Tuesday, February 12, 2013

ABCD......

பிள்ளைகளை சர்ப்ரைஸா அழைச்சுக்கிட்டு போன படம் இது. :)) நாளிதழ்களில் விமர்சனம் படிச்சா என்னவோ சக் தே இந்தியா மாதிரியான கதைன்னு போட்டிருந்தாங்க. ஆனாலும் ப்ரபுதேவா டான்ஸ் அதுக்காக கட்டாயம் போகணும்னு முடிவு செஞ்சேன். தவிர நடனம் பிள்ளைகளுக்கும் பிடித்த விஷயம். (எனக்கும் தான்) 3D படம் இது. மொத்தமே 2.15 நிமிடம்தான் படம். அதனால ப்ரேக்கெல்லாம் கிடையாதுன்னு தியேட்டரில் அறிவிப்பு வெச்சிருந்தாங்க. படத்துலேர்ந்து எந்திரிச்சு போயிடுவாங்கன்னு நினைச்சு இந்த முடிவான்னு யோசிச்சேன்.


 படம் ஆரம்பிச்ச பிறகும் கூட என்னவோ ரொம்ப மனசுல ஒட்டாத மாதிரிதான் இருந்தது. குருப்புக்குள்ள ஃபைட், பசங்களுக்குள்ள காதல்னு பாக்க கொஞ்சம் போரடிச்சா மாதிரி இருந்தது. ஆனா டக்குன்னு இந்த படம் ஏதோ ஒரு படம் மாதிரி இருக்கேன்னு மண்டைல பல்பு. ஸ்டார் மூவிஸ்ல பசங்க கூட STEPUP டான்ஸ் படங்கள் பாத்திருக்கேன். அதுல இப்படித்தான், காதல் எல்லாம் இருக்கும் அளவோட, ஆனா நடனம் தான் களம். அதுக்கப்புறம் படத்தை சீன் பை சீன் ரசிக்க ஆரம்பிச்சேன். நடனத்துக்குன்னு முதல் இந்தியப்படம். அதுவும் 3Dல. 3Dயை தவிர்த்திருந்தா நடனக்காட்சிகளை ரசிச்சிருக்கலாமோன்னு தோணுது.


 நடனப்பள்ளியில் பிரபுதேவாவுக்கு பதிலாக வேற ஒருத்தரை கொண்டுவந்து வைத்துவிட்டு, பிரபு தேவாவை கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ள சொல்கிறார் அவரது முன்னாள் நண்பரும் இன்னாள் நடனப்பள்ளி ஓனரும் ஆன ஜெகாஹிங்கிர். நடனத்தை தவிர தனக்கு வேறெதுவும் தோணாது என்று சொல்ல அங்கிருந்து விலகுகிறார்/விலக்கப்படுகிறார் பிரபு தேவா. (விஷ்ணு மாஸ்டர் என்பது படத்தில் பெயர்) இன்னொரு நண்பரான கோபி வீட்டில் தங்குகிறார். அடுத்தநாள் சென்னை கிளம்ப இருக்கும் விஷ்ணுவின் டிக்கட்டை கிழித்துப்போட்டு அங்கே தங்க வைக்கிறார் கோபி.


 அடுத்தநாள் நடக்கும் கணபதி விசர்ஜனத்தின் போது ரெண்டு பார்ட்டிகளின் நடனத்தை கண்டு ஆனந்தப்படும் அதேவேளையில் அவர்களூக்குள் இருக்கும் கோஷ்டி மோதலையும் பார்க்கிறார். இந்த இரண்டு குரூப்களுக்கும் நடனம் சொல்லிக்கொடுக்க ஆசைப்பட... அது எப்படி நிறைவேறுகிறது, இன்னும் யார்யாரெல்லாம் அந்த குருப்பீல் இணைகிறார்கள். டான்சே தில் சே எனும் ரியாலிட்டி ஷோவில் எப்படி நுழைகிறார்கள்... என்பதுதான் திரைக்கதை. இந்திய சினிமாவுக்குத் தகுந்தவாறு கதைக்களம் வைத்து, அதில் அங்கங்கே நடனக்காட்சிகளை உறுத்தாமல் அமைத்திருப்பதிலும், அருமையான இயக்கத்திலும் கதாசிரியராகவும், நடன இயக்குனராகவும்  ரெமோ டிசோசா பரிமளிக்கிறார்.

 
டான்ஸ் என்பதற்கான விளக்கம்,  ஸ்பீக்கர் வாங்க கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு போய் நடனத்திற்கு பெட் செய்யும் இடத்திற்கு சென்று பையன்கள் தோற்க இருக்கும் பொழுது பிரபுதேவா வந்து நடனம் செய்யும் இடம், என பிரபுதேவா மிக அருமையாக செய்திருக்கிறார். திங்கள்கிழமை வேளைநாளாக இருந்த பொழுதும் மாலைக்காட்சிக்கு வந்திருந்த கூட்டமும்,
பிரபுதேவாவின் நடனத்தின் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.


செமிஃபைனல்ஸுக்கு முன்பு சந்து எனும் இளைஞரின் மரணம் ஆனால் அதையும் தள்ளிவைத்துவிட்டு இளைஞர்கள் செய்யும் அந்த நடனம் சூப்பர்.
ஃபைனஸுக்கு முன்பு பிரபுதேவாவிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்பட்டு ஜெகாங்கிர் பிரபுதேவா ஆளை அழைத்து ஆசைக்காட்ட, அந்த பையன்கள் மறுத்து கிளம்ப, வேறொரு பையன் உள்ளே நுழைய சந்தேகத்துடன் வெளியேறுகிறார்கள்.

