Friday, October 26, 2012

இப்படித்தான் ஆரம்பமாச்சு.....

மாமாவின் அந்த ஐடியா ரொம்ப நல்லா இருந்துச்சு. ஹை ஜாலின்னு சந்தோஷமா இருந்தது. முதலில் சின்ன அளவில் தான் செய்ய நினைச்சோம். ஆனா நான் வர்றேன், நீ வர்றேன்னு கூட்டம் கூட மாமா ஹால் புக் செய்ய வேண்டிய கட்டாயம் ஆகிடிச்சு.

 என் அம்மாம்மா திருமதி. ராஜலக்‌ஷ்மி சுந்தரேசனுக்கு 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆண்களுக்கு மட்டும்தான்80ஆவது பிறந்தநாளை சதாபிஷேகம் செய்து கொண்டாடுவாங்க. 2008ல் தாத்தாவுக்கு செஞ்சோம். அம்மம்மாவின் பிறந்தநாளையும் இப்படி கொண்டாடனும்னு ஆரம்பிச்சோம். சதாபிஷேகம் தான் ஆனா தாலிக்கட்டுவதெல்லாம் கிடையாது மத்தபடி ஹோமம் எல்லாம் உண்டு.


அம்மம்மாவுக்கு முதலில் இஷ்டம் இல்லை. தனது விருப்பத்தையும் சரியா சொல்லலை. ஆகஸ்ட் மாதம் சத்யாமாமா இங்கே வந்திருந்த பொழுது சிங்கையில் இருக்கும் தம்பிக்கு போன் போட்டு பேசி மேட்டரைச் சொன்னோம். அவன் எங்க கூட வெப்கேமில் சாட் செஞ்சுகிட்டே அம்மம்மாவுக்கு போன் போட்டான்.”என்னம்மா, பிறந்தநாள் வருது. கொண்டாடலாம்னு இருக்கோம். உன் ஐடியா என்னன்னு?, கேட்க மாமா சொல்றாருப்பா ஆனா பெருசா வேணாம்னு தோணுதுன்னு சொல்ல. உன் இஷ்டத்தை சொல்லும்மான்னான். நீ வருவியான்னு? அம்மம்மா கேட்க, நீ செஞ்சுக்கறதா இருந்தா டிக்கெட் புக் செய்யறேன்னு!!” கொக்கி போட்டான். பேரன் வர்றான்னு சொன்னதும் குஷி. சரின்னு ஒத்துக்க வேலைகள் ஆரம்பமானது.

 நவராத்திரி சமயத்தில் வரும் மூல நட்சத்திரம் (சரஸ்வதி ஆவாகனம்) அன்று அம்மம்மா பிறந்தநாள். அக்டோபர் 20 சனிக்கிழமை நாள் குறித்தாகிவிட்டது. ஆகஸ்ட் மாதமே டிக்கட் புக் செய்துவிட்டோம்.

வேலைகள் மும்மரமா நடந்துகிட்டு இருக்கும் பொழுது அம்மம்மாவிற்கு
உடம்பு சரியில்லாமல் போய் டாக்டரிடம் காட்டினால் ஹெரன்யா
ஆப்பரேஷன் உடனடியாக செஞ்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க.
ஃபங்ஷனுக்கு 15 நாள் இருக்கும்பொழுது ஆப்பரேஷன். எல்லா ஏற்பாடு
நடக்குது. நிப்பாட்டிடலாமான்னு நினைச்சோம். ஆனா டாக்டர் ஒண்ணும்
பிரச்சனை இல்லைன்னு சொன்னாரு. அம்மம்மாவும் ஆரம்பிச்சாச்சு
நிப்பாட்ட வேணாம்னு சொன்னாங்க. ஏதோ ஒரு தைரியத்தில் தொடர்ந்தோம்.


 அந்தேரி தாத்தா முன்பு மும்பையில் அந்தேரி பகுதியில் ஸ்ரீராம் நகர் காலனி எனும் ஏரியாவில் இருந்தார். அங்கே பாலக்காட்டுக்காரர்கள் தான் அதிகம். பகவதி சேவை எனும் பூஜை ரொம்ப சிறப்பாக நடைபெறும். அம்மம்மா சதாபிஷேகத்திற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமையாகவும், நவராத்திரியாகவும் இருக்க மாமா வீட்டில் பகவதி சேவை செய்வது என முடிவு செய்திருந்தார். அயித்தானின் வேலை காரணமாகவும், ஆஷிஷின் அரைப்பரிட்சை நடந்து கொண்டிருந்ததாலும் பூஜைக்கு போக முடியவில்லை.


 வெள்ளிக்கிழமை கிளம்பி சனி அதிகாலை கல்யாண் ஷ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு வசாய் போய் சேர்ந்தோம். அம்மா, சித்தி, தம்பி எல்லோரும் முன்னமே போய்விட நான் மட்டும் தான் கடைசியில்!!!


 வீட்டுக்கு பெரிய பேத்தி நான். ஆனா இந்த நிகழ்ச்சிக்கு நான் பேத்தியா போகவில்லை!!! என் புகுந்த வீடு அம்மம்மாவின் பிறந்தவீடு. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அம்மம்மாவின் உடன்பிறப்பு அந்தேரி தாத்தா இறந்துவிட அம்மம்மாவிற்கு பிறந்தவீட்டு சீர் எடுத்துச் சென்றது நானும் அயித்தானும். அதனால் பெண் வீட்டுக்காரங்க எல்லாம் லேட்டாத்தான் வருவோம். கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதான் ஏற்பாடு செஞ்சு சம்பந்திவீட்டுக்காரங்களை நல்லா கவனிக்கணும்னு கலாய்ச்சுகிட்டு இருந்தோம். இதோ சீர் வைத்த படம். இதற்காகத்தான் ஆரத்தி தட்டுக்கள் செய்திருந்தேன். வந்திருந்தவர்கள் சீரை எடுத்துவைத்துவிட்டு தட்டுக்களை போட்டோ எடுத்தார்கள். இன்னொரு தட்டில் ஸ்வீட்டை வைக்கும் முன் போட்டோ எடுத்துவிட்டார்கள். :)

25 comments:

அமுதா கிருஷ்ணா said...

அசத்தலான பிறந்த நாள்.எல்லோரும் ஒன்று கூடினால் கொண்டாட்டம் தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய கொண்டாட்டம்... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

அம்மாம்மா திருமதி. ராஜலக்‌ஷ்மி சுந்தரேசனுக்கு 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துகள்..

s suresh said...

வாழ்த்துக்களும் வணக்கங்க்களும்!

அமைதிச்சாரல் said...

விழா சிறப்பாக நடந்ததா தென்றல்.

போன சனிக்கிழமை நானும் கல்யாணில் இருந்தேனே :-)))

குறைஞ்ச பட்சம் ரயில்வே ஸ்டேஷன்லயாவது பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாம். அவசர அவசரமா நீங்க வந்ததால் பாவம்ன்னு விட்டுட்டேன் :-))

அன்புடன் அருணா said...

கலக்குங்க!!!

கோவை2தில்லி said...

மகிழ்வான நிகழ்வு. அம்மம்மாவிடம் எங்கள் நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.....

அவங்களுக்கு உடல்நிலை இப்போ பரவாயில்லையா...

வெங்கட் நாகராஜ் said...

அவருக்கு எனது வணக்கங்கள். மேலும் நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலுடன்!

சந்திர வம்சம் said...

"அம்மம்மா" என்று என் அக்கா பெண் சிறுவயதில் இருந்து இன்றும் கூப்பிடுவாள்.
அழகான பதிவு.
வாழ்க.

சந்திர வம்சம் said...

மயில் கோலத்தின் தோகையில் அற்புதமான மலர்கள்,பூஜை படம் அழகு.

fundoo said...

ஆஜர்

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

ஆமாம். :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

வருகைக்கு ரொம்ப நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சுரேஷ்,
வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

உங்களுக்கு போன் செய்யணும்னு திட்டமெல்லா நல்லாத்தான் போட்டேன். ஆனா எங்க ட்ரையின் 1.30 நிமிடம் தாமதமாகி, அதனால் கல்யாணிலிருந்து வசாய் செல்வதும் தாமதம்னு நான் போய் சேர்ந்த பொழுது எல்லோரும் ஹாலுக்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க. அப்புறம் வேலை தான். :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

மிக்க நன்றி அருணா

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

தையல் முழுதாக இப்பத்தான் பிரிச்சிருக்காங்க. பரவாயில்லை. வணக்கத்தை சொல்லிடறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

அடுத்த பதிவு வருது

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சந்திரவம்சம்,

என்னை வளர்த்த அம்மா என்பதால் பாட்டியை நான் அம்மான்னு தான் கூப்பிடுவேன்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபண்டு.
வருகைக்கு மிக்க நன்றி,

ராமலக்ஷ்மி said...

அம்மம்மாவுக்கும் தாத்தாவுக்கும் எனது வணக்கங்களைச் சொல்லி விடுங்கள். ஆசிகளை வாங்கி அந்த அழகான ஆரத்தி தட்டில் வைத்து அனுப்பி வையுங்கள்:)!

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

அனுப்பிட்டா போச்சு. :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

அம்மம்மாவிடம் போனில் பேசிய பொழுது பதிவு எழுதியிருப்பதை பற்றியும் நட்புக்கள் எல்லோரும் வணக்கத்தை சொல்லியிருப்பதையும் சொன்னேன்.

அம்மம்மாவின் ஆசிர்வாதம்,

“எல்லோரும் நல்லா இருக்கணும். சந்தோஷமா, ஆரோக்கியத்தோட இருந்து என்னைப்போல சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.” அப்படியே அனுப்பி வைத்துவிட்டேன். :))

ராமலக்ஷ்மி said...

/அப்படியே அனுப்பி வைத்துவிட்டேன்./

என்ன அழகான ஆசிர்வாதம். மகிழ்ச்சியும் நன்றியும் தென்றல்:)!