Tuesday, July 30, 2013

வேளாங்கண்ணி மாதா அருளை வியந்து போற்றுவமே.............................

நாகூரிலிருந்து 45 அல்லது ஒரு மணிநேர பயணத்தில் வேளாங்கண்ணி. அன்று ஞாயிற்றுக்கிழமை. நியாயமான கூட்டம் இருந்தது. பரபர என ஊர் இருக்கு.
(படங்கள் உதவி கூகுள்) முடவனுக்கு காட்சி தந்த இடத்திலும் சின்னதாக ஒரு ஆலயம் கட்டி வைத்திருக்கிறார்கள். மாதாகுளம் அங்கே தான் அருகில். இந்த சின்ன கோவிலுக்கு எதிரில் மணல் பரப்பிய பாதை இருக்கிறது அதை புனிதபாதை என்கிறார்கள். அந்த பாதையில் முழங்காலிட்டு நடந்து கோவிலை அடைவது போன்ற நேர்ச்சகைகள் செய்கிறார்கள். நாங்கள் போயிருந்த பொழுது வெயில் தகித்து கொண்டிருந்தது. ஆனாலும் சிலர் ரொம்ப கஷ்ட பட்டு நேர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். அலைகடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் மெயின் கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்கு அருகிலேயே வெள்ளியில் உருவாரம், வீடு போன்றவைகள் கிடைக்கின்றன. வாங்கி அங்கே வைத்திருக்கும் உண்டியலில் நேர்ந்து கொண்டவர்கள் போடுவதை பார்க்கலாம். எனக்கும் நேர்ச்சி இருந்தது. கோவிலில் சிலர் தென்னம்பாளைகளையும் காணிக்கையாக செலுத்துவதை பார்த்தேன். கூட்டமாகத்தான் இருந்தது உள்ளே. ஆனாலும் கருணை பொங்க அன்னை அருள் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.
அன்னையின் முன் மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்தேன். தன்னைக்காண இத்தனை வருடங்கள் கழித்தாவது வரவழைத்ததற்கு நன்றி சொல்லி அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். ஆலயத்தில் அற்புதமான வைப்ரேஷன்...
தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்களை மேலே உள்ள படத்தில் பார்க்கலாம். எப்படியோ எனது கனவு நனவாகி நாகூர், வேளாங்கண்ணி தரிசனம் இனிமையாக நடந்தது. இந்த கோவில்களை தரிசனம் செய்ததை பெருமையாக நினைத்தனர்கள் பிள்ளைகள். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் ஒரு எட்டு போய் அம்மா அப்பாவை பார்த்து விட்டு போகலாம் என்று புதுகை பயணம் :) புதுகை பதிவு அடுத்து. "ltr" style="text-align: left;" trbidi="on">

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான ஆலயம்... பயணத்தை தொடர்கிறோம்...

sathishsangkavi.blogspot.com said...

படமும் தகவலும் அருமை...

இராஜராஜேஸ்வரி said...

ஆலயத்தில் அற்புதமான வைப்ரேஷன்...

உணர்ந்து பகிர்ந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

ஹுஸைனம்மா said...

//அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். //

நண்பேன்டா!! :-)))

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் உங்கள் பயண அனுபவம் மேலும் இனிதாக அமையட்டும் !

”தளிர் சுரேஷ்” said...

இனிய ஆன்மிக பயணத்தை அழகாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,

வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சங்கவி,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

அந்த அனுபவம் இனிமையானதாக இருந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

எஸ்ஸூ :)

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அம்பாளடியாள்,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பயணம்......

தொடரட்டும்....

நானும் தொடர்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

// நாகூரிலிருந்து 45 அல்லது ஒரு மணிநேர பயணத்தில் வேளாங்கண்ணி //
என்பதனை நாகூரிலிருந்து 45 நிமிடம் என்று திருத்தவும். பதிவிற்கு நன்றி!

Ranjani Narayanan said...

உங்களின் பிரார்த்தனை எங்கள் செவிக்கும் எட்டியது. நன்றிங்கோ!