Thursday, May 03, 2012

IIMB ல் சில மணி நேரம்......

ஒரு ஊருக்கு போகணும்னா ரொம்ப முன்கூட்டி யோசிச்சு
டிக்கட் புக் செஞ்சு வெச்சாத்தான் உண்டு.... தத்கல் கூட
கிடைப்பது கஷ்டமா இருக்கு. அவசரமா டிக்கட் புக்
செய்யணும்னா சான்சே இல்ல. இந்த நிலையில் எங்க
பயணம் எப்படி நடக்கும்னு எங்களுக்கு டவுட் இருந்துக்கினே
இருந்துச்சு.

அயித்தான் அதுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப் வெச்சிப்பிட்டாங்க.
நானும் குழந்தைகளும் மட்டும் ரயிலில் புறப்படு போவதாகவும்,
அயித்தான் முதல்நாளே கிளம்பி சனிக்கிழமை கிளாஸ்
அட்டெண்ட் செஞ்சிட்டு அங்கேயிருந்து பஸ் பிடிச்சு
வாராப்ல இருந்த ப்ளான் எங்க ட்ரயின் டிக்கெட் கிடைக்காம
போனதால மாத்தவேண்டியதாப்போச்சு.

அயித்தானோட நாங்களும் சேர்ந்து பெங்களூரு போறதுதான்
ப்ளான். எப்படி போறது? ஸ்லீப்பர் கோச் பஸ் இருக்கே,
அதுல புக் செஞ்சு போகலாம்னு ஐடியா க்ளிக்காகி புக்
செஞ்சு கிளம்பிட்டோம். 9.30 மணிக்கு பேரடைஸ் கிட்ட
பிக் அப்னு சொன்னாங்கன்னு 9 மணிக்கெல்லாம் அங்க
போனோம் 10 மணிவாக்குல ஒரு சின்ன வேன் வந்துச்சு.
அதுல செம கூட்டம். எங்க பஸ்ஸோ 10.30 மணிக்கு,
அதை விட்டா கஷ்டம்னு அதுல நின்னுக்கினே போனோம்.

லக்டிக்காபூல் அப்படிங்கற இடத்துல இறக்கிவிட்டாங்க.
அங்க இருந்த ட்ராவல்ஸ் மெயின் ஆபிஸ்ல புக் செஞ்ச
டிக்கடை காட்டினா வண்டி நம்பர் குறிச்சு கொடுத்தாங்க.
11 மணி வாக்குல வண்டி வந்திருச்சுன்னு சவுண்ட் விட்டாங்க.
ட்ராபிக் நிறைஞ்ச அந்த இடத்துல வேற சில பஸ்களும்
நிற்க செம கன்ஃப்யூசிங். எப்படியோ ஏறிட்டோம்.
ட்ரையின்ல கூபே இருக்குமே அதுமாதிரி இருக்கு.
லோயர் பர்த்,அப்பர் பர்த் இருக்கு. ஏசி பஸ்தான்.தலகாணியும்,
போர்வையும் கூட இருந்தது. (ரயினில் பயணிக்கும் போது
அந்த டாய்லட் வசதிதான் இதுல மிஸ்ஸிங்)ராத்திரி பயண பஸ்ல எல்லோரும் தூங்க மாட்டாங்களா!!
ஒவ்வொரு கூபேவுக்கு ஒரு டீவியை வெச்சு, அதுக்கு
சவுண்ட் சிஸ்டத்தை பொதுவா ஸ்பீக்கரில் வெச்சு படம்
போட்டுக்கிட்டு இருந்தாங்க. எங்களுக்கோ செம டயர்டு.
அயித்தான் எந்திரிச்சு போய் டீவியை அமுத்த சொல்லியாந்தாங்க.
அப்புறமாத்தான் தூங்கினோம். காலையில லேட்டா பஸ்
பெங்களூரை போய் சேர்ந்துச்சு. அங்கேயிருந்து பன்னர்கட்டா
பகுதியில் ஐஐஎம்க்கு கொஞ்சம் பக்கத்துல அயித்தான் எப்பவும்
தங்குற ஹோட்டலில் எங்களை இறக்கிவிட்டுட்டு, டிபன் கூட
சாப்பிடாம அயித்தான் ரெடியாகி ஓடினாங்க. 9 மணிக்கு
அவருக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆகிடும். கையில பிஸ்கட்
கொண்டு போயிருந்ததை கொடுத்து, காபி ஒண்ணு போட்டு
கொடுத்து அனுப்பினேன். (ரூம்லயே கெட்டில் எல்லாம்
இருந்தது)

நாங்க மெல்ல போய் ப்ராக்ஃபாஸ்ட் சாப்பிட்டு, அப்புறமா
ரெடியாணோம். ஐஐஎம்ல் அயித்தானோட நண்பர் லெக்சரரா
இருக்காரு. அவரு வந்து எங்களை கூட்டிகிட்டு போய்
ஐஐஎம்மை சுத்தி காட்டினாரு. பசங்களுக்கு செம குஷி.
இந்த இடத்துல தான் 3 இடியட் படப்பிடிப்பு நடந்தது.

இங்கதான் மாதவன் வருவாப்ல, இங்கதான் அந்த முட்டை
கதையை வைரஸ் சொல்வாரு, அடே இங்கேயிருந்துதான்
அமீர்கான் ரூம்ல போவாருன்னு ஒவ்வொரு இடமா
பாத்து அதிசியத்துக்கிட்டே வந்தவுக அயித்தானின்
நண்பரை மறக்காம கூட்டிக்கிட்டு போய் காட்டச் சொன்ன
இடம் இது தான். :))இந்த டாங்க் மேலதான் அமீர்கான், மாதவன், எல்லோரும்
உக்காந்திருப்பது. சைலன்ஸர் அழுகையோடு இவங்ககிட்ட
சவால் விடுறது எல்லாம்.

அங்க இங்க சுத்தி மொத்த ஐஐஎம்மையும் பாத்தோம்.
ஒவ்வொரு இடமா நண்பர் சொல்லிக்கிட்டே வந்தாரு.
அயித்தான் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்கறாங்க.
அவங்க வகுப்புக்கு கிட்ட கூட்டிக்கிட்டு போய் காட்டினாரு.
அப்பா வகுப்புல உக்காந்திருப்பதை புள்ளைங்க பெருமையா
பாத்தாங்க.ஐஐஎம்ல் படிப்பது அயித்தானோட கனவு.
ஆஷிஷ் கூட என் எதிர்காலம் கூட இங்கயா இருக்கலாம்னு
சொல்லிக்கிட்டு வந்தாப்ல. பெங்களூரா இருந்தா இருக்கலாம்!
இல்லாட்டி அகமதாபாத்னு ஆஷிஷ் சொல்லிக்கிட்டு இருக்கையில
அயித்தான் வகுப்பு முடிஞ்சு லன்ச் ப்ரேக்குக்கு வந்தாக.

அங்கேயே மாணவர்கள் சாப்பிடன்னு இடம் இருக்கு. ஆனா
நாங்களும் கூட இருந்ததால அங்கே வேற இடத்துல இருக்கற
கேண்டின்ல போய் சாப்பிட்டோம். விலையும் அதிகம் இல்லாம
இருந்துச்சு. சாப்பிட்டோம். அயித்தான் மதிய வகுப்புக்கு
போயிட நானும் குழந்தைகளும், அயித்தானின் நண்பரோட
ஊர் சுத்த கிளம்பினோம்.

IIM பங்களூரில் 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கு.
பன்னர்கட்டாவில் இருக்கும் இப்போதைய இந்த இடத்தை
கர்னாடக அரசாங்கமே இலவசமா கொடுத்திருக்கு. சும்மா
ஒரு 120 ஏக்கர் நிலம் தான்!!! ஆரம்பத்துல வெளியில
ஒரு இடத்துல நடத்தப்பட்டுகிட்டு இருந்து இந்த இடம்
தயாரானதும் இங்கன வந்திருக்காக. ஆனா ரொம்ப அழகா,
பசுமை செழிப்போட சுத்தமா இருக்கு. அரசாங்க இடம்
இப்படி இருப்பது கூட ஆச்சரிய்ம்தான்ல!!!பூத்து குலுங்கும் பூக்களும் பச்சை பசேல் செடிகளும்னு
ரொம்ப அமைதியா அழகா இருக்கு. பசங்க போட்டோ
பிடிச்ச மனியமா இருந்தாங்க. அங்கே அன்னைக்கு ஏதோ
ஒரு அலுமினி கெட் டுகதர் இருந்துச்சு. சாயந்திரம்
நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு ரிகர்சல் நடத்திகிட்டு இருந்தாங்க.
கொலவெறிப்பாட்டும் இருந்துச்சு!!!!

அங்கேயிருந்து அயித்தானின் நண்பர் மீனாட்சி மாலுக்கு கூட்டிப்போனார்.
சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு , க்ரவுண்ட் ப்ளோரில் இருந்த
காபி ஷாப் (பேரு மறந்து போச்சு) சூப்பரா காபி குடிச்சோம்.
பரிஸ்தாவை விட விலைக்கம்மி ஆனா சூப்பர் காபி டேஸ்ட்.

எதிரில் இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விசிட்
அடிச்சிட்டு மணி பார்த்தா 5. அயித்தானுக்கு கிளாஸ் முடிஞ்சிருக்கும்.
திரும்ப ஐஐஎம் போயி அயித்தானைக்கூட்டிக்கிட்டு நண்பரோட
வீட்டுக்கு போனோம். 20 வருட நட்பு. அதாவது ஹிந்துஸ்தான்
லீவரில் அயித்தான் இருந்தப்ப அவருடன் வேலைப்பார்த்தவர்
இந்த நண்பர். அவங்க அம்மாவை, குடும்பத்தினரை சந்திச்சிட்டு
கிளம்பி ரூமுக்கு வந்து செக் அவுட் செஞ்சு சாமானை வண்டியில
ஏத்திட்டு கிளம்பினோம்.

ராத்திரி 11 மணிக்குத்தான் பஸ் அதுவரை!!!??? இரவு
சாப்பாட்டுக்கு செண்ட்ரல் மால் போய் சைனீஸ் தோசை,
சாப்பிட்டோம். மேட்ச் நடந்துகிட்டிருந்தது அதை உக்காந்து
பாத்துகிட்டு இருந்தோம். அப்புறம் கேபி என் பஸ்ஸ்டாப்ல்
எங்களை இறக்கி விட்டுட்டு நாங்க வண்டி ஏறும் வரை
வெயிட் செஞ்சுகிட்டு இருந்தார் நண்பர். 11 மணிக்கு
திரும்பவும் ஸ்லீப்பர் கோச். எஸ்விஆரில் கூபே மாதிரி
இருக்கும். ஆனா கேபிஎன்னில் கொடுமை!!! டபுள் பெட்
லோயர் பர்த்தில், அப்பர் பர்த்திலும் அதே. :)) :(((

எங்க 4 பேருக்கும் என்பதால பிரச்சனை இல்லை. படுத்ததுதான்
தெரியும்.... காலை 6.30 மணிக்கு கண் முழிச்சு பாத்தா
ஊர் வந்தா மாதிரி தெரிஞ்சது. அயித்தானை எழுப்பிக்கேட்டா
ஆமா இறங்க வேண்டிய ஸ்டாப்பும் வந்திருச்சுன்னு சொல்ல
பொட்டியை தூக்கிகிட்டு இறங்கினோம்....

இறங்கிய இடம்... அடுத்த பதிவுல.

13 comments:

Mahi said...

:) Nice narration..felt like I roamed around with you guys!

Bannarghatta pakkathilathaan enga veedu..Meenakshi Amman koyil....hmmm,feeling nostalgic Kala akka! :)

அமைதிச்சாரல் said...

முக்கியமான கட்டத்துல தொடரும் போட்டுட்டீங்களே.. நீங்க இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு பதிலா வேற ஸ்டாப்புல இறங்கிட்டீங்களா என்ன :-)))

புதுகைத் தென்றல் said...

வாங்க மஹி,

அப்படியே எங்கூட வந்துக்கினே இருங்க.... மத்த இடங்கள்யும் சுத்தி பாத்திடலாம். :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

இறங்க வேண்டிய இடத்துல கரீக்டா இறங்கிட்டோம்...அதுதான் ஆச்சரியம்

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

பங்களூரு ஐஐஎம் பார்க்க வேண்டிய இடம். எங்கள் பெரிய மகன் அங்க ஒரு ப்ராஜெக்ட் செய்தார். கொஞ்சம் போனால் வனவிலங்குகள் கூடப் பார்த்திருக்கலாம்,.ரொம்ப சுவையாகச் சொல்லி இருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

வாங்க. வாங்க. இந்தியா போயிருந்தப்போ, நாங்களும் ரெயில் டிக்கெட் ப்ரச்னையால் இந்த பஸ்ஸில்தான் போகவேண்டும் என்று நினைத்திருந்தோம். நல்லவேளை டிரெயின்லயே கிடைச்சிட்டுது. பஸ் பயணம் பத்தி ரொம்பச் சிக்கனமாச் சொல்லி முடிச்சிட்டீங்களே!! பஸ்ஸின் உள்பக்க படங்கள் இல்லையா? :-))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

வனவிலங்குகள் மத்தது எல்லாம் முன்பே பார்த்தாச்சு. செம அலுப்பு, திரும்ப பயணம் இருந்ததால் வேற எங்கயும் போகும் மூட் இல்லை. அதான்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

அர்த்த ராத்திரி 11 மணிக்கு தூக்க கலக்கத்தில் வண்டி ஏறிப்படுத்தா போதும்னு ஆகிடிச்சு. இதுல போட்டோ எங்க எடுக்கறது!!!

பஸ் பயணம் தூக்கத்தில் கழிஞ்சதால அதுக்கு மேல சொல்ல ஏதுமில்லை :))

வருகைக்கு நன்றி

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

அமுதா கிருஷ்ணா said...

ட்ரையின் கிடைக்காமல் இந்த பஸ் பயணம் நல்லாதான் இருக்கு.பெர்த் பஸ்சில் திண்டுக்கல்லிற்கு அவ்வப்போது போவதுண்டு.பெங்களூர் கூலா இருந்துச்சா???

புதுகைத் தென்றல் said...

வாங்க சிச்சா,

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா,

பெங்களூரில் அன்னைக்கு மேக மூட்டமா இருந்துச்சு. அதிகம் வெயில் தெரியலை.

வருகைக்கு மிக்க நன்றி

கணேஷ் said...

உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html