Thursday, September 19, 2013

அம்ருதம்மா பதிவு

அம்ருதம்மா பத்தி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. (பதிவு போடறதே குறைஞ்சுகிட்டு வருது) இந்தப் பதிவை படிச்சிட்டு தம்பட்ட பதிவுன்னு நினைக்காதீங்க. இதுவும் அறிதல், புரிதல் பகிர்வு தான்.

அம்ருதம்மாவும் இப்ப டீன் ஏஜ் கேர்ள் ஆகிட்டாங்க. அதனால நாமதானே பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கணும்!!! அதனால முகம் சுணங்கியிருந்தா பார்த்து என்னன்னு விசாரிக்கறது, பாத்து சாப்பாடு கொடுப்பது, படிப்பில் உதவி இப்படி என்ன உதவி செய்ய முடியுமோ அப்படி சாஞ்சுக்க ஒரு தோளா இருக்கறதுக்கான முயற்சிகளை செஞ்சிகிட்டு வர்றேன்.

ஒவ்வொரு வயசுலயும் பெத்தவங்களை பத்தின ஃபீலீங்ஸ் மாறும்னு சொல்வாங்க. டீன் ஏஜ்ல ஆரம்பிச்சு..... ஒரு 30 வயசு வரைக்கும் பெத்தவங்க தான் மோசமான ஜந்துவா கூட சிலருக்கு தெரியும்னு சொல்வாங்க. அது அவங்க தப்பில்லை. வயசு தப்பு. அதனால நம்ம குழந்தைதானேன்னு சின்ன வயசுல இருந்த மாதிரி இப்பவும் இருக்க முடியாது.

லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்ப ட்ரெஸ்ஸிங் வேணும்னு சொன்னாக்க, நம்ம வீட்டுக்கு தகுந்த மாதிரி அந்த உடை இருக்கான்னு பார்த்து தேர்ந்தெடுக்க வைப்பேன். சொல்ல வேண்டியது என் கடமை. ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம். ஆனா நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பார்ப்பதில் தப்பில்லையேன்னு சொல்லி மெல்ல பேசி புரிய வைப்பேன்.

சில குழந்தைகளுக்கு முன் நெற்றி வழிச்சு சீவி சீவி வழுக்கை விழுந்தாப்ல ஆகிடும். எனக்கு அப்படி தலை வார பிடிக்காது. அதனால சின்ன வயசுலேர்ந்து அம்ருதம்மாவுக்கு அழகா ஃப்ரிஞ்சஸ் கட் செஞ்சுக்க வைப்பேன். தலை முடி நீளமா இருந்து நான் அவதி பட்டது என்னுடைய தனி சோகக்கதை. பார்க்க அழகா இருக்கும் முடி. ஆனா பராமரிப்பது கஷ்டம்.

அம்ருதம்மாவுக்கு எங்க அம்மம்மா பரம்பரை வாகுல என்னை போல நல்ல அடர்த்தியான முடி. ரொம்ப நீளமாவும் இல்லாம ரொம்ப குறைவாவும் இல்லாம அழகா ட்ரிம் செஞ்சு அதுவும் ஸ்கூலுக்கு ஜடை போட்டுக்கறாப்லயும், வெளியில போகும்போது பார்க்க நல்லா இருக்கற மாதிரியும் கட் செஞ்சுப்பாங்க அம்மா. சில்க்கி ஹேர்னு ஸ்கூல்ல பசங்க ஜடை போட்டு வெச்சிருந்த முடியையும் அவுத்து விட்டு தொட்டு பாப்பாங்க. ஏனோ தானோன்னு பின்னிய முடியோட வந்து நிப்பாங்க அம்மா!!!  

ஒரு தடவை பார்லருக்கு ஆட்டோவுல போய்கிட்டு இருந்தப்ப அம்ருதம்மாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே தர்றேன்.

“அம்மா! என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் நீங்க தான் என்னை ஹேர் ட்ரிம் செய்ய கூட்டிகிட்டு போறீங்கன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க”

“ஏன் அம்ருதம்மா”

“ அவங்க அம்மாவுக்கெல்லாம் அப்படி முடி கட் செஞ்சா பிடிக்காதாம்!! திட்டுவாங்களாம்!”

“ஆனா நான் உங்க ஃப்ரெண்ட்ஸை ஹேர் ஸ்டைல் செஞ்சு பார்த்த மாதிரி ஞாபகமே அம்மா!!”

ஆமாம்மா!! அவங்க அம்மாவுக்கு தெரியாம செஞ்சுப்பாங்களாம். வீட்டுக்கு வந்து கேட்டா ,”எனக்கு பிடிச்சிருக்கு செஞ்சிருக்கேன்னு!! சண்டை போடுவாங்களாம்!!

இது எப்படி இருக்கு?  சில விஷயங்கள் பிள்ளைகளுக்கு நல்லது இல்லைன்னு பெத்தவங்களுக்கு தெரிஞ்சா அதை அவங்களுக்கு புரிய வைக்கணும். இப்ப அம்ருதம்மா ஸ்லீவ் லெஸ்ஸோ, டைட்ஸோ போட அனுமதி கிடையாது ஆனா அதை பல தடவை சொல்லி புரிய வைச்சோம். அம்ருதம்மாவும் ஒத்துகிட்டாங்க.ஆஷிஷ் அண்ணாவுக்கு ட்ரஸ் கோட் இருக்கு. வூட்டுல ஷார்ட்ஸ், பாக்ஸர்ஸ் போட்டு அலைவதெல்லாம் கூடாது. அன்னைக்கு ரோட்ல போகும் போது ஒரு 25 வயசு ஆம்பளை பாக்ஸர் போட்டுகிட்டு பைக்ல போனதை பார்த்து செம கடுப்பானுச்சு. நானும் ஆஷிஷ் அண்ணாவும் டக்குன்னு சிரிச்சதை அந்த ஆளு பார்த்து ஒரு மாதிரி ஆகிட்டாப்ல. ஆம்பளையோ பொம்பளையோ வெளியில வரும்போது இதுதான் ட்ரஸ் கோட்னு சட்டம் போட வெச்சிருவாங்க போல இருக்கே.

இப்படி பல விஷயங்கள் நீ செய்ய கூடாதுன்னு கறாரா சொல்வதை விட அதை ஏன் செய்யக்கூடாதுன்னு புரிய வைக்கணும்.  பசங்க சொல்வதில் நியாயம் இருந்தா அதை நாம ஏத்துப்பதில் என்ன குழப்பம்??? பிள்ளைகளுக்கு இருக்கும் பியர் ப்ரஷர் எவ்வளவோ. அதனால அவங்க நட்புக்கள் சொல்வது எல்லாமே செய்ய வைக்கணும்னு இல்லை. ஆனா நியாயமான கோரிக்கைன்னா என் பெற்றோர் ஏத்துக்குவாங்க அப்படிங்கற புரிதல் பிள்ளைகளுக்கு வரவைக்கணும். இது பெற்றோரின் முக்கியமான பங்கு. பசங்க சொல்வதையும் காது கொடுத்து கேக்கணும். அப்பதான் அவங்க நம்மளை எந்த ஸ்டேஜ்லயும் வில்லனா/ வில்லியா நினைக்காம மனசு வருத்தத்தை பகிர்ந்துக்குவாங்க. இது ஏன் பலருக்கு புரிய மாட்டேங்குது இதுதான் என் வருத்தம்?

அம்ருதம்மா தன் தோழிகளோட மெக்டொனால்ட்ஸ் போயிருந்தாங்க. 1 மணி நேரம் டைம் தான். வந்து என்னை பிக் அப் பண்ணிக்கோங்கன்னு சொல்லியிருந்தாப்ல. பிக் அப் பண்ண போனேன். போட்டோஸ் எடுக்கலையான்னு கேட்டு அவங்களை (3 பொண்ணுங்கதான்) போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்பி வந்தோம்.

டீன் ஏஜ் வயசு என்பது கைக்குழந்தைக்கு பல் முளைக்கும் பருவம் போல. அந்த நேரத்துல எவ்வளவு ஜாக்கிரதையா இருந்து வளர்த்தோமோ அந்த மாதிரி டீன் ஏஜ் பிள்ளைகளையும் வளர்க்கணும். தவழ்ந்து போற குழந்தை கண்டதை வாயில போட்டுக்கும்னு தவழ விடாம வெச்சிருந்தா பிள்ளைக தவழ கத்துக்கறது எப்போ??  இதுவும் ஒரு இனிமையான பருவமா, சுகமான அனுபவமா மாத்த வேண்டியது பெற்றோர், பசங்க ரெண்டு பேருக்கும் இருக்குன்னு சொன்னாலும், நமக்கு அதிகம். ஏனென்றால் நாமும் அந்த வயதை கடந்துதானே வந்திருக்கோம்.


15 comments:

Appaji said...

தெளிவான, காலத்திற்கேற்ற பதிவு...
பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு...
நன்றி....
- அப்பாஜி

அமைதிச்சாரல் said...

//டீன் ஏஜ் வயசு என்பது கைக்குழந்தைக்கு பல் முளைக்கும் பருவம் போல. அந்த நேரத்துல எவ்வளவு ஜாக்கிரதையா இருந்து வளர்த்தோமோ அந்த மாதிரி டீன் ஏஜ் பிள்ளைகளையும் வளர்க்கணும்.//

ரொம்பச்சரி..

இராஜராஜேஸ்வரி said...

பிள்ளைகளுக்கு இருக்கும் பியர் ப்ரஷர் எவ்வளவோ. அதனால அவங்க நட்புக்கள் சொல்வது எல்லாமே செய்ய வைக்கணும்னு இல்லை. ஆனா நியாயமான கோரிக்கைன்னா என் பெற்றோர் ஏத்துக்குவாங்க அப்படிங்கற புரிதல் பிள்ளைகளுக்கு வரவைக்கணும். இது பெற்றோரின் முக்கியமான பங்கு.

சரியான புரிதலுடன்
அருமையான பகிர்வுகள்..!பாராட்டுக்கள்..!

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்பாஜி.

வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

வருகைக்கு மிக்க நன்றிப்பா

புதுகைத் தென்றல் said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

நாமளும் அந்த வயசைக்கடந்து வந்திருப்பதை மறக்காம இருந்தா ஈசியா புரிதல் ஏற்பட்டும்.

வருகைக்கு மிக்க நன்றி

மங்களூர் சிவா said...

nice post.

கோமதி அரசு said...

பிள்ளைகளுக்கு இருக்கும் பியர் ப்ரஷர் எவ்வளவோ. அதனால அவங்க நட்புக்கள் சொல்வது எல்லாமே செய்ய வைக்கணும்னு இல்லை. ஆனா நியாயமான கோரிக்கைன்னா என் பெற்றோர் ஏத்துக்குவாங்க அப்படிங்கற புரிதல் பிள்ளைகளுக்கு வரவைக்கணும். இது பெற்றோரின் முக்கியமான பங்கு. பசங்க சொல்வதையும் காது கொடுத்து கேக்கணும்.//
நன்றாகசொன்னீர்கள்.
குழந்தைகள் சொல்வதை முதலில் காது கொடுத்து கேட்டாலே போதும்.
நல்லபுரிதல் இருப்பது மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதி அரசு,

//நல்லபுரிதல் இருப்பது மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன்.//

ஆசிர்வாதத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிம்மா

அமுதா கிருஷ்ணா said...

என்னோட இரண்டு பசங்களும் ஃப்ரெண்ட்ஸ் பத்திய அத்தனை கதைகளும் என்னிடம் சொல்லிடுங்க.நிறைய பேர் வீட்டில் பொய் சொல்லிட்டு தான் சினிமாவுக்கும்,மாலிற்கும் வருதுங்க.கேட்கும் போது அவர்களை அங்கு எல்லாம் போக அனுமதித்தால் என்னவாம்? ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று நாமே நம் பிள்ளைகளை பொய் சொல்லவும்,பணம் திருடவும் பழக்கி விடுகிறோம். பெற்றோர் தான் காரணம்.

ஸாதிகா said...

சில விஷயங்கள் பிள்ளைகளுக்கு நல்லது இல்லைன்னு பெத்தவங்களுக்கு தெரிஞ்சா அதை அவங்களுக்கு புரிய வைக்கணும்.//கண்டிப்பாக!

//.ஆஷிஷ் அண்ணாவுக்கு ட்ரஸ் கோட் இருக்கு. வூட்டுல ஷார்ட்ஸ், பாக்ஸர்ஸ் போட்டு அலைவதெல்லாம் கூடாது// ரொம்ப சந்தோஷமாக இருக்கஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படித்து மனதில் தக்க வைக்கூடிய பகிர்வு.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஸாதிகா,

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

மாதேவி said...

"டீன்ஏஜ் வயதுப்பெண்ணுக்கு அம்மா தோழிபோல இருக்கவேண்டும்" மிகவும் சரியாகச்சொன்னீர்கள்.

நல்ல பகிர்வு.

புதுகைத் தென்றல் said...

வாங்க மாதேவி,

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்