Tuesday, July 24, 2012

ஆந்திரா உணவு எப்புடி இருக்கும்???

ஆந்திரா சாப்பாடு, ஆந்திரா மெஸ் அப்படின்னு சொன்னாலே
பலருக்கு கண்ணு எரியும். அம்புட்டு காரமா இருக்கும் சாப்பாடு.
வெஜ்ஜானாலும் சரி, நான்வெஜ்னாலு சரி அது சும்மா சுள்ளுன்னு
காரமா இருக்கணும். அதுதான் ஆந்திரா ஷ்பெஷல். ஆந்திரா
சாப்பாடுன்னு சொன்னாலும் அதுலயும் ரெண்டு வகை இருக்கு.
1. பக்கா ஆந்திரா சாப்பாடு (குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டிணம்)
ஏரியா சமையல்கள், 2. ஹைதராபாதி சாப்பாடு. (இதுல
மொகல் உணவுவகைகள் இருக்கும்.) ஹைதராபாத்தில் எல்லாமே
மொகல் சாப்பாடா இருக்காது. தெலங்கானாவுக்கே உரிய காரம்
இங்கயும் உண்டு.

மதிய சாப்பாடு நல்லா விஸ்தாரமா இருக்கும். அதுல முக்கியமா
இருக்க வேண்டிய ஐட்டம் பச்சடி & ஊறகாய(ஊறுகாய்).
பச்சடின்னா நம்ம ஊர் திதிப்பு பச்சடி, இல்லாட்டி தயிர் பச்சடின்னு
நினைக்காதீங்க. தொண்டக்காய், முட்டைகோஸ், வெள்ளரிக்காய்,
வெண்டாக்காய் இப்படி எல்லா காயிலயும் பச்சடி செய்யலாம்.
உப்பு, உரைப்பு, புளிப்பா இருக்கும்.

அடுத்து ஊறுகாய். ஆந்திரா ஷ்பெஷல் ஆவக்காய், அதுலயும்
வெல்லம் சேர்த்தது, பூண்டு சேர்த்ததுன்னு வெரைட்டி இருக்கும்.
இது தவிர கோங்கூர(புளிச்சகீரை),எலுமிச்சை, மாகாயி (மாங்காயிலேயே
ஒரு வெரைட்டி ஊறுகாய்), சிகப்பு மிளகாய் ஊறுகாய் என
வெரைட்டி வெச்சிருப்பாங்க.



இவைகள் கலந்து 4 உருண்டை உள்ளே முதலில் தள்ளுவதை
“மொதட்டி உண்ட” (முதல் உருண்டை) அப்படின்னு சொல்வாங்க!!!!
இந்த பச்சடி, ஊறுகாய் தவிர பருப்பு பொடி, கறிவேப்பிலை பொடி,
புதினா பொடி, பொட்டுக்கடலை பொடின்னு நிறைய்ய வகை பொடிகளும் இருக்கும்!!!
அதுவும் கம்பல்சரியாக்கும். :))

முத்தபப்புன்னு பருப்பைகெட்டியா
செஞ்சு வெச்சிருப்பாங்க. முத்தபப்பு போட்ட கலந்து சோற்றுக்கு
அருமையான சைட்டிஷ் ஆவக்காய் ஊறுகாய் தான் :))
கீரை பருப்பு, கூட்டு வகைகளும் செய்வாங்க. ஆனா எல்லாத்துக்கும்
தாளிக்கும்போது பச்சைமிளகாய் ரெண்டு, காய்ஞ்ச மிளகாய்
ரெண்டு சேர்த்திடுவாங்க. இதைத்தவிர பல சமயம்
மிளகாய்த்தூளும் சேர்த்துதான் சமையல் நடக்கும்.

அதைத்தவிர சாம்பார், குழம்பு வகைகள்.
பாகற்காய் குழம்பு, பாசிப்பயறு குழம்பு, நான் வெஜ்ஜில்
Chapala Pulusu (fish gravy), Kodi Kura,(கோழி கறி)
Guddu Pulusu (also known as Egg Pulusu), Meat curry, Shrimp curry, etc.
இவைகளும் உண்டு.

அப்புறம் ரசம். தக்காளி ரசம் மட்டுமில்ல வகைவகையா ரசம்.
ஆனா நம்ம ஊர் மாதிரி பருப்புத்தண்ணி சேர்த்திருக்கணும்னு கட்டாயம்
இல்ல. பூண்டு ரசம், பருப்பு பொடி ரசம், கொள்ளு ரசம், வெங்காய
ரசம்னு ஏகப்பட்ட வெரைட்டி.