ஃபைனல்ஸில் பிரபுதேவாவிடம் நடனம் பயல்பவர்கள் வைத்திருந்த ட்ராக்கிற்கு ஜெஹாங்கிர் ட்ரூப் ஆட்கள் ஆடுவதைப்பார்த்து  அதிருந்து என்ன செய்வது என்பது புரியாமல் இருக்கும் நேரத்தில், அவர்களிடம் இருக்கும் ஒரு மாணவன் நடன அசைவுகளையும், பாடலையும் கொடுத்தது தெரிய வருகிறது. 10 நிமிடமே இருக்கும் வேளையில் எந்த பாட்டுக்கு ஆட என குழம்பும் வேளையில் “இந்தியாவே ஆடும் நடனத்தை ஆடுங்கள்... அது ஒவ்வொருவரையும் ஆட வைக்கும் நடனமாக இருக்க வேண்டும்!!” என்று சொல்ல இடைபெறும் அந்த டான்ஸ் வாவ்!!!!

சத்தியமான கால்களை  கட்டிப்போட முடியவில்லை. ஒவ்வொரு செல்லிலும் நடனத்தை கொட்டும் அந்த பாட்டு,  நடனம்...... ரொம்ப முயற்சித்துத்தான் எழுந்து ஆடாமல் இருந்தேன். :)) பிள்ளைகளுக்கும் அதே அதே... சபாபதே தான்.


ஆச்சு பிரபுதேவா ட்ரூப் முதல் பரிசு வென்றார்கள் என்றதும் தியேட்டரை விட்டு மக்கள் எழுந்து போக ஆரம்பிக்கிறார்கள். பெயரோடு சேர்த்து அப்போது ஒரு பாடல்காட்சி வருகிறது பாருங்கள்..... அது கிளாஸ்.  சரோஜ்கான்,  பிரபுதேவா, ரெமோ எல்லோரும் அந்த பாடலில் நடனம் செய்திருப்பார்கள்.
அதை கண்டிப்பாய் பார்க்கணும். மிஸ் செஞ்சிடாதீங்க.  படத்துக்கு போக முடியாதவங்களுக்காக அந்தப்பாட்டை இங்கே கொடுக்கிறேன்.

நடன விரும்பிகளுக்கு இது ஒரு கலக்கல் படம். திரை விருந்துன்னும் சொல்லலாம். ஆபாச காட்சிகள், ரெட்டை அர்த்த வசனங்கள், கத்தி, குத்து, சண்டைக்காட்சிகள் இல்லாத ஒரு படத்தை தந்த ரெமோவுக்கு பாராட்டுக்கள்.

ஸ்டெப் அப் படங்கள் போல அடுத்த அடுத்த செக்வல்களை இதே போன்ற தரமான கதைக்களத்துடன் ரெமோ தரவேண்டும், அதையும் 2டியாக தரவேண்டும் என்பது என் வேண்டுகோள்.


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த வாரம் குழந்தைகளோடு செல்ல வேண்டியது தான்... நல்ல விமர்சனத்திற்கு நன்றி...

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

பசங்க விரும்புவாங்க. த்ரிடி எஃபக்ட் ரொம்ப பெருசா இல்லன்னாலும் பசங்க ரசிப்பாங்க.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

பசங்க விரும்புவாங்க. த்ரிடி எஃபக்ட் ரொம்ப பெருசா இல்லன்னாலும் பசங்க ரசிப்பாங்க.

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

டான்ஸ் படத்தை ரசித்து ருசித்திருக்கிறீர்கள் தென்றல்.
மருமகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.அக்னி நட்சத்திரத்தில் பார்த்ததற்கும் இந்த தேவாவுக்கும் துளிக் கூடவித்யாசம் தெரியவில்லை என்று. அவ்வளவு உடலைப் பதமாக வைத்திருக்கிறார்.
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

சரோஜ்கானோட சேர்ந்து கணேஷ்ஜியும் தூள் கிளப்புவார் இந்தப்பாட்டுல..

Philosophy Prabhakaran said...

படம் வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ் ன்னு நினைக்கிறேன்... நீங்க எப்படி அதுக்குள்ள பார்த்தீங்க ?

pudugai tendral said...

வாங்க வல்லிம்மா,

உடம்புல எலும்பே இல்லாத மாதிரிதான் இப்பவும் இருக்கார் பிரபு. :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugai tendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அந்த உடம்போடு அவர் ஆடும் அழகே அழகு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugai tendral said...

வாங்க பிரபாகரன்,

சண்டேயே பாக்கணும்னு ப்ளான் பண்ணோம். ஆனா டிக்கெட் கிடைக்கலை.

வருகைக்கு மிக்க நன்றி

pudugai tendral said...

வாங்க பிரபாகரன்,

சண்டேயே பாக்கணும்னு ப்ளான் பண்ணோம். ஆனா டிக்கெட் கிடைக்கலை.

வருகைக்கு மிக்க நன்றி

Ranjani Narayanan said...

உங்க விமர்சனம் படித்து, அந்த காணொளியும் பார்த்தவுடன், எனக்கே போக வேண்டும் போல இருக்கிறதே!