நாளை வரலட்சுமி பூஜை. ஆந்திராவில் வரமஹாலட்சுமி பூஜை என்றும் சொல்கிறார்கள். இங்கே பிராம்மணர்கள் மட்டுமல்லாமல்
பொதுவாக அனைவரும் வரலட்சுமி பூஜை செய்கிறார்கள்.
வரலட்சுமி பூஜைக்கு தங்கம் வாங்குவது இங்குள்ளவர்களின் பழக்கம்.
புதுபுடவை அணிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் “வஸ்த்ரம் சமர்ப்பயாமி” என்று சொல்லி பூஜை செய்யும் பொழுது புது புடவை வைத்து பூஜை செய்து அதை பின்னர் அணிந்து கொள்கிறார்கள். இங்கே புளியோதரை, வடை, பாயசம் கட்டாயமான நைவேத்தியம். தமிழகத்தில் ஒரு சிலர் கொழுக்கட்டை வகைகள் செய்தும் நைவேத்தியம் செய்வார்கள். சிலர் அன்னம் தவிர்த்து விரதம் இருப்பார்கள்.
9 பத்மம் வைத்து பூஜை செய்து, தோரத்தில் ஒன்பது முடி போட்டு வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வார்கள். Gummam அதாவது வாசற்படிக்கும் பூஜை செய்வது ஆந்திரா பத்ததி. வாசற்படியை நன்கு துடைத்து , மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து மலரால் அலங்காரம் செய்து தான் எந்த பூஜையும்.
கருடபஞ்சமி, நாகசதுர்த்தி பூஜை அன்று மெயின் வாசற்படிக்கு பூஜை செய்யாமல் தாண்டி போகக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
என் அம்மா பாடும் இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும்
“பாற்கடல் தரும் கிருபாகரி பரிந்து வந்தென்னை ஆதரி”..... என்ன அற்புதமான வரிகள். பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.
அன்னையவள் அனைவரையும் ஆதரித்து அருள்புரிய வேண்டுகிறேன்.

9 comments:
அன்னையின் அருள் தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்
கிட்டட்டும் வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி சிறப்பான பகிர்வு
இதற்க்கு .
வரலட்சுமி எல்லா வரங்களையும் எல்லோருக்கும் அளிக்கட்டும்.
வரமஹாலட்சுமி பூஜை பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
வருகைக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்.
வருகைக்கு மிக்க நன்றி வல்லிம்மா
வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
வருகைக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்.
வருகைக்கு மிக்க நன்றி வல்லிம்மா
வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
பாடல் அருமை.
வரலக்ஷ்மி அனைவருக்கும் அருள் புரியட்டும்.....
வரலட்சுமி பாடல் பகிர்வுக்கு நன்றி.
சகலசெல்வங்களையும் அருள வேண்டும் அனைவருக்கும்.
நன்றி மாதேவி,
நன்றி சகோ
நன்றி கோமதி அரசு
Post a Comment