Monday, May 21, 2012

பைகாரா.... ஓ பைகாரா!!!!

நாம ஊருக்கு போய்ட்டு வந்ததை பதிவு போடலாம்னு
பாத்தா வேலைக்காரம்மா ஊருக்கு போயிட்டாங்க.
15 நாள் :(( ஸ்ஸ்ஸ் சூரியனார் வேற 43 டீகிரில
கொதிக்கிறார். தாங்க முடியலடா சாமின்னு ஆச்சு.
நேத்துதான் வேலைக்காரம்மா வந்தாப்ல. இனி
பதிவும் வரும். :))

ஹோட்டலில் போராட்டத்துக்கு அப்புறம் நாங்க போனது
பைக்காராவுக்கு. ஊட்டியிலேர்ந்து 19 கிமீ தொலைவில்
இருக்கும் ஊர் பைக்காரா. அங்கே இருக்கும் நதிக்கும்
இதான் பேரு. இந்த நதி மலைவாழ்மக்களான தோடர்களுக்கு
ரொம்பவே புனிதமான நதி. ஹைட்ரோ எலக்ட்ரிக்
ப்ரோஜக்டுக்கு ரொம்பவே முக்கியமான நீர்த்தேக்கம்.

(எங்க மாமனார் அப்ப.... அதாவது சுதந்திரத்துக்கு
முன்னாடி தன் குழுவினரோடு இருந்து மின் இணைப்பு
கொடுத்ததா அயித்தான் சொன்னாங்க. இப்பவே காடா
இருக்கும் அங்கே அப்ப வனவிலங்குகள் சர்வ சாதாரணமா
நடமாடுமாம்!!)

நீர் வீழ்ச்சின்னது ஏதோ பெருசா இருக்கும்னு போனோம்.
உக்காந்து போட்டோ எடுத்தா நீர் வீழ்ச்சி மாதிரி தெரியுது :))

ஆனா அடர்ந்த வனத்திற்கு நடுவில் பார்க்க ரொம்ப
நல்லா இருந்திச்சு. மெயின் ரோட்டிலேர்ந்து 1 கிமீதூரம்னு
சொல்றாங்க ஆனா..... படிகளில் ஏறி இறங்குனதுலேயே
காலைச்சாப்பாடு செமிச்சிருச்சு. :))

அங்கேயிருந்து 1 அல்லது 11/2 கிமீ தூரத்தில் இருக்கும்
போட் ஹவுஸ் போனோம். ரொம்ப அழகா இருந்துச்சு.
6 பேர் கொண்ட குழுவுக்கு 350 ரூவா. எங்க குடும்பத்தினரே
6 பேர் என்பதால எங்களுக்கு மட்டுமேயான தனிப்படகா
அருமையா இருந்தது அந்தப் பயணம்.


படகுப் பயணம் முடிஞ்சு வந்ததுமே செம பசி.
நீர்வீழ்ச்சியைப் பார்க்கப்போகும் இடத்துல ஒரு சாதாரண
ஹோட்டல் இருந்தது. அங்கே போனோம். மீல்ஸ்,
பரோட்டா இருந்தது. குடிக்க சூடா தண்ணீர் இதமா
இருந்துச்சு. 6 பேருக்கும் சேர்த்து 250 தான் பில்.
வயிறு நிரம்பினிச்சு. ஆனாலும் டெம்ப்ட் செஞ்சுகிட்டு
இருந்த ஹோம் மேட் சாக்லேட் வாங்கிக்கிட்டோம்.
ருசியா இருந்துச்சு. வரும் வழியிலேயே மரங்கள்
அடர்த்தியா ரொம்ப அழகா இருந்துச்சு. டிரைவர் கிட்ட
அங்க போட்டோ எடுக்கணும்னு சொன்னேன். அந்த
இடத்துக்கு பேரு தலகுந்தா. ஆங் இந்த பைக்காரா
அணைமேலத்தான் ரோஜா படப்பிடிப்பு நடந்திருக்கு.

ஹீரோவோட கால்சட்டையை கொண்டாந்து போடுவாங்களே
அந்த சீன், அப்புறம் கிளைமாக்ஸ் கூட இங்கதான்னு சொன்னாங்க.
ஒரு போட்டோ எடுக்க விடலை. போ போன்னு போலீஸ்
கெடுபிடி. நெட்டுல சுட்டேன் இந்த படத்தை

பேபி கேரட்
தலகுந்தா

இங்க ஒரு நதி இருக்கு போய் பார்க்கலாம்னு சொன்னாரு
டிரைவர். ஆனா முந்தின நாள் இரவு பெஞ்ச மழையில
அங்கங்கே மரங்கள் விழுந்திருந்தது. அந்தப் பாதையும்
ஈரமா இருந்ததால போகலை. முன்னாடியே நின்னு
போட்டோ பிடிச்சுக்கிட்டோம். சுடச்சுட சோளம் சுட்டு
வித்துக்கிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் மாங்க
பத்தை. :)) அந்த இதமான குளிர் சூழலுக்கு இதை
மிஸ் செய்யலாமா?? வாங்கின் ஆனந்தமா எஞ்சாய்
செஞ்சுகிட்டே ஊட்டிக்கு திரும்பினோம்.

ஊட்டி பொட்டானிகல் கார்டன் போகலாம்னு போனோம்.
செம கூட்டம். டிக்கட் வாங்கவே 1 மணி நேரம் ஆகும்
போல இருந்துச்சு. ஹோம் மேட் சாக்லட் வாங்கணும் +
ஸ்வட்டர் வாங்கணும்னு ( ஏப்ரல் மாசத்துல அம்புட்டு
எங்க குளிரா இருக்க போவுதுன்னு அசால்ட்டா
இருந்துப்புட்டேன். ஸ்வட்டர் எடுத்துகிட்டு போகலை.
மழைச்சாரலால குளிரும் கொஞ்சம் அதிகமாவே
இருந்துச்சு) அங்கே ஒரு ஹோல் சேல் மார்க்கெட்
ஏரியா கிட்ட கூட்டிகிட்டு போனார். ஹோம் மேட்
சாக்லெட் இங்கதான் விலையும் கம்மியா இருந்துச்சு,
சுவையும் ரொம்பவே நல்லா இருந்துச்சு. ப்ளையின்
வொயிட் சாக்லெட் கிலோ 340. மத்த இடத்துல 400.வொயிட், மில்க், டார்க், ஃபூர்ட் & நட்ஸுன்னு
நிறைய்ய வெரைட்டிஸ். பசங்க அம்மா நீங்க
வீட்டுல செய்யுற சாக்லேட் மாதிரியே இருக்கும்மான்னு
ஒரே பாராட்டு.


ஹோம் சாக்லட் சாப்பிட்டுக்கிட்டு இருங்க...

அடுத்த பதிவுல சந்திக்கிறேன்...


8 comments:

அமைதிச்சாரல் said...

ஜில்லுன்னு இருக்கற ஊருக்குப் போயிட்டு இப்ப கொதிக்கும் ஊருக்கு வந்தா நகரம் நரகமாத்தான் தோணுது,.. இல்லையா தென்றல்,..

தென்றலும் சாரலும் எங்கே போனாலும் அங்கே ஜில்லுன்னு ஆகிருது, ரைட்டுதானே ;-)

நீங்களே செஞ்ச ஹோம் மேட் சாக்லெட்????.. எங்களுக்குக் கிடையாதா :-(

இராஜராஜேஸ்வரி said...

பசங்க அம்மா நீங்க
வீட்டுல செய்யுற சாக்லேட் மாதிரியே இருக்கும்மான்னு
ஒரே பாராட்டு.


இனிமையான
"பைகாரா.... ஓ பைகாரா!!!!"பயணத்திற்கு பாராட்டுக்கள்..

ஹுஸைனம்மா said...

//நாம ஊருக்கு போய்ட்டு வந்ததை பதிவு போடலாம்னு
பாத்தா வேலைக்காரம்மா ஊருக்கு போயிட்டாங்க//

ஹி..ஹி.. அவங்களும் ப்ளாக் எழுதுறாங்களாமா?

//நீங்க
வீட்டுல செய்யுற சாக்லேட் மாதிரியே//
ரெஸிப்பி ப்ளீஸ்!!

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

இந்த வாட்டி ஹைதையில் அக்னிநட்சத்திரம் ஆரம்பிச்ச பிறகுதான் செம வெயில்.

\\தென்றலும் சாரலும் எங்கே போனாலும் அங்கே ஜில்லுன்னு ஆகிருது, ரைட்டுதானே ;-)//

யெஸ்ஸூ

புதுகைத் தென்றல் said...

நீங்களே செஞ்ச ஹோம் மேட் சாக்லெட்????.. எங்களுக்குக் கிடையாதா :-(//

வருத்தப்படவே வேணாம். அடுத்த வாட்டி ஹைதை கிளம்பி வாங்க. சென்னை போறதை விட பயண நேரம் கம்மி தான் :))

புதுகைத் தென்றல் said...

வாங்க இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

அவங்களும் ப்ளாக் எழுதுறாங்களாமா? //
எழுதினாலும் தெலுங்கில்தான் இருக்கும் :))

ஊர் சுத்தின பதிவுகள் முடிஞ்சதும் மறக்காம ரெஸிப்பி பதிவு போடுறேன்.

(மறந்துட்டா ஒரு மெயில் தட்டிவிடுங்க ப்ளீஸ் )

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

வல்லிசிம்ஹன் said...

பைக்காரா சூப்பர்மா. இந்த வெய்யிலுக்குப் பார்க்கக் கண்ணுக்கு இதம். சாக்கலேட் நல்லா இருக்கு பார்க்க:)
வெண்ணிற ஆடையிலும் இந்த மரங்கள் இருக்கும் பாதை வந்ததோ??/தென்றல்,சாரல்னு பேரு வச்சுக்கொண்டு தூறாமல் இருக்கமுடியுமா. வாழ்த்துகள். நிறைய ட்ரிப் போங்க ரெண்டு பேரும்:)