”நீ தானே என் பொன் வசந்தம்” தெலுங்கில் எடோ வெல்லி போயிந்தி மனசுன்னு வந்திருக்கு.
அயித்தானின் நண்பர் எங்க கம்பெனிதான் டிஸ்ட்ரிப்யூட் செய்யறோம். உங்களுக்கு எப்ப வேணுமோ சொல்லுங்க டிக்கட் இலவசம்னு சொன்னார். சரி போய் பாப்போமேன்னு போனோம்.
இளையராஜா இசை... கொளதம் வாசுமேனன் கூட்டணி. பாடலுக்காக வெளிநாட்டில் போய் படம்பிடிப்பாங்க. ஆனா இங்க இசையமைக்கவே வெளிநாட்டுக்கு போனாங்கன்னு ரொம்ப எதிர்பார்ப்போட போனோம். ம்ம்ம்ம் பெருசா எதுவும் இல்ல. இசை மனசுல ஒட்டலை. கதையும் பெரிய ஓஹோ கதை இல்லை. இண்டர்வலுக்கு முன்னாடி வரைக்கும் போராதான் இருந்துச்சு.
நானி, சமந்தாவின் காதல்” சீன்கள்” தேவையே இல்லை.
வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னா காதலை தள்ளி வெச்சாத்தான் முடியும்னு சொல்லாம சொல்றாரா? தன் படத்தையே கிண்டல் செஞ்சுக்கும் அளவுக்கு முதிர்ச்சி இருக்குன்னு பாராட்டுறதா புரியலை. ஆனா ஒரே ஒரு மெசெஜ் இன்றைய இளம் தலைமுறையினருக்கு. “ஈகோ பாத்து உறவை முறிச்சுக்காம, ஈகோவுக்கு கோ சொன்னா தான் உறவு பலப்படும்னு.
ரொம்ப ஸ்ட்ராங்க் இல்லாத கதைக்கு இசையமைக்க நம்ம ராஜா சார் எப்படி ஒத்துக்கிட்டாரு???!!!
************************************************************************
2012 மேல செம கடுப்பா இருந்த எனக்கு, அதை ஒரு வழியா டா டா சொல்லி அனுப்பனும்னு செம காண்டு. கடைசி நாளாவது சந்தோஷமா கழிக்கலாம்னு ப்ளான் போட்டு பாத்தேன். ம்ம்ஹூம். அன்னைக்கும் கூட எதுவும் சுபமா நடக்கலை. கடைசியில சமைக்கும் மூடே வராம இரவு டின்னர் சமைக்கலைன்னு டிக்ளேர் செஞ்சிட்டேன். :)
பசங்களுக்கும் வெளிய போற மூடு இருக்க அயித்தான் டேபிள் புக் செஞ்சாரு.
OHRIS பேகம்பெட்டில் புதுசா ஒரு ப்ரான்ச் ஆரம்பிச்சிருக்காங்க. de thaliனு பேரு. லைஃப்ஸ்டைலுக்கு பக்கத்து கட்டடம் இந்த ஹோட்டல். இங்கே வேற சில ஷாப்பிங் செண்டர்கள் இருந்தாலும் கீழே இருக்கு. புஃபே, தாலி ரெண்டு வகை இருக்கு.
புஃபே போனோம். அப்புறம்தான் தெரியும், இதுவும் ராஜஸ்தானி சாப்பாடுன்னு. ஆனா இதுக்கு முன்ன காந்தானி ராஸ்தானில சாப்பிட்டதை விடவும் உணவு தரமா இருந்தது. தால்பாட்டி அப்படி ஒரு டேஸ்ட். சுர்மா, பனீர் எல்லாம் நல்லா இருந்தது. சாஸ்க்கு பதில் அரிசி கஞ்சி அந்த மண் குவளைல கொடுத்தாங்க அதுதான் அவ்வளவா ருசிக்கலை. அதைத்தவிர மத்தது எல்லாம் நல்ல ருசியா இருந்தது. காசுக்கேத்த பணியாரம்.
ஒரு ப்ளேட் 350ரூவா. ஆனா ஓரிஸ் தரத்துக்கு கட்டாயம் தரலாம்.
****************************************************************************
அடுத்து ஒரு சினிமா பத்தினது தான். அம்ருதா பர்த்டே செலிபரேஷன் முதல் நாளே துவங்கினோம். 18 சாயந்திரம் செகண்ட் ஷோ இந்தப்படம்.
படத்துக்கு விளம்பரமா அதைப்பத்தி பேசவேண்டியதுதான். இல்லைன்னு சொல்லலை. ஆனா மேலே சொன்ன படத்தைப்போல ரொம்ப ஓவரா இந்தப்படத்தையும் பத்தி எல்லோரும் பேசினாங்க. சரி போய் பாக்கலாமேன்னு போனோம். கதைன்னு எதை சொல்ல. இரண்டு குடும்பங்கள். ஆனா ப்ரகாஷ் ராஜ் & அவருடைய தங்கைய கட்டிக்கொடுத்த வீடு. தங்கைய கட்டி கொடுத்த வீடு நல்லா வசதியாத்தான் இருக்கு. ப்ரகாஷ் ராஜ் மிடில் கிளாஸ். அவருடைய பசங்க வெங்கடேஷ், மகேஷ் பாபு. இறந்த அவருடைய தங்கைமகள் சீதா (அஞ்சலி) இவங்க வீட்டுலதான் வளர்றாப்ல.
