Thursday, December 20, 2012

2013க்கு அழகான கலருதான்!!!

Pantone நிறுவனம் கடந்த பத்துவருடங்களுக்கு வருடங்களுக்கு ஒரு கலரை கொடுத்து, அந்த வருடம் எப்படி இருக்கும்னும் சொல்லிக்கிட்டு வருது. அந்த வகையில வர இருக்கும் 2013க்கு மிக அழகான கலரை தேர்ந்தெடுத்திருக்காங்க. இயற்கையில் அபரிமீதமாக கிடைக்கும் இந்த நிறம், கண்ணிற்கு குளிரிச்சியாகவும், மனதுக்கு இதமளிக்க கூடியதாகவும் இருக்கும். ராஜவம்சத்தினர் மிகவும் விரும்பும் நிறம்னும் சொல்லலாம்.
பச்சை நிறங்களிலேயே மிகவும் அழகானது இந்த மரகதப்பச்சை. எமரால்ட் கிரீன் கலக்கலா இருக்கும்.
பச்சை நிறத்துக்கு குணமாக்கும் குணம் உண்டு. மன உளைச்சல்கள் குறைய, வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை நினைத்து தியானம் செய்தால் நல்லது.
அருமையான இந்தப்பாடலும் மனதுக்கு இதமா இருக்கும். எல்லோரின் வாழ்க்கையும் பசுமையாக தளைத்து, வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை எல்லோருக்கும் அட்வான்ஸாக மரகத புத்தாண்டு வாழ்த்துக்கள். :))

16 comments:

ஆத்மா said...

அப்போ 2013 பச்சைப் பசேலென ஆரம்பிக்கப் போது...

21 ஆம் திகதிய மேட்டரெல்லாம் சும்மாவா :)

சாந்தி மாரியப்பன் said...

கலர் நல்லாருக்கு தென்றல்.

Unknown said...

Ungalukum advance valthukal

வெங்கட் நாகராஜ் said...

தகவலும் பாடலும் நன்று.

புத்தாண்டு வாழ்த்து முதலில் சொன்ன உங்களுக்கும் வாழ்த்துகள்!

pudugaithendral said...

வாங்க ஆத்மா,

நம்பிக்கைதானே வாழ்க்கை அதனாலே நாம நல்லபடியா நினைச்சு நம்பிக்கையோட புத்தாண்டை கொண்டாடுவோம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

எனக்கும் இந்த மரகதப்பச்சை ரொம்ப பிடிக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபாயிஷா,

நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

மாதேவி said...

வருக மரகதப் புத்தாண்டு.

இனிய வாழ்த்துகள்.

Unknown said...

புதுக்கோட்டை னு பெயரை சொல்லும் போதே மனசு சந்தோஷபடும்.
வாழ்க்கை என்னதான் பாரமா இருந்தாலும் ஊருக்கு வந்தாலே மனசு
லேசாகிடும்!மாலை நேரத்து புதுக்குளம் காத்து,இரவு நேர பரோட்டா கடை,பெருமாள் கோவில்,ராணி ஸ்கூல்,படிச்ச ஸ்ரீ ப்ரகதம்பாள் ஸ்கூல் , ஓவ்வொரு குரூப்கும் ஒரு டீ கடை பெஞ்ச். மறக்க முடியாத நாட்கள் !!!!!!!!!!!!!!!

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி மாதேவி

pudugaithendral said...

வாங்க சத்யா,

அட நம்ம ஊர்க்காரர். எந்த ஏரியா.

நம்ம ஊர் பத்தின உங்க கொசுவத்தி சூப்பர்.

வருகைக்கும் மிக்க நன்றி

Unknown said...

நன்றி! நமக்கு கிழக்கு 3ம் வீதி .

இரசிகை said...

azhagu color...
:)

pudugaithendral said...

வாங்க சத்யா,

நமக்கு வடக்கு 4தான். ஆனாலும் எனக்கும் கீழ3க்கும் தொடர்பு ரொம்ப ஜாஸ்தி. :))

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ரசிகை