போனவாரம் நானும் அம்ருதாவும் மட்டும் சென்னைக்கு விஜயம் செய்தோம். என் அத்தையின் பேத்திக்கு திருமணம்.
பெண் இங்கே ஹைதையில். குட்டியாய் ஸ்ரீராமின் கழுத்தை கட்டிக்கொண்டு தூங்கிய குழந்தைக்கு திருமணம்.:)
ஆஷிஷிற்கு ப்ரிஃபைனல்ஸ் நடந்து கொண்டிருப்பதால் அயித்தானும் ஆஷிஷும் திருமணத்திற்கு வரமுடியவில்லை.
அதனால் நானும் அம்ருதாவும் சென்றோம்.
கல்யாணத்தைப்பத்தி என்ன பதிவுன்னு கேக்கறீங்களா? சொல்றேன். இப்ப எல்லோருமே காண்ட்ராக்ட் மேரேஜ்தான்.
அதுல என்ன சிறப்பு இருக்கப்போகுதுன்னு நினைச்சா ரொம்ப தப்பு.
செய்யற வேலையில அர்ப்பணிப்போட செஞ்சா போதும் செய்யும் வேலை
ரொம்ப நல்லா இருக்கும். இந்த திருமணத்திற்கு காண்ட்ராக்ட் பேசி முடிவு செஞ்சது திருவான்மியூரில் இருக்கும் என் அத்தை. (அப்பாவுடைய அக்கா)
பெண்ணின் பெற்றோர் இருப்பது இங்கே ஹைதையில். திருமண புடவை வாங்க, சில நகைகள் வாங்க, பாத்திரம் வாங்கன்னு அவர்களோடு 3 மாசமா அலைஞ்சுகிட்டு இருந்தேன்.
அத்தை மகள் என்றாலும் எனக்கு உடன்பிறந்த அக்காக்கள் யாருமில்லை என்பதால் சின்ன வயது முதலே அவர்களை அக்கா என்றே அழைத்து பழக்கம்.
இந்த அக்காவிடமிருந்து நான் கற்றது ஏராளம். வருமானவரி கட்டாதே, அதற்கு பதில் அரசாங்கம் சொல்லும் பணத்தை சேமித்துவை. வரிவிலக்கும் கிடைக்கும், நமக்கு சேமிப்பும் இருக்கும் என சொல்லிக்கொடுத்தது அக்காதான்.
அவருக்கு ஒரே மகள். பாவா மகேந்திரா மகேந்திரா - ஜகீராபாத்தில் வேலை. 4 வருடங்களுக்கு முன் பெண்ணின் படிப்பிற்காக மகளுடன் தனியாக நல்லகுண்டாவில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு குடியேறினார் அக்கா. அப்பொழுது முதல் ரொம்பவே சேர்ந்து சுத்துவோம். எனக்கு பல கடைகளை அறிமுகம் செய்து வைத்தது அக்காதான்.
திருமணத்திற்கு 2 மாதம் முதல் அக்கா ரொம்பவே ரிலாக்ஸ்டாக இருந்தார் காரணம் தெரியணுமா சொல்றேன் வாங்க. அக்கா அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். பெண்ணிற்கு 14 வயதிற்குள்ளாகவே தேவையான நகைகளையும், வெள்ளி பாத்திரங்களையும் வாங்கி வைத்துவிட்டார்.
இன்னும் விவரமா சொல்றேன் கேளுங்க. அக்காவுடைய மகள் பூப்படைந்த சமயம் யார் பணமாக கொடுத்தாலும் அதைக்கொண்டு போய் ஏதாவது ஒரு வெள்ளிப்பாத்திரமாக வாங்கி வைத்துவிடுவார். இன்னார் கொடுத்தது என ஞாபகம் இருக்கும், சேமிப்பும் ஆச்சு. ஜகிராபாத்தில் அக்கா பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பார்த்து வந்தார். பத்தாம்வகுப்பு பரிட்சை சூப்பர்வேஷனுக்கு போனால் கிடைக்கும் பணத்தையும் கொண்டு போய் வெள்ளி சாமானாக வாங்கிவிடுவார். ஒரு ஊதுபத்தி ஸ்டாண்ட் சொல்லுங்க.
இப்படி சிறுக சிறுக சேமிப்பார். மகள் கல்லூரி முடிக்கும் முன்னரே நகைகளும், வெள்ளி பாத்திரங்களும் ரெடி.
ஒரே மகள் என்பதால் செல்லம் எல்லாம் இல்லை. கண்டிப்பு கறார் என்பதுடன் நல்ல பக்தியாக வளர்த்திருந்தா்ர். அந்தக்குழந்தை பூஜை, நோன்பு, விரதம் எல்லாம் முறையாக செய்வாள். இப்படி ஒரு பெண் கிடைக்க மாப்பிள்ளை வீட்டார் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வந்தார்கள். பெண்ணைப்பிடித்திருந்தது என சொல்லி பேசி முடிவு செய்து நிச்சயதார்த்தம் முடிந்து இப்போது கல்யாணமும் நல்ல முறையில் முடிந்தது.
அந்த திருமணத்தில் சமையல் மிக அருமை. கன்னாபின்னாவென்று செலவு எகிறாமல் என்ன தேவையோ அந்த அளவுக்கு அருமையான சாப்பாடு. அயிட்டங்கள் அதிகமாக இருந்தாலும், வேஸ்டாக்கும் அளவுக்கு இல்லை.
அதைவிட அவர்களின் உபசரிக்கும் பாங்கு ரொம்ப நல்லா இருந்தது.
ஏற்கனவே நவம்பர் மாதம் அயித்தானின் நண்பர் வீட்டு விசேஷத்தில் இவர்களது சேவையை அனுபவித்திருக்கிறேன்.
மாங்கல்யதாரணத்தின் போது எல்லோருக்கும் ஒரு சின்ன வெல்வெட் பை கொடுத்தார்கள். உள்ளே இருந்தது மணமக்களை வாழ்த்த ரோஜா இதழ்கள்!!!
மாப்பிள்ளை அழைப்பு அன்று காலை முதல் திருமண இரவு டின்னர் வரை எல்லாம் என்ன மெனு என்பதை சாப்பாடு ஹாலில் எழுதியே வைத்திருந்தார்கள். நல்ல ருசியான சாப்பாடு பரிமாறப்பட்டுக்கொண்டே இருந்தது. வந்தவர்களுக்கு ஒரே குறை. இப்பொழுதெல்லாம் எல்லோரும் அளவாக சாப்பிட்டு பழக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த மாதிரி விருந்து சாப்பிட்டு ஜீரணக்கோளாறு வந்துவிடுமோ என்ற பயம் தான் இருந்தது.
உறவினர்கள் பலரும் ஊருக்குப்போய் எல்லோரும் சூப் டயட்தான் என பேசி மகிழ்ந்தனர். சீர் பட்சணங்கள் சுவையே சுவை. அப்படிச்செய்வேன் இப்படிச்செய்வேன் என விளம்பரம் செய்து கொள்ளும் பலரும் பொருட்களை வீணாக்குவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். மீதமாகமல் அளவாக சமைத்து, வந்தவர்கள் வயிறார பரிமாறியது இந்த காண்ட்ராக்டரிடம் தான் பார்த்தேன்.அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விநாயகா கேட்டரிங் சர்வீஸ் இதுதான் அந்த காண்ட்ராக்டர் விவரங்கள் அடங்கிய தளம். தேவைப்படுபவர்களுக்கு உதவியாக இருக்குமே அதான். :))

29 comments:
நல்ல பகிர்வு தென்றல். மணமக்களுக்கு நல்வாழ்த்துகள். அக்காவின் திட்டமிடலுக்குப் பாராட்டுகள். கேட்டரிங் தகவல் தேவையானவர்களுக்குப் பயனாகும்.
வாங்க ராமலக்ஷ்மி,
மகளுக்கு திருமணம் நிச்சயமானதுமே புடவை மற்றவைகளை வாங்கிவைத்துவிட்டு டென்ஷன் இல்லாம அவங்க இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கடைசி நேரம் வரை பரபரன்னு ஷாப்பிங் செஞ்சுகிட்டு சிலர் இருப்பாங்க.
ஆனா அக்கா ட்ஃபரண்ட். :))
வருகைக்கு மிக்க நன்றி
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
"வருமானவரி கட்டாதே, அதற்கு பதில் அரசாங்கம் சொல்லும் பணத்தை சேமித்துவை"
இதை கொஞ்சம் டீடெயிலாக சொல்லுங்க.இனியாவது சேமிக்கலாம்.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...
முறையான திட்டமிடல் இல்லைன்னா கடைசியில் முழிக்கணும். அக்காவின் ஏற்பாடு ஜூப்பரு. கூடவே என்னையும் தட்டிக்கொடுத்துக்கறேன். ஏன்னா நானும் இதைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன் :-)))
நல்ல பகிர்வு தென்றல்
ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம் - திட்டமிடுதல் அவசியம் - அருமையான பதிவு
நல்லதொரு பகிர்வுங்க. திட்டமிடல் இருந்தால் கடைசி நேர பதட்டம் இருக்காது. அக்காவுக்கு பாராட்டுகள்.
நானும் இன்று இதே போன்ற பதிவினை வெளியிட்டுள்ளேன். முடிந்தால் பாருங்கள்.
நல்லதொரு பகிர்வு! நன்றி!
வாங்க இராஜராஜேஸ்வரி,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமுதா கிருஷ்ணா,
எனக்குத் தெரிஞ்சதை நாளைக்கு பதிவா போடுறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்
வாங்க அமைதிச்சாரல்,
நானும் சேம்ப்ளட்பா. :))
எல்லாம் அக்காவுடைய கைடன்ஸ் தான்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஃபாயிஷா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தனேஷ் குமார்,
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஆதி,
வந்தேன் படித்தேன்.
வருகைக்கு மிக்க நன்றி
நல்ல பகிர்வு....
இன்னிகு ஒரே கல்யாண சாப்பாடா இருக்கு :)
அருமையாக இருந்தது. சீர்வரிசை என்ன, சாப்பாடு என்ன.
அக்காவின் திட்டமிடல் என்ன. எல்லாமே அருமை. இதுபோல ஒருவர்
பக்கத்தில் இருந்தால் அம்ருதாம்மா கல்யாணத்துக்குக் கவலையே இல்லை!
caterers அறிமுகம் நன்று!
வாங்க சகோ,
எதிர்பாராம ரெண்டு விருந்து பத்தின பதிவு வந்திருக்கு :)
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க வல்லிம்மா,
நீங்க சொல்வது சரிதான். பெரியவங்க தன்னோட அனுபவத்தை பகிர்ந்துக்கும்போதுதான் கத்துக்க முடியும். அப்படி அக்காவாலதான் சேமிப்பு பழக்கமாச்சு, அம்ருதம்மாவுக்காகவும் தனியா இப்பவே சேர்க்கணும் எனும் எண்ணமும் வந்தது.

வாங்க ஜனா,
இந்த கேட்டரர்ஸ் விவகாரத்துல ரொம்ப குழப்பம் இருக்கும்.

நல்லதொரு பகிர்வு.அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா
எல்லோருக்கும் தேவையான பகிர்வு, ஆமாம் இப்ப எல்லாம் கான்ராக்டர் கிட்டதான் ஓப்படைத்து விடுகீறார்கள்
எல்லோரும் ரொம்ப ரிலாக்ஸ் ஆக தான் இருக்கிறார்கள்
Good sharing. it is very useful and informative. Thank you for your sharing.
Marriage Catering Services in chennai
Post a Comment