கலந்த சாதங்களும் உண்டு. அங்கங்கே தாளித்த பச்சைமிளகாய்
கண்ணில் தென் படும் புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்
சோறு (இதுக்கும் பச்சை மிளகாய் தாளிக்கப்படும்) :))
ஆந்திராவில் அதிகமா மிளகாய் மற்றும் இதர மசாலா சாமான்கள்
விளைவதால சாப்பாட்டில் இவை அதிகாமா சேர்க்கப்படுது.
இதைத்தவிர மோர்மிளகாயும் வறுத்து வெச்சுக்குவாங்க.

இப்படி உணவில் காரம் அதிகம் சேர்ப்பதை ஈடுகட்ட நெய்
கண்டிப்பா உணவில் சேர்த்துப்பாங்க. நெய் போட்டு பிசைஞ்சு
ஊறுகாய், பச்சடி, பொடி சோறு சாப்பிடுவாங்க. தயிர் கண்டிப்பா
உணவில் இருக்கும். இனிப்பு வகைகளும் கண்டிப்பா இருக்கும்.
அதிரசம் பல வீடுகளில் கண்டிப்பா இருக்கும்.

டிபன் வெரைட்டிகளில் கூட காரம் இருக்கும். ஆந்திரா மசாலா
தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?? மசாலா நடுவில் வைத்து
அத்துடன் காரப்பொடி தூவி, உள்ளிகாரம் (வெங்காயம், பூண்டு
சேர்ததது) கலந்து இருக்கும். பெசரட்டுக்கு சூப்பரா இஞ்சி துவையல்
அப்படின்னு டிபன்லயும் காரம் கலந்துதான் இருக்கும். புதுசா
சாப்பிடறவங்களுக்கு “ஏன் உச்சி மண்டையில சுர்ருங்குது தான்”” :)

என் தோழி ஒருத்தங்க வீட்டுக்கு சாப்பிட போயிருந்தோம்.
பெசரட்டு செஞ்சிருந்தாங்க. தொட்டுக்க இஞ்சி துவையல், தேங்காய்
துவையல், தவிர கறிவேப்பிலை பொடி நெய்யில குழைச்சு!!!!:))




ஹைதராபாத் பிரியாணி அதிகம் காரமில்லாம இருக்கும். அதனால
அதுக்கு தொட்டுக்க சைட் டிஷ், மிர்சிகா சலன்.:)) அதை ஈடுகட்ட
தயிர் ரைய்தா!!! எப்புடி??!!! :))

இங்கே கடைகளில் சமோசா வாங்கினோம்னா கூடவே கொஞ்சமா
பொரிக்கப்பட்ட பச்சைமிளகாயும் சேர்த்துதான் கட்டுவாங்க. மிர்சி
கொடுக்க மறந்துட்டீங்களேன்னு சண்டை போட்டு வாங்கிகிட்டு
போறவங்களும் உண்டு. மிர்ச்சி பஜ்ஜி ரொம்ப ஃபேமஸ். அதுலயும்
ஸ்டஃப் செஞ்சது செய்யாதது, நடுவில் கீறிவிட்டு கொஞ்சமா
பொரிச்சது பொரிக்காததுன்னு செம வெரைட்டி.

இப்படி காரமான உணவுகளே விரும்பி சாப்பிடறதால் இங்கே இப்ப
உணவின் சுவையே காரமானதா இருக்க வேண்டிய கட்டாயம்
ஆகிடிச்சு. வட இந்திய உணவுகளாக சாட் அயிட்டங்கள் கூட
செம காரமா இருக்கும்!!!

எங்க வீதியிலேயே வாராவாரம் சந்தை வந்திடுது. காய்கறியெல்லாம்
வாங்கிக்கலாம். அப்படி வாங்கப்போகும் போது ஒரே ஒரு
விஷயத்துக்குத்தான் கஷ்டப்படுவேன். அது பச்சைமிளகாய்
வாங்குவது!!!! ரெண்டு ரூவாய்க்கு தாங்கன்னு கேக்கற ஆளு
நான் மட்டும்தான் இருக்கும். இரண்டு ரூவாய்க்கான்னு என்னிய
மேலயும் கீழயும் வித்தியாசமா பாப்பாங்க.

இங்க குறைஞ்சது கால்கிலோ வாங்குவாங்க.
நமக்கு இரண்டு ரூவாய்க்கு வாங்கினாலே 2 வாரம் வரும்!!
கால்கிலோ பச்சைமிளகாய் எம்புட்டுன்னு நினைக்கறீங்க!! ஜஸ்ட்
5 ரூவா!!!! வாராவாரம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்,
காய்ஞ்ச மிளகாய் இவைகளை குறைஞ்சது கால்கிலோவுக்கு
வாங்கறவங்க அதிகம்.



அமைதிச்சாரலுக்காக இந்தப்பதிவு.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி பசியை தூண்டி விட்டீர்களே... ஹ... ஹா..
நல்ல விளக்கமா சொல்லி இருக்கீங்க... நன்றி !

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

பசி நேரத்துல பதிவை படிச்சிருக்கீங்க போல இருக்கு. :))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

”தளிர் சுரேஷ்” said...

ஆந்திர உணவு பற்றிய அருமையான விளக்கம்! நன்றி!
இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_24.html

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

முதல் வருகைக்கு நன்றி.

(பேய்கள் ஓய்வதில்லையா???? டெர்ரர் கிளப்பறீங்களே!!! )

வருகைக்கு நன்றி

ப.கந்தசாமி said...

படிக்கறப்பவே காரம் உறைக்குது.

வெங்கட் நாகராஜ் said...

சின்ன வயதிலேயிருந்தே ஆந்திர காரத்தினை சுவைத்திருக்கிறேன் பெரியம்மா வீட்டில் [விஜயவாடா].... அப்போது சாப்பிட்ட காரம் இப்போது சாப்பிட முடியவில்லை! :)

pudugaithendral said...

வாங்க ஐயா,

நலமா. காரசாரமான பதிவா போச்சு. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

புளிமிளகாய் கூட சாப்பிட முடியாம இருக்கு இப்ப.

வருகைக்கு மிக்க நன்றி

ராமலக்ஷ்மி said...

விரிவான பகிர்வு. ஆந்திரா உணவு என்றாலே காரம்தான்.

/ரெண்டு ரூவாய்க்கு தாங்கன்னு கேக்கற ஆளு
நான் மட்டும்தான் இருக்கும். /

அதிலயும் இரண்டு இரண்டா பார்த்துதான் சேர்ப்போம்:))!

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

ஆமாம், சட்னி, உப்புமா இதைத்தவிர பச்சைமிளகாய்க்கு நம் சமையலில் வேலையே இல்லையே. :))

வருகைக்கு மிக்க நன்றி

கோமதி அரசு said...

ஆந்திரா சமையல் பற்றி நல்ல பகிர்வு.

ஆந்திரா பொடிவகைகள் எல்லாம் அசத்தல் தான்.
புதிய தலைமுறையில் ஆவக்காய் உறுகாய் ஆந்திரா பெண்கள் செய்வதைக் காட்டினார்கள்.
அவ்வளவு கலை நேர்த்தி.

Pandian R said...

கால்கிலோ பச்சை மிளகாயா?!?!?!?!
சனீஸ்வரா

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,

வீட்டுலயும் ஆவக்காய் ஸ்டாக் இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

கால்கிலோ பச்சை மிளகாயா?!?!?!?!
சனீஸ்வரா//

:))) நம்ம பெருமாள் கோவில் மார்க்கெட்ல கூறுகட்டி பச்சைமிளகாய் விப்பாங்க. ஆனா இங்க பீன்ஸ் ரேஞ்சுக்கு மலையா குவிச்சு வெச்சிருப்பதை பாக்கும்போதோ சுள்ளுன்னு இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

கண்ணெல்லாம் எரிகிறது தென்றல். இப்படியா காரம் சாப்பிடுவாங்க? அம்மாடி.தாங்கதுமா.
இந்தக் காரம் அவங்க குடலைப் பதம் பார்க்காதா.
ஆனாலும் பதிவு சுவைதான் படிக்க மட்டும்:)

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

அதுதான் எனக்கும் யோசனையா இருக்கு!!!

வருகைக்கு மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

அன்னிக்கு வந்து பார்த்துட்டு காரம் தாங்காம ஓடிட்டேன். ஆனாலும் இவ்ளோ காரமா சாப்பிட்டா உடம்பு என்னாகும்?..

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

எல்லோரும் நல்லாத்தான் இருக்காங்க. அது எப்படின்னு தான் எனக்கும் புரியலை. :))

வருகைக்கு மிக்க நன்றி