Sunday, August 05, 2012

பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தில் நான்......

பாஸ்போர்ட் ஆபிஸில் ஃபைல்கள் தங்கிபோகுதாம். மக்களுக்கு
”நல்ல” சேவை!!! கொடுக்கணும் என்பதற்காக பாஸ்போர்ட் சேவா
கேந்திரங்களை ஆரம்பிச்சிருக்காங்க. Tata consultancyக்கு outsourching
கொடுத்திருக்காங்கன்னு சுருக்கமா சொல்லலாம்.

ஆன்லைனில் பாஸ்போர்ட் தளத்தில் நமக்கான யூசர் ஐடி பாஸ்வோர்ட்
கொடுத்து ஒரு ப்ரொஃபைலை கிரியேட் செஞ்சு அதுலேயே அப்ளிகேஷன்
பூர்த்தி செஞ்சு கொடுத்தா நம்ம ஃபைல் நம்பர் வந்திடும். அந்த
பக்கத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுக்கிட்டா சரி. தவிர
ஆன்லைனில்யே அப்பாயிண்ட்மெண்ட் ஸ்லாட் டைம் பாத்து
புக் செஞ்சுகிட்டு அதையும் ப்ரிண்ட் அவுட் எடுத்துகிட்டு
போயிடணும். எனக்கு வாக் இன் அப்பாயிண்ட்மெண்ட் தான்
என்பதால ஆன்லைனில் அப்ளிகேஷன் போட்டு அந்த பக்கத்தை
ப்ரிண்ட் செஞ்சு, பழைய பாஸ்போர்ட் ஆபீஸ்ல கொடுத்த
லெட்டரையும் எடுத்துக்கினு போனேன்.

எதுக்கும் இருக்கட்டும்னு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ,
பழைய பாஸ்போர்ட் ஜெராக்ஸ், பாங்க் டீடெயில்ஸ் எல்லாம்
எடுத்துகிட்டு போனேன். பழைய பாஸ்போர்ட் ஆபிஸ் வாசலில்
யூ எஸ் விசாவுக்கு வரிசையில் நிற்பதுபோல விடிய காலமே
வந்து வரிசையில் நின்னு டோக்கன் வாங்கினாத்தான் உள்ளே
போக முடியும். இங்க அதான் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட்
இருக்கே!! சரி இந்த அப்பாயிண்ட்மெண்ட் எதுக்குன்னு
நினைக்கறீங்க வரிசையில் நின்னு உங்க ஃபைலைக்காட்டி,
உங்களுக்கு டோக்கன் கொடுக்கத்தான். என்ன அங்க மழை
வெயில்னு பாக்காம ரோட்டில் நிக்கணும். இங்க குறிப்பிட்ட
நேரத்துக்கு உள்ளே வரிசையில் நிற்கணும்.

என் முறை வந்தப்போ, வேற டாக்குமெண்டுகள் வேணும்னாங்க.
ஐயா சாமி, என்னுடைய பழைய ஃபைல் நம்பர் இது.
எல்லாம் முன்னமே கொடுத்தாச்சு. அதுக்கான லெட்டர் இதுன்னு
சொன்னேன். கொஞ்ச பக்கத்துல நில்லுங்க கேட்டு சொல்றேன்னு
சொன்னாப்ல. 10 நிமிஷம் கழிச்சு, உங்க பழை ரசீது கொடுங்கன்னு
கேட்டாப்ல. அயித்தானின் நண்பர் ஃபாலோ அப் செய்வதா சொல்லி
வாங்கிப்போயிருந்தது அப்பத்தான் ஞாபகம் வந்தது!!!. அது இருந்தா
ஃபிரியா ப்ராசஸ் செய்யறோம். இல்லாட்டி திரும்ப பணம் கட்டுங்கன்னு
சொன்னாப்ல. சனியன் தொலையுதுன்னு 1000 ரூவா கட்டி ரசிது
டோக்கன் கொடுத்தாங்க. அதுவரைக்கும் கால்கடுக்க நின்னுக்கினே
இருந்தேன்!!!

அப்புறம் பக்கத்தில் வெயிட்டிங் ரூம். அங்கே இருக்கும் டீவியில்
நம்ம டோக்கன் நம்பரும் எந்த நம்பர் கவுண்டருக்கு போகணும்னு
வரும். அங்க போனா அவங்க ஃபைலை வாங்கி பாத்துட்டு எல்லா
டாக்குமெண்டுகளையும் ஸ்கேன் செஞ்சு ஒரு ஃபைல் உருவாக்கினாங்க.
(நல்ல வேளை. ஸ்கேன் செய்வதால நம்ம ஃப்ரொஃபைலில் அந்த
டாக்குமெண்டுகள் பத்திரமா இருக்கும்) கொஞ்சம் பின்னாடி
தள்ளி உக்காருங்க மேடம்னாங்க. எதுக்குடான்னு பாத்தா போட்டோ
பிடிக்கறாகளாம். ஏற்கனவே ரேஷன்கார்டு, வோட்டர் கார்டில்
எல்லாம் நாமதானான்னு நமக்கே சந்தேகம் வரும் வகையில்
ஃபோட்டோ எடுத்து நம்மளை “அளகா” காட்டினவுங்க. இந்த
பாஸ்போர்ட் விஷயத்துலயாவது அடுத்தவங்க பயப்படறமாதிரி
இல்லாம இருக்க விடக்கூடாது. வெளிநாட்டுக்காரவுக பயந்தா
என்ன செய்ய!!! கொடுமையேன்னு அவங்க எடுத்த போட்டோவை
கம்ப்யூட்டரில் பார்த்தப்போ எனக்கே பயமா இருந்தது!!!!

அப்புறம் கைரைகைகளை எடுத்துகிட்டாங்க. அப்புறம் உங்க
அட்ரஸ் ஃபுரூஃப் பத்தாதுன்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க
அடுத்த கவுண்டரில் பாருங்கன்னு சொன்னாப்ல. மொத்தம்
4 கவுண்டர். முதலில் டோக்கன் வாங்குவது, அடுத்து
போட்டோ பிடிப்பது(இது டீசிஎஸ் காரங்க பாத்துக்கறாங்க),
அப்புறம் பாஸ்போர்ட் ஆபீஸ்காரங்க ஒரு வாட்டி சரிபார்த்து,
அடுத்த கவுண்டருக்கு அனுப்புவாங்க. அவங்களும் செக்
செஞ்சிட்டு எப்ப பாஸ்போர்ட் கிடைக்கும்னு சொல்வாங்க.

அடுத்த கவுண்டருக்கு கூப்பிடறதுக்குள்ள பசி வயித்தக்கிள்ளுது.
அங்கேயே இருந்த ரெஃப்ரெஷ் ஸ்டோர்ல 20 ரூவாய்க்கு வித்த
காபித்தண்ணி!! வாங்கி குடிச்சேன். வேற வழி!!! அடுத்த
கவுண்டருக்கு நம்ம டோக்கன் நம்பர் போயாச்சு. அங்க போனேன்.
அவங்க அட்ரஸ் ஃப்ரூஃப் ஒரு வருஷத்துக்கு வேணும்னு சொல்ல,
வந்த கோவத்தை அடக்கிகிட்டு என் ஃபைல் தொலைஞ்சு அதை
எழுதிக்கொடுத்ததை சொன்னேன். போலீஸ் ஃபெரிவிகேஷன்
ஆயிடிச்சா!!! அட இப்பத்தான் க்ளோஸ் செஞ்சிருக்காங்கன்னு
வருத்தப்பட்டவரு, நீங்க எதுக்கு ஆர்பிஓ வை பாருங்கன்னு
அனுப்பி வெச்சிட்டாரு. திரும்ப டோக்கன் நம்பர் வர்ற
வரைக்கும் காத்திருந்து போனேன்.

அவரு ரொம்ப சீரியஸ். ஒரு வருஷத்துக்கு பாங்க் ஸ்டேட்மெண்ட்
கட்டாயம் வேணும்னு சொல்ல. ஏன் சார் என் ஃபைல் தொலைஞ்சதுன்னு
கேட்டா, அதுக்கு பதில் இல்ல. நீங்க அந்த டாக்குமெண்ட்
கொண்டு வந்து தரும் வரை இந்த ஃபைலை டெர்மினேட் செஞ்சு
வெக்கறேன்னு சொன்னாரு. கடவுளேன்னு ஆச்சு. அதாவது
அப்ப கொடுத்த ஃபைலைப்பத்தி கணக்கு இல்ல. இப்ப இது
புதுசா அப்ளை செய்யற மாதிரிதான்!!!!! சரின்னு வெளிய
வந்திட்டேன். அதுக்கு முன்ன அந்த ஃபைலை கொடுத்து
ஒரு ரசீது வாங்கிக்கணும். அதை வாங்கிகிட்டு அடுத்தவாட்டி
இம்மாம் பெரிய வரிசையில் நின்னு எல்லா அவஸ்தையும்
படணுமான்னு கேட்க, இல்ல மேடம்!! இதுக்குன்னே தனியா
ஒரு வரிசை இருக்கு. இந்த ரசீதை காட்டினா உடன் ஃபைலும்
டோக்கனும் கொடுத்திருவாங்கன்னு சொன்னாப்ல. சரிதான்னு
வெளியே வந்து அயித்தானுக்கு போனைப்போட்டேன். அவுக
ஊர்ல இல்லை. பேங்க் ஸ்டேட்மெண்ட் பத்தி பக்கத்துலேயே
இருக்கும் எங்க பாங்க் மேனேஜருக்கு பேசி பிரிண்ட் அவுட்
எடுத்து கொடுக்கச் சொல்லி சொல்லச் சொன்னேன்.

அயித்தான் பேசிட்டு சொல்ல நான் பேங்குக்கு போய் அயித்தான்
சொன்ன ஆளைப்பாத்து ப்ரிண்ட் அவுட் வாங்கிட்டு மறக்காம
பேங்க் லெட்டர் ஹெட்டில் லெட்டர் டைப் செஞ்சு மேனேஜர்
கையெழுத்து வாங்கிகிட்டேன். (அரசு வங்கிகள்னா பாஸ்புக்
ஜெராக்ஸ் எடுத்து கொடுத்திடலாம். ஆனா தனியார்
வங்கிகள்னா பிரிண்ட் அவுட்டோட, லெட்டர் ஹெட்டில்
இந்த நபரை எனக்குத் தெரியும், இந்த தேதியிலிருந்து
எங்க கிட்ட அக்கவுண்ட் வெச்சிருக்காங்கன்னு எழுதி
வாங்கிக்கணும்) அப்பத்தான் பாத்தேன், அயித்தானோட
அக்கவுண்டில் என்னோட பேரைச் சேர்த்து கரெக்டா
ஒரு வருஷம் ஆகியிருந்தது. சாமி ரங்கான்னு வீட்டுக்கு
கிளம்பினேன். நான் போனது வெள்ளிக்கிழமை. சனி,ஞாயிறு
விடுமுறை என்பதால திங்கள்கிழமையே போய் இந்த
பேப்பர்களை கொடுத்திடணும்னு முடிவு செஞ்சேன்.

திங்கள்கிழமையும் வந்தது. இந்தமாதிரி எக்ஸ்ட்ரா
டாக்குமெண்டுகள் வாங்க அப்பாயிண்ட்மெண்ட் 10-11.
எதுக்கும் இருக்கட்டும்னு 9.30க்கே அங்க போயிட்டேன்.
அங்கே நடந்தது என்ன?????!!!!!!

அடுத்த பதிவுலதான்.......

9 comments:

ஹுஸைனம்மா said...

மெகா சீரியலுக்குக்கூட ஒரு முடிவு உண்டு; இதுக்கு எப்போன்னு வாசிக்கீற எங்களுக்கே தோணுது. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்!! பாவம்.

syedabthayar721 said...

பாவம் ரெம்பதான் அலையவுடுராயேக என்ன செய்ய எல்லாம் நாம்மளோட தலைவிதி. என் பொண்டாடிக்கு பாஸ்போர்ட் அப்ளை செய்து ஆறு மாசம் ஆகிறது கேட்டா அங்கெ இங்கே என்று அலையவுடுரங்கலே தவிர இன்னும் கொடுதபாடில்லை. விதியே என்று காத்திருக்கிறோம்.

நன்றி
செய்யது
துபாய்

வெங்கட் நாகராஜ் said...

அடடா ரொம்பவே கொடுமைதான்.

நான் கூட பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்... ஆனா நீங்க சொல்றத பார்த்தா யோசனையா இருக்கு! :(

மனோ சாமிநாதன் said...

பாஸ்போர்ட் renewal செய்தாலும் சரி, அல்லது புதிதாக அப்ளை செய்தாலும் சரி, அனுபவங்கள் எல்லாம் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும், இந்தியாவிலும் சரி, வெளி நாட்டிலும் சரி!

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

ரொம்பவே நொந்து போனேன். அதுவும் இப்ப எல்லாம் யாரு அப்ளை செய்யறாங்களோ அவுக மட்டும்தான் உள்ள போகணும். சீனியர் சிட்டிசன், மைனர் குழந்தைகள் இப்படி இருந்தா மட்டும்தான் துணைக்கு உள்ளே ஆள் அனுப்பறாங்க. தனியா இவுகளோட போராட கஷ்டமாத்தான் இருந்துச்சு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க செய்யது,

ரொம்பவே அலையவுடுரானுகதான். 6 மாசம் ஆச்சா. திரும்ப திரும்ப ஆன்லைனில் செக் செஞ்சுகிட்டே இருங்க. 4 தடவை ஆபிஸுக்கும் போய் விசாரிக்கறது நலம்.

pudugaithendral said...

வாங்க சகோ,

எல்லோருக்கும் சுளுவா இருக்கும். எனக்கு எப்பவுமே போராட்டம் தான். :))

தெகிரியமா அப்ளை செய்யுங்க. என்னுடைய அனுபவத்தை பகிர்வது கூட அது மத்தவங்களுக்கு உதவும் என்பதால தான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

வெளிநாட்டுல தூதரகத்துல செம ஈசியா குறைஞ்ச பட்சம் 1 வாரத்துல வாங்கிடலாம். நம் தாய் திருநாட்டில் 2 வருஷம் கூட ஆகலாம். :((

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

M said...

Why don't you send this article to all the news papers and magazines in India. I think you should do it. Please do.