யாராவது போர்ட் எக்ஸாம் எழுதுகிறார்கள் என்றாலே ரொம்ப
பிரார்த்தனை செய்வேன். காரணம் இங்கே.
பேப்பர் திருத்துபவர்கள் நல்ல மூடில் இருக்க வேண்டும்
என்பதே என் மெயின் பிரார்த்தனையாக இருக்கும்.
இப்படி இருக்கும் பொழுது ஆஷிஷ் பத்தாம் வகுப்பு பரிட்சை
எழுதிகிறான் என்றால்............. :)) ஆனால்
மகனுக்கு அதிகம் ப்ரஷர் கொடுத்து சூழலை கெடுத்து
விடக்கூடாது என்று முடிவு செய்து அதன் படி திட்டம்
போட்டு எல்லாம் செய்தேன். தேவையான ஓய்வு,
சத்தான உணவு என எல்லாம் பேலன்ஸ்டாக
கொண்டு வந்தேன்.
அவனது ட்யூஷன் டீச்சர் ரொம்பவே உதவியாக இருந்தார்.
குருகுலம் போல தன் வீட்டிற்கு வரவழைத்து,
மாடல் பேப்பர்களை எழுத வைத்து, நடுவில் ஓய்வு
எடுக்கச் சொல்லி, தானே சமைத்து ருசியான உணவு
கொடுத்து திரும்ப படிக்க வைத்து வீட்டிற்கு அனுப்புவார்.
நடு நடுவே ஜூஸ் செய்து கொடுத்தல், டீ போட்டு
கொடுத்தல் என அவரும் ஒரு தாய் போல பார்த்துக்
கொண்டார். ப்ரீ போர்டுக்கு முன்பே சோஷியல்,
ஹிந்தி போர்ஷன்களை முடித்து வைத்துவிட்டேன்.
டீச்சர் அறிவியல், கணிதப்பாடங்களுக்கு பொறுப்பு
எடுத்துக்கொண்டார். முறையான திட்டமிடல் ஆஷிஷுக்கு
பெரிதும் உதவியது. ரொம்பவே கண்ட்ரோல் செய்யாமல்
அதே சமயம் அதிகம் டீவி, பாட்டு என உட்கார
விடாமல் ரிலாக்ஸாக்க விட்டு படித்து ஆஷிஷ்
எக்ஸாமை எதிர் கொண்டார்.
நேற்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சிபிஎஸ்சி
தேர்வு முடிவுகள் வந்தன. ஆஷிஷின் நண்பன் போன்
செய்து சொல்லித்தான் தெரியும். உடன் நெட்டில்
பார்த்தோம். ஆண்டவனருள். பட்ட கஷ்டத்திற்கு
நல்ல பலன். மகனுக்கும் மனநிறைவு. நல்ல
மதிப்பெண்கள்.
நேற்றுதான் எல்கேஜியில் சேர்த்தது போலிருக்கு.
இதோ ஆஷிஷ் 10ஆவது வகுப்பு தேர்வாகி
ஜூனியர் காலேஜ் போகிறார். :))
14 comments:
வாழ்த்துகள் ஆஷிஷ்:)!
ஆண்டவனருள். பட்ட கஷ்டத்திற்கு
நல்ல பலன். மகனுக்கும் மனநிறைவு. நல்ல மதிப்பெண்கள்.//
"ஸ்வீட் எடு கொண்டாடு" -- மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்
வாழ்த்துகள் ஆஷிஷ் & அம்மாவுக்கும்!!
வாழ்த்துக்கள்...ஆசிஷ் !!...மகிழ்வுடன் வாழ்க !
Congrats to Ashish! Wish him the Very Best!
வாவ்...சூப்பரு ;-) ஆஷிஷ்க்கு வாழ்த்துக்கள் ;))
ஆஷுஷுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் புதுகை தென்றல்.
நல்ல அம்மா. நல்ல பிள்ளை இருவருக்கும் மனம் நிறைந்த ஆசிகள்.இன்னும் இன்னும் வளர்ந்து அம்மாவுக்கு சந்தோஷம் கொடுக்கட்டும்.
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி இராஜராஜேவரி
நன்றி ஹுசைனம்மா,
நன்றி அப்பாஜி,
நன்றி மஹி
நன்றி கோபி
நன்றி அமைதிச்சாரல்
நன்றி ஸாதிகா,
நன்றி வல்லிம்மா
வாழ்த்துக்கள்! மதிப்பெண் பெற உதவிய பெற்றோருக்கும்!
ஸ்வீட் எடுத்துக்கிட்டேன். ஆஷிஷ்க்கு என்னுடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். அவரை சரியா வழிநடத்தற உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Hearty Congrates ...
நன்றி ஜனா,
நன்றி கணேஷ்,
நன்றி ஜமால்
Post a Comment