Wednesday, June 20, 2012

ஸ்கூலுக்கு போகணும்??!!!!

எல்கேஜி அட்மிஷனுக்கு கூட இம்புட்டு டென்ஷன் பட்டிருக்கமாட்டேன்.
ஆஷிஷ் அண்ணா பரிட்சைக்கு முன்னாடியே அவங்க ட்யூஷன் டீச்சரும்
நானுமா சேர்ந்து எங்க சேர்ப்பதுன்னு பேசிக்கிட்டே இருந்தோம்.

ஆஷிஷ் அண்ணா இஞ்சினியரிங் தான் படிக்க விருப்பம்னு சொல்லிட்டாரு.
இங்க ஆந்திராவில் அதுக்குன்னு கோச்சிங் கொடுக்கும் பள்ளிகள் இருக்கு.’
அதாவது +1.+2 போர்ஷனை பெருசா கண்டுக்க மாட்டாங்க.
அந்த மதிப்பெண்கள் எண்ட்ரன்ஸ் டெஸ்டுக்கு உதவாது அதனால!!!
நுழைவுத் தேர்வுக்கு மீனை மசாலாவில் ஊறப்போட்டு, திரும்ப
மசாலா தடவின்னு மேரினேஷன் செய்வது போலன்னு வெச்சுக்கோங்க.
காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை வகுப்பு. அதுக்கப்புறம்
வீட்டுக்கு வந்து ஹோம்வொர்க் ஏதாவது இருந்தா செஞ்சா போதும்.
அதான் அங்கயே அம்புட்டு நேரம் படிக்க வெச்சிருவாங்களே!!

இப்படி படிக்க வெச்சு அவங்கதான் ஐஐடியிலும், ஏஇஇஇஇ டாப்பர்ஸா
வருவாங்க. ஆந்திராதான் இந்த விஷயத்துல டாப் ஸ்கோர்.
முதல் பத்து ரேங்குக்குள்ள மட்டுமில்ல 200 வரைக்கும் கூட
நாராயணா, சைதன்யா போன்ற பள்ளி மாணவர்கள்தான். அங்கே
தான் மேலே சொன்ன மேரினேஷன் நடக்குது. எனக்கு அப்படிப்பட்ட
இடத்தில் போடவே இஷ்டமில்லை. ஆஷிஷும் அவங்க பழைய
ஃப்ரெண்ட்ஸ்கள் அங்கே படிக்கறவங்க படற மன உளைச்சல்கள்
எல்லாம் பாத்திட்டு,” அம்மா இந்த மாதிரி இடத்துக்கு என்னை
அனுப்பிடாதீங்கன்னு” ரிக்வெஸ்ட் வெச்சிட்டாரு.

சரி. இனி +1,+2 பாரதியா வித்யாபவன்ல சேத்திட்டு கோச்சிங்
தனியா போடலாம்னு ஒரு யோசனை. FIITJEE நடத்தின
தேசிய அளவிலான பரிட்சையும் எழுதினாப்ல. அங்கேயும்
கிடைச்சது. FIITJEEல கோச்சிங் நல்லா இருக்கும்.
முன்னாடி சொன்ன பள்ளிகள் மாதிரி வகுப்பு 7 மணி வரைக்கும்
இருக்காது. ஒரு வருஷத்துக்கே கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும்
மேல. கவுன்சிலிங் எல்லாம் முடிச்சு அட்மிஷனுக்கு அட்வான்ஸ்
கட்ட சொல்லியிருந்தாங்க. அங்கே ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா
அவங்க IITJEE, AEEEE ,BITSAT, EAMCET (LOCAL) சொல்லிக்கொடுப்பாங்க.
ஆனா IITJEE,தான் டார்கெட். அதுக்கே நிறைய்ய சொல்லித்தருவாங்க.
அவங்க கணக்கு என்னன்னா ஹைலெவல் கோர்ஸே செய்ய’முடியும்போது
AEEEE ,BITSAT, செய்வது கஷ்டமா இருக்காதுன்னு சொல்வாங்க.

உண்மை ஆஷிஷ் டீச்சர் சொல்லி புரிஞ்சது. அங்கேயும் +1,+2 போர்ஷன்
கண்டுக்க மாட்டாங்க. மத்த கோச்சிங் நல்லா இருக்கும்.
டிசிப்ளினும் இருக்கும். ஆனா ஆஷிஷ் IITJEE, செய்ய இஷ்டமில்லை.
BITSAT தான் டார்கெட். அதுக்குன்னு ஷ்பெஷல் கோச்சிங் தர
மாட்டாங்க!!! அப்படி இருக்க அதுக்கு போய் எதுக்கு அம்புட்டு
பணம் கட்டனும். தவிர IITJEE, டைப் டெஸ்ட்ல சரியா மார்க்
வராட்டி மனசு கஷ்டம் வேற. நாம டார்கெட் செய்ய நினைப்பது
நடக்காது. அவங்களோ IITJEE பரிட்சைக்குதான் கவனம் செலுத்து
வதால அதுல மார்க் வராட்டி ப்ரஷர் போடவும் வாய்ப்பு இருக்கு.

BITSATல் ஆன்லைன் டெஸ்ட்.மல்டி சாய்ஸ். இதுல நெகட்டிவ் மார்க்கிங் உண்டு.
ஆனா IITJEE மெத்தட் சம்ஸ் போல எழுதணும். AEEEE இதுல
ரெண்டு வகையிலயும் டெஸ்ட் இருக்கும். அதனாலதான் குழம்ப
வேண்டி இருந்தது. எங்கதான் போடுவது? பவன்ஸ்ல இண்டர்
படிக்கலாம். கோச்சிங் எங்க நல்லா இருக்கும்னு கஷ்டமா இருந்த
நிலையில் பல பள்ளிகளில் இருந்து போன்கால்கள் வந்தம
மனியமா இருந்துச்சு. விசாகப்பட்டிணத்திலேர்ந்தெல்லாம் கால்
வரவும்,”எங்க நம்பர் எப்படி கிடைச்சிச்சுன்னு கேட்டா?, 10ஆம் வகுப்பு
பரிட்சை எழுதற பசங்க நம்பர்கள் எல்லாம் எங்க கிட்ட
இருக்கும்னு!!!” சொன்னாங்க.

சில பள்ளிகளில் வீடுதேடி பேம்ப்ளெட்ஸ் கொடுத்தாங்க!!!
அப்படி வந்த ஒரு பள்ளிக்கூடம் தான் ICLASS.
இங்க ஆந்திராவில் 10த் வரைக்கும் சிபிஎஸ்சி அல்லது
ஐசிசில படிக்கறாங்க. ஆனா +1,+2 ஸ்டேட் போர்ட்
படிக்கறாங்க. ஈசியா மார்க் ஸ்கோர் பண்ணாலாம் என்பது
மட்டுமில்லாம ஆந்திரா போர்ட் மேத்ஸ் & சயின்ஸ்
எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதறவங்களுக்கு உதவியா
இருக்கும்படி அமைச்சிருக்காங்க. கொஞ்சம் கஷ்டமா
இருக்கும்னு கூட சொல்லலாம்.

ICLASS பேம்பளெட்ஸ் பாத்தோம். எங்க வீட்டுக்கு
பக்கத்துலேயே இருக்கு. ஆஷிஷோட டீச்சரை கேட்டோம்.
விசாரிச்சு சொல்றதா சொன்னாங்க. (அவங்க கணவரும்
TIME (TRIUMPHANT INSTITUTE OF MANAGEMENT EDUCATION)ல்
வேலை செய்வதால தெரிஞ்ச ஃபேக்வல்ட்டிகிட்ட விசாரிச்சு
சொன்னாங்க. 4 வருஷம் தான் ஆகிருக்குன்னாலும் இந்தப்
பள்ளிக்கு நல்ல பேரு இருக்கு. இவங்க 6 மாசம் வரைக்கும்
டைம் எடுத்து +1, +2 போர்ஷன்ஸ் முடிச்சு அப்புறம்தான்
எண்ட்ரன்ஸுக்கு கோச்சிங் செய்வாங்க. ஆஷிஷ் இங்க
படிச்சா நல்லா இருக்கும்னு கைட் செஞ்சாங்க. புளிமூட்டை
மாதிரி வகுப்புல அடைக்காம 36 பேர்தான் ஒரு வகுப்பில்.
தவிர இங்க ரெண்டு சாய்ஸ் இருக்கு.

ஒரு கோச்சிங் IITJEE, AEEEE ,BITSAT, EAMCET
இல்லாட்டி AEEEE ,BITSAT, EAMCET மட்டும்
எடுத்துக்கலாம். ஆஷிஷுக்கு BITSAT தான் டார்கெட்
என்றாலும் AEEEE இதுவும் செய்யறேம்மா என்றதால்
இங்கே அட்மிஷன் கேட்டோம். 9த் மார்க் ஷீட் கேட்டாங்க.
காட்டினோம். ஆஷிஷின் பழைய ஸ்கூலிலிருந்து பல
நண்பர்கள் அங்க படிச்சுக்கிட்டு இருப்பதா சொன்னாங்க.
அவங்களை போய் மீட் செஞ்சு பாருங்க, கிளாஸ் ரூம்
எப்படி இருக்குன்னு பாருங்கன்னு சொல்ல கிளாஸ் ரூம்
பாத்தோம். ஒவ்வொரு கிளாஸுக்கும் ப்ரொஜக்டர் இருக்கு.
ஏசி ரூம் வேற. நீட்டா இருந்தது.

அங்கே இருந்த ஆஷிஷின் பழைய பள்ளியில் படிச்ச
பொண்ணை தனியா கூப்பிட்டு விசாரிச்சேன். அவங்க
அம்மா பழைய பள்ளியில் டீச்சரா இருக்காங்க.
“நிறைய்ய இடத்துல விசாரிச்சோம் ஆண்ட்டி. அம்மா
ரொம்ப திருப்தி பட்டுதான் இங்க சேத்தாங்க. படிப்பு
நல்லா இருக்கு. தவிர என் பர்சனாலிட்டியை ஷேப்பப்பும்
செஞ்சுக்க முடியுதுன்னு” சொல்ல சரின்னு முடிவு
செஞ்சோம்.

ஆஷிஷின் பரிட்சை முடிஞ்சதும் நானும் அயித்தானும் எந்தெந்த
ஸ்கூலுக்கெல்லாம் போயி விசிட் அடிச்சு அட்மிஷன் பத்தி
பாக்கணும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வெச்சிருந்தோம்.ஆனா
அலைச்சலே இல்லாம சென்றோம் வென்றோம் மாதிரி

ICLASSல் அழகா அட்மிஷன் கிடைச்சிருச்சு. ரிசல்ட்டுக்கு முன்னாடியே
10,000 கட்டி சீட் ரிசர்வ் செஞ்சாச்சு. ஃபீஸ் வருஷத்துக்கு 50,000.
(பல ப்ளே ஸ்கூல்களில் ப்ரிகேஜி, நர்சரிக்கே வருஷத்துக்கு
30,000)
காலை 8 மணி முதல் மதியம் 3.30 வரைதான் வகுப்பு.
சாயந்திரம் கண்டிப்பா ஏதாவது ஆக்டிவிட்டில சேர்த்திடுங்க.
அது அவங்க ஸ்ட்ரெஸ் லெவல் குறைய உதவும்னு பிரின்சிபல்
ஏற்கனவே சொல்லியிருந்தார். ரிசல்ட் வந்ததும் ஃபோன் செஞ்சு
மார்க் கேட்டாங்க. ஜூன்8 லேர்ந்து காலேஜ்னு சொல்லிட்டாங்க.

ஆரம்பமானிச்சு வீட்டுல ரவுசு. நான் ஸ்கூல்னு சொல்ல ஆஷிஷ்
அண்ணா காலேஜ்னு சொல்ல ஒரே கலாட்டாதான். இங்க
+1,+2வை ஜூனியர் காலேஜுன்னு சொல்றாங்க. நமக்கு அது
ஸ்கூல்தான!! :)) யூனிஃபார்ம் கிடையாது!!! யூனிஃபார்ம்
இருந்தா பிரச்சனையே இல்லை. :)) இப்ப வெரைட்டியா
ட்ரெஸ் ரெடி செய்யணும்.

காலேஜ் திறக்கும் நாள் கிட்ட நெருங்க நெருங்க அண்ணாவை
காலய்ச்சுகிட்டு இருந்தேன். பேக்டு ஸ்கூல் ஷூஸ் வாங்கணும்,
ஸ்ட்ரா போட்ட வாட்டர் பாட்டில், பென்10 டிபன் பாக்ஸ்...
பாப்பாய் பேக் என சொல்லச் சொல்ல ஆஷிஷ் முறைத்ததை
பார்க்கணும். :)) நான் ஸ்கூல்னே சொல்ல அம்மா காலேஜ்னு
சொல்லுங்கன்னு விடாம சொல்லிக்கிட்டே இருந்தாப்ல. :))

வகுப்புக்கள் ஆரம்பமாகிடிச்சு. 3.30 வரை தான் காலேஜ் என்றாலும்
5.30 வரை ஃபேக்வல்ட்டிகள் அங்கேயேதான் இருப்பாங்க. என்ன
டவுட் இருந்தாலும் பொறுமையா கேட்டுக்கிட்டு வரலாம். அங்கேயே
இருந்து படிக்கணும்னு விரும்பினாலும் ஓகே. அப்துல் கலாம்
அவர்களின் மாணவர்தான் ஆஷிஷிற்கு பிசிக்ஸ் ஃபேக்வல்ட்டி.
பாடங்கள் ரொம்ப அழகா சொல்றாங்களாம். புரியாட்டி புரிஞ்சுக்கும்
வகையில் திரும்ப வகுப்பிலேயே சொல்லிடறாங்கன்னு ஆஷிஷ்
குஷி.

அலைஞ்சு திரியாம வீட்டுக்கு பக்கத்துலேயே (1 கிமீ தான்)
வகுப்பு. பிள்ளையை அதிகம் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தாத
படிப்பு. இப்படி ஒரு சூழலை கொடுத்தது இறைவன் அருள்.

தவிர இப்ப கபில்சிபில் சொல்லியிருப்பதை பார்த்தா ஒரே ஒரு
எண்ட்ரன்ஸ் டெஸ்ட்தான் இருக்கப்போவுது. இண்டர் மார்க்கும்
முக்கியம்னு சொல்லியிருக்காரு. நல்லவேலை மற்ற இடங்களில்
சேர்க்காமல், இப்படி ஒரு பள்ளியில் சேர்க்கும் வாய்ப்பை இறைவன்
தந்தான். பணமும் தப்பித்தது.

அந்த கடவுளுக்கு மனமார்ந்த நன்றிகள்


9 comments:

அமுதா கிருஷ்ணா said...

அப்பாடி படிக்கவே கண்ணை கட்டுதே..-+1,+2 நல்லா படிச்சு முடிச்சு சார் நிஜமான காலேஜ் போக வாழ்த்துக்கள்!!!

ராமலக்ஷ்மி said...

கல்லூரிக்குச் செல்லவிருக்கும் ஆஷிஷ்ற்கு என் அன்பான வாழ்த்துகள்:)!

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

பிள்ளைகள் சாதிக்கணும் அதே சமயம் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடாது. இதுதான் என் பாலிசி. இதனால இங்க வந்தப்ப ஸ்கூல் தேடி அலைஞ்சிருக்கேன் பாருங்க.!!!!
உங்க வாழ்த்தை ஆஷிஷ் கிட்ட சொல்லிடறேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

அப்படியே சந்தோஷமா இருக்கும் ஆஷிஷுக்கு. நீங்க காலேஜுன்னு சொல்லிட்டீங்கள்ல அதான். :))

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ஜூனியர் கல்லூரிக்குச் செல்லும் ஆஷிஷுக்கு வாழ்த்துகள்.... :)

கர்நாடத்திலும் +1, +2 வை கல்லூரின்னுதான் சொல்றாங்க! :)

எல் கே said...

ஆஷிஷ் அண்ணாவிற்கு வாழ்த்துகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

மஹாராஷ்ட்ராவிலும் அப்படித்தான்னு நினைக்கிறேன். தங்கத் தமிழகத்தில்தான் +1,+2 ஸ்கூல். :))

வருகைக்கு நன்றி வாழ்த்தை சொல்லிடறேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க எல்கே,

வாழ்த்தை சொல்லிடறேன்.

வருகைக்கு நன்றி

மாதேவி said...

ஆஷிஷுக்கு வாழ்த்துகள்.