Wednesday, May 22, 2013

மிதக்கும் மார்க்கெட்!!!!!

எல்லாரையும் பிக் அப் செஞ்சுகிட்டு எங்க வேன் ஒரு வழியா 7.30க்கு தான் செல்ல வேண்டிய பாதையில் போக ஆரம்பிச்சது. நாங்க கிளம்பினது FLOATING MARKET பார்க்க... மார்க்கெட்டே மிதக்குதாமே எப்படின்னு போட்டோல பாத்தா தெரியுது. ஆனா அதை அங்கே போய் அனுபவிக்கணுமே!! அதான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தோம். இதுக்கு எதுக்கு 6.30க்கே பிக் அப்??? மேட்டர் இருக்கு அப்புறம் சொல்றேன்.


 இந்த ட்ரிப்புக்காக வந்திருந்த கைட் ரொம்பவே ப்ளான் செஞ்சு எல்லாம் விவரமா சொல்லி அழைச்சுக்கிட்டு போனார்.  Damnoen Saduak Floating Market, Ratchanburi ஏரியாவில் இருக்கு.  இங்க தான் நாங்க போனது. இந்த இடம் பேங்காக்கின் மேற்கு பகுதியில் 80 கிமீ தூரத்தில் இருக்கு. நிறைய்ய மிதக்கும் மார்க்கெட்டுகள் இருந்தாலும், இதுதான் பழமையானது, முதலாவதுமானதாம். எல்லாம் கைட் சொன்னாப்ல. அவரு முக்கியமான விஷயமா சொன்ன ஒரு விஷயம் இங்கே சுத்தி பாருங்க. எஞ்சாய் செய்யுங்க. ஆனா எதையும் வாங்காதீங்க. பேங்காக்கில் தான் விலை குறைவு. இது தெரியாம நிறைய்ய பேர் பெரிய்ய பெரிய்ய பைகளில் பர்ச்சேஸ் செஞ்சுகிட்டு வருவாங்க என்பதுதான்.

பேங்காக்கில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் டைகர் டெம்பிள். அதாவது புலி கோவில். இங்கே புலிகளுடன் நீங்க பழகலாம், நடக்கலாம். ஆனா இதைப்பத்தி நாங்க டூர் ப்ளான் போட்டதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. ஆனா எப்படி போகணும்னு சரியா தெரியாததால விட்டுட்டோம். தவிரவும் பட்டாயாவுல புலியோட போட்டோ, புலிக்குட்டிக்கு பால்னு எஞ்சாய் செஞ்சதுக்கப்புறம் வேணாம் போதும்னு முடிவு செஞ்சிட்டோம்.

ஆனா இந்த மிதக்கும் மார்க்கெட்டுக்கு போய் அங்கேயிருந்து தான் புலிக்கோவில் போகணும்னு கைட் சொன்னதக்கப்புறம்தான் தெரிஞ்சது. எங்க கூட வேன்ல வந்த சிலர் எங்களைப்போல மதிய உணவுக்கு முன்னாடி வரைக்கும் டூர், சிலர் முழுநாள் டூர். சிலர் அந்த முழுநாள் டூரிலும் பேங்காக் வந்து அங்கே லோக்கல் சுத்தி பார்ப்பது அப்படின்னு இருந்தாங்க. கைட் பேர் வாரியா கூப்பிட்டு எல்லா விவரமும் சொல்லி முடிக்க மணி 8.  8.30க்கு நாங்க அந்த FLOATING MARKET  கிட்ட போயாச்சு. அவசர படுத்தறாரு கைட். சீக்கிரம் இறங்குங்க, பின்னால பெரிய்ய பெரிய்ய பஸ் வருது. அப்புறம் கூட்டம் ஜாஸ்தி ஆகிடும்னு துரிதப்படுத்தி ஒரு போட்ல 6 பேர் வீதம் ஒரு ரவுண்ட் அழைச்சுப்போனாப்ல.


அந்த நேரத்துக்கு கடைகள் திறந்திருக்கலைன்னாலும், ஒரு சிலர் படகுல கொண்டு வந்துகிட்டிருந்ததை பார்த்தோம். அந்த படகே வித்தியாசமா நல்லா இருந்தது. அதற்கு பிறகு பார்த்தா செம கூட்டம் அங்கே. இந்த படகு சவாரி, பேங்காக்கிலிருந்து பிக் அப் ட்ராப் எல்லாம் சேர்த்துதான் பணம் கட்டியிருந்தோம். இதைத்தவிர  நாமளாவே  படகு பிரயாணம் செஞ்சுக்கலாம். அதற்கு தனிக்காசு. நாமதான் கொடுக்கணும். அந்த இடத்திலிருந்து திரும்ப பிக் அப் 10.30 மணிக்குத்தான் அப்படின்னு கைட் சொல்லி எந்த இடத்தில் வந்து மீட் செய்யணும்னு சொல்லியிருந்தார். கையில் கொண்டு பொயிருந்த பேஸ்ட்ரியை வெச்சு ப்ரெக் ஃபாஸ்ட் முடிச்சோம்.

எங்க கூட பெங்களூரைச் சேர்ந்த ரெண்டு பிசினஸ்மென்கள் வந்திருந்தாங்க. அவங்க ஹோட்டல்ல ப்ரெக்ஃபாஸ்ட் கட்டி கொடுத்திருந்தாங்க. பிலிப்பைன்ஸ், மணிலான்னு வெவ்வேற நாட்டைச் சேர்ந்தவங்க எங்க கூட அன்னைக்கு வண்டியில வந்திருந்தாங்க. நாங்க தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கூட ரெண்டு பேர் இருந்தாங்க.  அங்கே உட்கார்ந்துக்க வசதியா டேபிள் சேர் போட்டு வெச்சிருக்காங்க. அங்க போய் உட்கார்ந்திட்டோம்.

மக்கள்ஸ் அதிகமானதால படகு சவாரியில் ட்ராபிக் ஜாம், டீசல் வாசனைன்னு ஒரு மார்க்கமா இருந்தது அந்த இடம். அதையெல்லாம் ரசிச்சு பாத்துக்கிட்டு இருந்தோம். நாங்க தனியா படகு எடுத்துக்கலை. ஆனா ரொம்ப அழகா இருக்கு அந்த இடம். சில படகுகளில் சாமான்கள், சாப்பாடுன்னு கொண்டு வர்றாங்க. சில நதி ஓரம் இருக்கும் கடைகளில் படகை நிப்பாட்டி பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க.

ஆனா என்னை ரொம்ப கவர்ந்தது ஒரு பாட்டிம்மாதான். குறைஞ்சது 60 வயசு இருக்கும் அவங்களுக்கு. ஆனா வலுவா துடுப்பு போட்டு லாவகமா படகை நிப்பாட்டி, கயிறு போட்டி கட்டி கொஞ்ச நேரம் விசிறிக்கிட்டு பிறகு திரும்ப போனாங்க. அந்த வெயிலில் அவங்க கஷ்டப்பட்டாவது வேலை பார்க்கறாங்களே தவிர பிச்சை எடுக்கலை!!!


எத்தனை நேரம் தான் உக்காந்தே இருக்கறதுன்னு மார்க்கெட்களில் ஒரு ரவுண்ட் அடிக்க போனோம். முன்னாடியே பேங்காக்கில் அவற்றின் விலை தெரியும் என்பதால கடைகளில் போய் விசாரிச்ச நொடிகளில் அவங்க கையில எடுப்பது கால்குலேட்டர். நம்பரை போட்டு காட்டுறாங்க, பேரம் பேசி விலையை குறைச்சு அதை கால்குலேட்டரில் காட்டி எல்லாம் செஞ்சாலும் பேங்காக்கைவிட குறைஞ்சது 50 பட்டாவது ஜாஸ்தியா இருக்கு.

திரும்ப வந்து உட்கார்ந்துகிட்டோம். இப்ப அந்த இடத்தில் வெயில் அதிகமானதால படகு போக்குவரத்து குறைஞ்சிருந்தது. இந்த வெயிலுக்கு முன்னாடியும், கூட்டத்துக்கு முன்னாடியும் அந்த இடத்துக்கு போய் அதன் அழகை ரசிக்கணும்னு தான் பேங்காக்கிலிருந்து சீக்கிரம் கிளம்பியது!!!!

அங்கேயிருந்து அடுத்து 3 இடத்துக்கு போகலாம். ஆனா அதுக்கு எக்ஸ்ட்ரா எண்ட்ரி டிக்கட் மட்டும் வாங்கணும். போக்குவரத்து ஃப்ரின்னாரு கைட்.
யானை சவாரி,  குரங்கு ஷோ, பாம்பு ஷோ இதுல எங்க போகணும்னு சொல்லுங்கன்னு சொல்ல யானை, குரங்கு எல்லாம் ரொம்ப பாத்தாச்சு. பாம்பு ஷோ போகலாம்னு முடிவு செஞ்சோம். எங்க கூட அந்த பெங்களூர் காரங்களும் வர்றதா சொல்ல, மத்தவங்களை யானை சவாரிக்கும்,  குரங்கு ஷோவுக்கும் இறக்கி விட்டுட்டு திரும்ப வந்து பிக் அப் செஞ்சுப்பதா சொல்லிட்டு கைட் எங்களை இறக்கிவிட வந்தாரு.

FLOATING MARKETல மலைப்பாம்பை கழுத்துல போட்டுக்கிட்டு எடுத்துக்க வேணாம். 250 பட் ஆகும். அதுவே பாம்பு ஷோ பார்க்கப்போற இடத்துல 50 பட்தான்னு சொல்லியிருந்தாரு. ஆனா அப்படி யாரையும் அங்க பார்க்கலை. பாம்பு ஷோவுக்கு எண்ட்ரி 100 பட் ஒரு ஆளுக்கு.

அந்த இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமா இருக்கலாம்னு தோணிச்சு. ஆனா அதையெல்லாம் அந்த ஷோ முறியடிச்சதுன்னு சொல்லலாம். வாசலிலேயே மலைப்பாம்பை கழுத்துல போட்டு போட்டோ எடுக்கலாம்னு சொல்லி அழைப்பு விட்டாங்க. வரும்போது போட்டோ எடுத்துக்கலாம்னு சொல்லி வந்து உட்கார்ந்தோம்.

கொஞ்சம் மேல ஏறி உட்காருங்க பாம்புங்க பறந்து வரும்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருந்தாரு. நாங்க சேஃபா இருக்கட்டும்னு நியாயமான தூரத்துல தான் இருந்தோம். ஆனா சிங்கப்பூர் ஜூவுல செஞ்சா மாதிரி மலைப்பாம்பை பையில போட்டு கட்டி நம்ம கால் கீழ எங்கயும் வெச்சிருக்கப்போறாங்கன்னு ஒரு பயம் இருந்தது.

அந்த ஷோவுல என்ன பார்த்தோம்!!!!  FLOATING MARKET புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் அடுத்த பதிவுல சந்திக்கிறேன்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புலி கோவில் வியக்க வைத்தது... பய(ண)த்துடன் தொடர்கிறேன்...!

Anonymous said...

மிதக்கற மார்க்கெட் படத்திற்காக வெயிட்டிங்

மாதேவி said...

பாம்புகள் பறந்து வந்ததா?

pudugaithendral said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

சீக்கிரமே அடுத்த பதிவில் விடை தெரியும்.

அனைவருக்கும் நன்றி