்ப
பாக்கலாம்.

இயக்குனர் மணிரத்தினத்துக்கு ஊட்டி ரொம்ப பிடிக்கும் போல.
அவருடைய பல படங்கள் ஊட்டியில் தான். ரோஜா, தில்சே
எல்லாம் இங்கேதான். ரயில் மேலே ஷாருக்கும், மலைக்காவும்
ஆடுவாகளே அந்தப் பாட்டு இங்கதான் எடுத்திருக்காக.



ஊட்டியிலிருந்து 14 கிமீ தொலைவில் வெலிங்கடன் அப்படின்னு
ஒரு இடம் இருக்கு. இங்க தான் நம்ம
வெலிங்கடனில் நம்ம பாதுகாப்பு படையினரின் பயிற்சிக்கல்லூரி
இருக்கு. முப்படைக்கும், பாராமிலிட்டரி படையினருக்கும் பயிற்சி
கொடுக்கும் கல்லூரின்னு சொல்லலாம்.

ரோஜா படத்துல பல சீன்கள் இங்கதான் எடுத்திருக்காங்க. தனது
கணவனை காப்பாத்தச்சொல்லி ஹீரோயின் ராணுவ அதிகாரியிடம்
பேசும் இடம் இங்கேதான். உள்ளே செல்ல அனுமதி இல்லாட்டியும்
இந்த இடத்தை வெளியில் இருந்து பார்க்கலாம்.

இதைச் சுத்தி இருக்கும் இடத்தில் தான்
ஹீரோவை கடத்தும் இடம் இங்கேதான். ரோஜா படம் முக்கால்
வாசி இங்கதான் எடுத்திருக்காங்க. ஒவ்வொரு இடமா
அயித்தான் காட்டினாங்க.

Defence Service Staff College, Wellington, Ooty ரொம்ப அழகா
இருக்கும். இங்கே புகைப்படம் எடுக்கத் தடை. கல்லூரி வளாகத்தில்
அனுமதிப் பெற்று உள்ளே சுத்தி பாக்கலாம்னு சொல்றாங்க. ஆனா
அதுப்பத்தி நமக்குச் சொல்லக்கூட யாரும் இல்ல. இறுகிய முகத்தோடு
பேசும் சிப்பந்தியைத்தான் பார்த்தேன். ராணுவத்துக்கு சம்பந்தப்பட்ட
இடம், எந்த தகவல்களும் கசிந்து விடக்கூடாதுன்னு அவங்களுக்குன்னு
சில கட்டு கோப்புக்கள் இருக்கலாம்னு! பேசாம வந்திட்டோம்.

இந்த இடத்தை சுத்தி பாக்க வந்ததற்கு சார்ஜுன்னு கார்களை
மடக்கி மடக்கி 15 ரூவா வசூல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.
இது நிஜமாவே அரசாங்கத்துக்குத்தான் போகுதா??? இல்லை.....
சந்தேகமாவே 15 ரூவாவை அழுதிட்டு வந்தோம்.

சரி அடுத்த பதிவுல எங்க போனோம்?ம்னு சொல்றேன்
இப்போதைக்கு தொடரும்.....

12 comments:

வல்லிசிம்ஹன் said...

நல்லவேளை சொன்னீங்க. நாஅங்க ஸ்வாமிமலை ஸ்டெர்லிங்ல புக் செய்யறதா இருந்தோம்.டைம்ஷேர்னு வித்துடறாங்க.அப்பறம் இந்தப் பாடு.
வெலிங்டன் பற்றிய செய்திகள் புதுசு.

காற்றில் எந்தன் கீதம் said...

பொங்கக நீங்க ஊட்டி பத்தி சொல்லி கொசுவத்தி சுத்த வச்சிடீங்க....
நல்ல என்ஜாய் பண்ணி இருக்கீங்க போல...
அப்புறம் என்ன நடந்துது சொல்லுங்க...

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ரெண்டு இருக்கு அங்க. ஆனா ஹோட்டல் நல்லா இருக்கு, சாப்பாடும் சூப்பர். நல்லா காய்ச்சி விட்டதற்கப்புறம் எங்களுக்கு நடந்த உபசாரத்தை பாக்கணும். :))

(அதுவும் டீயா காபியான்னு தெரியாத ஒரு பானத்தை இங்கதான் சார் நான் குடிச்சேன்னு சொல்ல அந்த நியூஸ் சமையல்கட்டு வரை போய் நல்லா டோஸ் கிடைச்சிருக்கு)

அவங்களோட உணவு நல்ல ருசி, தரம், வெரைட்டியும் இருக்கும். மிஸ் செய்யாதீங்க. (என் நேரம் சரியில்லை) :))

pudugaithendral said...

வெலிங்கடன் பத்தி எனக்கு செய்தி இந்த வாட்டித்தான் தெரிஞ்சது.

வருகைக்கு நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

கொசுவத்தி சுத்த வெச்சிட்டேனா!!!

அடுத்த பதிவு நாளை வரும்

அன்புடன் அருணா said...

கலக்குங்க!

ஆத்மா said...

பயண அனுபவத்த இப்படியும் எழுதலாமா..?? நல்ல பதிவு

அமுதா கிருஷ்ணா said...

my friend jaya's husband is working in army. when he worked in wellington we visited there..nice place..

pudugaithendral said...

வாங்க அருணா,

கலக்கிட்டா போச்சு :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சிட்டுக்குருவி,

நம்ம அனுபவத்தை சொல்லும்போது பக்கத்துல உக்காந்துக்கினு பேசுறாப்ல சொன்னாத்தானே கேக்குறவங்க “உம்” கொட்ட முடியும். :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

மேட்டுப்பாளையத்திலேர்ந்து ஊட்டி போகும் வழியில் தான் வெலிங்கடன் இருக்குன்னாலும் பலருக்கு தெரிவதில்லை.

வருகைக்கு மிக்க நன்றி

Mahi said...

ரோஜா- வந்த புதுசில இந்த தகவல்கள் எல்லாம் வந்தது. அடுத்தவாட்டி ஊட்டி போகைல உங்க பதிவெல்லாம் படிச்சிட்டுப் போகணும்!

ஹோட்டல்ஸ்க்கும் உங்களுக்கும்தான் நேரம் சரியில்லாம இருந்திருக்கு! ட்ரிப் போற இடத்தில இப்படி ப்ராப்ளம்ஸ் வந்தா ஊர் சுத்தும் உற்சாகமே குறைஞ்சுரும்.

சரி விடுங்க, போனது போகட்டும், அடுத்த பதிவு எப்போ? இன்னும் காணமே? :)