Sunday, July 01, 2012

FAFA FA... RIRIRII RI.... FERRARI KI SAWAAARIIII!!!!!

ஆர்டிஓ ஆபிசில் கிளார்க்காக வேலை பார்க்கும் ஷர்மான் ஜோஷி,
கிரிக்கிட் பயிற்சி பெரும் அவரது மகன், எப்போதும் சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டே இருக்கும் ஷர்மானின் தந்தை போமன் இரானி.
மூவருமே கலக்கியிருக்கிறார்கள். அருமையான நடிப்பு.

மத்தியதரவர்க்கத்து தந்தையாக தனது குழந்தையை வளர்க்க
கஷ்டப்படும் பாத்திரமாகட்டும், தந்தைக்கும் மகனுக்கும் இடையே
நசுங்கும்போதும் ஆகட்டும் தத்ரூபமாக இருக்கிறது. கிளர்க்காக
வேலை பார்த்து வரும் சம்பளத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு
தன் மகனை அவன் விரும்பும் கிரிக்கட் கோச்சிங் தருகிறார்.
பேட் வாங்கப்போகையில் விலை பார்த்து அதில் மார்க்கர் கொண்டு
எழுதி வைத்து, அடுத்தநாள் மாட்சுக்காக கடை திறக்கும் முன்
போய் உட்கார்ந்து தேடி கண்டுபிடித்து வாங்கி கொண்டு
மைதானத்துக்கு ஓடுகிறார். ஆனால் கடைசி ஓவர் கடைசி பந்தில்
விளையாடும் சமயத்தில் ஓடும் பொழுது அந்தப் பையனின்
கால் ஷூ கிழிந்து ஓட முடியாமல் தடுக்கி விழ மேட்சில்
தோற்றுப்போகிறான்.

பேட் வாங்கவே கையிருப்பு உண்டியல் என எல்லாவற்றையும்
சேர்த்த பணம்தான் உதவியது. இந்த நிலையில் ஸ்போர்ட் ஷூ.
அந்த சமயத்தில் லண்டனிலிருந்து லாயிட்ஸில் பயிற்சி
கொடுக்க அழைத்துச் செல்ல டெஸ்ட் நடக்கிறது. ஷர்மான்
ஜோஷியின் மகன் அற்புதமாக விளையாடி தேர்ச்சி பெறுகிறான்.
பயிற்சிக்கு செல்ல 1 1/2 லட்சம் பணம் கட்டவேண்டும்.
எங்கே போக? லோனுக்கு அப்ளை செய்ய முடிவு செய்து
போனால் தன் மகளின் கல்யாணத்துக்கு லோன் அப்ளை செய்து
அவளுக்கு குழந்தை பிறந்தபிறகு லோன் கிடைத்ததை அதிகாரி
சொல்கிறார்!!!

ஆர்டீஓ அலுவலகத்திற்கு வரும் பப்புதீதி தன்னிடம் போன்
இருப்பதால் லோன் வேண்டுமா என கேட்டு போன் வருவதாக
சலித்துக்கொள்வதாக சொல்ல தானும் ஒரு செல்போன் வாங்கு
கிறார் ஷர்மான்!!! ஆனாலும் எந்த போனும் வராததால்
பேங்கிற்கு தானே செல்கிறார். “உங்க கிட்டேயிருந்து எந்த
போனும் வரலையே!!” என அப்பாவியாக கேட்கும் ஆர்டிஓ
ஆபிஸ் கிளர்க்கிற்கு 1 1/2 லட்சம் லோன் கொடுக்க வங்கி
தயாராக இல்லை.


தன் மகனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கையில்
தந்தை தடுக்கிறார்!!! அவர் தடுக்க காரணம் என்ன?
அவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர். ரஞ்சி ட்ரோபிக்கிற்கு
விளையாடி இருக்கிறார். அவரும், அவருடைய நண்பரும்
ஃபைனல்ஸில் விளையாட யாராவது ஒருவர்தான் செலக்டாக
முடியும் என்ற நிலையில் நண்பர் போமன் இரானியின்
கண்ணாடியை உடைத்துவிட கண்ணில் அடிபட்டு தகுதி
இல்லாமல் போய்விடுகிறார். பேரனுக்கு பொளலிங் போட்டு
பார்த்து அவன் திறமையை சோதிக்க சொல்கிறார் ஷர்மான்.
பின்னுகிறான் பேரன். ஆச்சரியமான தாத்தா அடுத்தநாள்
அதிகாலை பணத்துக்கு ஏற்பாடு செய்ய கிளம்புகிறார்.

அவர் சென்றது தன்னை வஞ்சித்த நண்பர் (பரேஷ் ராவல்)
தற்போது பிசிஏவின் அதிகாரி. அவர் எதுவும் சொல்லாமல்
வெளியே போய்விடுகிறார்.

பப்புதீதி அரசியல்வாதி மகனின் திருமணத்தில் ஃபராரி
காரில் ஊர்வலம் போகலாம் என ஐடியா கொடுக்க அதை
கட்டாயம் செய்ய வேண்டும் என சொல்லிவிடுகிறார்.
அரசியல்வாதி. ஷர்மானிடம் சச்சினின் காரை கேட்டு
வாங்கி வருமாரு சொல்கிறார் பப்புதீதி. அதற்காக அவருக்கு
1 1/2 லட்சம் பணம் வாங்கித்தருவதாக சொல்கிறார்.
வேண்டாமென தயங்கினாலும் மகனுக்காக இன்னொருமுறை
யோசித்து ட்ராபிக் ரூல்ஸை மதித்தி வண்டிஓட்டி,
ஒன்வேயில் தவறாக சென்றாலும் போலிஸ் அதிகாரியை
தேடிப்போய் ஃபைன் கட்டும் ஷர்மான், “யாரும் பாக்கலியே
போகவேண்டியதுதானே!!” என கேட்கும் ட்ராபிக்
போலீசிடம் “என் மகன் பார்த்தானே!!”” என்று சொல்லும்
ஷர்மான் சச்சினின் காரை கேட்கத்தான் போனார், ஆனால்
எதிர்பாராமல் சாவி கிடைக்க அதை திருடியே கொண்டு
போய்விட்டார்.



திருமண ஊர்வலத்திற்கு வண்டி எடுத்துபோய் கொடுத்து,
பணம் வாங்கி அதை வண்டிக்குள் வைத்து திரும்ப
கொண்டுபோய் காரை விட்டுவிடலாம் என நினைத்து
வரும்பொழுது சச்சின் வீட்டு முன்னால் டிராபிக் போலிஸ்
பார்த்து பயந்து வண்டியை அப்படியே விட்டுவிட்டு தன்
ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போகிறார். நடுரோடில்
இருக்கும் வண்டியை டோ செய்து காவல்துறை எடுத்து
செல்கிறது. (இந்த காட்சிகள்தான் காலில் காலிஃப்ளவரை
வைத்தது போலிருக்கிறது) காரில் இருந்த பணத்தை
எப்படி எடுத்தார்...? அப்புறம் என்ன நேர்ந்தது எல்லாம்
திரையில் பார்க்க வேண்டிய காட்சிகள்.


திறமை இருந்தும் பணம் கொடுக்க முடியாத காரணத்தால்
போமன் இரானியின் பேரனை பயிற்சிக்கு சேர்க்க முடியாது
என பாலிடிக்ஸ் செய்கிறார் ராவல். அந்த காட்சிகள்
பல இடங்களில் நடப்பதைத்தான் காட்டுகிறது. முடிவில்
தன் தந்தை காரை திருடித்தான் தனக்கு பணம் கொடுத்தார்
என தெரிகையில் பையன் மனம் ஒடிந்து போகிறான்.
கிளைமாக்சில்,” சச்சின் லாயிட்ஸில் போயா பயிற்சி
பெற்றார். இங்கேதானே பயிற்சி பெற்றார். நானும் அப்படியே
பயிற்சி பெருகிறேன் அப்பா, நான் லண்டன் போக முடியவில்லையே
என நீங்கள் வருந்த வேண்டாம்,” என தந்தையை மகன்
தேற்றும் காட்சி சூப்பர்.

காலனியில் இருப்பவர்கள், பப்புதீதி, வங்கி மேலாளர்,
ஸ்போர்ஸ் ஷூ கடைக்காரர், டிராபிக் கான்ஸ்டபில்
என எல்லோரும் பணம் சேர்த்து கொடுக்கிறார்கள். அவரது
மகன் நன்றாக விளையாடி, பெரிய கிரிக்கட் வீரரான
பின் ஃபராரி கார் வாங்கி தங்களை எல்லாம் அதில்
அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்க
படம் பாசிட்வாக முடிகிறது. லண்டனில் பயிற்சியும்
பெற செல்கிறான். (அந்தக்குட்டிப்பையனை சச்சின்
சிறுவயது தோற்றம் போல் தேடி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆகா ஓஹோ அருமை என்றெல்லாம் சொல்லிவிட
முடியாவிட்டாலும் கதை அருமை. பாத்திரம் உணர்ந்து
நடித்திருக்கும் நடிப்பு. கட்டாயம் பார்க்கலாம்.



6 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்......

எல் கே said...

ஹ்ம்ம் பொதுவா தமிழ் படம் மட்டுமே பார்ப்பேன். பாக்கலாம்

pudugaithendral said...

வாங்க சகோ,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க எல்கே,

ஆஷிஷ் அம்ருதாவுக்கு சர்ப்ரைஸா டிக்கெட் புக் செஞ்சு கூட்டிகிட்டு போனோம். பசங்களுடன் பாக்கக்கூடிய ஒரு படம். (வித்யா பாலனின் அந்தப்பாட்டு மட்டும் இல்லாம இருந்திருக்கலாம்)

வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

சச்சின் லாயிட்ஸில் போயா பயிற்சி
பெற்றார். இங்கேதானே பயிற்சி பெற்றார். நானும் அப்படியே
பயிற்சி பெருகிறேன் அப்பா, நான் லண்டன் போக முடியவில்லையே
என நீங்கள் வருந்த வேண்டாம்,” என தந்தையை மகன்
தேற்றும் காட்சி சூப்பர்.

சிறப்பான விமர்சனம்.. பாராட்டுக்கள் !

CS. Mohan Kumar said...

பாக்கணும் என நினைத்து கொண்டுள்ளோம் உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுது