தெலுங்கு சம்ப்ரதாயத்தில் மணமகள் கொளரி பூஜை செய்து அம்மா வீட்டு பக்கம் 5 புகுந்த வீட்டு பக்கம் 5 என மொத்தம் 10 வாயனம் கொடுக்க வேண்டும் (தாம்பூலம்). அது முறத்தில் வைத்து கொடுப்பதுதான் பழக்கம். சிலர் அம்மாவிற்கு கொடுக்கும் வாயனத்தை மட்டுமாவது முறத்தில் வைத்து கொடுக்கிறார்கள். சாட்ட வாயனம் ரொம்ப முக்கியம் (சாட்ட- முறம்) அதையே அழகா டிசைன் செய்து வைத்தால் என்ன வென தோன்ற முறம் வாங்கி கோல்ட் கலர் பெயிண்ட் அடிச்சு டிசைன் செஞ்சேன். தங்கச்சி (சித்தி பொண்ணு) கல்யாணத்துக்கு உதவும்மேன்னு செஞ்சேன். அந்த போட்டோவை சித்திக்கு அனுப்பினா இன்னோரு தங்கச்சி, “அக்கா, என் கல்யாணத்துக்கும், மாமா பசங்க கல்யாணத்துக்கும் இதே மாதிரி செஞ்சு தருவீங்களான்னு!!” கேள்வி. :))
சில ஆரத்தி தட்டுக்களும் செஞ்சு வெச்சிருக்கேன். கல்யாணம், நிச்சயதார்த்தம் ஆகியவற்றுக்கு உதவுமே. அந்த போட்டோக்களையும் பாருங்க.
இங்கே ஹைதையில் செம்பு பாத்திரத்திற்கு சில்வர் கோட்டிங் அடித்து விற்பனை செய்கிறார்கள். அஷ்டலக்ஷ்மி சொம்பு, தாம்பாளம் என பார்க்க அழகாக இருக்கும்.
சாட்ட வாயன முறம் |
சாட்டவாயன முறம் |
முறத்தின் உள்ளே டிசைன் |
சில ஆரத்தி தட்டுக்களும் செஞ்சு வெச்சிருக்கேன். கல்யாணம், நிச்சயதார்த்தம் ஆகியவற்றுக்கு உதவுமே. அந்த போட்டோக்களையும் பாருங்க.
மருமகளே!! மணமகளே வா! வான்னு பாடி ஆரத்தி எடுக்கலாம் |
பூக்களால் அலங்காரம் செய்யலாம் |
ஆரத்தி ப்ளேட் கும்ப டிசைனுடன் |
கும்ப டிசைன் சிகப்பு பெயிண்ட் ப்ளேட்டில் |
தாம்பூலம் வைத்து கொடுக்க வசதியான ப்ளேட் |
கோல ஸ்டிக்கர் உபயோகித்து விளிம்புகளில் ஜரி வைத்துள்ளேன். |
இங்கே ஹைதையில் செம்பு பாத்திரத்திற்கு சில்வர் கோட்டிங் அடித்து விற்பனை செய்கிறார்கள். அஷ்டலக்ஷ்மி சொம்பு, தாம்பாளம் என பார்க்க அழகாக இருக்கும்.
கால் கழுவி கன்யாதானம் செய்ய என்று சொல்வார்கள். கால் கழுவும் தாம்பாளம் |
சில்வர் கோட்டட் சொம்பு. (கலசம்னே சொல்லாம் நல்லா பெருசா இருக்கு) |
9 comments:
அனைத்தும் மிகவும் அழகு... பாராட்டுக்கள்...
நன்றி தனபாலன்
அனைத்துமே அழகு....
பாராட்டுகள் சகோ.
எல்லாமே சூப்பரா இருக்கு. அந்த மாதிரி முறம் ஒரு தடவை இந்தியா வந்தப்போ ghaziabad மார்க்கெட்ல வாங்கினேன், பிள்ளையார் பதிச்ச முறம். north indian marriages have the same muram concept as yours.
ஆரத்தி தட்டுகலெல்லாம் ரொம்பவும் அருமை. You are blessed!
Uma
Bayarea, California
ஒவ்வொன்றும் ரொம்ப அழகா இருக்குங்க. அதுலயும் அந்த முறம் சூப்பர் ! வாழ்த்துக்கள் !
நன்றி சகோ,
நன்றி உமா
நன்றி தானைத்தலைவி
எல்லாமே அருமையாக இருக்குங்க. பாராட்டுகள். பெரிய முறம் தானே இது? இல்லை சம்பிரதாயத்துக்காக கொடுக்கிற குட்டி முறமா?
உங்களின் கைவண்ணம் அருமை .கண்ணுக்கு அழகான போடோக்களும் அருமை !
த.ம 2
அனைத்துமே அழகாக இருக்கிறது.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
Post a Comment