Thursday, November 29, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 29/11/12

பிரியாணி போட்டு ரொம்ப நாளாச்சுல்ல... :)) தெலங்கானா பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அவ்வப்போ உஸ்மானியா யுனிவர்ச்சிட்டியிலதான் தீவிரமா வெடிக்கும். ரொம்ப வருஷம் கழிச்சு உஸ்மானியாவுல கல்ச்சுரல்ஸ் நடந்துச்சாம். கல்லெடுத்து அடிப்பது, மரம் ஏறி தற்கொலை செஞ்சுக்கறேன்னு மிரட்டுவது, அப்புறமா போலீஸுக்கு ரோஸெல்லாம் கொடுப்பதுன்னு மட்டுமே பாத்திருக்கேன். கலர்ஃபுல்லா உஸ்மானியா, கலக்கல் டான்ஸோடட பசங்கன்னு ஃபோட்டோ பாத்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ********************************************************************************** KBC என்னவோ அமீர்கான் ஷோ மாதிரி ஒரே செண்ட்டியா போய்கிட்டு இருக்கு. எனக்கென்னவோ இந்த வாட்டி கண்டிப்பா உக்காந்து பாக்கணும்னு தோணலை. :( ஆனா KBC ஆரம்பிக்கும் முன் வந்த விளம்பரங்களில் இந்த விளம்பரம் ரொம்ப பிடிச்சிருக்கு. போல்னா இங்கிலீஷ் மீடியம்... வாட்ஸ் அப் டூடு.... ரூஃப். :)) சூப்பர். ********************************************************************************* மில்க் ஹாலிடே கேள்விபட்டிருக்கீங்களா??? எங்க ஊர்ல நடக்குது. பால் அதிகமா இருக்காம். அதனால ஹெரிடேஜ், டோட்லா, போன்ற பெரிய தனியார் பால் நிறுவனங்கள் வாரத்துக்கு ஒருநாள் மில்க் ஹாலிடே விட்டுடறாங்களாம். அதாவது அன்னைக்கு பால்கொள்முதல் கிடையாதாம். இதனால கஷ்டப்படற பால்வியாபாரிகள் ஆந்திர பால் பண்ணைக்கு போறாங்களாம். அங்கயும் 10 நாளைக்கு ஒரு தடவை மில்க் ஹாலிடே விடுற திட்டம் இருக்காம்!!! என்ன செய்வதுன்னு புரியலை இந்த பால்வியாபாரிகளுக்கு. எங்க முதல்வர் கிரன் குமார் இல்லை அப்படியெல்லாம் நடக்காது நாங்க பாலைக்கொள்முதல் செஞ்சு கோவில், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கு கொடுப்போம்னு சொல்லியிருக்காரு...... ஒன்னியும் புரியலை... ********************************************************************************* கசாப்பை தூக்கில போட்டது பழைய செய்தி. ஆனா அந்த செய்தி கேட்டப்போ சந்தோஷத்தை விட மனசுல ஒரு வருத்தம் வந்து போனது. அவரது உடலை வாங்கக்கூட குடும்பத்தார் வரலை. 25 வயசுல இப்படி ஒரு சாவு. எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.... பாட்டுதான் ஞாபகம் வந்தது. :(( ******************************************************************************** சமீபத்தில் ஒரு நாள் ட்ரிப்பா குடும்பத்தோட சென்னை வந்திருந்தோம். சைதாப்பேட்டை பக்கம் போய்க்கிட்டு இருந்தோம். அடப்பாவிகளான்னு ஆஷிஷ் கத்த, என்னாச்சோ... ஏதாச்சோன்னு கேட்டா, கை காட்டின இடத்தைப்பாத்து எங்களுக்கு ஒரே சிரிப்பு. உயர்ரக கார் ஒண்ணு. அதுல பின் சீட் விண்டோ ஜன்னல் உடைஞ்சிருச்சா, எடுத்திருக்காங்களான்னு தெரியலை. ஆனா அதை சமயோசிதமா ட்ரான்ஸ்பரண்ட் ப்ளாஸ்டிக் போட்டு ஒட்டியிருந்தாங்க. :))) ************************************************************************************* இத்தனை நாளா இல்லாத ஒரு புது பிரச்சனை வந்திருக்கு. தெலுங்கு கட்டாய பாடமா இருந்ததில்லை. 8ஆம் வகுப்பு வரைக்கும் 3ஆவது மொழியா கூட ஆப்ஷனல்தான். +1ல் அதிக மதிப்பெண் வாங்க பலரும் தெலுங்கு, ஹிந்தியை விட சமஸ்கிருதம் எடுத்து படிச்சிட்டு ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ எழுதிட்டு மார்க் வாங்கிடுவாங்க. இப்ப கேந்த்ரிய வித்யாலாயல கூட தெலுங்கு கண்டிப்பா போதிக்கப்படணுமாம். சின்ன வகுப்புக்களில் சமஸ்கிருதம் எடுத்து படிச்சிருந்தாத்தான் +1ல் சமஸ்கிருதம் எடுக்க முடியும்னு குழப்ப ஆரம்பிச்சிருக்காங்க. ****************************************************************************** போன ஞாயிற்றுக்கிழமை புப்பல்குடா எனும் இடத்தில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில், தீ விபத்து. டீவி ஷூட் செஞ்சுகிட்டு இருந்தாங்க, அதுலேர்ந்து நெருப்பு பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. ஆனா 6 பேரை காவு வாங்கியிருக்கு. அதுல 10நாளான ஒரு சிசுவும்!!! பாவம். அந்த அப்பார்ட்மெண்ட் வாட்ச்மென் மத்தவங்க உயிரைக்காப்பத்த ஓடியிருக்காரு. பாவம் அவரும் பலி. அஞ்சலிகள்

20 comments:

ராமலக்ஷ்மி said...

