Monday, February 17, 2014

champa sarees.....

பட்டு இல்லாமல் என்ன புடவை?? பளபளன்னு இருக்காதே.... இப்படி யோசிக்கும் பலருக்காகவே என்னுடைய வலைப்பூவில் பலவித புடவை வகைகளை அறிமுகம் செய்து வந்திருக்கிறேன்.


அம்மா நாளிதழ் ஒன்றில் பார்த்து இந்தக்கடையை தெரிவு செய்து வைத்திருந்தார். இங்கே காட்டன் வெரைட்டிகள் நிறைய்ய இருக்கிறது என்பதால் நாளிதழில் வந்த விளம்பரத்தை கட் செய்து அம்மா எடுத்து வந்திருந்தார். மணப்பெண்ணிற்கு புடவை எடுக்க போகவேண்டும் என்றதும் மனதில் முதலில் தோன்றியது இந்த இடம் தான். காலை 10 மணிக்கு கடைக்கு போனால் கடை மூடியிருந்தது. 11 மணிக்குத்தான் திறப்பார்களாம்.

எனது லிஸ்ட்டில் நல்லியும் இருந்தது. நல்லியில் நான் எதிர்பார்த்த அளவு கிராண்டாக காட்டன் கிடைக்கவில்லை. ஆனால் வேற வெரைட்டி கிடைத்தது. நாகவல்லி முஹூர்த்ததிற்கு ரொம்பவே கிராண்டாக இருக்க வேண்டும் என்பது வீட்டு வழக்கம். (முஹுர்த்ததிற்கு நூல் புடவை தான் என்பதால் என நினைக்கிறேன்)

பக்கத்தில் ஸ்ரீகுமரன் போனோம். பட்டு இல்லாமலா???  என புருவம் உயர்த்தினார்கள். ரா சில்க்கை காட்டுகிறார்கள், இதில் பட்டு ஜரிகை மிக்சிங் என சில வெரைட்டி காட்டுகிறார்கள். எல்லோருக்கும் தெரிந்தது பட்டு வேண்டாம், கிராண்டாக காட்டனில் என்றால் ஒரே ஆப்ஷன் காட்டன் சில்க் தான்.

ஆனால் காட்டன் சில்க் புடவைகளில் 60 :40 அல்லது 50:50 என பட்டு நூலும் காட்டனும் மிக்சிங் தான். அதனால் அந்த புடவைகளையும் தவிர்த்தோம். சாதாரண புடவைகள் கிடைத்தது. ஆனால் எதிர் பார்த்தது போல கிராண்டாக இல்லை.

அதற்குள் மணி 12.30. தி.நகரிலிருந்து அபிராம புரம் போக அந்த ட்ராபிக்கில் 45 நிமிடம் ஆகும். புடவை கடைக்கு போன் செய்து ஹைதையிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன், வழியில் நேரம் ஆகிவிட்டது என சொல்ல,”நான் காத்திருக்கிறேன்! வாருங்கள்” என்றார்.

ரொம்ப சின்னக்கடையில்லை ஓரளவு பெரிய கடை. உள்ளே நுழைந்ததும் காட்டன் புடவைகள் பளிச்சென சூப்பராக இருந்தது. எதை விடுப்பது, எதை எடுப்பது என குழப்பம் தான். எங்கள் தேவையை சொன்னதும் பட்டு கலப்பில்லாத புடவைகள் இருக்கும் ஹேங்கரை காட்டினார். அந்த புடவை ரகங்களை பார்த்ததும் தம்பியின் வருங்காலத்தின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.


பாவம் பட்டு இல்லாத புடவைகள் என நெட்டில் தேடி இருக்கிறாள். பல பிரபல கடைகளுக்கு போன் போட்டு கேட்டும் இருக்கிறாள். ஒரு கடையில் போனில் திட்டியே விட்டார்களாம்!! நல்லி, குமரன் ஆகிய கடைகளில் நான் பார்த்த கத்வால், வெங்கடகிரி எல்லாம் ஓகே ரகம் தான். இங்கே ஹைதையில் நான் பார்த்திருந்த வகைகளே வேறு. வெங்கடகிரி ரொம்பவே சன்ன ஜரிப்புடவையாகத்தான் பார்த்தேன்.



போச்சம்பள்ளி காட்டன் ஆந்திராவில் வாங்கினால் கூட ரொம்பவே டல்லாக இருக்கும். அந்த புடவையின் அழகு சிக்கோ புடவையிலோ பட்டிலோ தான் தெரியும். ஆனால் அதே போச்சம்பள்ளி  இங்கே கொள்ளை அழகு. சொந்த தரி வைத்து நெய்கிறார்கள். வெவ்வேறு ஊர்களிலுருந்து நெசவாளர்களை வரவழைத்து நெசவு வேலை நடக்கிறது. அந்தந்த ஊரின் பாரம்பரியத்துடன்.



ஒரு சில புடவைகளை காட்டி இந்த புடவை வகைகளில் கறுப்பு நூலும், வெள்ளை நூலும் இதில் இருக்காது! என்றார். ஏன் என்று கேட்க, அந்த புடவை வகைகளை நெய்த நெசவாளர்கள் கறுப்பை துக்கமாகவும், வெள்ளையை வைதவ்யத்தின் அடையாளமாகவும் பார்ப்பார்களாம். அதனால் புடவைகளில் அந்த கலர்கள் தவிர்த்து நெய்வார்கள் என்றார்.

