”நிர்பயா” என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நேற்றுதான் அந்த பெண்ணின் நிஜப்பெயர் தாமினி என்று தெரிந்தது. அந்த பெண்ணை சூரையாடி, கொலை செய்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறது நீதிமன்றம். “அரிதிலும் அரிதான கேஸாம்.
இந்த தண்டனை தேவைதான் என மனசுக்கு தோன்றினாலும் டிஃபன்ஸ் தரப்பு வக்கீல் சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த தீர்ப்புக்கு அப்புறம் நாட்டில் ஏதும் பாலியல் வன்கொடுமைகள் நிகழாது என்று என்ன நிச்சயம்?!!
தினசரிகளின் கண்டிப்பாக ஏதோ ஒரு ஊரில், பக்கத்து வீட்டுக்காரராலோ, தெரிந்தவர்களாலோ அல்லது வேறு யாரோ ஒருவராலோ கூட பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது.ஒரு பச்சிளம் குழந்தையை கூட விட்டுவைப்பதில்லை. கேள்வி கேப்பாடு ஏதும் கிடையாது. கொடுமை நடந்ததாக தெரிந்தால் கண்டதும் சுட உத்தரவு என தீர்ப்பு கொடுத்து புது சட்டம் அமைத்தால் பெண்ணை காமப்பொருளாக பார்க்கும் எண்ணம் படிப்படியாக குறையும்.
அருத பழசான ஒரு கமெண்ட் “பெண்கள் உடுத்தும் உடை உணர்ச்சியை தூண்டுவதாக இருக்கிறது”. 5 வயது குழந்தை வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டிருக்கிறதே இங்கே ஆடையை பற்றி என்ன சொல்ல முடியும்??!!! போடும் உடையே வா என அழைக்கும் மாதிரி இருக்கு என்று சொல்பவர்கள் இந்த நடவடிக்கைக்கு என்ன சொல்வார்கள்.
கண்ணோட்டம் அதுதான் பிரச்சனையே தவிர உடை அல்ல.
அப்போ ஆண்கள் மட்டும் பப்ளிக்காக யூரின் பாஸ் செய்வதை பெண்கள் பார்க்க நேராமலா இருக்கிறது. சட்டை பட்டனை திறந்துவிட்டுக்கொண்டு அலைவதில்லையா. தொடை தெரிய லுங்கியையோ வேட்டியையோ ஏத்தி கட்டி அலைவதை பார்த்து எந்த பெண்ணாவது உணர்ச்சி தூண்ட பட்டு ஏதும் தவறாக நடந்தாளா? அவளால் தன் மனதை கட்டு படுத்த இயலும்போது, ஆண்களுக்கு மட்டும் என்ன? (எல்லோரும் அப்படி இல்லை). புடவையே கட்டியிருந்தாலும் அதையும் ஆபாச கண்கள் கொண்டு பார்ப்பவர்கள் மத்தியில் முழுக்க போர்த்திய உடையாக, சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ் என்று இருந்தாலும் நிலமை மாறப்போவதில்லை, மாறவேண்டியது எதிர் வர்க்கத்தினரின் கண்ணோட்டமே.
இதே கருத்தை முன் வைத்து சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் சில ஆண்கள் “நாங்களும் ஷார்ட்ஸ், ஸ்கர்ட்ஸ் போடுகிறோம்! எங்களுக்கு ஏதும் நடக்காத போதும், பெண்கள் ஏன் துன்புறுத்தபடுகிறார்கள்” என ஒன்று திரண்டு போராடியது வரவேற்கத்தக்கது.
சந்ததியை உருவாக்கும் கருப்பையை இறைவன் சக்தி சொருபமான பெண்ணிடம் கொடுததற்காக தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் எந்த உணர்ச்சிகளையும் அடக்கத் தெரியாத ஒரு ஜென்மமாகவா வாழ்வது......
அடிமட்ட தொழிலாளியாக இருந்தாலும் அவன் ஆண்மகன். இவள் எனக்கு அடிமை என வேரோடி போயிருக்கும் எண்ணத்தை மாற்றினாழொலிய மட்டுமல்ல தண்டனைகள் கடுமையாக்கினால் கண்டிப்பாக மாறும். இந்த நாட்டின் ஒவ்வொரு ப்ரஜைக்கும் தான் சுதந்திரமாக நடமாடும் அதிகாரம் உண்டு எனும் பட்சத்தில் பெண்களுக்கு இந்த அதிகாரம் உண்டு. இதை பங்க படுத்துவதை எதிர்த்து, தக்க பாதுகாப்பை கடுமையான சட்டம்வழியாக செய்ய வேண்டியது அத்யாவசிய விடயம். அதே சமயம் தன் வீட்டில் வளரும், வளர்ந்த ஆண்கள் எந்த தவறும் செய்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் கடமையும் கூட.
வாட்ஸ்ப்பில் எனக்கு என் தோழி அனுப்பி வைத்த செய்தியை இங்கே தருகிறேன்.
Punishment of Rape:
UAE - Instant Death Penalty (within seven days hanging)
Iran - Instant stoned to death(Hanging within 24 hours)
Afghanistan - Instant death by bullet into head within four days
China - No trial, medically proved rape then death penalty.
Malaysia - Death penalty
Mangolia - Death as revenge by family
Irak- death by stone till last breadth.
Thaliban - limbs or legs or balls all cut off and then stones and then shot.
Poland - death throned to pigs
Look at all these countries and learn something now atleast in case of rape against child and rape with brutality.
நம்ம நாட்டுல காம்ப்ரமைஸ் , யோசிச்சு யோசிச்சு காலம் கழியும், ட்ரயல்கள், கோர்ட்டுன்னு அலைஞ்சாலும் பெரிய இடத்து புள்ளையாவோ, புள்ளியாவோ இருந்துட்டா அவ்ளோதான். கெடுத்தவனுக்கே பொண்ணை கட்டிகொடுத்திடுவாங்க. நல்ல வேளை இப்ப இதுக்கும் ஒரு தீர்ப்பு வந்திருக்கு.
எந்த விதமான ப்ரயோசனமான ஆக்ஷனும் நடக்காது. கடுமையான தண்டனைகள் இல்லை என்பதால் குற்றங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படி எத்தனையோ குற்றங்கள் தொடர்கின்றன என்றாலும், பாலியல் வன்கொடுமை நம் இந்திய பெண்கள் அனைவரையும் மட்டுமல்லாமல் நம் நாட்டுக்கு விருந்தினராக வந்து செல்லும் பெண்களும் பாதிக்கப்படுவதை பார்க்கும் போது, சார்ஸ் நோய் வந்த போது அந்த பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என மற்ற நாடுகள் தடையுத்தரவு போட்டதுபோல,” இந்தியாவிற்கு செல்லாதீர்கள்.... வன்கொடுமைக்கு ஆளாவீர்கள்” என சொல்லும் சூழல் ஏற்பட்டால், இதைவிட இந்திய நாட்டு பிரஜைகளுக்கு அவமானம் வேறெதும் இருக்காது என்பது என் பணிவான கருத்து.
காந்தியடிகள் “என்று ஒரு பெண் உடல் முழுதும் நகை அணிந்து நடுநிசியில் சென்றாலும் பத்திரமாக வீடு சேர்கிறாளோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என சந்தோஷப்படலாம்” என்றார். ஐயா. இன்று குந்து மணி தங்கம் கூட போட முடியாத சூழல் (தங்க விலை ஏற்றம் + திருட்டு பயம்)
இருந்தாலும் இன்னமும் தனியாக பகலில் கூட போய்வருவது கஷ்டமாக இருப்பதை பார்க்க நேர்ந்தால் என்ன செய்வாரோ!!!!!
பாவம் அந்த பெரியவர்.

14 comments:
மாறவேண்டியது எதிர் வர்க்கத்தினரின் கண்ணோட்டமே.>>>>>>>>>>>>>>இந்த ஒரு வரி போதும்....
வருகைக்கு நன்றி ponne
இவள் எனக்கு அடிமை என வேரோடி போயிருக்கும் எண்ணத்தை மாற்றினாழொலிய மட்டுமல்ல தண்டனைகள் கடுமையாக்கினால் கண்டிப்பாக மாறும்.//
உண்மை.
மாறும் காலம் வரத்தொடங்கி விட்டது.
அருமையான கருத்துக்கள்!
வருகைக்கு நன்றி கோமதி அரசு அவர்களே.
வருகைக்கு நன்றி மனோ சாமிநாதன்
அருமையான பகிர்வு
தாமினி - இப்போது இந்த தீர்ப்பு வந்திருந்தாலும், செயல்முறைப் படுத்த இன்னும் நிறைய நாட்கள் ஆகும்.....
ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும் - ம்ம்ம்ம். பலருக்கு இது ஒரு மனோ வியாதி..... பெண்களை போகப் பொருட்களாகவே பார்த்து பழக்கம் ஏற்பட்டு விட்டது. சினிமாவிலும், விளம்பரங்களிலும் இன்னமும் இதையே தானே கற்றுக்கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஒரு சிறுவன் [12 வயது இருக்கலாம்] க்டையில் AXE ப்ராண்ட் நாத்த மருந்து [Perfume] வாங்கினார். எதுக்குடா இது என கடைக்காரர் கேட்க, “நீங்க டி.வி. பார்க்கறதில்லையா? அதுல தான் காட்டறாங்களே. இதை பயன்படுத்தினா தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும்.....” கடைக்காரர் கப் சிப்.
என்னத்த சொல்ல :(
நம்ம நாட்டுல மரண தண்டனையையே இரத்து செய்யணும்ன்னு சில பேர் சொல்லறாங்களே, அதை நீங்க படிக்கலையா? அவங்களும் ஒரு உயிர் தானே அதை பறிக்கலாமான்னு கேட்கிறார்கள். அப்புறம் அவங்க குடும்பத்தினர் மனசு என்ன பாடுபடும்?
//ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும் - ம்ம்ம்ம். பலருக்கு இது ஒரு மனோ வியாதி..... பெண்களை போகப் பொருட்களாகவே பார்த்து பழக்கம் ஏற்பட்டு விட்டது. சினிமாவிலும், விளம்பரங்களிலும் இன்னமும் இதையே தானே கற்றுக்கொடுக்கிறார்கள். //
சரியாச் சொல்லிருக்கீங்க வெங்கட். AXE விளம்பரத்தில் வரும் பெண்கள்(அதுபோன்ற மற்ற பெண்களும்), இவ்வகை விளம்பரங்கள், படங்கள் தம்மைப் போகப்பொருளாக வெளிப்படுத்துவதை ஏன் அனுமதிக்கின்றனர் என்பதுதான் என் ஆதங்கம். ‘பாவம் ஒரு இடம்; பழி ஒரு இடம்’ என்பதாக இவர்களைப் போன்றோர் செய்வதற்கு ஒரு தவறும் செய்யாத அப்பாவிகள் பலியாகின்றனர். இது மிக முக்கியக் காரணமல்லவா?
ஆஸிட் அடிப்பதும் இதன் தொடர் விளைவுதானே? எனக்குக் ”கிடைக்காத பொருள்” வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற வெறி...
வயசுப்பெண்களை அரைகுறையாக நடமாடவிட்டதும், ஒரு sex object-ஆகக் காட்சிப்படுத்தியதும் போய், இப்ப சின்னக் குழந்தைகளையும்... ச்சே... ஜூனியர் டான்ஸரில் ஆரம்பித்து, விளம்பரங்கள், சினிமாக்கள் என்று அவர்களையும் இப்படிச் சித்தரிக்கப்படுவதன் விளைவுகளையும் காணத் தொடங்கிவிட்டோம்.
தென்றல், நீங்க சொன்னமாதிரி பகலில்கூட (தனியாவோ, துணையோடோ) வெளியே செல்லப் பயப்படும் சூழ்நிலைதான் இந்தியாவில்!! மிக வேதனையாக இருக்கிறது.
இன்று காலை பேப்பரில் ஒரு விளம்பரம் பார்த்தேன். சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அது ‘மஹாபாரதம்’ டிவி தொடரின் விளம்பரம். அதில் வரும் நடிகைகளின் உடைகள்... சினிமா பாடல் காட்சிகளில் வருவதுபோல பாதி உடல் தெரியும்விதமாக இருக்கிறது. ஹிந்து மதத்தின் புராணக்கதையை விளக்கும் தொடரில்கூட பெண்களை இப்படிக் காட்சிப்படுத்தி, கமர்ஷியலைஸ் ஆக்குவதா என்று மிக வருத்தமாக இருந்தது.
nalla pathivu.
வாங்க சகோ,
என்னத்த சொல்லத்தான். சென்சார் விளம்பரங்களுக்கும் கண்டிப்பா வேணும்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க தானைத்தலைவி,
அப்புறம் அவங்க குடும்பத்தினர் மனசு என்ன பாடுபடும்?//
நியாயம்தான். பாதிக்கப்பட்டவங்களும் பாவம்தானே. கொல்ல வருவது பசு அப்படிங்கற பட்சத்துல அதை கொல்வது தப்பில்லை எனும்போது அதிகபட்ச தண்டனை இதுன்னு விதிச்சா அலையாம இருப்பாங்கள்ள. ஒரு சக மனுஷியின் வாழ்க்கையை சூராட என்ன உரிமை இருக்கு? ஆணுக்கு இந்த உலகில் சுதந்திரமாய் வாழ எத்தனை உரிமை இருக்கோ அதே அளவு பெண்ணுக்கும் உரிமை இருக்கு என்பது என் கருத்து
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா,
சென்சார் போர்டு வெச்சு தீயா வேலை செஞ்சாத்தான் ஏதாவது வழி உண்டு.
உங்க அடுத்த பின்னூட்டத்துக்கு என்னுடைய பதில்.
நோ கமெண்ட்ஸ் :(
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment