Friday, June 01, 2012

ALL IS WELL!!!!!!!!!!

அமிர்கான் கலக்கறார்ல!!!! எதிர் பார்ததை விட நிகழ்ச்சி
ரொம்ப அருமையா இருக்கு. சத்யமேவ ஜயதே பத்திதான்
சொல்றேன்.

பிரச்சனையை சொல்லும் விதம் ஆகட்டும், பாதிக்கப்பட்டவர்களிடம்
பேசும் பொழுதாகட்டும் அமீர் கலக்கலாக நிகழ்ச்சியை கொண்டு
செல்லும் விதம் சிம்ப்ளி சூப்பர். நிகழ்ச்சியை ஒரே நெகட்டிவா
காட்டாம, அதற்கு தீர்வும் இருப்பதை காட்டுவதை எல்லோரும்
பின்பற்றலாமேன்னு நினைக்கத் தோணுது.

வரதட்சனை கொடுமை பத்தின நிகழ்ச்சியில ஒரு ஆண்மகனை
விரட்டி மிரட்டி அடித்து கல்யாணம் நடத்தினதை சொன்னாங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாவம்பா அவரு. அவரோட
ஃபோட்டோ பாத்தப்ப பரிதாபமா இருந்துச்சு. பலி ஆடு
மாதிரி இருந்தாரு.

மருத்துவர்கள் பத்தின போன வாரம் நடந்த நிகழ்ச்சி
நம்ம ரமணா படத்துலேயே பாத்திருக்கோம். (இந்த நிகழ்ச்சிக்காக
ஏதோ மருத்துவர்கள் குழு அமீர் மன்னிப்பு கேக்கணும்னு
சொல்லியிருக்காங்க!!) இப்ப பல மருந்துக்கடைகள் 10%
டிஸ்கவுண்ட் கொடுக்குது. அதுக்கப்புறமும் அவங்களுக்கு
லாபம் எம்புட்டு இருக்கும்!!!!

ம்ம்ம் ..... வரதட்சணை கொடுமை, பெண் சிசுக்கொலை
எல்லாம் பத்தி பேசினார் அமீர். இப்போ கல்யாணத்துக்கு
பெண்கள் போடும் கண்டீஷன் பத்தியும் அமீருக்கு எடுத்துச்
சொல்லி அப்பாவி “கிட்டுமணிகள்”ளுக்காகவும் பேச
சொல்லலாம்னு நினைக்கிறேன்!!!!


இந்த நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் ஒளியிடப்படுது.
(கன்னட சேனல்கள் மட்டும் மாட்டேன்னு சொன்னாங்கன்னு
பேப்பரில் படிச்சேன்). இதே மாதிரி இன்னொரு நிகழ்ச்சியும்
எல்லா மொழிகளிலும் வரணும்.


கலர்ஸ் சேனலில் 12 - 1 மணிக்கு ஆல் இஸ் வெல் டாக்டர்
அஹுலிவாலியான்னு ஒரு நிகழ்ச்சி வருது. மருத்துவம்
சம்பந்தமா பல தகவல்கள் தெரிஞ்சிக்கலாம். அதுவும் குழந்தைகளுக்கு
ஜங்க் ஃபுட் பத்தி நிறைய்ய......



விக்கல் ஏன் ஏற்படுது? நம் உடலில் இருந்து வெளியாகும்
யூரின் (இதைப்பத்தி பலர் பேச மாட்டாங்க) அது சொல்லும்
நம் உடலின் உபாதைகள்னு நிறைய்ய மேட்டர்ஸுங்க
தெரிஞ்சிக்கலாம். நிகழ்ச்சியின் முடிவில் எக்ஸசைர்சும்
சொல்றாங்க.

கண்டிப்பா பாருங்க.




5 comments:

மோகன் குமார் said...

நிகழ்ச்சி பற்றி கேள்விபட்டாலும் இன்னும் பாக்கலை. பாக்கணும்

நட்புடன் ஜமால் said...

Ye! Amir rocks, very nice and essential.

Thanks for sharing the other program too :)

புதுகைத் தென்றல் said...

வாங்க மோகன் குமார்,

ரெண்டு நிகழ்ச்சியையும் கண்டிப்பா பாருங்க.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

இந்த மாதிரியான நிகழ்ச்சியா இருக்கும்னு நினைச்சிருக்கவே இல்லை.

ஆல் இஸ் வெல்லும் சூப்பரா இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நிகழ்ச்சி பற்றி நானும் கேள்விப்பட்டேன். பார்க்கணும்....