Tuesday, March 12, 2013

ஹைதை ஆவக்காய பிரியாணி 12/3/13

சென்றவாரம் ஹைதையில் பெரிய பீதியை கிளப்பி விட்டுவிட்டார்கள். சுல்தான்பஜார், கோட்டி, அபிட்ஸ் ஏரியாக்களில் குண்டு வெடிக்கும் என செய்தி வந்திருப்பதாக சொல்லி செக்கிங், மாலை 4 மணியோட கடைகளை அடைக்கச்சொல்லி போலீசார் உத்திரவு.... என ஒரு வழியாக இருந்தது.

கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஒருவர் தான் ஒரு மெயிலை ஹேக் செய்ததாகவும் அதில் குண்டு வெடிப்பு பற்றி தகவல் இருந்ததாகவும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். ஊரெல்லாம் இப்போது மைக் கட்டி அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதையாக இருக்கும் படி. போலிசார் எவ்வளவு பிசியான ரோடாக இருந்தாலும் அதற்கு பேரலலாக இருக்கும் சின்ன தெருக்களிலாகட்டும் செக்கிங் பலமாக இருக்கிறது.

********************************************************************************
இதுவும் குண்டு வெடிப்பு சம்பந்தமாகத்தான்:

மும்பையிலிருந்து வந்த செய்தி. ஹைதையில் குண்டு வெடிப்பு என்றதும் மாமாவின் எதிர் வீட்டு சின்னப்பையன்  உடனடியாக ஓடிவந்து மாமாவிடம் கேட்டது இதுதான்,” ஹைதராபாத்தில் குண்டு வெடிச்சது, அதுவும் ஏதோ ஹோட்டலில்னு சொல்றாங்களே..... ஹைதராபாத் தீதியைக்கேட்டு அந்த பிரியாணி கடையில் ஏதும் குண்டு வெடிக்கலையேன்னு கேட்டு சொல்லுங்க!!!!!!!!!

:)))
************************************************************************************

 அம்ருதம்மாவுக்கு பரிட்சை நேற்றோடு முடிந்தது. ஆஷிஷ் அண்ணாவிற்கு இன்னும் 4 பரிட்சை பாக்கியிருக்கிறது. இங்கே +1ம் பப்ளிக் பரிட்சை. நான் பிசி பிசியா இருக்கேன்.  நேற்றைய பரிட்சைக்கும் நாளைய பரிட்சைக்கும் இடையே கிடைத்த இந்த லீவில் இந்த பதிவு. வழக்கம்போல மனம் ஜாலியா இருக்கு. அதேதான். பசங்களுக்கு லீவு எனக்கு காலையில் எழுந்து சமைக்கும் வேலை இல்லை எக்ஸ்ட்ரா..... எக்ஸ்ட்ரா...

எத்தனை நாள் காத்திருந்த தருணம் இது.
***************************************************************************************

வேலைக்காரம்மா 5 நாள் லீவு போட்டிருந்தார். 3ஆம் நாள் மாலைக்குள்ளேயே என் கையை அசைக்க முடியாத நிலை. ஊரிலிருந்து அப்பொழுது மாமாமகள் வந்திருந்த நேரம். ப்யூட்டி காண்டஸ்ட் ஜட்ஜா போயிருந்தாக்கூட அங்கே வரும் பெண்களைப்பார்த்து மார்க் போடுவதற்கு பதில் மருந்து எழுத கை ஓடும் சில மருத்துவர்களுக்கு. மாமா மகளும் அதே ரகம் தான். :))

பொறுமையாக பார்த்துக்கொண்டே இருந்தவள் 4ஆம் நாள்  என்னை எந்த வேலையையும் செய்ய விடாமல் தைலம் தேய்க்கிறேன் என ஆரம்பித்தாள்.
மஹாநாராயண் தைலம் &  தன்வந்திரக் குழம்பு வாங்கிவரச்சொன்னள்.

ஆத்தா அது வூட்டுல இருக்கேன்னு சொல்ல முறைத்துக்கொண்டே வாங்கி தேய்க்க ஆரம்பித்தாள்.  ஒரு நாள் விட்டு ஒருநாள் தேய்ப்பதில் கைவலி நல்லா குறைஞ்சிருக்கு, ரொம்ப முக்கியமா நல்லாஆஆஆஆ தூங்குறேன். :)




இனி வெயில் காலம் தான். யாரால் முடியுமோ அவர்கள்  ஒரு நாள் விட்டு ஒருநாளும் மத்தவங்க வாரத்துக்கு ஒரு நாளாவது இந்த மஹாநாராயண் தைலமும், தன்வந்த்ர குழம்பும் கலக்கி லேசா சூடாக்கி தேய்ச்சு குளிங்க.
இதைத்தான் ஆயுர்வேத ஸ்பா குளியலாம். ஸ்டீமர் இருந்தால் எண்ணெய் தடவி அதன் மேலே ஆவி பிடிங்க. ஸ்டீம் பாத்தும் ஆகும்.

உடம்பும் மனசும் லேசாகி நல்லா தூங்கலாம்.
********************************************************************************

உடல் பருமன் குறைய முக்கியமா தொப்பை குறைய எங்க டாக்டர் (அதான் மாமா மகள் ) சொல்ல சொன்னது, ஆயுர்வேத கடையில் த்ரிபலா சூரணம்னு பொடி கிடைக்கும். அதை வாங்கி எங்கங்க பருமன் குறையணும்னு நினைக்கறீங்களோ அங்கே பவுடரை சும்மா தேய்த்து 15 நிமிஷம் கழிச்சு குளிக்கவும். ரிசல்ட் நல்லா தெரியும்.
********************************************************************************

மகளீர் தினத்தன்னைக்கு ஒரு மெயில் பார்த்து சந்தோஷப்பட்டேன். அது மேருகேப்ஸ் கிட்டேயிருந்து வந்திருந்த மெயில். 

மேரு கேப்ஸில் புக் செஞ்சு போகும்போது அந்த வண்டி அங்கே போய்க்கிட்டு இருக்குன்னு இனி ட்ராக் செய்ய முடியுமாம். பெண்களுக்காகன்னே இந்த திட்டத்தை அறிமுகம் செஞ்சிருக்காங்களாம். நல்ல திட்டம். அவசியமான ஒண்ணு. பெண்கள் மட்டுமில்லை, வயசானவங்க, வழி தெரியாதவங்க எல்லோருக்கும் இது உதவியாய் இருக்கும்.




வாழ்த்துக்கள்.


*******************************************************************************

படிச்சு படிச்சு களைச்சுப்போயிருந்தோம். ரிலாக்ஸுக்காக டீவி பக்கம் வந்தோம். இந்தப்படம் ரொம்ப நல்லாயிருந்தது. பறக்கத்தெரியாத ப்ளூ பறக்கத் தெரிந்த ஜ்வல் ரொம்ப அழகு



படத்தை ரொம்ப ரசிச்சோம்.

படம் பேர் சொல்ல மறந்திட்டேனே!!!  RIO
*******************************************************************************

10 comments:

ADHI VENKAT said...

கலவர செய்தி திகிலை கிளப்புதே...:(

திரிபலா சூர்ணம், எண்ணெய் ஆகியவை உபயோகமான குறிப்புகள். நன்றி.

ஹுஸைனம்மா said...

வழக்கமான உற்சாகத்தோடு உங்களைப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. கைவலிக்கு மருந்து தந்த மாமா மகள் வாழ்க!!

த்ரிபலா சூரணம் சாப்பிடத்தான்னு கேள்விப்பட்டிருக்கேன்; தேய்க்கவும் செய்யலாமா? நல்ல தகவல்.

ஆமா, கைவலி இருக்கும்போது பதிவு போடுறதுபத்தி டாக்டரம்மா என்ன சொன்னாக? :-))))

சாந்தி மாரியப்பன் said...

போன வாரம் கூட மேருவில் வலம் வந்தோம். ட்ரைவர் இந்த வசதியைப்பத்தி மூச்சு விடலை.

RIO பசங்க புண்ணியத்துல நானும் பார்த்தேன். கடைசிக் காட்சியை மட்டும் :-)))))

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

நாங்க போற இடமெல்லாம் இப்படித்தான். அதனால பழகிடிச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

மாமா மகளூக்கு பஞ்சகர்மா செய்ய பழக்குவது கட்டாயமாம். அதில் இந்தப் பொடியைத்தான் தேய்ப்பார்களாம். நல்ல ரிசல்ட்.

கைவலி இப்ப ரொம்பவே தேவலை அதனாலத்தான் பதிவு. இல்லாட்டி நானே வர மாட்டேன். (அந்த அளவுக்கு வலிக்குது. :)

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அப்படியா?? எனக்கு அவங்க கிட்டேயிருந்து மெயில் வந்திருந்ததே!!!

ரியோ இன்னொரு வாட்டி பாக்கணும்னு இருக்கு. படம் பாக்கும் போது எங்க ராமசிலகா ஞாபகம் வந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அப்படியா?? எனக்கு அவங்க கிட்டேயிருந்து மெயில் வந்திருந்ததே!!!

ரியோ இன்னொரு வாட்டி பாக்கணும்னு இருக்கு. படம் பாக்கும் போது எங்க ராமசிலகா ஞாபகம் வந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

ஆயுர்வேதம் எப்பவுமே நல்லதுதான்.
கைவலிக்கு மாமன் மகள் வரவேண்டி இருக்கு பாருங்க.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஆமாம் அதே மருந்து கையில இருந்தும் அதை நான் உபயோகிக்காம இருந்தேன். :(

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

த்ரிபலா சூரணம் - டெஸ்ட் செய்து பார்த்திட வேண்டியது தான்! :)