Wednesday, February 12, 2014

அம்மா அப்பா கல்யாணம்

எல்லாருக்கும் வணக்கம். அம்மா அப்பா பீம்ரத சாந்தி + தம்பி நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிஞ்சு கல்யாண வேலைகளை ஆரம்பிச்சதனால பதிவு பக்கமே வரமுடியலை. ஜனவரி 18 மாலை முதலே உறவுகள் சத்திரத்திற்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. அப்பாவின் அக்காக்கள், அப்பாவின் பெரியப்பா மகள்கள், என் அம்மம்மா, தாத்தா, சித்தி, மாமா குடும்பத்தினர்னு களை கட்ட ஆரம்பிச்சது மண்டபம்.

ஜனவரி 19 காலை சுமங்கலி பிரார்த்தனை செய்தார் அம்மா. உடன் பவமான ஹோமம் துவங்கப்பட்டது. அதே மேடையில் ஒரு பக்கம் என் தம்பி, சத்யாமாமா மற்றும் இரண்டு உறவினர்கள் ருத்ரம் பாராயணம் செய்ய, ஆஷிஷ் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான்.
ருத்ராபிஷேகம்
இரண்டு பூஜைகளும் முடிந்தது அம்மா,அப்பாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ருத்ராபிஷேக தீர்த்தமும் அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. என் தாத்தாவிற்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு சதாபிஷேகம் நடந்த பொழுது அவரது பேரனாகிய என் தம்பி ருத்ரம் பாராயணம் செய்து அபிஷேகம் செய்து அந்த புனித நீரால் அவருக்கு அபிஷேகம் நடந்தது. தன் மகளுக்கும் மகளின் பேரன் தனது கையால் ருத்ராபிஷேகம் செய்த அபிஷேக நீர் என புளகாங்கிதம் தான்.




 மதிய உணவு முடிந்து உட்கார கூட நேரமில்லாமல் அடுத்த ஃபங்ஷனுக்கு ரெடியானோம். ஆம். ரொம்ப நாளாக காத்திருந்த மகிழ்ச்சி இது. தம்பியின் நிச்சயதார்த்தம். பெண்வீட்டினர் காலையிலே மண்டபத்துக்கு வந்துவிட்டிருந்தனர். அவர்கள் சீர் வரிசை தட்டுக்களுடன் ரெடி. அவசர அவசரமாக ரெடி செய்தேன். சித்தி மகளும் துணைக்கு வர எல்லாம் தயார். நிகழ்ச்சி ஆரம்பமானது. என்ன புடவை வாங்கியிருக்கிங்க அண்ணி, கலர் என்ன என போனில் செல்ல தொந்திரவு செய்து கொண்டிருந்தாள் தம்பியின் வருங்காலம். எல்லாம் சர்ப்ரைஸ் மண்டபத்தில் வைத்துதான் காட்டுவேன் என்று சொல்லிவிட்டேன். மோதிரம் மாத்தி, லக்னபத்திரிகை எழுதி நிச்சயதார்த்தம் இனிதே நடந்தது. ஏப்ரல் 18 சென்னையில் திருமணம்னு நாள் குறிச்சாச்சு.

 நான் வாங்கியிருந்த புடவை ரொம்ப பிடித்திருந்தது. ஹைதையிலிருந்து அதற்கு மேட்சாக ஹைதை ஷ்பெஷல் வளையல்கள், அலங்கார சாமான்கள் என கலக்கியிருந்தேன்.ரொம்ப பிடித்திருந்ததாம். :) 
எனது கைவண்ணத்தில் புடவை வேஷ்டி கூட :)
அலங்கரித்தது நான்


 ஜனவரி 19 அம்ருதாவின் பிறந்தநாளாயிற்றே. அதற்காகவும், தம்பியின் நிச்சயதார்த்த கொண்டாட்டத்திற்காகவும் கேக் வெட்ட ஏற்பாடு செய்திருந்தேன். என் அப்பாவும் (ஜனவரி 14 அப்பா பிறந்த நாள்)அம்ருதாவும் சேர்ந்து பிறந்த நாள் கேக் வெட்ட, கார்த்தியும் அவனது வருங்காலமும் சேர்ந்து எங்கேஜ்மெண்ட் பார்ட்டி கேக் வெட்டினார்கள். அப்பா கையை நானும் தம்பியும் பிடித்துக்கொள்ள அம்ருதா பக்கத்தில் அயித்தானும் ஆஷிஷ் அண்ணாவும். கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி என சந்தோஷ கொண்டாட்டம் தான். தனது மருமகளுக்கென அவளது அத்தை (தம்பியின் வருங்காலம்) அம்ருதாவுக்கு பிடித்த பெரிய்ய சைஸ் டெடிபியர் வாங்கி கொடுக்க, மாமனோ தங்க காசு பரிசு கொடுத்தான். அண்ணன் தங்கைக்கு வாட்ச் பரிசளித்து முத்தமழை தர என இனிய மாலையாக அமைந்தது.



நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்த போதே அங்கேயிருந்து யாரும் சிற்றுண்டிக்கு அசைய வேண்டிய தேவையில்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே பாதாம் கேக்கும், வெங்காயமில்லாத பக்கோடாவும், சுடச்சுட டீ/காபியும் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தது அனைவருக்கும் பிடித்திருந்தது.

7 மணிக்கு மேல் கடஸ்தாபனம் நடந்தது.  நிச்சயதார்த்த விருந்து அனைவரும் மிகவும் ருசித்தனர்.  புதுகையின் குளிருக்கு இதமாக அனைவருக்கும் பாதாம்பால் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தோம். அனைவரும் விரும்பி ருசித்தனர். அடுத்த நாளின் விழாவுக்கு தேவையான சாமான்களை ரெடி செய்துவிட்டு படுத்த பொழுது மணி 11.

கடஸ்தாபனம்

முப்பெரும்விழாவாக இனிதாக முடிந்தது அன்றைய நாள்.


25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அலங்காரம் மிகவும் பிரமாதம்... இனிய விழா மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

இனி தொடர்ந்து பகிருங்கள்...!

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா..ஆஹா.. கொண்டாட்டக்காலமா?.. எஞ்சாய் தென்றல் :-)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நிகழ்வை மிக அருமையாகா படம் பிடித்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

அடடா !! வாசிக்கும்போதே உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் வந்துருச்சு!

அப்பா அம்மாவுக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துகளும்.

வருங்காலத்துக்கு எங்கள் இனிய ஆசிகள்.

அம்ருதா... ரொம்பவே வளர்ந்துட்டாள்! செல்லம். நல்லா இருக்கணும்.

அனைவருக்கும் எங்கள் அன்பு.

பால கணேஷ் said...

இரண்டு மகிழ்வான அனுபவங்களின் பகிர்வின் ஊடாக அம்ருதாவின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. ஆக, முக்கனிச் சுவையை நீங்கள் அனுபவித்து அதை எங்களுக்கும் பகிர்ந்திருக்கிறீர்கள்! மனம் நிறைந்த மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள்! (வெங்காயமில்லாத பக்கோடா, பாதாம் கேக், சுடச்சுட காபி... படிக்கையிலேயே நாக்கில் நீரூற்ற வெச்சுட்டிங்களே தென்றல் மேம!

கோமதி அரசு said...

முப்பெரும்விழாவாக இனிதாக முடிந்தது//

இறைவன் அருளால் முப்பெரும்விழா இனிதாக நிறைவு பெற்றது அறிந்து மகிழ்ச்சி. பீமரதசாந்தி செய்தவர்களிடம் ஆசிப் பேறுக் கொள்கிறேன்.
தம்பிக்கு எங்கள் ஆசிகள்.
அமிர்தாவுக்கு எங்கள் ஆசிகள்.
உங்கள் கைவேலைகள் அற்புதம்.

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

வாங்க சாந்தி,

கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான்.
வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ரூபன்,

பதிவை ரசித்ததற்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

வாங்க டீச்சர்,

ஆமாம் அம்ருதா நன்கு வளர்ந்துவிட்டாள். :))

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க பாலகணேஷ்,

சாப்பிட்டதை சொல்லி காதில் புகை வரவைப்பதுதான் நம் வேலையே :)

ஆக்சுவலி என்னென்ன மெனுக்கள்னு மறந்தே போச்சு. இல்லாட்டி பார்ட் பை பார்ட்டா சொல்லியிருக்கலாம் :)

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு அம்மா,

பெரியவர்களின் ஆசி கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

ஸாதிகா said...

மகிழ்வான அனுபவங்கள் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

முப்பெரும்விழாவாக இனிதாக நிகழ்ந்த கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துகள்...1

Vaishnavi said...

SUPERA AGA IRUNDATHU MADAM.NERIL PARTHADU POLA ORU UNARVU.UNGA BLOGS YELLAM PADIKKARAPO ADULA NEENGA USE PANDRA VARTHAIGAL YELLAM IPPA PULAKKATHULA ILLA.ANA ADHA YELLAM NANGA YENGA VEETLA 10 VARUSAM MUNNALA USE PANNIRUKKOM.EX.PASUNGAM,VIDAM,CHATTA VAYANA.IPPO GENERALA YELLAM THAMPOOLAM.

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வைஷ்ணவி,

என் வலைப்பூ தங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு என்பதில் ரொம்ப சந்தோஷம்.

எனக்கென்னவோ அந்த வார்த்தைகள் ரொம்ப பிடிக்கும். பசுங்கம், வாயனம் எல்லாமே தாம்பூலம் மாதிரிதான் என்றாலும் அது கொடுக்கப்படும் நிகழ்வை வேறுபடுத்தி காட்டுவது போல ஒரு உணர்வு. :))

வருகைக்கு மிக்க நன்றி

”தளிர் சுரேஷ்” said...

சதாபிஷேகத் தம்பதிகளுக்கு வணக்கங்கள்! நிச்சயதார்த்த தம்பதிகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடிய தங்கைக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி! அலங்காரங்கள் சிறப்பு!

சுசி said...

ஹப்பா! படிக்கறச்சேயே எனக்கு ஓரு உற்சாகம் வந்துவிட்டது. அப்பா,அம்மாவிற்கு என் நமஸ்காரஙகள், தம்பிக்கும்,தம்பி வருங்காலத்திற்க்கும்,ஆஷிஷ்,அம்ருத்தா விற்க்கும் என் நல்லாசிகள்.

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

தங்களது வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் வீட்டு கொண்டாட்டங்களில் எங்களையும் பங்கெடுக்க வைத்த பகிர்வு.....

வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாங்க சகோ,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

..........
சிற்றுண்டிக்கு அசைய வேண்டிய தேவையில்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே பாதாம் கேக்கும், வெங்காயமில்லாத பக்கோடாவும், சுடச்சுட டீ/காபியும் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தது
........

வட போச்சே..