காண்ட்ராஸ்ட்  கலர் காம்பினேஷன்களின் புடவைகள், பழைய காலத்து பாலும் பழமும் டிசைன் என கலக்கலாக இருந்தது புடவைவகைள். சில புடவைகள் வித் ப்ளவுஸென்றால் சில புடவைகள் வித் அவுட் ப்ளவுஸ். நாகவல்லி புடவை அழகு பச்சையில் மாம்பழ கலர் பார்டர் & முந்தி எடுத்தோம். விலை 3000.  இதே ரேஞ்சில் பல புடவைகள் அருமையாக இருக்கிறது. 2500 ரேஞ்ச், 1500 ரேஞ்ச் என வெரைட்டி பார்க்கலாம்.

தம்பியின் வருங்காலம் சூப்பர் கலெக்‌ஷன்ஸ் என அகமகிழ்ந்து 4 புடவை எடுத்துக்கொண்டார். சம்மந்திகள் புடவை, நாகவல்லி முஹூர்த்தம் புடவை, தாலிமுடியும் புடவை என எல்லாமே இங்கே வாங்கினோம்.











திருமதி. ராதா துரைராஜன் அவர்களிடம் உங்களை சாப்பிட செல்ல விடாமல் வந்து விட்டோம் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். “அதெல்லாம் பெரிய பிரச்சனையே இல்லம்மா, தீபாவளி சமயத்துல சேல் சமயத்துலலெல்லாம் 2.30 மணியாகிடும் “ என்று சொன்னவர் புடவைகளை எடுத்து காட்டவும், அதன் சிறப்பை சொல்லவும் அலுக்காமல் சலுக்காமல் செய்தது ரொம்ப பிடித்திருந்தந்து.

இவ்வளவு சொல்லிவிட்டு கடை முகவரி மற்றைய விவரங்கள் சொன்னால் தானே நீங்களும் போய் பார்க்க வசதியாய் இருக்கும் :)




காலை 11  மணி முதல் 1 மணி வரை அப்புறம் 3 மணிக்குத்தான் கடை திறப்பார்கள்.



16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்க ஊருக்கு வாங்க... All fancy cotton sarees + Pure silk sarees தமிழகம் முழுவதும் விற்பனை செய்வது இங்கு தான்...

ADHI VENKAT said...

பட்டில்லாமல் அருமையாக இருக்கிறது.. கலர்களும் அருமை. நல்ல தேர்வு தான்.

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தம்பி கல்யாண பர்ச்சேஸ் முடித்துவிட்டோம். பிரிதொரு சமயம் கண்டிப்பாய் வர முயற்ச்சிக்கறேன்.

pudugaithendral said...

வாங்க ஆதி,

இது காட்டன்னு சொன்னாத்தான் தெரியும். கத்வால் புடவையில் இருப்பது போல பளபள தான். :))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

வருடா வருடம் நவராத்திரிக்கு அங்கேதான் புடவை எடுப்பேன் தென்றல். நல்ல கடை காட்டன் என்பதால் சிலசமயம் காப்பாற்றுவது கடினமாகிவிடும். இரு சகோதரிகளும் சிரித்த முகத்துடன் உதவுவார்கள்.எங்கள் வீடும் அருகில் தான்.

பால கணேஷ் said...

பார்த்தும் படிச்சும் ரசிச்சேன். (வீட்டம்மா கண்ல இந்தப் பதிவக் காட்டிரக் கூடாது டோய்!) ஹி... ஹி...!

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

காட்டன் ரொம்ப நாளைக்கு வராது. குறைஞ்ச விலையில் தான் என்பதால அடிக்கடி வாங்கிக்கலாமே ! :)) (அதிக விலை போட்டு ஒரு பட்டு வாங்கறதுக்கு இது சூப்பர்ல )

ஐயோ!! உங்க வீடு பக்கத்துலயேவா. தெரியாம போச்சே தெரிஞ்சிருந்தா ஒரு விசிட் அடிச்சிருப்பேனே.

வருகைக்கு ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

காட்டன் ரொம்ப நாளைக்கு வராது. குறைஞ்ச விலையில் தான் என்பதால அடிக்கடி வாங்கிக்கலாமே ! :)) (அதிக விலை போட்டு ஒரு பட்டு வாங்கறதுக்கு இது சூப்பர்ல )

ஐயோ!! உங்க வீடு பக்கத்துலயேவா. தெரியாம போச்சே தெரிஞ்சிருந்தா ஒரு விசிட் அடிச்சிருப்பேனே.

வருகைக்கு ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க பாலகணேஷ்,

:) அப்டில்லாம் சொல்லக்கூடாது. பதிவை கண்ணுல காட்டாதீங்க. ஆனா சர்ப்ரஸை ஒரு புடவை வாங்கி கொடுத்து அசத்துங்க. :))

வருகைக்கு மிக்க நன்றி

Unknown said...

இத்தனைக் கடைக்கு போகணுமா?பட்டு என்றால் பட்டென்று வாங்க முடியாதோ ?

குடிகாரக் கணவனின் மனைவிகளுக்காக என் பதிவு
......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி

Anonymous said...

புதுகை தென்றல் புயலாகி புடவைக் கடையில் கரை கடந்தது போல தெரிகிறது

pudugaithendral said...

வாங்க கடைசிபெஞ்ச்,

ஆமாம் புயலா வேலை செஞ்சா தான் முடியும். :))

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கலெக்‌ஷன்ஸ்.....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : என் வீட்டுத் தோட்டத்தில்

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

pudugaithendral said...

இணைப்புடன் கூடிய தங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி தனபாலன்.