பல செய்திகள். தகவல்கள். தொகுப்புக்கு நன்றி.

கடைசிச் செய்தி மனதை கனக்க வைக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த வாட்ச்மெனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..

பல தகவல்களுக்கு நன்றி...

அமைதிச்சாரல் said...

//பாலைக்கொள்முதல் செஞ்சு கோவில், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கு கொடுப்போம்னு சொல்லியிருக்காரு.//

அரசியல்வாதிகள் சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. செய்ல்ல வருமான்னுதான் புரியலை.

கடைசிச்செய்தி.. ஐயோன்னு இருக்கு.

ஹுஸைனம்மா said...

மில்க் ஹாலிடே!! அவ்வளவு வளம் பெருகியது மகிழ்ச்சியானது. இருந்தாலும், சில போராட்டங்களில் நடப்பதுமாதிரி, பாலைத் தரையில் ஊற்றி ஓடவிடாமல் இருப்பது வரை நல்லதே. ஆமா, பாலிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருடக்ளுக்கு (ஸ்வீட், தயிர், மோர், சீஸ், வெண்ணெய், நெய், போன்றவை) பயன்படுத்த வேண்டியதுதானே?

தெலுங்கு: மொழி அரசியல் அங்கேயும் வந்தாச்சா!! :-((

கோவை2தில்லி said...

நீண்ட நாளைக்கு பிறகு பிரியாணி தந்தாலும் நிறைய செய்திகள் தந்திருக்கீங்க...

கடைசி விஷயம் மனதை வருந்தச் செய்தது.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

பக்கத்துல செட் போட்டு டீவி சீரியலுக்கு ஷூட் செஞ்சுகிட்டு இருந்திருக்காங்க. அங்கேயிருந்து பொறி பட்டு இந்த அப்பார்ட்மெண்ட் எறிஞ்சிருக்கு. :((

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

எனக்கு இருக்கும் டவுட் என்னன்னா இவர் சொல்ற அந்த கோவில், ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே பால் கொள்முதல் செய்வாங்களே, அதை விட்டுட்டு இதை வாங்கினா.... அந்தப்பால் வேஸ்டாத்தானே போகும்.

ஒரே குயப்பமா வருது.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

எனக்கு இருக்கும் டவுட் என்னன்னா இவர் சொல்ற அந்த கோவில், ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே பால் கொள்முதல் செய்வாங்களே, அதை விட்டுட்டு இதை வாங்கினா.... அந்தப்பால் வேஸ்டாத்தானே போகும்.

ஒரே குயப்பமா வருது.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

நானும் அதைத்தான் யோசிக்கிறேன். மில்க் ப்ராடக்ட்ஸ் செஞ்சு வைக்கலாம். தயிராவது புளிச்சு போகும். ஆனா பாலாடைக்கட்டி, சீஸ், ஐஸ்க்ரீம் இதெல்லாம் தயாரிக்கலாமே.

அமுல்காரங்க கிட்ட ட்ரையிங் எடுத்துக்கச் சொல்லி ஐடியா கொடுக்கணும். அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க முடியாத அளவுக்கு நான் ரொம்ப பிசி பாருங்க. :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

செம பிசியாகிட்டேன். பதிவு போடணும்னு நினைச்சாலும் முடியவே இல்லை. அம்மா,அப்பாவுக்கு செக்கப் அது இதுன்னு வேலை ரொம்பவே ஜாஸ்தி.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

செம பிசியாகிட்டேன். பதிவு போடணும்னு நினைச்சாலும் முடியவே இல்லை. அம்மா,அப்பாவுக்கு செக்கப் அது இதுன்னு வேலை ரொம்பவே ஜாஸ்தி.

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

எந்த மொழி என்றாலும் படிக்கட்டும் என்று இந்த அரசியல்வாதிகள் விட மாட்டாங்க.கலைஞர் நம்மையெல்லாம் ஹிந்தி படிக்க விடாமல் தடுத்துட்டு அவர் பேரன்கள் ஸ்கூலில் படித்தது ஃப்ரென்ஞ்.ஊருக்கு தான் உருப்படாத உபதேசம்.

சிட்டுக்குருவியின்_ஆத்மா said...

நல்ல தொகுப்பு
கஸாப் விஷயம் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

தமிழ்நாட்டில் நிலமையே வேற. :(
இங்கே ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் இல்லை. ஆனாலும் அப்பப்பா குழப்புவாங்க.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சிட்டுக்குருவியின் ஆத்மா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

தகவல்கள் தொகுத்துக் கொடுத்திருக்கிறது நல்லா இருக்கு.
அந்தப் பாலை நம்ம ஊர் ஏழைகளுக்கு அனுப்பலாமே. எத்தனையோ பண்டங்கள் பாலில் செய்யலாமே அதையெல்லாம் யோசிக்காமலா இருப்பாங்க.
கடைசிச் செய்திதான் கலக்கிவிட்டது. பாவம் அந்த வாட்ச் மேன்.

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் பிரியாணி....

கடைசி செய்தி - மனதை நோகவைத்தது.....

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

இனி பிரியாணி அடிக்கடி கிடைக்கும் :))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி