Thursday, October 10, 2013

அஞ்சலி!!!!

8 வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். கொழும்புவில் இருக்கும் ARPICO supermarket சாமான்கள் வாங்கி கொண்டு பில்லிங்கிற்கு வரிசையில் நிற்கிறோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர்கள் பில்லிங்கிற்கு ஏனோ கொஞ்சமே சாமான் இருந்தாலும் நேரமாகிகொண்டிருந்தது. அயித்தான், பிள்ளைகளுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். முன்னே இருந்தவர் திரும்பி “நீங்க தெலுங்கா சார்!!”” என பேச ஆரம்பித்தார். அப்பொழுதுதான் அவருக்கு முன் நின்று கொண்டிருந்த அவரின் மனைவியை பார்த்தேன். தன் இரு மகன்களுடனும் ஏதோ சொல்லிக்கொண்டே பில்லிங்கில் பிசியாக இருந்தது நடிகை டிஸ்கோ சாந்தி. அவரின் கணவர் என தெரியாது எங்களுக்கு ஆனால் நான் ஸ்ரீஹரி. ஆந்திராவில் வந்திருக்கிறேன் என அறிமுகம் செய்து கொண்டு முதல் தடவை பேசுகிறோம், தெரியாதவர், தான் ஒரு நடிகர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அவரி 10 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். பில்லிங் முடிந்து சாந்தி போகலாமா என கேட்க வர்றேன் சார் என்று விடைபெற்றபோது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

 டிஸ்கோ சாந்தியை ஒரு ஐட்டம் சாங்க் கேர்ளாகத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தன் தம்பி, தங்கைகளுக்காக அவர் அப்படி நடிக்க நேர்ந்தது என தெரிந்த பொழுது அவர் மீது ஒரு மரியாதை வந்தது. அப்படி ஐட்டம் கேர்ளாக நடித்த நடிகையை மணம் புரிந்து கொண்டார் என்பதாலேயே எனக்கு ஸ்ரீஹரி மீது ஒரு மரியாதை உண்டு.

இங்கே ஹைதை வந்ததும் இவர் நடித்த பல படங்கள் பார்த்தோம். மகதீராவில் ஷேர்கான் வேஷம் ரொம்பவே நல்லா இருக்கும்.





பிருந்தாவனம், நு வொஸ்தானட்டே நேன் ஒந்தண்ட்டானா போன்ற படங்களில் அருமையான நடிப்பு. அதிலும் நுவொஸ்தானட்டே படத்திற்கு ஆந்திர அரசின் பெருமை மிகு நந்தி அவார்டு கிடைத்திருக்கிறது ஸ்ரீஹரிக்கு. டோலிவுட்டை பொறுத்தவரை நடிகர்கள் சீமாந்திராவிலிருந்துதான். ஸ்ரீஹரி மற்றும் இன்னொரு நடிகர் மட்டும் தான் தெலங்கானாவிலிருந்து.

அந்த நடிகர் நேற்று மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மனசு கஷ்டமாகிவிட்டது. ஒரு நடிகரின் இறப்புக்கா!! என கேட்காதீர்கள், நானறிந்தவகையில் ஸ்ரீஹரி ஒரு நல்ல மனிதர். டிஸ்கோ சாந்தியை திருமணம் செய்து கொண்டதும் சாந்தி நடிப்பதை நிறுத்தி விட்டார்.  தன் மனைவியுடன் சேர்ந்து 4 கிராமங்களை தத்தெடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தார். தன்னை விட்டு பிரிந்த 4 வயது மகள் அக்‌ஷராவின் நினைவில் ட்ரஸ்ட் ஆரம்பித்து வித்யாதானம் செய்து வந்திருக்கிறார்.


லேண்டன் ஷோவிற்கு அயித்தானின் நண்பர் அழைத்தார் என போயிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியது ஸ்ரீஹரியும், சாந்தியும் தான். தான் சினிமாவில் நடித்ததே தெரியாத அளவிற்கு சராசரி மனைவியாக தன் கணவருடன் சேர்ந்து பல சேவைகளை அவர் செய்து வருவதை அங்கே தெரிந்து கொண்டேன். சமீபகாலமாக மிகவும் இளைத்து காணப்பட்டாராம் ஸ்ரீஹரி. லீவர் பிரச்சனை.  ராம்போ ராஜ்குமார் சினிமா ஷூட்டிங்கிற்கு மும்பை சென்றிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடந்து கொண்டிருந்த பொழுதே உயிர் துறந்தார்.

49 வயதில் அகால மரணம் எய்திய ஸ்ரீஹரிக்கு எங்கும் நல்ல பெயர்தான்.
எந்த பிரச்சனை என்றாலும் அண்ணனாக முன்னிருந்து உதவி செய்த உத்தமர் என்று சொல்கிறார்கள். எந்த பிரச்சனைகளிலும் தன்னை நுழைத்துக்கொள்ளாமல், எல்லோரிடமும் அன்பான, நட்பாக வாழ்ந்திருக்கும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலிகள்.







9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்....

ADHI VENKAT said...

சிறப்பான ஒரு மனிதருக்கு இப்படிப்பட்ட நிலையா! ஸ்ரீஹரி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஹுஸைனம்மா said...

கல்யாணம் பண்ணிய வேகத்தில் பிரிவது ஃபேஷனாகிவிட்ட காலத்தில், இவ்வளவு ஒற்றுமையாகவும், இணைந்து பல நல்ல காரியங்களும் செய்துவந்தது நல்ல முன்னுதாரணம். ஆனால் இத்தனை சீக்கிரம் மரணம் அதிர்ச்சிதான். இறைவன் குடும்பத்தினருக்கு பொறுமையையும், ஆறுதலையும் தரட்டும்.

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Appaji said...

ஒவ்வொருவர் வாழ்கையிலும் எவ்வளவு மறைந்துள்ள (hidden) நல்ல விஷயங்கள் உள்ளன....
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
அவரது குடும்பத்தாருக்கு...என்றும் "ஸ்ரீஹரி" துணை இருப்பாராக ......
- அப்பாஜி, கடலூர்

கோவை நேரம் said...

REST IN PEACE.

மங்களூர் சிவா said...

மகதீரால பாத்திருக்கேன்.

RIP :(

அமுதா கிருஷ்ணா said...

அச்சச்சோ..எதிர்பார்க்காத தகவல்.எனக்கும் ஸ்ரீஹரியை ரொம்ப பிடிக்கும்.பாவம் சாந்தி.ஸ்ரீஹரி என்ற பெயரை எங்கே கேட்டாலும் இவரை தான் எனக்கு நினைவுக்கு வரும்.சாந்தியின் வாழ்க்கையில் ஏன் இப்படி ஒரு சோதனை.

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது தென்றல். இவ்வளவு ஆரோக்கியமாகத் தென்படும் மனிதருக்க மரணம் என்று மிகவும் வருத்தமாக இருந்தது.
அவர் விட்டுச் சென்ற குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கல்கள்.