Friday, June 01, 2012

மன்னிச்சிடுங்க ஒப்பிடாம இருக்க முடியலை......

காலை உணவு முடிச்சு கிளம்பலாம்னு நினைக்கும் பொழுதே
மேக மூட்டமா இருப்பதை பார்த்தோம். தூறவே ஆரம்பிச்சிடிச்சு!!!
தவிட்டு தூத்தல்னு சொல்வாங்களே அதே மாதிரி. ஆனா
அந்த சூழ்நிலைக்கு ஊட்டி சூப்பரா இருந்துச்சு. நல்ல வேளை
ஸ்வெட்டர் வாங்கினோம்டா சாமின்னு நினைக்கும்படி குளிர்.
(அயித்தான் ஸ்வெட்டர் வாங்கிக்கலை. அவருக்கு குளிரவும்
இல்லை!!!) ஹைதையில் அதிக குளிர் இருக்கும்பொழுது
மட்டும் தான் ஏசி இல்லாம தூங்குவாங்க.

அங்கேயிருந்து எந்த வழியில் கோவை போகலாம்னு யோசிச்சு
கிட்டு இருக்கும் பொழுது அயித்தானின் அண்ணன் மகன்,
தொட்டபெட்டா கண்டிப்பா போகணும்னு சொன்னாரு.
மூட்டமா இருக்கும் பொழுது அங்கே ஒண்ணும் பாக்க
முடியாதுன்னு டிரைவர் சொன்னாலும், போயே ஆகணும்னு
சொல்லிட்டாரு. சரின்னு பயணப்பட்டோம். வழியில்
டீ ஃபேக்டரிக்கு போயிட்டு போகலாம்னு டிரைவர் சொல்ல,
மனசுல ஆயிரம் கற்பனைகளோட போனோம்.


5 ரூவா டிக்கெட் வாங்கனும்னு சொன்னாங்க. சரின்னு வாங்கிகிட்டு
போனோம். தேயிலைகளைப்போட்டு எப்படி ஈரப்பதம் நீக்கி,டீத்தூள்
தயாரிக்கறாங்கன்னு அறிவிப்பு செஞ்சுகிட்டு இருந்தாங்க. ஒவ்வொரு
ஸ்டேஜா மெஷின் வேலை செஞ்சுகிட்டு இருந்ததை பார்த்துகிட்டே
வந்தா கீழே ”ருசிக்க” பேப்பர் கப்புல டீயை ஊத்தி ஒருத்தர் கிட்டத்தட்ட
வீசுற மாதிரி கொடுத்துகிட்டு இருந்தாரு.

இது அந்த டீ ஃபேக்டரியில் நாங்க எடுத்த வீடியோ.

எனக்கும் பசங்களுக்கு மனசு ஒருவாட்டி நுவரேலியா போயிட்டு
வந்திச்சு. நுவரேலியாவுலயும் இப்படித்தான் ஒரு டீ ஃபேக்டரிக்கு

போயிருந்தோம். அந்த குளிருக்கு இதமா ப்ளாக் டீ அழகான
பீங்கான் கப்புகளில் அவங்க கொடுத்த விதம்......
டீ வாங்கியே ஆகணும் அவசர படுத்தாம தங்களின் தயாரிப்பை
ருசிக்க விடும் அழகே அழகு. ஆனா இங்கே.....
ம்ம்ம்ம்ம்.

யூனிலீவரின் சிலோண்டாவின் இந்த விளம்பரம் பாருங்க சூப்பரா இருக்குல்ல.


ஆனா எங்க குடும்பத்தினருக்கு பிடிச்சது ஜேஸ்டா பிஓபிஎஃப் தான்.


BOPF - “Broken Orange Pekoh Fannings" இது தான் அதன் விரிவாக்கம்.
ப்ளாக் டீகளில் இதுதான் ஹை க்ரேட். கொஞ்சம் ஸ்ட்ராங்க இருக்கும்.
தேயிலை எவ்வளவு உயரத்தில்(கடல் மட்டத்திலிருந்து) பயிராகுதோ அவ்வளவு ருசியாவும், தரமானதாவும் இருக்கும்.

எண்ட்ரி டிக்கட் வெக்கட்டும் வேணாம்னு சொல்லவில்லை. அந்த
டீயை குடிக்க கொடுப்பதாவது அழகா செய்யலாமே!!! ஆனா பாருங்க.
அங்கே டாய்லட் வசதி கூட இல்லை!!!!

அங்க மட்டுமில்லை இப்படி வெளியே பயணம் போகும் பொழுது
எதிர் கொள்ளும் பிரச்சனையில் முக்கியமானது டாய்லட்.
இருக்கவே இருக்காது. இருந்தாலும் அதை உபயோகிக்க ஆயிரம்
தடவை யோசிக்கும் நிலமை!!! ஏன் இப்படி சுற்றுலா பயணிகளின்
அத்தியாவசியத் தேவையா இதை ஏன் நினைப்பதில்லை???

இந்த ஊட்டி ட்ரிப்பில் இந்த விஷ்யத்தில் ரொம்பவே கஷ்ட
பட்டாச்சு. இந்த மாதிரி இருப்பதால் தான் பலரும்
“திறந்தவெளி புல்வெளி கழகத்தில்” மெம்பராகிடராங்க போல.
ஆண்களுக்கு பிரச்சனை இல்லை. பெண்களுக்கு எதுவும்
கஷ்டம்தான் போங்க.

சிங்கப்பூர், மலேசியா விடுங்க. இந்தியப்பெருங்கடலில்
கண்ணீர்த்துளி போல இருக்கும் குட்டியூண்டு நாடான
இலங்கையில் பெட்ரோல் பங்கில் டாய்லட் வசதி உண்டு,
ஏடி எம் இருக்கு, மினி சூப்பர் மார்க்கெட்டும் இருக்கும்.
வழியில எந்த ஹோட்டலிலும் அனுமதி
கொடுப்பாங்க. டாய்லட்டை தாராளமா பயன்படுத்திக்கலாம். அந்த
நிலமை நம்ம நாட்டுல மட்டும் ஏன் இல்லை!!!

டீ ஃபேக்டரி பாத்திட்டு பக்கத்திலேயே ஹோம் மேட்
சாக்லெட் செய்வதை பாக்கலாம்னு போனா. அங்க
செய்வதை காட்டுவதை விட விற்பனைதான் ஜரூரா
நடந்துச்சு. பாத்த முட்டும் போதும்னு காருக்கு திரும்பிட்டோம்.

தூறிக்கிட்டு இருந்த வானம் கொஞ்சம் பெருசாவே பெய்ய
ஆரம்பிச்சிருச்சு....

தொடரும்

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

//இலங்கையில் பெட்ரோல் பங்கில் டாய்லட் வசதி உண்டு,
ஏடி எம் இருக்கு, மினி சூப்பர் மார்க்கெட்டும் இருக்கும்.
வழியில எந்த ஹோட்டலிலும் அனுமதி
கொடுப்பாங்க. டாய்லட்டை தாராளமா பயன்படுத்திக்கலாம். அந்த
நிலமை நம்ம நாட்டுல மட்டும் ஏன் இல்லை!!!//

எப்போதும் மனதில் உதிக்கும் கேள்வி.... பதில் தான் தெரியவில்லை.....

சிட்டுக்குருவி said...

தொடருங்கள்....:)

இராஜராஜேஸ்வரி said...

பயணங்களில் தொடரும் கேள்விகள் ...

அமைதிச்சாரல் said...

இங்கேயும் சில பெட்ரோல் பங்குகளில் ரெஸ்ட் ரூம் வசதி இருக்குது. மினி சூப்பர் மார்க்கெட்டில் தண்ணீரும் பாக்கெட் ஜங்க் ஃபுட்டும் மட்டும் கிடைக்கும். வியாபாரம் சரியில்லைன்னு சில இடங்களில் சூப்பர் மார்க்கெட்டை எடுத்துட்டாங்க.

நகரங்களில் பயணம் செய்யறப்ப எப்படியும் நம்ம வயித்துக்கு போட்டுக்கறதுக்கு ஹோட்டல்ல நிறுத்துவோமில்லே.. அப்ப ரெஸ்ட் ரூமுக்கும் விசிட் அடிச்சா ஆச்சு :-))

புதுகைத் தென்றல் said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

ம்ம்ம்ம் இந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதிலை என்னைக்கு பாப்போம்!!

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

இந்த சில இடங்களில் இருப்பது சரி. ஆனா அது பல இடங்களில் ஆகணும். ஹோட்டல்களில் உபயோகிக்கலாம். இல்லைன்னு சொல்லலை. ஆனா போகும் வழியில் குழந்தைகள், பெரியவர்களுக்கு ரொம்ப கஷ்டம். சுகாதாரத்துறையும், சுற்றுலாத்துறையும் சேர்ந்து ஏதாவது செய்யணும்.

வருகைக்கு நன்றி

வடுவூர் குமார் said...

இங்கு இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையில் பொதுமக்கள் அதிகம் வரும் இடம் ஆனால் பொது கழிவிடம் பிளானே செய்யவில்லையாம்.டேய் கூமுட்டைகளா...என்று கத்தவேண்டும் போல் இருந்தது.