Thursday, September 12, 2013

ஹைதை ஆவக்காய பிரியாணி 12/9/13

பிள்ளையார் பிடிக்க போய் குரங்கானகதைன்னு ஊர் பக்கம் சொலவடை இருக்கு. இப்ப இங்கத்த நிலமையும் அதேதான். தனித்தெலங்கானான்னு அறிவிப்பு வந்ததற்கப்புறம் ஆந்திராவில் பரபரப்பா போராட்டம் நடக்குது.
இன்னமும் நடந்துகிட்டே இருக்கு.  என்னன்னவோ கலாட்டக்கள் நடக்குது. யாருக்கும் என்ன நடக்குதுன்னோ, நடக்கப்போகுதுன்னோ புரியலை.

இப்ப ஆந்திரா பகுதியில் இருக்கும் மின் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்காங்க. அது மட்டும் நடந்தா இன்னும் ரெண்டு நாளில் தெலங்கானா பகுதி இருட்டுல தான். தெலங்கானா அண்ணனுங்களுக்கு இப்ப தான் மண்டையிடி ஆரம்பம்.
*********************************************************************************

தாய்லாந்து டூர் போயிருந்தப்ப காய்கறி பேக் ஓண்ணு வாங்கினேன்னு சொன்னேன்ல. அந்த மாதிரி நம்ம நாட்டுலயும் வந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். இப்ப் வந்திருச்சாம்ல. ஹோம் செண்டர், ஹோம்டவுன் கடைகளில் கிடைக்குதாம்ப்பா. வாங்கி வெச்சுக்கோங்க. பாரம் சுமக்காம இழுத்துகிட்டு ஜாலியா ஷாப்பிங், காய்கறின்னு இருக்கலாம்.
**************************************************************************

வெளிநாட்டுல இருக்கறவங்க இந்தியா வந்தாலோ, அல்லது அங்க போயிட்டு வந்த பழக்க தோஷத்தாலயோ தெரியலை பலரும் குழந்தைகளை ப்ராமில் போட்டு தள்ளிக்கிட்டு வருவதை பார்க்கும் போது கோவமா வருது. அந்த ஊர்கள்ல ரோடு எப்படி இருக்கும்? இங்க குண்டு குழியுமாத்தான் ரோடே இருக்கு. இதுல அந்த பிள்ளைகளை ஏத்தி இறக்கி என்ன கொடுமை சரவணன் இது?!!! நமக்கு தூக்கினா கைவலிக்கும் சரி. ஆனா அந்த புள்ளைங்களுக்கு இப்பவே இடுப்பு வலி வர்றது சர்வ நிச்சயம்,
***********************************************************************************

தெலங்கானா பிரச்சனை ரொம்ப சூடா ஆரம்பிச்சதுலேர்ந்து ஹைதை படுகேவலமா போயிடிச்சு.அரசாட்சின்னு ஒண்ணு நடக்குதான்னே சந்தேகமா இருக்கு. அமைச்சர்கள் ரெண்டு கூட்டணியா பிரிஞ்சிருக்காங்க. :(
 ஒரு ரோடு கூட நல்லாயில்ல. குண்டு குழி. ஆஷிஷ் காலேஜ்ல படிச்ச பொண்ணு ஒண்ணு இஞ்சனியரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருந்த பொண்ணு அது. நண்பனோட பைக்ல உக்காந்து போய்கிட்டு இருந்தப்போ குழியில தடுமாறி பேலன்ஸ் செய்ய முடியாம கீழே விழுந்து, அந்த பொண்ணு மேல பஸ் ஏறி அநியாயமா போய் சேர்ந்திட்டா. :(((
************************************************************************************
வெங்காயம் உரிச்சா கண்ணுல தண்ணியில்ல. வெங்காயம்னு நினைச்சாலே தண்ணி வரும்போல. விலை மறுபடியும் ஏறுமுகமா இருக்கு,. நாங்க ஒரு டாலர் கொடுத்து வெங்காயம் வாங்கறோம்னு சொல்ற நிலமை. அவ்வ்வ்வ்வ்
************************************************************************************

மெட்ராஸ்ல ஆட்டோவுல மாற்றங்கள் செஞ்சிருக்காங்காம்ல. மீட்டர் போட்டு ஓட்டணுமாம். ஜீபீஆர் எஸ் இருக்காம். பில்லிங்காம். என்னென்னவோ சொல்றாங்க. யாராவது நேரடி ரிப்போர்ட் போட்டு பதிவு எழுதுங்கப்பா. (பதிவுக்குஒரு மேட்டர் தேருதுல்ல)

எங்க ஊர் ஆட்டோக்காரங்க மகா மகா மோசம். அடாவடியா மீட்டருக்கு மேல
20ரூவா கேக்கறாங்க. போன வாரம் சிக்னல் ஜம்பிங்கிற்கு ஃபைன் 1000 ஆக்கிட்டாங்கன்னு பந்த் நடத்தினாங்க. நான் ஒரு அண்ணாத்தே கிட்ட கேட்டேன்,” இதுக்கெல்லாம் பந்த் செய்யறதை விட்டுட்டு, சென்னை, பெங்களூர் மாதிரி மினிமம் மீட்டர் 25ன்னு ஏத்துங்கன்னு ஏன்யா ஸ்ட்ரைக் செய்யக்கூடாதுன்னு”. அட ஆமாம்லன்னாப்ல.!!!!!
*********************************************************************************

ரொம்ப நாளைக்கப்புறம் பிரியாணி வந்திருக்கு. இனியும் தொடரும்னு சொல்லிக்கறேன்.

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

டேஸ்ட்டி பிரியாணி ..!

மங்களூர் சிவா said...

சூப்பர். அடிக்கடி பிரியாணி போடுங்க.

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி

பிரியாணி சுவைத்தற்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சிவா,

இனி பிரியாணியும் தொடரும். நீங்களும் அடிக்கடி வாங்க.

நன்றி

அமுதா கிருஷ்ணா said...

தெலுங்கானா பிரச்சனை திருப்பதி ப்ர்மோத்சவத்திற்குள் முடியாதா??நான் போகலாம்னு இருக்கேனே..

ADHI VENKAT said...

பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சேன்...

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

தீர்ந்திடணும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

இனி அடிக்கடி சாப்பிடுவீங்க. வருகைக்கு மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

பிரியாணி ஜூப்பர்..

குழந்தைகளை ப்ராம்ல கூட்டிக்கிட்டுப் போறதைப் பத்திச் சொன்னது ரொம்பச்சரி. சமீபத்துல கூட இரட்டைக்குழந்தைகளை அவங்கப்பா ப்ராம்ல கூட்டிட்டுப் போனதைப்பார்த்தப்ப பகீர்ன்னுதான் இருந்துச்சு. ஏன்னா ரோடு அந்த லட்சணத்துல இருந்தது..