பாவாடை, தாவணி இது ஒரு அழகான பாரம்பரிய உடை. சின்ன பெண் பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று சொல்லும் உடை இந்த தாவணி.தெலுங்கில் லங்கா-ஓனி , தமிழில் பாவாடை, தாவணி , கன்னடத்தில் லங்கா,தாவணி அப்படின்னு பேரு.
மாமன் சீரில் கடைசியாக ஒரு பெண்ணுக்கு கிடைப்பது கல்யாணத்திற்கு புடவை. அதற்கு முன்னால் இந்த ஹாஃப் சாரி. நடுவில் இந்த பாவாடை தாவணி ஃபேஷன் காணாமல் போயிருந்தது. பல வீடுகளில் மகளுக்கு ஒரு பாவாடை தாவணியாவது வாங்கி போட்டு பார்த்து அழகு பார்க்க மாட்டோமா என்று இருந்தது. (பணம் இல்லாமல் இல்லை, போட ஆளில்லாமல்) பூப்பெய்திய விழாவுக்கு கெஞ்சி கூத்தாடி போட வைப்பார்கள். என் தோழி ஒருத்தி வயதுக்கு வந்த பிறகும் அந்த விடயம் வெளியே தெரியக்கூடாது என்று நதியா டாப்ஸ்தான் பள்ளிக்கு அணிந்து வந்தாள். நான் படிச்ச ஸ்கூல்ல யூனிஃபாம் பச்சை கலர் பாவாடை தாவணி தான். (இப்ப அதே ஸ்கூல்ல சுடிதார்!!!)
சினிமா புண்ணியம் என்று தான் நினைக்கிறேன் இப்பொழுது இந்த பாவாடை தாவணி ஃபேஷன் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. திருமண வீடுகளில் இப்பொழுது பாவாடை தாவணி அணிந்த பெண் குழந்தைகளை பார்க்க முடிகிறது. நடுவில் ஒரு தலைமுறை குழந்தைகள் மட்டும் மாடர்ன் மாயத்தில் விழுந்து இந்த சந்தோஷத்தை இழந்துவிட்டதாக என் கருத்து.
இப்பொழுது கிடைப்பது போல் பாவாடை தாவணி செட் அப்பொழுது கிடைக்கவில்லை. கிடைத்தாலும் விலை ரொம்ப ஜாஸ்தியாக இருக்கும். அதனால எப்பொழுதும் தைப்பது போல பாவாடை அதற்கு மேட்சிங் ப்ளவுஸ் கூட கிடைக்கும் ஆனா பாருங்க இந்த மேட்சிங் தாவணி......... மஹா துர்லபம். என் ஞாபகத்தில் இப்போதும் எனது அரக்கு கலர் பாவாடை தாவணி இருக்கு. மயில் டிசைன் போட்டது. அதற்கு கரெக்டான மேட்சிங் கடைசிவரை கிடைக்கவில்லை. இன்றளவும் எனக்கு ரொம்ப பிடித்த ட்ரெஸ் பாவாடை தாவணி. புடவையை விடவும் ரொம்ப அழகாக காட்டும்.
இந்த பாவாடை தைப்பதில் கூட பல வகைகள் இருக்கு. கிட்ட கிட்ட ஃபிலிட்ஸ் வெச்சு தைப்பது, தூரம் வைத்து தைப்பது, அம்பர்லா கட்டிங்னு நிறைய்ய..
ஆனா நம்ம ஊரு டைலருக்கு இதெல்லாம் தைக்க தெரிஞ்சிருக்கணும். இப்ப அப்படி இல்ல வட நாட்டு மக்களும் எல்லா இடத்திலும் கலந்திருப்பதால் அந்த மாதிரி டிசைன்களும் தைக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க.
நம்ம தென்னாட்டில் தான் பாவாடை, தாவணி திருமணத்துக்கு முன்பான உடை. ராஜஸ்தான், குஜராத், மத்யப்ரதேஷ், உத்தர் ப்ரதேஷ, பீஹார், சிந்த், ஹரியானா, ஹிமாச்சல் ப்ரதேஷ், உத்தராகாண்ட் இங்கல்லாம் இதுதான் பாராம்பரிய உடை. அங்கெல்லாம் அதுக்கு பெயர் காக்ரா சோளி அல்லது சனியா சோளி. பஞ்சாபில் சல்வார் கமீஸ் காலம் ஆரம்பிக்கும் முன்பு சல்வாருடன் பஞ்சாபி காக்ராதான் பாராம்பரிய உடையா இருந்தது. சிலர் திருமணத்திற்கு பிறகு புடவை அணிவதை வழக்கமா கொண்டிருந்தாலும் காக்ரா, சோளியும் அணியும் பழக்கம் இருக்கு.
பல பெண்களுக்கு அம்மாவின் புடவைதான் முதல் தாவணி. (இரண்டாக கிழிக்கப்பட்ட புடவை என்பதால் ஹாஃப் சாரின்னு பேரு வந்துச்சோ!!!) பட்டுபாவாடை தாவணிதான் டாப் லிஸ்ட்டில் இருந்தாலும், காட்டன், காட்டன் சில்க், பனாராஸ், ஷிஃபான், மார்பில், மைசூர் சில்க் என பல வகை துணிகளிலும் பாவாடை தாவணி இப்போ செட்டாவே மார்க்கெட்டில் கிடைக்குது. பாவாடைக்கு ஏத்த, மேட்சிங் தாவணி, ப்ளவுஸ் கிடைக்கலைன்னு அல்லாட வேண்டியதே இல்லை. வாங்கி தைக்க கொடுக்க வேண்டியதுதான். கலாநிகேதன் போன்ற கடைகளில் தையல்காரரும் ரெடிலி அவைலபிள்!!!!
ஓனிக்கு ஃப்லிட்ஸ் வைத்து அழகாக போடுவது ஒரு தனிக்கலை. என் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு தோழி (வயது 50க்கு கிட்ட) எங்கேயாவது ரெடியாக வேண்டும் என்றால் இண்டர்காமில் அழைப்பார். உடன் போய் அவருக்கு அழகாக பின் செய்து கொடுத்துவிட்டு வருவேன். சமீபத்தில் என் தோழி தன் குடும்பத்தினருட்ன் ஹைதை வந்திருந்தனர். ஒரு திருமணத்திற்கு போயிருந்தோம். எங்களுக்கு முன்பே கிளம்பியிருந்த தோழிகள் அங்கே சென்று உடை மாற்றிக்கொண்டார்கள். அங்கே போய் என் தோழியின் மகளைப்பார்த்தால் தாவணி சரிந்து கொண்டிருந்தது. பாவம் குழந்தை!! அழகாக ஃபிலிட்ஸ் வைத்து சைடில் அதிகம் தெரியாமல் பின் செய்து கட்டிவிட்டேன். “உங்களை என்னுடன் அமெரிக்கா கூட்டிகிட்டு போயிடறேன் ஆண்ட்டி. நினைச்சப்ப அப்பள வெந்தயக்குழம்பு சாப்பிடலாம்!!! ட்ரடிஷனலா டக்குன்னு ட்ரஸ் செஞ்சுகிட்டு கிளம்பலாம்!! என்றாள் சுட்டிப் பெண்.
நம் பாரம்பரியத்தையும் விடாமல் நம் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை. பழைய பஞ்சாங்கமாக இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக அவர்கள் வழியிலேயே போய் பார்டர் வைத்த தாவணி..... காக்ரா சோளி என மாற்றலாம். இங்கே ஹைதையில் நான் பார்த்த வரையில் மாடர்ன் மஹாராணிகளும் லங்கா ஓனியில் வலம் வருவதை பார்க்க முடிகிறது.
குழந்தைகள் தான் என்றில்லை, போடும் வயசும், வாய்ப்பும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கூட இந்த அழகான உடையில் வலம் வரலாம்.
துளசி டீச்சர் பின்னூட்டத்தில் சொன்னதற்கப்புறம் தான் இந்த புடவை பத்தின ஞாபகம் வந்தது. (தாவணி பத்தியே யோசிச்சுகிட்டு இருந்ததால இதை மறந்திட்டேன்) இப்ப இந்த மாதிரி புடவைகள் லேட்டஸ்ட். பட்டில் கூட இந்த மாதிரி ஹாஃப் & ஹாஃப் புடவைகள் வர ஆரம்பிச்சிருக்கு. பாவாடை தாவணி கட்டணும்னு ஆசை படறவங்க ஆனா கட்ட முடியாம சூழல் அவங்களுக்கு இந்த புடவை சரியான சாய்ஸ்
*************************************************************************
ஒரு வழியா 1000மாவது பதிவை போட்டாச்சு. இது என் 1000மாவது பதிவு.

33 comments:
1000 ஆம் பதிவு... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
முதலில் ஆயிரத்துக்கு என் அன்பான பாராட்டுகள். இன்னும் மேன்மேலும் வளர்ந்து பத்தாயிரமாகவும் வாழ்த்துகின்றேன்.
பாவாடை தாவணி அழகுதான். மதுராபயணத்தில் ஒரு கோபிகா செட் வாங்கியாந்தேன். ராப்பரௌண்ட் லாங் ஸ்கர்டும் மேட்சிங் தாவணியும். ப்ளவுஸுக்கு ஒரு துணி வச்சுருக்காங்க. இன்னும் தைச்சுக்கலை.
எங்க ஊர் ஹரேக்ருஷ்ணா கோவிலில் வயசு வித்தியாசமில்லாமல் எல்லோரும் விசேஷ நாட்களில் இந்த ராதா செட்தான். கோவில் இடிஞ்சு போனதால் கட்டி முடிச்சப்பிறகு நானும் ப்ளவுஸ் தச்சுக்கணும்.
புடவையில் ஹாஃப் ஹாஃப் ப்ரிண்ட் இருக்கே பார்க்கலையா. அதைக் கட்டிக்கிட்டாலும் கொஞ்சம் பாவாடை தாவணி லுக் கிடைக்கும்.
வாங்க தனபாலன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க துளசி டீச்சர்,
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றீஸ்.
எங்க ஊர் ஹரேக்ருஷ்ணா கோவிலில் வயசு வித்தியாசமில்லாமல் எல்லோரும் விசேஷ நாட்களில் இந்த ராதா செட்தான். //
ரொம்ப சந்தோஷம். இதையே ஏனோ தமிழ்நாட்டு பக்கம் போட்டுகிட்டா கமெண்ட் மழைதான்.:(
மனம் கவர்ந்த தாவ்ணியுடன் ஆயிரமாவது பதிவு..
மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..
பாராட்டுக்கள்..!
தாவணிக் கனவுகளுடன் 1000 வது பகிர்வு வாழ்த்துகள். பகிர்வுகள் மென்மேலும் தொடரட்டும்.
எனது காலம் தாவணி அணிய சான்ஸ் கிடைக்கவில்லை. அப்பொழுது ப்ராக்,மிடி, ஸ்ரைல்தான்.
மகள் விழாக்களுக்கு போட்டிருக்கிறாள்.
1000 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள் தென்றல்.
புடவையில் ஹாஃப் ஹாஃப் ப்ரிண்ட் போட்ட புடவைகள் இரண்டு மூன்று வைத்து இருந்தேன்.
திருமணம் முடிந்த பின்னும் இரண்டு வருடங்கள் பாவாடை தாவணியை வீட்டு உடையாக அணிந்து இருக்கிறேன்.
பகிர்வும் , படங்களும் மிக அழகு.
டீச்சர் அந்த ஹாஃப் & ஹாஃப் சாரி பத்தி கமெண்ட் ஒண்ணு... இல்ல ரெண்டா வந்திருந்தது. அதை காக்கா தூக்கிகிட்டு போயிருச்சு...!! :(
அதைப்பத்தியும் பதிவுல சேத்திட்டேன். தாங்க்ஸ்

வாங்க இராஜராஜேஸ்வரி,
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க மாதேவி,
ஓ உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலையா!!! சரி விடுங்க மகள் போடும் போது அழகு பார்ப்பதிலும் ஒரு அழகு தான்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க கோமதிஅரசு,
கல்யாணத்திற்கு சத்திரத்திற்கு கிளம்பும் நாளுக்கு முதல் நாள் வரை பாவாடை தாவணியில் தான் வலம் வந்தேன். :))
வருகைக்கும் உங்க கருத்து & வாழ்த்துக்கு மிக்க நன்றி
ஆயிரமாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.
இங்க எல்லாம் கல்யாண வீடு விசேசம் வந்தா தாவணிய பார்க்கலாம்.
மிகவும் பிடித்த/ரசித்த உடை!
ஆயிரமாவது பதிவு - மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துகள் சகோ.
வாழ்த்துக்கள் 1000ஆவது பதிவுக்கு.
1000 பதிவெழுதிய அதிசய புதுகைப் புயலுக்கு (அதான் 1000 வந்தாச்சே. பிறகென்ன தென்றல்) நல்வாழ்த்துக்கள்
Romba nalla irukku unga posts ellame. Ella vishyangalai patriyume superaga ezhuthugireergal.
Pudavai, salwar kammees yar vendumaanalum podalaam. Aanaal pavadai thavani nala structure irunthal thaan poda mudiyum. appathan athu nanaa irukkum. en kitta ennoda pavadai thaavani onnu irukku. aanaa ippo naan potunda sagikkaathu. :((
Ilam pengal ippo paavaadai thavaniyai vendaamnnu sonnaal pinnaalil varutha padavendi irukkum.
Nala pathivirkku vazhthukkal.
1000 maavathu pathivirkku special vazhthukkal.
வடக்கே இப்ப இது ட்ரெண்டா ஆகிட்டு வருது தென்றல். அதனால இன்னும் கொஞ்ச நாள்ல நம்மூர்லயும் பரவலா வந்துரும்ன்னு நம்பலாம். சீரியல்கள்ல வந்தா கண்டிப்பா நம்ம பசங்க அதைப் பின்பற்றுவாங்கன்னு சொல்லணுமா என்ன!!
வடக்கே இதை லெஹங்கான்னும் சொல்லுவாங்க. கல்யாணங்கள்லயும் முஹூர்த்தத்துல இதைத்தான் போட்டுக்கறாங்க. எங்கிட்ட இருக்கும் தாவணி செட்டை நவராத்திரி சமயம் தாண்டியா கர்பா விளையாடும்போது போட்டுக்கறதுண்டு :-))
ஆயிரத்துக்கும் என் அன்பான வாழ்த்துகள். இன்னும் பல ஆயிரங்களை நீங்க தொடணும்.. கண்டிப்பா தொடுவீங்க :-))
வாங்க சுதர்ஷிணி,
ம்ம்ம்ம் எனக்கும் அங்கே சில இளம்பெண்களை பார்த்த ஞாபகம் இருக்கு.
வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி
வாங்க சகோ,
:)) (ரசித்த உடைன்னு சொன்னதுக்கு இந்த ஸ்மைலி) :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க சிவா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க கடைசிபெஞ்ச்,
துளசி டீச்சர்,கீதா சாம்பசிவம், இராஜராஜேஸ்வரி இவங்க கூட எப்பவோ 1000 பதிவுகளை தாண்டிட்டாங்க. நானும் அவங்க லிஸ்ட்ல ஜாயின் ஆகியிருக்கேன்.
புதுகை புயலா!!!!அவ்வ்வ்வ் ( அப்பப்பா புயலாவுவ்ம் வருவேன் தான்) :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க தானைத்தலைவி,
Ilam pengal ippo paavaadai thavaniyai vendaamnnu sonnaal pinnaalil varutha padavendi irukkum.//
அதே அதே சபா பதே.
வருகைக்கும் உங்கள் ஸ்பெஷல் பாராட்டு & வாழ்த்துக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
வடக்கே தான் பிரச்சனை இல்லையே :))
வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்
கல்யாணத்திற்கு சத்திரத்திற்கு கிளம்பும் நாளுக்கு முதல் நாள் வரை பாவாடை தாவணியில் தான் வலம் வந்தேன். :))
என் கேசா நீங்க தென்றல்:)
இப்பவும் தெலுங்கு படங்களில் தாவணி பார்க்க......முடிகிறது!!!
ஹால்ஃப் அண்ட் ஹால்ஃப் எங்கள் பள்ளிக்காலத்திலியே வந்துவிட்டது.
ஆயிரம் வந்துவிட்டீர்கள். அத்தனையும் முத்தான பதிவுகள். இன்னும் இன்னூம் வளர வேண்டும். எல்லோருக்கும்மகிழ்ச்சி தரவேண்டும்.
புதுகை அக்கா, கலகிட்டீங்க. உங்க வீட்டுக்கு நான் புதுசு (இடுகைக்கு மட்டும்). உங்க 2008 பதிவிலேந்து படிச்சுட்டு வரேன் இப்போ. எப்போதும் உங்க blog window onlinela தான் இருக்கு. Trying to switch between work and your blog, extremely interesting blog and very casual writing style. இன்னும் ஆயிரமாயிரம் பதிவுகள் போட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் parents club பதிப்பையும் அடிக்கடி படித்து வரேன். நெறையா tips தரீங்க, ரொம்பவே உதவியா இருக்கு. மீண்டும் சந்திப்போம் அக்கா.
உமா,
கலிபோர்னியாவில் இருந்து.
1000-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! இன்னும் பல ஆயிரங்களை கடந்து தொடருங்க. ஹேப்பி ப்ளாகிங்! :)
பாவாடை தாவணி எனக்கும் மிகவும் பிடித்த உடை. பழையநினைவுகளை கிளறிவிட்ட பதிவு. :) :)
வாழ்த்துக்கள்..
வாங்க வல்லிம்மா,
ஃபேஷன் ஒரு சுழற்சிதானே. பானுமதி அம்மா போட்டதுதான் இப்ப பட்டியாலா, ஹேரம் பேண்ட் ஸ்டைல் எல்லாம். :))
18 வருஷத்துக்கு முன்னாடி இருந்த நீளக்கை ரவிக்கை, ஃப்ரில் சுடிதார் எல்லாம் திரும்ப வர ஆரம்பிச்சிருக்கு.
பாவாடை, தாவணி ரசிகையான உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க உமா,
ரொம்ப சந்தோஷமா இருக்கு. :)
வருகைக்கும் தொடர்வதற்கும் ரொம்ப நன்றி.
வாங்க மஹி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Post a Comment