Monday, May 27, 2013

வெயில் விபரீதம்!!!!

வடிவேலுவோட டயலாக்கை இந்த வருஷம் நம்ம சூரியனார் தான் சொல்லியிருப்பார். என் ட்ய்ட்டி எக்ஸ்ட்ரா ட்யூட்டியால்ல போச்சு!!! அதான் டயலாக். :(

 சூரியனாருக்காக ஒரு பாட்டு டெடிகேட் பண்ணா என்ன பாட்டு பண்ணலாம்???
பதிவின் கடைசில சொல்றேன்!!!



 
வருஷம் தவறாம வெயில் காலம் வருது!! ஒவ்வொரு வாட்டியும் நாம சொல்ற டயலாக் “இந்த வருஷம் வெயில் ஜாஸ்தில்ல!!””  ஆனா இந்த வாட்டி நெஜமாவே ஜாஸ்திதான்னு சொல்ல வைக்குது நிலமை.

வடக்கே 48 டிகிரி வெயிலோடு அனல்காத்து வீசுது.  அதோட எஃபக்ட்டா இங்க ஆந்திராவிலயும் காச்சு காச்சுன்னு வெயில் காச்சுது.

ட்விட்டரில், “ இன்னைய தேதிக்கு க்ரிஸ் கெயிலும், வெயிலும் தான் விடாம அடிப்பதுன்னு!!!” மெசெஜ் தட்டறாங்க.



3 நாள் முன்னாடி ஒரு செய்தி பார்த்து செம ஷாக். பரிட்சை எழுதிட்டு 17 வயசுப்பையன் பஸ்ஸில் ஊர் திரும்பிக்கிட்டு இருந்திருக்காப்ல. வரும் வழியிலேயே அவருக்கு என்னவோ செஞ்சிருக்கு. அப்பாவுக்கு போனைப்போட்டு நிலமையை சொல்ல வழியில ஒரு ஊர் பேர் சொல்லி அங்கனேயே இறங்கிக்க, நான் வந்து கூட்டிகிட்டு போறேன்னு சொல்லியிருக்காரு. அப்பாரும் வந்து சேர்ந்தாரு. ஆனா அதுக்குள்ள அந்த பையன் சன்ஸ்ட்ரோக் வந்து இறந்துவிட்டாரு. :(((  மனசு ரொம்ப வருஷமா இருந்தது.



இந்த வருடம் ஏப்ரல் 1ஆம்தேதியிலிருந்து இன்னைய தேதிவரைக்கும் ஆந்திராவில் வெயிலால் இறந்தவங்க எண்ணிக்கை 501!!!!  அவ்வளவு வெயில். 44 டிகிரியே தாங்கமுடியலை. போன வருஷமும் இதே அளவுதான் இங்கே இருந்தது ஆனா அதை கூட தாங்க முடியாத நிலமைக்கு போயிருக்குன்னா என்ன சொல்ல??!!!

விசாகப்பட்டிணம் கடற்கரைக்கு அருகில் இருக்கு. அந்த ஊர் ஏர்போர்ட் கிட்ட வெயில் 47 டிகிரி பதிவாகிருக்கு.  குண்டூரில் இதே நிலமை.  ஹைதையிலும் சரி, மற்ற ஊர்களீலும் சரி ஆள் நடமாட்டமே அதிகம் இல்லாம இருக்கு.



காலை 6 மணிக்கே மணி 9 ஆகிடிச்சோன்னு நினைக்கும் படி வெயில் ஆரம்பிக்குது, மாலை 7 மணிக்கும் 37 டிகிரி வெயில் காட்டுது. ம்ம்முடியலை!!!

எங்க அவ்வா  இந்த அக்னி நட்சத்திரத்தைப் பத்தி ஒரு வாக்கியம் சொல்வாங்க. அதாவது சித்திரை பின்னேழு, வைகேசி முன்னேழு நாளும் அக்னி நட்சத்திரம்னு. ஆனா பாருங்க மே 4 ஆம் தேதி துவங்கின அக்னி நட்சத்திரம் நாளைக்குத்தான் முடியுது!!!!



எவ்வளவுதான் தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கவே இல்லை. இதனால சோறு செல்ல மாட்டேங்குது.  ஜூன் 5 தேதி வாக்குல மழைக்காலம் துவங்குதுன்னு சொல்றாங்க. ஆனா இன்னைக்கு காலேயிலேர்ந்தே சூரியனால் ரெஸ்ட் எடுக்க போயிட்டாரு போல. :)) நேற்றே  ஆந்திராவில் சில இடங்களில் மழை பெய்திருக்குன்னு சொல்றாங்க.

இயற்கையை நாம ஓண்ணும் செய்ய முடியாதுன்னாலும், இந்த அளவுக்கு வெயில் அடிச்சு மக்களை வாட்டி வதக்குதுன்னா, சுற்று சூழலில் ஏதாவது மாற்றம் கொண்டு வரணுமா இல்லையா??? இதற்கு தீர்வு என்னன்னு கண்டு பிடிச்சு  மக்களை காப்பாத்தினாதான் ஓட்டு கேட்டு ரோட்ல போக முடியும்!!! ஓட்டு போடவாச்சும் மக்கள் இருக்கணும்ல!!!!

இப்பவும் என்னவோ போடா மாதாவா தான் நமக்கு!!!

இதான் அந்த பாட்டு!!!!!




15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தாங்க முடியலே...!

வெங்கட் நாகராஜ் said...

நிஜமாவே அண்ணன் கிங் தான்! :) தில்லியில் வெயில்! அட நீங்க வேற அப்படி ஒரு காச்சு காய்ச்சுது! :( பேசாம தண்ணித் தொட்டிக்குள்ளேயே இருக்கலாம்னு பார்த்தா டாங்க் தண்ணீர் வென்னீரா இருக்கு!

அம்பாளடியாள் said...

வருமுன் காப்போம் வெய்யிற் கால பகிர்வோ !! அருமை வாழ்த்துக்கள் தோழி பொதுநலன் காக்கும் பகிர்வு இது
தொடரம் ..

அப்பாதுரை said...

வெயிலில் நகைச்சுவை வத்தாம இருந்துச்சே..

அது சரி, வெயிலுக்கு அரசாங்கம் என்னங்க செய்ய முடியும்? இலவச குடை தரலாம்னு சொல்றீங்களா ஒருவேளை?

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

அதே தான்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,
தலைநகரம் எப்படியோ அவ்வழியில் நாங்களும் :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அம்பாளடியாள்,

வருமுன்னா, இங்கே வந்தபின்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாதுரை,

வெயிலுக்கு அரசாங்கம் என்னன்னவோ செய்யலாம்.

சுற்றுசூழல் மாசு அடையாம தடுக்க என்னென்ன வழி உண்டோ அதை செய்யலாம்.

குளங்களை ஒழிச்சு வீடு கட்டுவதை தடுக்கலாம்.

நிலத்தடி நீரை பெருக்க வழி செஞ்சா வெயில் பாதிப்பு குறையும்

மரம் வைக்கலாம், குடை வெக்கலாம்.

தஞ்சாவூர்ல ஒரு பஸ் ஸ்டாப் ஏசியில போட்டிருக்காங்களாம். ஆனா பாருங்க கரண்ட் கட்!!!

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாதுரை,

வெயிலுக்கு அரசாங்கம் என்னன்னவோ செய்யலாம்.

சுற்றுசூழல் மாசு அடையாம தடுக்க என்னென்ன வழி உண்டோ அதை செய்யலாம்.

குளங்களை ஒழிச்சு வீடு கட்டுவதை தடுக்கலாம்.

நிலத்தடி நீரை பெருக்க வழி செஞ்சா வெயில் பாதிப்பு குறையும்

மரம் வைக்கலாம், குடை வெக்கலாம்.

தஞ்சாவூர்ல ஒரு பஸ் ஸ்டாப் ஏசியில போட்டிருக்காங்களாம். ஆனா பாருங்க கரண்ட் கட்!!!

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

அட ....பாவமே.

கத்தரிவெயிலும் சூட்டில் காய்கிறதே:))

நாங்கள் இப்போது தப்பி இருக்கின்றோம்.

Anonymous said...

நீங்க சொன்னாப்ல இந்த வருடமும் பட்டையைக் கிளப்பியது நிஜம்தான். தமிழகத்தில் வேலூருக்கு அடுத்த இடத்தில் கியூ கட்டி நின்றது திருச்சி. வெயிலோ வெயில்

பால கணேஷ் said...

தோள்ல ஒரு ஸ்டாண்ட் வெச்சு பாட்டரி ஃபேன் வெச்சுக்கிட்டு சாலையில போகலாமான்னு தோணுற அளவுக்கு வெயில். ஆனா நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு வருஷமும் ‘ஹப்பா... இந்த வருஷம் மாதிரி எந்த வருஷமும் வெயில் இல்ல’ன்னு நாம சொல்லத் தவறுவதில்ல...!

pudugaithendral said...

வாங்க மாதேவி

வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கடைசி பெஞ்ச்,

திருச்சி வெயில் சொல்லணுமா?? திருச்சியோட கம்பேர் செய்யும் போது புதுகை கொஞ்சம் கூல். :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க பாலகணேஷ்,

அப்படித்தான் எங்களுக்கு ஒரு யோசனை.

வருகைக்கு மிக்க நன்றி