இதைத்தவிர கதைன்னு ஏதும் பெருசா இல்லை. ரெண்டு குடும்பத்துக்கும் ஆகாது காரணம்பெருசா ஏதும் இல்லை. ப்ரகாஷ் ராஜ் தன்மையான மனிதரா எல்லோராலையும் மதிக்கப்பட்டாலும் காசு பணம் பெருசா தேராது. ரெண்டு பசங்களும் கூட வேலையில் ஸ்திரமா இல்லை. ஆனா அவங்க வீட்டிலேயே வளர்ற சீதாவை வெங்கடேஷும், எதிர் பார்ட்டியின் மகள் சமந்தாவை மகேஷ்பாபு கடைசியில கல்யாணம் செய்யறாங்க. அது எப்படி என்பது தான் கதைன்னு சொல்லிக்கலாம்.
மறுக்க முடியாத ஒரு விஷயம். இந்தப்படத்துல ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை, (இந்த இடத்துல சமீபத்துல டேடி எனக்கு ஒரு டவுட் நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது. தம் சீன், குடி சீன்லாம் வந்தா கீழே ஒரு லைனில் மது ஆபத்து, புகை பிடிக்காதீங்கன்னு வருதே அது போல கத்தி எடுத்து குத்தும் சீன், சண்டை காட்சிகள் போது ஏன் போடறதில்லை!! அது தாப்பா தப்பு இல்லையா? சின்ன பசங்க மனசு கெடாதான்னு!! கேப்பாப்ல. நல்ல டவுட்ல) சின்ன உடையில பாட்டுக்கள் ஏதுமில்லை. மெலடி பாட்டுக்கள் தான். இன்னும் சில தடவைகள் கேட்டா மனசுல நிக்கலாம்!!
ராத்திரி 12 மணிக்கு முழிச்சிருந்ததால தியேட்டர்லேயே அம்ருதாவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்ல ஒரு சான்ஸ். :) அம்ருதம்மா 19ஆம் தேதி தன்னுடைய 13ஆவது பிறந்த நாளை கொண்டாடினாங்க. தானும் இப்ப ஒரு teen அப்படின்னு மேடத்துக்கு செம குஷி.
************************************************************************************
கூடிய சீக்கிரம் வாரம் ஒரு முறை சைக்காலஜி பதிவுகள் வர இருக்கு. இப்ப இருக்கற சூழ்நிலையில் நாம புள்ளைகளை புரிஞ்சு கிட்டாத்தான் அவங்களை நம்ம வழிக்கு எப்படி கொண்டு வர்றதுன்னு நமக்கு புரியும். நான் படிச்சது, தெரிஞ்சுகிட்டது எல்லாம் விவரமா பதிவாக்க போறேன். வந்து எல்லொ

16 comments:
வரப்போற பதிவுகளுக்காக வெயிட்டிங்..
அம்ருதாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :-)
வாங்க அமைதிச்சாரல்,
வாழ்த்துக்கு நன்றி.
வருகைக்கும் மிக்க நன்றி
இன்றுதான் முதல் வருகை.....
//இப்ப இருக்கற சூழ்நிலையில் நாம புள்ளைகளை புரிஞ்சு கிட்டாத்தான் அவங்களை நம்ம வழிக்கு எப்படி கொண்டு வர்றதுன்னு நமக்கு புரியும். நான் படிச்சது, தெரிஞ்சுகிட்டது எல்லாம் விவரமா பதிவாக்க போறேன். // போடுங்க.... ஆர்வமாகக் காத்திருக்கிறோம்
வாங்க என்றென்றும்16,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. சீக்கிரமே பதிவு வருது.
பல்சுவையான பதிவு! வாழ்த்துக்கள்!
பொண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிவு சுவாரசியமாக இருந்தது! பெங்களூரிலிருக்கும் உணவகங்களையெல்லாம் அழகாகச் சொல்லிக்கொன்டு போகிறீர்கள்! பெங்களூர் செல்ல நேர்ந்தால் இந்த விபரங்களையெல்லாம் திரட்டி எடுத்துச் செல்லப்போகிறேன்!
உங்கள் பெண்ணுக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
அம்ருதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அம்ருதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
அம்ருதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....
வரப்போகும் பதிவுகளுக்கான காத்திருப்புடன்!
வாங்க சுரேஷ்,
வருகைக்கு மிக்க நன்றி
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்தா கிருஷ்ணா
வாங்க மனோ சாமிநாதன்,
பெங்களூர் இல்ல. ஹைதை என அழைக்கப்படும் ஹைதராபாத்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவை2தில்லி
மிக்க நன்றி காஞ்சனா
மிக்க நன்றி சகோ
Post a Comment