Wednesday, May 01, 2013

தடங்கலுக்கு வருந்துகிறேன்!!!!!

ஆனந்தமா போய்க்கிட்டு இருந்த தாய்லாந்து பயண பதிவுல பெரிய்ய்ய்ய்ய்ய ப்ரேக் வந்திருச்சு. தம்பி ஊருலேர்ந்து வந்திருந்தாப்ல. அப்புறம் இந்த வண்டிக்கெல்லாம் பட்டி பிரிச்சி, டிங்கரிங் பாக்கறாப்ல நமக்கு சில ட்ரீட்மெண்ட்கள் நடந்தது. அதுல ஒரு கடவா பல்லுக்கு டாடா சொல்ல நேர்ந்தது!!! :(( அது ஏதோ 2 நாள்ல சரியா போயிடும்னு பார்த்தா ஹூம்... பல்லு ரொம்ப அஸ்திவாரத்தை பலமா போட்டு வெச்சிருக்கு. அதனால எலும்பை கொஞ்சம் வெட்டி தான் பல்லை வெளியில எடுத்தாக.

அதனால “நாய் எலும்புத்துண்டை திங்கறது போல சைட் வாங்கி தான் சாப்பிட முடிஞ்சது. 3 நாள் கரைச்சு தான் சாப்பாடு. தையல் எல்லாம் போட்டாங்க. நேற்றுதான் தையல் பிரிச்சாங்க.  பல்லைக்கடிச்சுக்கிட்டு பேசறாப்ல பேசியது வேற வலி. அதான் பதிவு பக்கமெல்லாம் வராம இருந்தேன்!!!


 என் ஃப்ரெண்ட் சாந்தி பத்தி சொல்லியிருக்கேன்ல, அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியை!!! என் கனவை நினைவாக்கின மாதிரி என் சாந்தி இப்ப ஆங்கிலத்தில் டாக்டரேட் வாங்கியாச்சு. கணவனை இழந்து, 6 மாதம் முன்பு ஆதரவா இருந்த அம்மாவையும் இழந்து சாதிச்சிருக்காங்க. போய் ஒரு ஹலோ சொல்லிட்டு வரலமான்னு அயித்தானை கேட்க அதுக்கென்னன்னு சொல்ல மொத்த குடும்பமும் கிளம்பி ஒரு விசிட் அடிச்சு வந்தோம்.

ரோட்டிலேயே வந்து கட்டிக்கொண்டாள் என் அன்புத் தோழி. எங்க அப்பா, அம்மாவும் புதுகையிலிருந்து கிளம்பி வந்திருந்தாங்க.  சொந்த வீடு, கார், டாக்டரேட்னு சாதிச்சிருப்பதில் ரொம்ப சந்தோஷம்னு சொல்ல மேடத்துக்கு ரொம்ப சந்தோஷம்.

ஆப்பம், செட்டிநாட்டு சட்னி எல்லாம் செஞ்சு கொடுத்து அசத்திட்டாங்க.
சாந்தியின் மகன் கிட்ட,” உங்கம்மா எப்ப தம்பி சமையல் கத்துக்கிட்டா? போனவாட்டி வந்தப்ப கூட சமையக்காரம்மா தான இருந்தாங்க!! எப்ப இந்த அதிசயம் நடந்ததுன்னு கேட்க,” அம்மா சமைய்ல்லாம் கத்துக்கலை!!!! ஆனா சமைக்கறாங்க!!!!! நானும் சாப்பிடறேன்னு”!!!! சொன்னாப்ல. நாம தான் டெஸ்டுக்கு இருக்கோம்ல ஆண்டின்னு ஒரே கிண்டலும் கேலியுமா பொழுதை கழிச்சோம்.

எல்லா ஊர்லயும் கரண்ட் கட் இருக்கும். சிதம்பரத்துல வோல்டேஜ் ப்ராப்ளம். தாங்க முடியலை. அருவியா ஊத்துது வேர்வை. ஏசி வோல்டேஜ் இருந்தாதானே வேலை செய்ய!!!

அப்படி இப்படின்னு ஒருவழியா ஊருக்கு திரும்ப வந்து சேர்ந்தோம்.  புதுசா ஹைவேயில் “கும்பகோணம் டிகிரி காபின்னு” நிறைய்ய கடைகள் திறந்திருப்பதை பார்த்தேன். பித்தளை டம்பளரில் காபி. 30 ரூவாவாம்.
அடிக்கற வெயிலுக்கு 35 ரூவா கொடுத்து இளநி தான் குடிச்சேன்.

இனி தாய்லாந்து பயணகுறிப்புகள் தொடரும் என அறிவிச்சுகிட்டு எல்லோருக்கும் குட் நைட் சொல்லிக்கறேன்.


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்த சிரமத்தை எளிதாக சொல்லிட்டீங்க...

தொடருங்கள்....

பழனி. கந்தசாமி said...

என்னது,எளனி 35 ரூபாயா, என்னங்க பகல் கொள்ளையா இருக்கு, தோப்புல ஆறு ரூபாய்தான் கொடுக்கிறான். அக்கிரமம்.

Anonymous said...

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?

கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா?

சிங்கத்துக்குப் பல்போனால் உறுமல் குறைந்துவிடுமா?

மீண்டு(ம்) வந்த தென்றலாருக்கு வரவேற்பு.

மனோ சாமிநாதன் said...

பல் வலியிலிருந்து மீண்டு விட்டீர்களா? உங்கள் தோழிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

மின்வெட்டு இனித்தான் இருக்கிற‌‌து! மே யிலிருந்து தொடங்கி செப்டம்பர் வரை 16 மணி நேரம் இருந்தது சென்ற வருடம்! இந்த வருடம் எப்படியோ?

கோவை2தில்லி said...

தோழி சாதிச்சதில் மகிழ்ச்சி. பாராட்டுகளை தெரிவித்து விடுங்கள்.

நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்...

வெங்கட் நாகராஜ் said...

பயணக் கட்டுரைகளுக்கு நடுவே இன்னுமோர் பயணம்..... :)

அட பல்லு புடுங்கியாச்சா?

தொடரட்டும் பயணக் கட்டுரைகள்... காத்திருக்கிறேன்...

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

சிரமம்தான்.... என்ன செய்ய :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஐயா,

அதேதான். இங்க ஹைதையே பரவாயில்லை போல இருக்கு. 15 ரூவாதான். தமிழகத்தில் பகல்கொள்ளை ரொம்ப நடக்குது. :(

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கடைசி பெஞ்ச்.

அந்தக்கால பாட்டெல்லாம் எடுத்துவிட்டு கலக்கறீங்க.

ஃப்ளையிங் விசிட்டாக புதுகை கூட வந்திருந்தேன். ஒரு போன் கூட போடலைன்னு திட்டிறாதீங்க. பேசக்கூட முடியாம தையல் இருந்ததால் வந்ததும் தெரியாம போனதும் தெரியாம கிளம்பி வந்திட்டேன்.

அப்துல்லாவுக்கு தெரிஞ்சா இருக்கு கச்சேரி எனக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கடைசி பெஞ்ச்.

அந்தக்கால பாட்டெல்லாம் எடுத்துவிட்டு கலக்கறீங்க.

ஃப்ளையிங் விசிட்டாக புதுகை கூட வந்திருந்தேன். ஒரு போன் கூட போடலைன்னு திட்டிறாதீங்க. பேசக்கூட முடியாம தையல் இருந்ததால் வந்ததும் தெரியாம போனதும் தெரியாம கிளம்பி வந்திட்டேன்.

அப்துல்லாவுக்கு தெரிஞ்சா இருக்கு கச்சேரி எனக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க மனோ,
எங்க மீளறது. தையல் இருந்ததால உணவு துகள்கள் போய் ஒட்டிக்கிட்டு இன்பக்‌ஷன் ஆகிடிச்சு. தாடை, காது வரை வலி. இப்பதான் ட்ரஸ்ஸிங், மருந்து, தையல் பிரிப்பு எல்லாம் முடிஞ்சு கொஞ்சம் தேவலாம். சாப்பிடறேன். அதுவே பெரிய விஷயம்.

கரண்ட் கட் நினைச்சா பெம்மா இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

கட்டாயம் தெரிவிக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

ஆமாம். இது எதிர் பாராம :)

இன்னொரு பல்லு பாக்கியிருக்கு :((

வருகைக்கு மிக்க நன்றி