பரிட்சை நேரத்துல பசங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும். அதற்கு அரிசி பதார்த்தம் சாப்பிட்டால் மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்குமாம்.ஆனா பாருங்க இந்த சாம்பார், ரசம் போர் அடிக்கும். சத்தான சாப்பாடும் அவசியம். என்ன செய்ய???? வீட்டுல இருந்தது முட்டைக்கோஸ் மட்டும்தான். கடைக்கு போகும் மூட் இல்லை. வந்தது ஐடியா. இதான் இன்றைய லன்ச்.
ரெசிப்பி பாப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ (நீளவாக்கில் பொடியா நறுக்கியது
பெரிய வெங்காயம் - 1 நீளவாக்கில் நறுக்கியது
பட்டாணி விருப்பப்பட்டால்
தாளிக்க ஜீரகம், கொஞ்சமாக கசூரி மேத்தி,
லவங்கம் - 2,
ஏலக்காய்-2,
பட்டை - சின்ன துண்டு,
பிரிஞ்சி இலை - சின்னது,
நெய் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - 1ஸ்பூன்,
பாஸ்மதி அரிசி - 2கப்
உப்பு - தேவையான அளவு.
சாமான்லாம் ரெடி இனி செய்ய ஆரம்பிப்போம். இன்னைக்கு ரொம்ப பொறுமையா போட்டோல்லாம் எடுத்து சமைச்சேன். அதனால ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோஸ் வருது பாருங்க. :)
பாஸ்மதி அரிசியை ஒரு தடவை நல்லா கழுவிட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி ஊறவைக்கணும். ஊறவைப்பதால சீக்கிரம் சமைக்க முடியும் + சோறு நீள நீளமா அழகா வரும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், கசூரி மேத்தி தாளிக்கவும்.
வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுக்கணும். அப்புறம் நறுக்கி வெச்சிருக்கும் முட்டைக்கோஸை போட்டு நல்லா வதக்கிக்கணும். வேகவெச்ச பட்டாணியையும் சேர்த்து கொஞ்சமா உப்பு போட்டு நல்லா வதக்கி வெச்சுக்கணும்.
இன்னொரு கடாயில் நெய் ஊத்தி ட்ரை மசாலாக்களை போட்டு வதக்கிகிட்டு
தண்ணி ஊத்தி கொதி வந்ததும் கழுவி வெச்சிருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து கொதிக்க விடணும்.
சாதம் உதிரி உதிரியா வெந்ததும் கொஞ்ச நேரம் ஆற விடணும். மசாலா வாசத்துடன் சாதம் ரெடி...
ஆறிய சாதத்தில் முட்டைகோஸ், பட்டாணி மிக்ஸை கலந்து மேலே கொஞ்சமா உப்பு சேர்த்து கலக்கினா முட்டைக்கோஸ் சாதம் ரெடி.
விரும்பினா கொஞ்சம் மிளகுத்தூள் கலந்துக்கலாம்.
முட்டைக்கோஸ் கறியா சாப்பிட விரும்பாதவங்களுக்கும் கூட இந்த சாதம் பிடிக்கும். பசங்களுக்கு மேலே சீஸ் துருவிப்போட்டு கொடுக்கலாம். ரய்தா, இல்லாட்டி சாஸோட பரிமாறலாம். விரும்பறவங்க காய் வதக்கும் போது ஒரு குடமிளாகாயை சேர்த்து வதக்கலாம். (பட்டாணி இருப்பதால ப்ரோட்டின் சத்து நிறைந்த சாதம் இது)
பசங்க பரிட்சையில பிசியா இருக்கலாம். சாப்பாட்டை தவிக்கலாம். இப்படி செஞ்சுக்கொடுத்தா கலாட்டா இல்லாம சத்தான சாப்பாடு உடம்பில் சேரும். அப்பத்தானே நல்லா கவனமா படிக்க முடியும்.

17 comments:
இன்றைக்கு முடியாது... நாளைக்கு தான்...
படங்களுடன் செய்முறை... நன்றி...
வாங்க தனபாலன்,
செஞ்சு பார்த்து சொல்லுங்க.
வருகைக்கு மிக்க நன்றி
Rice looks tasty and delicious!
செஞ்சு பாத்துடறேன்.
வாங்க மஹி,
ரொம்ப நன்றி
வாங்க ஐயா,
செஞ்சு பாத்து சொல்லுங்க.
நன்றி
எங்க வீட்லயும் செய்யறதுண்டு. ஆனா கொஞ்சம் பிரியாணி ஸ்டைல்ல செய்வேன். இதுவும் நல்லாத்தான் இருக்கு :-)
எந்த காய்கறி சாதம் செஞ்சாலும் கடைசியில் அரை டீஸ்பூனாவது எலுமிச்சை சாறு சேர்க்கறது நல்லது. காய்கறிகளின் சத்தை உடம்பில் சேர்ப்பதில் விட்டமின் 'சி'க்கு முக்கியப் பங்கு உண்டாம்.
முட்டைக்கோஸ் சாதம் அருமை புதுகைத்தென்றல்.
நான் தேங்காய் அரைத்து இதனுடன் சேர்ப்பேன் அது இல்லாமல் நல்லாஇருக்கும் போல உங்கள் செய்முறை .
இப்படி செய்து பார்க்கிறேன்.நன்றி.
வாங்க கோமதிம்மா,
இது ஃப்ரைட் ரைஸ் டேஸ்ட்ல இருக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
உங்க டிப்ஸுக்கும் நன்றீஸ்
ஹய் முட்டைகோஸ் சாதம் சூப்பர் உங்க ப்லொகில் வலம் வந்தேன் அனைத்து குறிப்புகளும் அருமை (நான் பதிவுலகத்திற்கு புதிது )
வாங்க மலர்,
தொடர்ந்து வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
படங்களுடன் குறிப்பு அருமை. நல்ல யோசனை. செய்து பார்க்கிறேன்.
முட்டைக்கோஸ் சாதம் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது...
வாங்க ராமலக்ஷ்மி,
செஞ்சு பாத்துட்டு மெயில் அனுப்புங்க
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கோவை2தில்லி,
சுவை சூப்பரா இருக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி
முட்டைக்கோஸ் சாதம் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது...
Post a Comment