Thursday, June 13, 2013

நடுங்கித்தான் போனோம்!!!!

மிதக்கும் மார்க்கெட் படங்கள் இது.


 பாம்புன்னா படையும் நடங்கும்னு சொன்னது சரிதான். பாம்பை இவ்வளவு கிட்டத்துல எப்பவும் பாத்தது இல்லை!!!  ஷோ ஆரம்பிச்சது.  ஒரு வெள்ளைப்பையிலிருந்து பாம்பை எடுத்து போட்டாரு இந்த ஆரஞ்ச் சட்டைக்காரர். என்ன செய்யப்போறாருனு பார்த்தா அந்த பாம்பை உசுப்பேத்தி விட்டுக்கிட்டு இருந்தாரு.

 அப்படி இப்படி திருப்பி அது கொத்த கொத்த வருது. அப்புறம் அதை கையில பிடிச்சு  முகத்துக்கு நேரா கொண்டாந்தாரு பாருங்க. அப்படியே ஒண்ணு போட்டுடுமோன்னு இருந்துச்சு. ஆனா அதை பிடிச்சு அப்படியே அதோடு வாயிலேர்ந்து விஷத்தை எடுத்தாரு!! இந்த மாதிரி காட்சிகளை டிஸ்கவரி சேனல்ல தான் பார்த்திருக்கேன். நேரடியா பார்த்தது ஒரு அனுபவம்.

 விஷத்தை எடுத்ததும் அப்படியே பிடிச்சு கொண்டாந்து பார்வையாளர்கள் கிட்ட காட்டி தொட்டு பாக்க சொன்னாங்க. சாமி வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா பாருங்க ஆஷிஷ் தொட்டு பார்க்கறதை!!! அடுத்ததா மலைப்பாம்பு.  அது ஒரு இடத்துல நிக்காம அங்கயும் இங்கயும் பாஞ்சுகிட்டு இருந்தது. அதாவது ஒரு தடுப்பு மாதிரி கட்டி அதுக்கு நடுவுல இந்த ஷோ நடக்குது. சுத்தி கொஞ்சம் தண்ணி இருக்கு. அந்த தண்ணியில விழுந்ததும் அப்படியே மேலே ஏறப்பாக்குது பாம்பு. வேகமா ஏறுவது பாய்வது மாதிரி தெரியுது.  அந்த மலைப்பாம்பையும் பிடிச்சு பக்கத்துல கொண்டாந்து அதோட பல்லைக் காட்டினாங்க.
 அடுத்ததா கீரி சண்டை. ஏற்கனவே ஒரு கண்ணாடி கூண்டுக்குள்ள கீரி சுத்திக்கிட்டு இருந்துச்சு. அதை திறந்து விடுவாங்களோன்னு நினைச்சா பாம்பை பிடிச்சு அந்த கூண்டுக்குள்ள போட்டுட்டாங்க. கீரி பாம்பை என்னா பாடு படுத்தும்னு தெரியும். கண்ணால பார்தது இல்லை. கொழும்புவில் அதிகமா மழை பெய்யும் பொழுது எங்க வீட்டு தோட்டத்துல கீரி, பாம்பு ரெண்டு சண்டை போடும்.  ஆனா இங்க நேர்ல பார்த்தோம்.

 பாம்பை பிடிக்க கீரி முன்னேற அதுக்கிட்டேயிருந்து தன்னை பாதுகாக்க அந்த பாம்பு பட்ட பாடு, என்னால பார்க்க முடியலை.  கொஞ்சம் போராடிய பிறகு பாம்பின் தலை கீரியின் வாய்க்குள்ள!!!! அப்ப என் மனசுல தோணியது இதுதான். இந்த ஷோ தினமும் நடக்குதுன்னா, ஒவ்வொரு ஷொவுக்கும் ஒரு பாம்பு வீதம் பலியான இவங்க கிட்ட பாம்பு எப்படி இருக்கும்!!! ஷோவுக்காக பாம்பை பலி கொடுக்கறாங்களே அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போதே ஒரு கம்பால பாம்பை பிடிச்சு மேலே இழுத்து திரும்ப அந்த பையில போட்டு கட்டினதும்தான் உயிர் வந்துச்சு.

பயப்படாதீங்க.  பாம்பை பத்தின ஒரு பாடமா இந்த ஷோ இருக்கணும் என்பதுதான் எங்க எண்ணம்னு ஷோ நடத்துறவரு உடைஞ்ச ஆங்கிலத்தில சொன்னாப்ல. அடுத்து 3 பாம்புகளை ஒருத்தர் எப்படி பிடிப்பாரு??   ரெண்டு கையிலயும் ஒண்ணொண்ணு பிடிச்சிட்டு மூணாவது பாம்பை வாயில் கவ்வி பிடிச்சாரு பாருங்க!!!!


 நாங்க வெளியில வரும்பொழுது பிரமிப்பா இருந்தது. அதுக்குள்ள எங்க கைட் மத்தவங்களையும் பிக் அப் செஞ்சுகிட்டு வந்திருந்தாரு.  பெங்களூர் கார நண்பர்கள் வண்டியில இருந்த மத்தவங்க கிட்ட நீங்கல்லாம் நல்லதொரு ஷோவை மிஸ் செஞ்சிட்டீங்கன்னு சொல்ல அவங்க நாங்க எடுத்திருந்த போட்டோ வீடியோக்களெல்லாம் பார்த்து அசந்து போயிட்டாங்க. ஆமாம்னு வருத்தமா சொல்லிக்கிட்டாங்க.

அங்கேயிருந்து கைட் எங்களை அழைச்சுக்கிட்டு போனது மரவேலைப்பாடுகள் நடக்கும் இடத்துக்கு. அங்கேயிருந்து குருப் குருப்பா பிரிச்சு அவங்க அவங்க போக வேண்டிய இடத்துக்கு பிரிச்சு அனுப்புவாங்க.

10 நிமிஷம் தான் டைம்.அதுக்குள்ள நீங்க எதுவும் வாங்கணும்னா வாங்கிக்கங்கன்னு சொல்ல, சும்மா சுத்தி மட்டும் பாத்தோம். நுணுக்கமான வேலைப்பாடுகள். அருமையா செஞ்சிருந்தாங்க.


 சிரத்தையா செஞ்சுகிட்டு இருக்காரு பாருங்க. அவர்கிட்ட வேலை ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல அவர் முகமெல்லாம் சந்தோஷம்.


நாங்க திரும்ப பேங்காக் போகணும். அதனால பேங்காக் போக கூடிய வேனில் எங்களை ஏத்தி விட்டாரு கைட். வேற ஒரு கைட் திரும்ப பேங்காக் போக வேண்டியவர் எங்க கூட வந்தாரு.   பேங்காக்கில் இருக்கும் அரண்மனையை சுத்தி பார்க்க 4 பேர் போய்க்கிட்டு இருந்தாங்க.அவங்களை இறக்கி விட்டுட்டு அப்புறம் எங்களை எங்க ஹோட்டலில் இருக்குவாங்கன்னு சொன்னாரு கைட்.

வெளிநாட்டுக்கு போகும்போது அந்த இடத்தில் எப்படி என்ன ஏதுன்னு பலருக்கு தெரியரதில்லை. அரண்மனைக்கு போக இருந்த தம்பதியர் ரெண்டு பேருமே ஷார்ட்ஸ் போட்டு வந்திருந்தாங்க. கோவில், அரண்மனை இந்த மாதிரி இடங்களுக்கு இந்த மாதிரி உடைகள் அனுமதி இல்லை. இதைப்பத்தி அவங்களுக்கு தெரியவும் இல்லை, அவங்க கைட்டும் ஏதும் சொல்லலை போலிருக்கு.

ஏற்கனவே லேட்டாகியிருக்கு, இப்ப நீங்க வேற இந்த உடையில இருக்கீங்க.
மேலே கட்ட சாரம் எதுவும் தேடி எடுப்பதற்குள் இன்னும் நேரமாக இருக்கணும்னு கொஞ்சம் காட்டாவா அந்த கைட் சொல்லிக்கிட்டு இருந்தாரு.
செம ட்ராபிக்!!!! வழக்கம்போலன்னு சொல்லலாம்.

சுமார் 2.30 மணிவாக்கில் எங்க ஹோட்டலில் இறக்கிவிட்டாங்க. பக்கத்துல தான் நாங்க சாப்பிட போகும் ரெஸ்டாரண்ட். அதே மெனு... ஆனா இருந்த டயர்டுக்கு சாப்பிட்டு படுக்க போகலாம்னு ஆகிடிச்சு.

அன்னைக்கு ஹோலின்னு நினைக்கிறேன். அந்த ஹோட்டலோட ஓனர் முன்னா மப்பும் மந்தாரமுமா இருந்தாரு. ஆஷிஷுக்கு அயித்தானுக்கு நல்லா
கலரா திலகம் வெச்சு ஹேப்பி ஹோலி சொன்னாரு. தட்டு தடுமாறி எனக்கும்
அம்ருதாவுக்கும் கலர் கொடுக்க கொஞ்சமா எடுத்து வெச்சுக்கற மாதிரி செஞ்சேன்.

அப்புறமும் அயித்தானையும் ஆஷிஷையும் விடாம துரத்த நாங்க தப்பிச்சா போதும்னு ஓடியாந்து ஹோட்டலில் வந்து படுத்ததுதான் தெரியும்.


4 comments:

Ranjani Narayanan said...

நீங்க எழுதியிருப்பதை படிச்சு நாங்களும் நிஜமாகவே நடுங்கிட்டோம்!

நம்முடன் கூட வரும் வழிகாட்டிகள் நமக்கு முன்னமேயே உடை பற்றியெல்லாம் சொல்லிவிடவேண்டும்.
அத்தனை தூரம் சென்றுவிட்டு உடையினால் சில இடங்கள் பார்க்க முடியலைன்னா எப்படி இருக்கும்?

புதுகைத் தென்றல் said...

வாங்க ரஞ்சனிம்மா,

வெளிநாடுன்னாலே பலர் ஸ்லீவ் லெஸ், ஷார்ட்ஸ் போட்டுக்கலாம்னு நினைச்சிடறாங்க. ஆனா சில இடங்களுக்கு உடைகட்டுப்பாடு இருக்கும் என்பதை முன்னக்கூட்டியே இவங்களும் தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

கீரியும் பாம்பும் படிக்கவே கலங்கி விட்டது.

புதுகைத் தென்றல் said...

வாங்க மாதேவி,

பார்க்கும் போது எனக்கும் கவலையா இருக்க பாதி நிகழ்ச்சி பார்க்கலை. பாம்பை பிடிச்சு பையில போடும்போதுதான் கண்ணைத் திறந்தேன்.

வருகைக்கு மிக்க நன்றி