எத்தனை முறை திட்டம் போட்டு போக முடியாமல் போயிற்று!!! ஏதேதோ தடங்கல்கள். தானே புயல் அடித்து அந்த பக்கமெல்லாம்
பயங்கர மழை. ஏதோ காரணத்தால் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தது. எப்பொழுது நடக்குமோ அப்போது பாக்கலாம் என்று இருந்தேன். ஆனால் இந்த முறை முன்பே திட்டமெல்லாம் இல்லை. ஆனால் திருவாரூரிலிருந்து குறைந்தது 3 மணிநேரத்தில் போய்விடலாம் என டிரைவர் சொல்ல அயித்தான் ப்ளான் செய்து அழைத்து சென்றார். இந்த திட்டத்தை என்னிடம் அயித்தான் சொன்னதும் என்னால் என்னையே நம்ப முடியவில்லை.
அதே அதிர்ச்சியுடன் தான் தர்கா வாசலில் நுழைந்தேன். நானா? நானே தான் நாகூர் ஆண்டவர் சந்நிதிக்கு அருகிலா... எனக்குள் சந்தோஷமான கலவரம்.
அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க கூட்டம் இருந்தது. ஆனால் தள்ளுமுள்ளு லெவலில் இல்லை. யாரும் வருவார், யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவன் சந்ந்தியில் என்று வாலி அவர்கள் எழுதியிருப்பது உண்மை தான். இந்துக்கள் பெரும்பான்மையாக இந்த தர்கா வந்து வணங்குகிறார்கள். நான் போயிருந்த போது கூட பெரிய பெரிய வேன்களில் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர்.
நாகூர் ஆண்டவருக்கு ஷால் சமர்ப்பிக்க நினைத்தேன். கோவில் நுழைவாயிலேயே ஷால்கள் வாங்கிக்கொள்ளலாம். அவருடன், மகன், மருமகள் மூவரின் தர்காவும் உள்ளே இருக்க அவற்றிற்கும் சேர்த்து சமர்ப்பிக்க வாங்கி கொண்டோம்.
பெண்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது. அதாவது சமாதிக்கு அருகில் ஆண்கள் தான் அனுமதி. 5 ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கி உள்ளே செல்லாம்.
நானும் அம்ருதாவும் வெளியே இருப்பவரிடம் ஷாலை கொடுத்துஉட்கார்ந்தோம். மயிலறகை வைத்து ஜபித்து மந்தரித்தார்கள். நாங்கள் கொண்டு சென்ற ஷாலை எங்கள் தலையில் வைத்து ஜபித்த பொழுது எனக்குள் ஒரு சொல்ல முடியாத வைபரேஷன்!!!! இவை நடந்து முடிய 10 நிமிடங்கள் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் நான் என்னை அறியாமலேயே வஜ்ராசனத்தில் இருந்தேன். காலில் எந்த வலியும் இல்லை!!!
நோன்பு நேரமாக இருப்பதாலா என்று தெரியவில்லை உங்களால் இயன்ற காணிக்கையை கொடுங்கள் என்று கேட்டார்கள். கையிலிருந்த தொகை கொடுத்தேன். இல்லை இன்னும் கூட கொடுங்கள் என்று வற்புறுத்தியது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆண்டவன் சந்நிதியில் நின்று பொய்யுரைக்கவில்லை என் கைப்பையில் நீங்கள் இதற்கு மேலிருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல என்ன நினைத்தாரோ தெரியவில்லை
சரி உங்கள் இஷ்டம் என்றார்.
போட்டோ எடுக்கலாமா என்று கேட்டு போட்டோ எடுத்தேன். இவ்வளவு நடந்து கொண்டிருந்த பொழுதும் என் வியப்பு எனக்கு. எத்தனை வருட கனவு இந்த தரிசனம்!!! பிள்ளைகளுக்கு கூட வேற்று மத கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யும் பாக்கியம் அருமை என்று மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
முகப்பை நான் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த பொழுது ஆஷிஷ் வந்துவிட போட்டோவில் ஆஷிஷ். (ஷார்ட்ஸ் அணிந்து செல்ல கூடாது என்று அதன் மேல் லுங்கி சுற்றியிருக்கிறார். தர்காவில் கொடுத்தது அவர்களிடம் திருப்பி கொடுத்து விடவேண்டும்)
தர்காவின் பின் பகுதியில் ஒரு குளம் இருக்கிறது. இது புனித நீராக கருதப்படுகிறது. இந்து வழக்கப்படி நாதஸ்வரம் இசைப்பது இந்த கோவிலில் வழக்கமாக இருப்பது போல பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடமும் இருக்கிறது.
ஐந்தாவது மினார் என்று அழைக்கப்படும் இந்த கோபுரத்தை கட்டித்தந்தது தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர் பிரதாப் சிங்.
பிள்ளைகளிடம் திரும்ப திரும்ப என் வியப்பை சொல்லிக்கொண்டே வந்தேன். அயித்தானுக்கு எத்தனை முறை என் நன்றியை சொல்லியிருப்பேன் என்று எனக்கு தெரியாது. :)) கிளம்ப எத்தனித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கும் அம்ருதாவுக்கும் மந்தரித்தவர் இந்த பிரசாதத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
அங்கேயிருந்து நீலக்கடலின் ஓரத்தில், நீங்கா இன்ப காவியமாக அருள்மழை பொழியும் அன்னையை தரிசிக்க சென்றோம்.
அடுத்தது அது பற்றிதான் பதிவு

27 comments:
இனிய பயணம்... ஆனால் காணொளி அல்லது mp3 தளத்தில் வரவில்லை... கவனிக்கவும்...
வாங்க தனபாலன்,
மு.க.முத்து குரலில் அருமையான நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா பாடல் அது. திரும்ப முயற்சித்தும் இணைக்க முடியவில்லை.
வருகைக்கும் சுட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள்
இனிய நினைவுகள்..அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_18.html
மணிராஜ்: சந்தனக்கூடு திருவிழா
அழகான அனுபவம்...
நாகூர் ஆண்டவர் வணங்கிக் கொண்டேன்.
தொலைக்காட்சியில் பார்த்திருக்கின்றேன்.
வாங்க இராஜராஜேஸ்வரி,
வருகைக்கும் லிங்குக்கும் மிக்க நன்றி. அவசியம் வந்து பார்க்கிறேன்
வாங்க சங்கவி,
மறக்கமுடியாத இனிமையானன்னு கூட சொல்லலாம். :)
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க மாதேவி,
வருகைக்கு மிக்க நன்றி
இந்துவாக இருப்பவர்களும் வணங்கும் கடவுள் நாகூர் ஆண்டவர்! நான் சென்றதில்லை என்றாலும் பலமுறை அவரை நினைத்து தியானம் செய்துள்ளேன்! நல்ல பகிர்வு நன்றி!
இனிய தரிசனம்..பிரசாதமா என்ன கொடுத்தாங்க?.
அங்கே காணிக்கை கண்டிப்பா வசூல் செய்யறாங்க. இங்கே ஹாஜி அலியில் உள்ளே நுழையும்போது சாதர் (பூப்போர்வை)வாங்கிப்போகச்சொல்லி கையைப்பிடிச்சு இழுக்காத குறைதான்.
தொடர்பதிவு : http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html
தொடர வாழ்த்துக்கள்...
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....
http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html
நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்....
நட்புடன்
ஆதி வெங்கட்.
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....
http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html
நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்....
நட்புடன்
ஆதி வெங்கட்.
வாங்க சுரேஷ்,
நானும் அவரை நினைத்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சுரேஷ்,
நானும் அவரை நினைத்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சுரேஷ்,
நானும் அவரை நினைத்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
சர்க்கரை, பூ, மந்திரித்த எண்ணெய், கயிறு இதான் பிரசாதம்.
வசூல் கொஞ்சம் கராறா இருந்தது தான் மனதுக்கு வருத்தமா இருந்தது.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
சர்க்கரை, பூ, மந்திரித்த எண்ணெய், கயிறு இதான் பிரசாதம்.
வசூல் கொஞ்சம் கராறா இருந்தது தான் மனதுக்கு வருத்தமா இருந்தது.
வருகைக்கு மிக்க நன்றி
சாதர் நானாக வாங்கி கொடுத்தது. :)
வாங்க தனபாலன்,
லிங்குக்கு நன்றி
வாங்க கோவை2தில்லி,
அருமையான தலைப்பு கொடுத்திருக்கீங்க வர்றேன் கண்டிப்பா பதிவு இருக்கு.
நன்றி. (ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்தி தந்ததற்கு)
இனிமையான இடம்.... இன்னும் செல்லவில்லை....
இங்கேயிருக்கும் அஜ்மேர் செல்ல நினைத்திருக்கிறேன். ஆனால் ஜமா சேர்க்க முடியவில்லை. :(
ஸாரி ஃபார் லேட் கமிங். :-)
மாற்றுமத வழிபாட்டுத் தலத்திற்கும் சென்று வரும் உங்கள் பெருந்தன்மை எனக்கு வியப்பாக இல்லை - உங்களைப் பற்றி நன்கு அறிந்ததினால். :-)))
//சர்க்கரை, பூ, கயிறு //
சின்ன வயசுல, நாகூர் போறவங்க கொண்டு தரும் அந்த உலர்ந்த ரோஜா இதழைச் சாப்பிட்டு, கையில் சிவப்புக் கயிறையும் கட்டிக்கொள்வது ரொம்பப் பெருமையாயிருக்கும். :-)))
முன்காலத்தில் இஸ்லாமை அறிமுகப்படுத்தி, பரப்பிய நாகூர் ஆண்டவர் அவர்கள் மறைந்ததும், அவர்மீதிருந்த அன்பினால், மக்கள் அவரது அடக்கஸ்தலத்தை வழிபாட்டுத் தலமாக ஆக்கி விட்டார்கள். அதுதான் நாகூர் தர்கா.
ஆனால், இஸ்லாம் மதத்தில் உருவ வழிபாடு, தனிமனித வழிபாடு இவற்றிற்குக் கடுமையான தடை உண்டு. நாகூர் வழிபாட்டுத்தலம் அதை மீறியது என்பதால் இஸ்லாமை முறையாக அறிந்த(பின்னர்) முஸ்லிம்கள் அங்கு செல்வதில்லை.
முறையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் என்பது எந்தவித ஆடம்பரம், உருவங்கள் இல்லாத பள்ளிவாசல் என்பதே. இங்கு ஐந்து வேளை கூட்டாகத் தொழுகைகள் மட்டுமே நடக்கும். வேறெந்த தரிசனம், காணிக்கை, அன்பளிப்பு, நேர்ச்சை எதுவும் கிடையாது - செய்யக்கூடாது.
//வசூல் கொஞ்சம் கராறா இருந்தது//
இது ரொம்பத் தப்பு. இதன் காரணமாகவும் இஸ்லாமிய சமூகம் தர்காக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பணத்தாசை பிடித்த சிலரால் இத்தவறு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மக்களும் குற்றம் வந்துவிடுமோ என்று பயந்து கேட்பதைக் கொடுப்பதால் அவர்களுக்கு ஆனந்தம். :-)))
வாங்க சகோ,
அஜ்மர் ஆசை எனக்கும் இருக்கு. பாப்போம். எல்லாம் அவன் சித்தம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சகோ,
அஜ்மர் ஆசை எனக்கும் இருக்கு. பாப்போம். எல்லாம் அவன் சித்தம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அம்பாளடியாள்,
வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா,
ரொம்ப கறாரா கேட்டப்ப நானும் கொஞ்சம் கெட்டியான குரலில் சொன்னதக்கப்புறம் தான் சரின்னு விட்டாங்க. இந்த விஷயத்துல இந்து மதக்கோவில்களும் விதிவிலக்கல்ல. அது சின்னதோ பெரியதோ.
சென்ற குரு பூர்ணிமாவுக்கு் அருகே இருக்கும் சாயிபாபா கோவிலுக்கு போய் அன்னதானத்திற்கு சாமான்கள் வாங்கி கொடுக்க என்னால் ஆன தொகையை எடுத்து சென்றிருந்தேன். ஒரு பெரிய்ய லிஸ்ட்டை கையில் கொடுத்து இதை வாங்கி வாங்க என்றார்.
என்னால் இவ்வளவு தான் முடியும் என்றுசொல்ல “கோவிலில் வைத்து கேட்கிறேன் அப்புறம் உங்கள் இஷ்டம்!!” என்றார்.
உண்மையில் ஷீரடி சாயி அவர்கள் கொடுத்ததை வாங்கி கொள்ளும் மகான். அவர் கோவிலிலேயே இப்படி ..
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment