Tuesday, November 06, 2012
சூறாவளிப்பயணம்......
இந்த புது ட்ரையினுக்காகவே ஒரு வாட்டி ஹைதை வந்து மும்பை போகணும்னு
மாமா சொல்ல நாங்களும் போவோம்லன்னு சொல்லி மாமா ஹைதையிலிருந்து மும்பை போனா நாங்க மும்பையிலிருந்து ஹைதை டிக்கெட் புக் செஞ்சோம். :))
20ஆம் தேதி 7.30 மணிக்கு அம்மா,அப்பா, நாங்க நாலுபேரும் கார் புக் செஞ்சு குர்லா
ஷ்டேஷன் வந்தோம். அங்கேயிருந்துதான் துராந்தோ ட்ரையின் புறப்படுது. இரவு 11 மணிக்கு!!! நாங்க சீக்கிரமே ஷ்டேஷனுக்கு வந்திட்டோம். வரும்போதே தபேலி,
வடாபாவ் எல்லாம் பேக் செஞ்சு கொண்டாந்தோம். அப்பா,அம்மாவுக்கு சப்பாத்தி
கட்டி கொடுத்திருந்தாங்க அத்தை.
குர்லா ஷ்டேஷனை பாத்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்!!! ரேஞ்சுக்கு மக்கள்
வெள்ளமா இருந்துச்சு. இங்கேயிருந்துதானா இந்த ட்ரையின் ஆரம்பிக்கணும்னு
கொடுமையா இருந்துச்சு. மும்பையில் வீடி, தாதர் ஷ்டேஷன் எல்லாம் கூட
கூட்டமா இருக்கும். ஆனா குர்லா போல சான்சே இல்லை. மதியம் 1 மணிக்கு
சாப்பிட்டது எல்லோருக்கும் செம பசி. வண்டி ப்ளாட்பாரத்துக்கு வரும்முன்னரே சாப்பிட்டு
முடித்தோம். 10.15 மணி வாக்கில் வண்டி ப்ளாட்பாரத்துக்கு வந்தது.
துராந்தோ அதிவிரைவு வண்டி. மும்பையிலிருந்து நடுவில் அதிக இடங்களில் நிற்காது.
இரவு 11 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் பகல் 11 மணிக்கு செகந்திராபாத் வந்துவிடும்.
புது வண்டி இண்டீரியர் எப்படி இருக்கும்னு பார்த்தா செம சொதப்பல்!!! மொபைல்
சார்ஜர் சைட் பர்த் காரர்களுக்கு கிடையாது. அப்பர் பர்த்தில் டிசைனுக்காகன்னு
ஓரங்களை வெட்டி கேப் வேற. பாத்ரூம் நல்லா இருக்கு.
நல்ல அசதியில் படுத்ததும் தூங்கிட்டோம். காலை 7 மணி வாக்கில் டீயா காபியான்னு
கேட்டு கொண்டாந்து கொடுத்தாங்க. ராஜ்தானி மாதிரி இதிலே சாப்பாட்டுக்கும் சேத்துதான்
காசு. 5 ரூவாக்கு மொட்டத்தண்ணியா ஒரு காபி கிடைக்கும். ஆனா இதுல அதையே
வெந்நீர் தனியா, பால்பவுடர், காபிப்பவுடர், சர்க்கரைன்னு தனியா கொடுத்திடறாங்க.
2 மாரி பிஸ்கட்டும் :).
வாடி ஷ்டேஷனில் காலை உணவு ஏத்தினாங்க.
9.30 மணிவாக்கில் காலை உணவு வந்தது. ப்ரட், கட்லட். டீ. மாமா ஹைதையிலிருந்து
மும்பை போனப்போ ரவா உப்புமா கொடுத்ததாக சொன்னார். அதுக்கு ப்ரட்டும் கட்லட்டும் சூப்பர். சாப்பிட்டு திரும்ப எல்லோரும் ஒரு குட்டித்தூக்கம். ஆஷிஷும் அம்ருதாவும்
மட்டும் பாட்டு கேட்டுகிட்டு இருந்தாங்க. என்னதான் புயலோட பேரு வெச்சாலும் நம்ம
இந்திய ரயில்சேவை இல்லையா!!! அதனால 11.30க்கு வண்டி ஹைதையை
வந்து சேர்ந்தது. :))
ராஜ்தானி சேவை மாதிரிதான். அதனால சாக்லெட்டுக்களை தட்டில் வெச்சுக்கிட்டு
டிப்ஸ் கேக்கவும் மறக்காம வந்திடறாங்க. ஓகே ஓகே ரகம் தான் இந்த ரயில் பயணம்.
ஒரு வாட்டி சும்மா ட்ரை செய்யலாம்!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
துரந்தோ பயணம் - சுமார் தான்...
சில நாட்கள் முன் சென்னை சென்றபோது இதில் தான் தில்லி - சென்னை துரந்தோவில் தான் சென்றேன்.
வாங்க சகோ,
ஆமாம். எக்ஸ்ட்ராவா ஒரு ட்ரையின் அப்படிங்கற கேட்டகிரி தான்.
வருகைக்கு மிக்க நன்றி
ஆகா! ட்ரைன் பயணம்.
நம்நாட்டு ட்ரைனில் போய் பலவருடங்கள் ஆகிவிட்டது.
Post a Comment