ஏற்கனவே விலைவாசி உச்சத்துல இருக்கு. இதுல இப்ப மழையும்
பொய்த்திருக்க..... காய்கறிகள் விலை எங்கேயோ போய்க்கிட்டு
இருக்கு. திங்கள்கிழமை காய்வாங்கிய நிலவரப்படி... தக்காளி கிலோ30,
கொத்துமல்லிக்கட்டு பெருசு - 15 ரூவா!!!! பீன்ஸ் கிலோ 60.
வெள்ளரிக்காய் கிலோ 30.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
2 வருஷம் முன்னாடி வெங்காயம் வித்தவிலைக்கே அல்லோலப்பட்டோம்.
இப்ப காய்கறிகளின் விலையை பார்க்க மயக்கமே வருது. கத்திர்க்காய்
கிலோ 40ன்னா எதை சமைக்க. பிள்ளைகளுக்கு உட்டச்சத்தான உணவு
எப்படி கொடுப்பது? அலுப்பா இருக்கு :((
***********************************************************************
தன்னால நல்லதை செய்யறேன்னு கபில்சிபில் இஞ்சினியரிங்
நுழைவுத்தேர்வில் குளறுபடி செய்யறதை விட்டுட்டு ஆசிரியர்கள்
பலருக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். பள்ளி நிர்வாகங்களுக்கு
ரொம்பவே முக்கியம். 5ஆம் வகுப்பு மாணவி இரவில் தனது
படுக்கையை நனைத்துவிடுகிறாள் என்பதற்காக அவளது சிறுநீரை
குடிக்க வைத்திருக்கும் வார்டனை என்னன்னு சொல்வது.
ஆந்திராவில் வகுப்பில் பேசிக்கிட்டு இருந்தான்னு சொல்லி
நடுமண்டையில் ரத்தம் வர வைத்திருக்கிறார் ஆசிரியர்.
*****************************************************************
அமிர்கான் ஷோவின் தாக்கமா என்னன்னு தெரியலை, ஆனா
ஒரு சந்தோஷமான விஷயம். எங்க ஆந்திராவில் அதி விரைவில்
ஜெனரிக் மெடிக்கல் ஷாப்புக்கள் வரப்போகுது. இதனால
சகாய விலையில் மருந்துகள் வாங்கலாம்.
அமீர்கான் ஷோவின் தாக்கமா இந்த வாட்டி ஆர்கானிக் பொருட்கள்
தான் வாங்குவதுன்னு சபதம் எடுத்து, அந்த டீவி ஷோவில் வந்த
டாக்டர்.ஆஞ்சநேயலு அவர்களின் ஃபோன் நெம்பரை கண்டுபிடிச்சி
ஆபீஸ்ல பேசியாச்சு. இங்க சகஜ ஆகாரம்ங்கற பேர்ல ஆர்கானிக்
பொருட்கள் விக்கறாங்க. இதைப்பத்தி டீடெய்லா பதிவு போடணும்.
********************************************************************
தாராசிங் இன்னைக்கு காலேல மறைந்துவிட்டார். ராமாயண் சீரியலில்
ஆஞ்சிநேயரா நடிச்சவர்.
மல்யுத்தவீரரான இவர், சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
83ஆம் வயதில் இறைவனை சேர்ந்திருக்கிறார். அன்னாருக்கு
என் அஞ்சலிகள்.
***********************************************************************
சென்றவாரம் சென்னைக்கு சூறாவளிப்பயணமா வார இறுதியில் வந்திருந்தோம்.
அயித்தானின் அத்தை 95 வயது மூதாட்டி அவங்களை பார்க்க வந்திருந்தோம்.
சென்னையின் சாலைகளில் அந்த டாக்சி சூப்பரா இருந்துச்சு. ஏர்போர்ட்
ட்ராப்புக்கு அவங்களையே கேட்போம்னு அயித்தான் கிட்ட சொல்லியிருந்தேன்.
ஃபாஸ்ட்ராக் ஆரம்பிச்சு 15 வருஷமாச்சு. அவங்களோட ஒவ்வொரு
வாட்டியும் மல்லுக்கட்டுறது அப்பா தனி புத்தகமே எழுதலாம்.
இந்த நிலையில் மில்லியன் டாட்ஸ் டாக்சியை வரவேற்கிறோம்.
காரும் சூப்பர். எர்டிகா!!!. டிரைவரின் சீருடையும் சூப்பரா இருக்கு.
வண்டி ஓட்டுறதும் ரொம்ப நல்லா இருக்கு. ஆரம்பிச்சு பத்துநாள் தான்
ஆகியிருப்பதா டிரைவர் சொன்னார். ஒரு மாசம் நல்லா ட்ரையிங்
கொடுத்து (பயணிகளிடம் எப்படி நடந்துக்கணும், எப்படி பேசணும்,
இப்படி... விஷயங்களுக்கு ட்ரையிங் கொடுத்திருக்காங்க)
அப்புறம்தான் ரோட்டில் வண்டி ஓட்ட அனுமதிச்சிருக்காங்க.
இணையதளத்தை பார்க்க இங்க சொடுக்குங்க.
*************************************************************************
கோவை மாநகருக்கு விசிட் அடித்திருந்த பொழுது டாக்சிடாக்சி கேப்ஸ்
சர்வீஸும் சூப்பரா இருந்தது.
அவங்களோட இணையதளம் இங்கே..
********************************************************************
16 comments:
சகஜ ஆகாரம்ங்கற பேர்ல ஆர்கானிக்
பொருட்கள் விக்கறாங்க.
அருமையான தகவல்கள்.. பாராட்டுக்கள்..
விலைவாசி வெளிநாடுகள் போல் நம் நாட்டிலும் மிக அதிகமாகி விடும் போல...
Hi. wher are you staying in hyderabd. I am also staying in hyd for last 2 years with my family. got lof of info from your blog about hyd and food items etc etc...
tnc for sharing
வாங்க இராஜராஜேஸ்வரி,
நலமா? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அமுதா,
ஆமாம். :((
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க மனோ,
நீங்களும் ஹைதையா!! சூப்பர். ஹைதையின்னு சொல்லிக்கிட்டாலும் சிகந்திராபாத்தில்தான் நம் ஜாகை :))
என் பதிவுகளில் உங்களுக்கு நிறைய்ய விவரங்கள் கிடைத்ததில் சந்தோஷம். அடிக்கடி வாங்க.
வருகைக்கு நன்றி
இங்கே தக்காளி 60 ரூபா!
தாரா சிங் - நல்ல மனிதர்.... May his soul rest in peace...
கால் டாக்சி விவரங்கள் நன்று....
ஹைதை பிரியாணியின் ருசிக்குச் சொல்லவா வேணும். ஜூப்பர் டேஸ்ட்டு..
ஜப் வீ மெட் என்ற படத்திலும் தாராசிங் நடிச்சிருந்தார். ரொம்பவும் ரசிச்ச நடிப்பு அவரோடது. தமிழில் மை.ம.கா.ராஜன் படத்தில் பீம்பாயா வருவாரே. அதை மறக்க முடியுமா.!!1
எதோ குறையுற மாதிரி இருக்கே அக்கா?
சென்னைக்கு வந்து எனக்கு ஃபோன் செய்யலை :((
ஹைதை பிரியாணி காரசாரமா நன்றாக் இருக்கிறது!
உண்மைதான்! சென்ற மாதம் தமிழ்நாட்டில்தான் இருந்தேன்! பீன்ஸின் விலையும் கொத்தமல்லியின் விலையும் மயக்கத்தைத்தான் வரவழைத்தன! அப்படியும் கொத்தமல்லியை வாங்காமல் இருக்க முடியவில்லை!
சென்னை, கோவை டாக்ஸி விபரங்களுக்கு மிகவும் நன்றி!! அடிக்கடி பயணம் செய்யும் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்கள்!!
வாங்க சகோ,
அறுவதா????!!!! தாங்கமுடியலை.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
பீம்பாயா நடிச்சது மஹாபாரதத்தில் பீமனாக நடிச்சவர். தாராசிங் ஒன்லி அனுமான் வேஷம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க தம்பி,
அயித்தான் வந்திட்டு உங்களோட பேசினார்ல. பாண்டி போய் சென்னை வந்து திரும்ப கூப்பிட்டா மொபைல் ச்விச் ஆஃப்னு வருதுன்னு சொன்னார்.
நான் வந்து ரொம்பவே ஃப்ளையிங் விசிட். அயித்தானோட 95 வயசு அத்தையை பார்க்க மட்டுமே வந்த எக்ஸ்ளூசிவ் ட்ரிப். நார்த் மெட்ராஸ் மட்டும் போகவே ஒரு நாள் வேணும். :((
அடுத்தவாட்டி கண்டிப்பா சந்திப்போம். உங்க ரங்க்ஸையும் பாத்து பேசணும்ல :))
கால் டாக்சி மேட்டரை மைண்ட்ல வெச்சிக்கிறேன்
வாங்க ஃபண்டூ,
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment